சதுர அடி 3500 விமர்சனம்

சதுர அடி 3500 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : இனியா, நிகில், ரகுமான், ஆகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா மற்றும் பலர்.
இயக்கம் : ஜாய்சன்
இசை : கணேஷ் ராகவேந்திரா
ஒளிப்பதிவாளர் : பிரான்சிஸின்
பி.ஆர்.ஓ. : யுவராஜ்
தயாரிப்பு : ரைட் வியூ சினிமாஸ்

sathura adi 3500 movie stills 2

கதைக்களம்…

நிலமோசடி மாபியா கும்பலும் அதனால் பாதிக்கப்பட்ட பலரின் வாழ்க்கையையும் திகில் கலந்த கதைக்களத்துடன் சொல்லப்பட்டுள்ள படமே ’சதுரஅடி 3500’.

ஒரு மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடத்தை அழகாக கட்ட நினைக்கிறார் ஆகாஷ்.

இதற்காக பல கோடிகளை முதலீடு செய்கிறார். மேலும் பெரிய கான்ட்ராக்டர் எம்எஸ் பாஸ்கரின் மகள் இனியாவிடமும் (காதலி) பணம் பெறுகிறார்.

கட்டிடம் முடியும் தருவாயில் மாபியா கும்பல் தாதா பிரதாப்போத்தன் இவரை மிரட்டி அந்த கட்டிடத்தை மிரட்டி வாங்க நினைக்கிறார்.

ஆகாஷ் மறுக்கவே அவரை கொலை செய்கிறார்.

sathura adi 3500 movie stills 3

இந்நிலையில் இனியாவுக்கு பெண் பார்க்கிறார் எம்எஸ் பாஸ்கர். ஆனால் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகளை ஆகாஷின் பேய் மிரட்டுகிறது.

மேலும் அந்த கட்டிடத்தை பாதுகாக்கிறது. எனவே போலீஸ் நிகில் இந்த விசாரணையில் இறங்குகிறார்.

ஆனால் ஒரு சாமியார் மூலம் ஆகாஷ் சாகவில்லை என நிகிலுக்கு தெரிய வருகிறது.

அப்படியென்றால் பேயாக வருபவர் யார்? ஆகாஷ் என்ன ஆனார்? இனியா காதல் என்ன ஆனது? என்ற பல கேள்விகளுக்கு மிரட்டலாக பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜெய்சன்.

sathura adi 3500 movie stills 1

கேரக்டர்கள்…

இப்படத்தின் போஸ்டர்களில் பிரமாதமாக காணப்பட்டவர் ரகுமான். ஆனால் ஓரிரு காட்சிகளில் மட்டுமே வருகிறார். இந்த விசாரணையை ஆரம்பித்து வைத்து விட்டு செல்கிறார்.

இனியா அழகான கண்களால் கவர்கிறார். சில காட்சிகளில் பேயாகவும் மிரட்டுகிறார்.

கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் ஹீரோ நிகில் கம்பீரமாக வருகிறார். போலீசுக்கு உரித்தான சீரியஸ் முகம் இவருக்கு. எனவே காதல் காட்சிகளில் சுவாரஸ்யம் இல்லை.

ஆவியாக வந்து மிரட்டும் ஆகாஷ், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, தலைவாசல் விஜய், சுவாதி தீக்‌ஷித் என அனைவரும் இருந்தாலும் இன்னும் வலுவான பாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தால் ரசித்திருக்கலாம்.

இனியாவை காதலிக்கும் மெக்கானிக் நடிகரின் நடிப்பு செயற்கையாக இருக்கிறது. காட்சிகளில் ஒன்றவில்லை.

sathura adi 3500 movie stills

கணேஷ் ராகவேந்திராவின் இசையில் இரண்டு பாடல்கள் குத்து ரகம். ஆனால் அதில் ஒரு பாடல் தேவையில்லாமல் திணிக்கப்பட்டிருக்கிறது.

பிரான்சிஸின் ஒளிப்பதிவு காட்சிகளில் மிரட்டல் தெரிகிறது.

