தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : ரகுமான், கௌரி நந்தா, அகில், நிழல்கள் ரவி, சுரேந்தர், மோனிகா, கருத்தம்மா ராஜஸ்ரீ, சுதா, கோவை செந்தில், சாட்டை ரவி, பாய்ஸ் ராஜன் மற்றும் பலர்.
இயக்கம் : ராம் கே. சந்திரன்
இசை : கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவாளர் : கிருஷ்ணசாமி,
எடிட்டிங் : கே. ஸ்ரீனிவாஸ்
பி.ஆர்.ஓ.: குமரேசன்
தயாரிப்பாளர் : குமார் டி.எஸ், டி. சுபாஷ் சந்திரபோஸ், குணசேகர்
கதைக்களம்…
இந்த பகடி ஆட்டத்தை இரண்டே வரிகளில் சொல்லிவிடலாம்.
1) பணக்கார பையன்கள் நிறைய பெண்களை காதலித்து அவர்களின் வாழ்க்கையில் விளையாடும் ஆட்டம்.
2) அதுபோல் பணத்திற்காக ஒருவனை காதலிப்பதும் பின்னர் வேறொரு பையனை மணப்பதும் என்று திரியும் பெண்களின் ஆட்டம்.
இந்த மையக்கருத்தை வைத்து ராம் கே. சந்திரன் சொல்லியிருக்கும் அதிரடி ஆட்டம்தான் இக்கதை.
கதாபாத்திரங்கள்…
ரகுமான், அகில், கருத்தம்மா ராஜஸ்ரீ என சிலரே நமக்கு பரிச்சயமானவர்கள். ஆனாலும் மற்ற கேரக்டர்களும் படத்தின் கேரக்டர் அறிந்து தங்கள் பணிகளை மிகச் சிறப்பாக செய்துள்ளனர்.
இடைவேளை வரை காதலர்களின் காதலையும் காமத்தையும் சொன்ன இயக்குனர் அதன்பின்னர் காவலர்களின் அதிரடியை காட்டியிருப்பது படத்தை ஜெட் வேகத்தில் கொண்டு செல்கிறது.
அதில் ரகுமான் இறங்கிய பின்னர் ஒவ்வொன்றாக கண்டுபிடிப்பது கூடுதல் சுவை.
கௌரி நந்தா மற்றும் மோனிகா படத்திற்கு அழகு சேர்கின்றனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
கார்த்திக் ராஜா இசையில் பாடல்கள் இருந்தாலும் இரண்டு பழைய பாடல்களே படத்திற்கு பெரிய பலம்.
இளமை எனும் பூங்காற்று…. மற்றும் என்ன என்ன கனவு கண்டாயோ சாமி? என்ற இரு பாடல்களும் முழுமையாக பயன்படுத்தப்பட்டு படத்திற்கு பலம் சேர்க்கின்றன.
கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை.
இயக்குனர் பற்றிய அலசல்…
தான் பட்ட கஷ்டங்களை தங்கள் பிள்ளைகள் படக்கூடாது என்று நினைக்கும் பெற்றோர்கள் ஓவராக செல்லம் கொடுத்து பிரைவசி என்ற பெயரில் தங்கள் பிள்ளைகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.
வாட்ஸ் அப், ட்விட்டர், பேஸ்புக் என்று அவர்களும் இணையங்களில் முகம் தெரியாத நபருடன் அறிமுகமாகி திசை மாறிவிடுகின்றனர்.
இதை ஆணித்தரமாக சொல்லி அதற்கு எவரும் எதிர்பாராத ஒரு க்ளைமாக்ஸ் சொல்லி ரசிகர்களை கவர்கிறார் இயக்குனர் ராம் கே சந்திரன்.
பெற்றோரையும் தன்னை காதலிப்பரையும் ஏமாற்ற செல்போன்களில் பெயரை மாற்றி வைக்கும் காட்சிகளும் அதனால் விசாரணையில் போலீஸ் சற்று தடுமாறுவதும் ரசிக்க வைக்கிறது.
பகடி ஆட்டம்… பெற்றோரை ஏமாற்றும் காதலர்களின் ஆட்டம்