தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
ஒரு பிரபல இயக்குனரின் உதவி இயக்குனர்கள் ஒவ்வொருவராக கொல்லப்படுகின்றனர். இவர்களெல்லாம் கொல்லப்படும் நேரத்தில் சரியாக கொல்லப்படும் முறையை வரைந்து கொடுக்கிறார் கிறுக்கு ஓவியர்.
இந்த ஓவியருக்கும் கொலையாளிக்கும் என்ன தொடர்பு? கொல்லப்பட்ட உதவி இயக்குனர்கள் எல்லாம் நாயகன் ப்ரஜனின் நண்பர்கள். எனவே காவல் துறைக்கு பிரஜின் மீது சந்தேகம் வருகிறது.
இறுதியில் என்ன ஆனது? இயக்குனர் உதவி இயக்குனர்களை கொல்ல என்ன காரணம்? பிரஜின் நிரபராதி என்றால் குற்றவாளி யார்? ஓவியர் முன்பே கணிப்பது எப்படி.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
கதையின் நாயகனாக பிரஜின். செய்யாத குற்றத்தில் இருந்து தப்பமுடியாமல்.. பயந்து ஓடுவது பதட்டம் நவரசம் காட்ட முயற்சித்துள்ளார். இவரின் நண்பர்கள் நட்புக்கும் கதைக்கும் கை கொடுத்துள்ளனர்.
கலக்கப்போவது நிகழ்ச்சி சரத் ஏதோ வந்து செல்கிறார். அவருக்கு நகைச்சுவை கொடுத்து படத்திற்கு கலகலப்பு ஊட்டி இருக்கலாம்.
நாயகியாக காயத்ரி ரெமோ சினிமாவில் வாய்ப்பு தேடும் அப்பாவி இளம் பெண் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகிறார் என்பதை தன் நடிப்பில் உணர்த்திருக்கிறார்.
சினிமாவில் ஆளுமை கொண்ட இயக்குனர்கள் நடிகைகளை / பெண்களை ஆள நினைப்பதை காட்சிகளில் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ஸ்டாலின். இவரே இயக்குனர் கேரக்டரில் நடித்திருப்பதால் அந்த உணர்வை சரியாக பிரதிபலிக்கிறார்.
மனநல நிபுணராக ராமநாதன், கிறுக்கு ஓவியராக வடக்குவாசல் ரமேஷ் உள்ளிட்டோர் கச்சிதம். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் சில காட்சிகள் ஓகே என்றாலும் பதட்டப்படும் காட்சிகளில் ஓவர் ஆக்டிங்.
டெக்னீசியன்கள்…
கதைக்கு ஏற்ற பின்னணி இசையை தந்திருக்கிறார் சதீஷ் செல்வம். தேவசூர்யா ஒளிப்பதிவில் இன்னும் கூடுதல் கவனத்தை செலுத்தி இருக்கலாம். இரவு நேரக் காட்சிகளில் பெரிதாக மெனக்கெடல் இல்லை என்பது தெரிகிறது.
படத்தை இயக்கிய வெ.ஸ்டாலின் படத்தில் இயக்குனராக முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். வாய்ப்பு தேடும் பெண்கள் இப்படி தான் சினிமாவில் நடத்தப்படுகிறார்களா என்பதை இயக்குனர் தான் விளக்க வேண்டும்.
அம்பிகாபதி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ‘ஃ’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.
கர்மா ஒருபோதும் மன்னிக்காது என்ற கருத்தை சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர். ஆனால் கருத்தை மட்டும் வைத்துக் கொண்டு கதையை கோட்டை விட்டுள்ளார்.
Akku movie review and rating in tamil