தன் காதலியை யாரும் மணக்க கூடாது என எல்லா மாப்பிள்ளைகளையும் மிரட்டும் ஆகாஷ் இறுதியாக காதலியை விட்டுக் கொடுப்பது ஏன்? என்பது புரியவில்லை.

வலுவான கதையை இயக்குநர் ஜாய்சன் அமைந்திருந்தாலும் பல காட்சிகளில் சலிப்பை தட்ட செய்கிறார்.

மொத்தத்தில்… ‘சதுரஅடி 3500’ சறுக்கல் பாதை

கூட்டத்தில் ஒருத்தன் விமர்சனம்

கூட்டத்தில் ஒருத்தன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : அசோக் செல்வன், பிரியா ஆனந்த், பாலசரவணன், மாரிமுத்து, சமுத்திரக்கனி, நாசர், அனுபமா, ஜான்விஜய் மற்றும் பலர்.
இயக்கம் : ஞானவேல்
இசை : நிவாஸ் கே பிரசன்னா
ஒளிப்பதிவாளர் : பிகே வர்மா
எடிட்டர்: லியோ ஜான்பால்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு : டிரீம் வாரியர்ஸ் எஸ்ஆர் பிரபு

கதைக்களம்…
பொதுவாக பல படங்களில் பர்ஸ்ட் பென்ச் மாணவனே ஹீரோவாக இருப்பார். அல்லது கடைசி பென்ச் மாணவன் அதிக கவனிக்கப்படுவான்.

சினிமாவில் மட்டுமில்லை. நம் வாழ்க்கையில் கூட இப்படி நடந்திருக்கும். ஆனால் இந்த படம் மிடில் பென்ச் மாணவனும் அவனது வாழ்க்கையும்தான்.

யாருக்கும் அதிக பரிச்சயமில்லாத கூட்டத்தில் ஒருவனாக இருக்கிறார் அசோக்செல்வன். ஜர்னலிசம் படிக்கும் இவருக்கு அனைத்திலும் முதல் மாணவி பிரியா ஆனந்த் மீது காதல்.

அவரிடம் காதலை இவர் சொல்ல, என்னை நீ காதலிக்க காரணம் இருக்கு. ஆனால் நான் உன்னை காதலிக்க என்ன காரணம் இருக்கு. நீ என்ன சாதித்துவிட்டாய்? என கேட்கிறார்.

இதன்பின்னர் அசோக் செல்வன் முன்னேறிவிடுகிறார் என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள்.

அதுதான் இல்லை. இவருக்கு தெரியாமலே இவர் முதல் மாணவனாக வந்து, பெரியளவில் பேசப்படுகிறார்.

இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்? எப்படி சாத்தியமானது? அந்த ரகசியத்தை அறிந்துக் கொண்டாரா அசோக் செல்வன்? பின்னர் என்ன ஆனது? என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

Kootathil-Oruthan-shooting-spot-stills-3

கேரக்டர்கள்…

அமைதியான நடிப்பு ஆனால் அசத்தியிருக்கிறார் அசோக் செல்வன். தன் கண்முன்னே தவறு நடந்தாலும் அதை கண்டுக் கொள்ளாத சராசரி மனிதனாக தன் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவரது பாடி லாங்குவேஜ்ஜையும் மாற்றி ஜெயித்திருக்கிறார்.

பிரியா ஆனந்த், அழகான நடிப்பையும் கொடுத்திருக்கிறார். ஆனால் சில காட்சிகளில் முகமெல்லாம் வீங்கியது போல உள்ளது. ஸ்லிம் ஆனதால் நல்லது.

பாலசரவணன் தன் பந்தை சரியாக வீசி அடிக்கடி கவுண்டர் கொடுக்கிறார். பல இடங்களில் இவரது காமெடி கைத்தட்டலை அள்ளுகிறது.

தாதாவாக காட்டப்படும் இன்னும் மிரட்டியிருக்கலாம். ஆனால் அவரும் சாந்தமாக வந்து செல்கிறார்.

ஜான்விஜய், நாசர், அனுபமா, பக்ஸ் ஆகியோர் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

Kootathil-Oruthan-shooting-spot-stills-1

தொழில்நுட்ப கலைஞர்கள்…

நிவாஸ் கே பிரசன்னா இசையில் ஏன்டா இப்படி எனக்கு மட்டும் பாடல் ரசிக்க வைக்கிறது. அதன் பாடல்வரிகள் இரண்டு சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி மாற்றியிருப்பது சிறப்பு.
எஸ்பிபி வாய்ஸ் இன்னும் கூடுதல் பலம்.

பிகே. வர்மாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு விருந்து. க்ளைமாக்ஸ் இண்டர்வியூ காட்சிகள் நம்மை உருக வைக்கிறது.

இயக்கம் பற்றிய அலசல்….
படம் எதை நோக்கி செல்கிறது. இது எந்த மாதிரியான கதை என நாம் குழம்பும் நேரத்தில், சரியான ரூட்டில் அழைத்து சென்று நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறார்.

ருசிக்கு சாப்பிடும் பல பேர். பசிக்கு சாப்பிடும் பல பேர். இந்த வேறுபாட்டை காண்பித்து, இனி உணவை வேஸ்ட் செய்யக்கூடாது என்ற எண்ணத்தை நம்மில் விதைக்கிறார்.

பெரும்பாலும் நாம் நட்சத்திரங்களை பிரபலங்களை மட்டும்தான் பார்க்கிறோம். கூட்டத்தில் ஒருத்தனாக இருப்பவனும் சாதனையாளன்தான். ஆனால் அவனை நாம் கவனிப்பதில்லை என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

கூட்டத்தில் ஒருத்தன்…. சாதனையாளன்.

நிபுணன் விமர்சனம்

நிபுணன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : அர்ஜீன், பிரசன்னா, வரலட்சுமி, சுகாசினி, சுமன், வைபவ், கிருஷ்ணா, போஸ்டர் நந்தகுமார், உமாரியாஸ் மற்றும் பலர்.
இயக்கம் : அருண்வைத்யநாதன்
இசை : நவீன்
ஒளிப்பதிவாளர் : அரவிந்த் கிருஷ்ணா
எடிட்டர்: சதீஷ் சூர்யா
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு : அருண்வைத்யநாதன் (பேஷன் ஸ்டூடியோஸ்)

nibunan arjun rajini

கதைக்களம்…

அர்ஜீன் ஒரு சிபிஐ ஆபிசர். இவரின் டீமில் இவருடனே இருக்கும் இருவர் பிரசன்னா மற்றும் வரலட்சுமி.

சிட்டியில் நடக்கும் ஒரு கொலையை துப்பறிய சொல்லி இவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்.

அந்த கொலையாளி ஒரு கொலையை செய்துவிட்டு, அடுத்த கொலையை எப்போது செய்ய போகிறேன் என ஒரு அறிகுறியை வைத்தே செல்கிறான்.

இப்படி ஒவ்வொரு கொலையாக செய்து சிபிஐக்கே சவால் விடும் சீரியல் கில்லராக இருக்கிறார்.

எதற்காக கொல்கிறான்? யார் அவன்? கொலைக்கான காரணம் என்ன? என்பது புரியாமல் அர்ஜீன் டீமே குழம்புகிறது.

அதன்பின்னர் அவனை கண்டுபிடிக்க அர்ஜீன் போடும் திட்டம் என்ன? அவனை கண்டுபிடித்தாரா? யார் அவன்? என்ன காரணம்? உள்ளிட்டவைகளை க்ளைமாக்ஸில் சீட் நுனியில் உட்கார வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் அருண்வைத்யநாதன்.

nibunan team

கேரக்டர்கள்…

தமிழ் சினிமாவில் அர்ஜீனுக்கென்றே ரெடிமேடாக போலீஸ் டிரெஸ் இருக்கும். ஆனால் இதில் ஒரே உடையில் கலர் கலராக சிபிஐ கேரக்டரில் வருகிறார்.

வெறும் ஆக்சன் என்றில்லாமல் நிதானமாக விளையாடியிருக்கிறார். சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வந்தாலும் எனர்ஜிட்டிக்காய் இருக்கிறார்.

இவரது மனைவியாக வரும் சுருதிஹரி ஹரன் நல்ல தேர்வு. செக்ஸியான கண்களால் கவர்கிறார்.

இவர்களின் செல்லக்குழந்தையும் நம் மனதில் இடம் பிடிப்பாள்.

கொலை, துப்பறியும் சீன் என சீரியஸாக படம் சென்றாலும் பிரசன்னா கலகலப்பூட்டுகிறார். குற்றவாளியின் ஜட்டிக்குள்ள பாம் வைக்கனும் என அடிக்கடி சொல்கிறார்.

வரலட்சுமி கம்பீரமாக வந்தாலும் கவர்ச்சியாகவே தெரிகிறார். (நமக்கு மட்டும்தான் அப்படி தெரிகிறாரா?)

வைபவ் கேரக்டரில் இன்னும் வலு சேர்த்திருக்கலாம். ஆனால் இவர் சீரியல் கில்லராக இருப்பாரோ? என சந்தேகப்பட வாய்ப்புள்ளது.

சுமன், சுகாசினி ஆகியோர் பெற்றோரின் தவிப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

Nibunan-Movie-Stills

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவும் எடிட்டர் சதீஷ் சூர்யாவும் படத்திற்கு இரு தூண்கள். தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

நவீன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் பேசப்படும்.

arjun-sarja-nibunan

இயக்கம் பற்றிய அலசல்…

சீரியல் கில்லர் யார்? என க்ளைமாக்ஸ் வரை ட்விஸ்ட் வைத்து, அதில் முக்கியமான ஹீரோவை காட்டியிருப்பபது அருண்வைத்யநாதனின் அருமையான முயற்சி.

ஆனால் அந்த சுவாரஸ்யத்தை கொஞ்சம் கூட்டி, கொன்றதற்கான காரணத்தை வலுவாக சொல்லியிருக்கலாம்.

வயசு பெண் இருக்கும் வீட்டில் மற்ற ஆண்களை விடுவதால் என்ன பிரச்சினை என்பதையும், மகளுக்காக பணத்தை செலவழிக்கும் நாம் நேரத்தையும் செலவழிக்கனும் என சொல்லியிருப்பது சபாஷ் போட வைக்கிறது.

குற்றவாளியை கண்டுபிடித்தபின் இது போன்று கதையை வைத்து தேச விரோதிகளை கொன்றால் என்ன? என அர்ஜீன் கேட்பது போலீஸ் தந்திரம்.

நிபுணன்… நிம்மதி

விக்ரம் வேதா விமர்சனம்

விக்ரம் வேதா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : மாதவன், விஜய்சேதுபதி, கதிர், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ப்ரேம், ராஜ்குமார் மற்றும் பலர்.
இயக்கம் : புஷ்கர் காயத்ரி
இசை : சாம்
ஒளிப்பதிவாளர் : ஆர். எஸ். வினோத்
எடிட்டர்: ரிச்சர்ட் கெவின்
பி.ஆர்.ஓ. : நிகில்
தயாரிப்பு : சசிகாந்த்

கதைக்களம்…

விக்ரமாத்யன் வேதாளம் கதை சிலருக்கு தெரிந்திருக்கலாம். அதை கருவாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார்கள் புஷ்கர் காயத்ரி.

இதில் விக்ரம் வேதா கேரக்டர்களில் மாதவன் விஜய்சேதுபதி நடித்துள்ளனர்.

மாதவன் என்கௌண்டர் ஸ்பெஷலிட் நேர்மையான போலீஸ் அதிகாரி.

விஜய்சேதுபதி.. வடசென்னை டான்

விஜய்சேதுபதியை கைது செய்கிறார் மாதவன். அப்போது விஜய்சேதுபதி தன் தரப்பு நியாயத்தை சொல்கிறார். அதை ஏற்கும் மாதவன் அவரிடம் ஒரு உதவி கேட்கிறார்.

இதை வைத்து கதைக்களத்தை ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள் இயக்குனர்கள்.

கேரக்டர்கள்…

சாக்லேட் பாய் இமேஜ்ஜை உடைத்து காவல் அதிகாரியாக கம்பீரமாக தெரிகிறார்.

வட சென்னை தாதாவாக வாழ்ந்திருக்கிறார் விஜய்சேதுபதி. அலட்டிக் கொள்ளாத நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

விஜய்சேதுபதியின் இன்ட்ரோ சீன் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.

வரலட்சுமி மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் இரண்டு நாயகிகளும் கச்சிதமான தேர்வு.

வரலட்சுமிக்கு சின்ன ரோல்தான் என்றாலும், அதை சிறப்பாக செய்திருக்கிறார்.

மாதவன் மற்றும் ஷ்ரத்தா ரொமான்ஸ் காட்சிகள் புதுசு.

கதிர் கேரக்டர் சிறியது என்றாலும், தன் பங்கை நிறைவாக செய்திருக்கிறார். யதார்த்த நடிப்பில் கலக்கியிருக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சாம் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. முக்கியமான பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர் படத்திற்கு பலம்.

என்கௌண்டர் செய்ய ஸ்கெட்ச் போடும் காட்சிகளையும் அருமையாக படம் பிடித்துள்ளனர்.

ஒவ்வொரு கதையாக விஜய்சேதுபதி சொல்ல படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு கூடிக் கொண்டே போகும். அதிலும் க்ளைமாக்ஸ் எவரும் எதிர்பாராத செம ட்விஸ்ட்.

போலீஸ் ரொம்ப நல்லவனும் இல்லை, ரவுடி ரொம்ப கெட்டவனும் இல்லை.

பணத்திற்காக இவர்களும் ஆடும் ஆட்டத்தை தியேட்டரில் பார்த்து ரசியுங்கள்.

புஷ்கர் காயத்ரி இயக்குனர்கள் இதிலும் இணைந்தே ஜெயித்திருக்கிறார்கள்.

விக்ரம் வேதா.. இருவருமே மாஸ்

மீசைய முறுக்கு விமர்சனம்

மீசைய முறுக்கு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஹிப்ஹாப் ஆதி, ஆத்மிகா, விஜயலட்சுமி, கஜராஜ் விக்னேஷ்காந்த், மாகாபா ஆனந்த், மாளவிகா, ஷாரா, குகன், ஆனந்த், முத்து மற்றும் பலர்.
இயக்கம் : ஹிப்ஹாப் ஆதி
பாடல்கள் இசை : ஹிப்ஹாப் ஆதி
ஒளிப்பதிவாளர் : யுகே செந்தில்குமார் மற்றும் கீர்த்திவாசன்
எடிட்டர்: பென்னி ஒலிவர்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு : சுந்தர் சி. (அவ்னி மூவிஸ்)

கதைக்களம்…
பாரதியார் மேல் உள்ள பற்றால், தன் இரண்டு பிள்ளைகளையும் தமிழ் பற்றுடன் வளர்க்கிறார் விவேக். இவரின் மூத்த மகன் ஆதி. 2வது மகன் ஆனந்த்.

ஜெயித்தாலும் தோத்தாலும் மீசைய முறுக்கு என்ற தாரக மந்திரத்துடன் வளர்கிறார் ஆதி.

இவரின் சூப்பர் ஹீரோ இவரது தந்தை விவேக்தான்.
அப்பாவின் ஆசைக்காக இன்ஜினியரிங் படிக்கும் இவர், படிப்பை முடித்தபின் இசை ஆல்பங்களை தயாரித்து இசை துறையில் சாதிக்க விரும்புகிறார்.

இதனிடையில் ஆத்மிகாவை காதலிக்கிறார். ஆனால் இவரது இசை கனவு தள்ளிக் கொண்டே போக, ஆத்மிகா தன்னை மறந்துவிட சொல்கிறார்.

இசையா? காதலியா? என்ற நிலையில் தவிக்கும் ஆதி என்ன செய்தார்? காதலியை கரம்பிடித்தாரா? தான் காதலித்த இசை பயணத்தில் இமயம் தொட்டாரா? என்பதை இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் சொல்லி அசத்தியிருக்கிறார் ஆதி.

DEe1R70V0AA4Hos

கேரக்டர்கள்…
முதல் படத்தில் நடித்தோம். இருந்தோம் என்றில்லாமல், படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி பாடி இயக்கி சிக்ஸர் அடித்திருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி.

காலேஜ்ஜில் கெத்து காட்டுவதில் தொடங்கி, ரொமான்ஸ், டான்ஸ், பாட்டு என இளைஞர்களை ஈர்க்கிறார் ஆதி.

இவரின் தம்பி ஆனந்த், மற்றும் நண்பர்களாக வரும் கஜராஜ் விக்னேஷ்காந்த், ஷாரா பாலாஜி, குகன் என அனைவரும் கச்சிதமான தேர்வு.

ஒரு சிலரின் நடிப்பில் செயற்கைத்தனம் தெரிவதை தவிர்க்க முடியவில்லை.

யூடிப்பில் பிரபலமானவர்களை சரியாக பயன்படுத்தி அவர்களுக்கும் சினிமாவில் வாய்ப்பு வழங்கிய ஆதியை பாராட்டலாம்.

காமெடி ட்ராக்கை மாற்றி, குணச்சித்திரத்தில் விவேக் விளாசியிருக்கிறார்.

குழந்தையா இருக்கும்போது அப்பா ஹீரோவாக தெரிவாங்க. நீங்க வளர்ந்துட்டா வில்லனா தெரியுறோமோ? என விவேக் கேட்கும்போது மகன்கள் அப்பாவின் பாசத்தை புரிந்துக் கொள்வார்கள்.

அழகான அன்பான அம்மாவாக விஜயலட்சுமி நல்ல தேர்வு.
நாயகி ஆத்மிகா நடிப்பிலும் பாஸ் மார்க் பெறுகிறார். காதலுக்காக எத்தனை வருடங்கள் காத்திருப்பது? நாளைக்கே நான் வர ரெடி.

நீ ஏத்துக்கிறியா? என கேட்கும்போது நிச்சயம் காதலர்களுக்கு இனியாச்சும் பொறுப்பு வரும்.

இவரது தோழி, அக்கா ஆகியோரும் நல்ல தேர்வு.
ஆத்மிகா அக்கா லைப்ரரியில் ஆத்மிகா தேடும் காட்சிகளை ரசிச்சு சிரிக்கலாம்.

 

DDyrdXIUQAAsK3x

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கை மட்டும்தான் ஹிப்ஹாப் ஆதி விட்டு வைத்திருக்கிறார். எனவே அவர்கள் இருவரும் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.

மண்ணில் உன்னை சேராவிட்டால் சொர்க்கத்தில் சேர்வேன். அங்கும் ஜாதி இருந்தால் நரகமே போதும் என்ற பாடல் வரியிலும் ஆதி அசத்தியிருக்கிறார்.

பெரும்பாலான பாடல்களை ஆதியே பாடிவிட்டார். ஆனால் சோகமான காட்சியிலும் ராப் பாடல்களை போட்டுவிட்டார். படத்தில் மெலோடி வைத்திருக்கலாமே ப்ரோ.

ஆதியை முழுவதும் நம்பியிருக்கிறார் தயாரிப்பாளர் சுந்தர் சி. அவரின் நம்பிக்கை வீண்போகவில்லை.

மீசைய முறுக்கு… கெத்து

பண்டிகை விமர்சனம்

பண்டிகை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கிருஷ்ணா, ஆனந்தி, அர்ஜெய், நிதின்சத்யா, சரவணன், ப்ளாக் பாண்டி, மதுசூதனன், அருள்தாஸ் மற்றும் பலர்.
இயக்கம் : பெரோஸ்
இசை : ஆர்.எச்.விக்ரம்
ஒளிப்பதிவாளர் : அரவிந்த்
எடிட்டர்: பிரபாகர்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு : விஜயலெட்சுமி

Pandigai-Movie-Stills-6

கதைக்களம்…

மற்றவரை அடித்து தன் தேவையை பூர்த்தி செய்துக் கொள்பவர் நாயகன் கிருஷ்ணா.

ஒரு கட்டத்தில் இந்த வாழ்க்கையே வேண்டாம் என ஒரு ஹோட்டலில் வேலைப்பார்கிறார்.

இதனிடையில் நாயகி ஆனந்தியை ரூட்டு விடுகிறார்.

மற்றொரு புறம், சூதாட்டத்தில் தன் சொத்தை எல்லாம் தாதா ஒருவரிடம் இழந்த சரவணன் வாழ்கிறார்.

கிருஷ்ணாவின் பலத்தை பார்த்த சரவணன், கிருஷ்ணாவுக்கு உதவுவதுபோல தன் சுயலாபத்திற்காகவும் தாதா நடத்தும் ஒரு சண்டைப் போட்டியில் பங்கேற்க வைக்கிறார்.

கிருஷ்ணாவும் அதில் வெற்றி பெற்று நிறைய பணம் சேர்க்கிறார்.

இதனைத் தொடர்ந்து, தான் இழந்த பணத்தை எல்லாம் கிருஷ்ணாவினால் மீட்டுத் தர முடியும் என நினைக்கும் சரவணன், ஒரு சூப்பர் ப்ளான் போடுகிறார்.

அந்த ஐடியா ஒர்க் அவுட் ஆனதா? நினைத்தப்படி பணம் கிடைத்ததா? என்பதை ஆக்‌ஷன் கலந்து ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் அறிமுக டைரக்டர் பெரோஸ்.

pandigai stills

கேரக்டர்கள்…

மற்ற படங்களை காட்டிலும் இதில் நிறையவே மெனக்கெட்டு இருக்கிறார் கிருஷ்ணா. ஸ்ட்ரீட் பைட் முதல் ரொமான்ஸ் வரை தேறியிருக்கிறார்.

பருத்தி வீரன் சரவணனுக்கு இதில் வெயிட்டான கேரக்டர். படத்தின் கதையே அவரை சுற்றித்தான் நகர்கிறது.
அவரும் அதை உணர்ந்து பண்பட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்.

பெரும்பாலும் ஆனந்திக்கு அமைதியான கேரக்டரே செட்டாகும். அதில் தன் பங்கை சிறப்பாக செய்திருந்தாலும், ஓவர் ஆக பேசுவது கொஞ்சம் ஓவர்தான்.

சூதாட்டம், வஞ்சகம் என அந்த கேரக்டராகவே தெரிகிறார் மதுசூதனன்.

நல்ல உடல்வாகுடன் வரும் அர்ஜெய் இதிலும் தனித்து தெரிகிறார்.

நிதின்சத்யா, அருள்தாஸ், ப்ளாக் பாண்டி, சண்முகராஜன் ஆகியோர் தங்கள் அனுபவ நடிப்பால் ரசிக்க வைக்கிறார்கள்.

pandigai press meet

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஆர்.எச்.விக்ரமின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்கிறது.

அர்வியின் ஒளிப்பதிவில் ஸ்ட்ரீட் பைட் காட்சிகள் கண்களுக்கு விருந்து.

அறிமுக இயக்குனர் என்றாலும் நன்றாக ஸ்கோர் செய்துள்ளார் பெரோஸ். ஆனால் படத்தில் நிறைய ஆக்ஷன் இருப்பதால் பெண்களை கவருமா? என்பதை கவனித்திருக்கலாம்.

பண்டிகை… ஹாப்பியா கொண்டாடுங்க

More Articles
Follows