FIRST ON NET நானே வருவேன் விமர்சனம் 3.5/5.; தனுஷ் – செல்வா கூட்டணி எப்படி?

FIRST ON NET நானே வருவேன் விமர்சனம் 3.5/5.; தனுஷ் – செல்வா கூட்டணி எப்படி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

தனுஷ் TWINS (இரட்டை பிறவி). இதில் ஒருவர் வில்லன். ஒருவர் ஹீரோ. சிறு வயதில் பிரியும் இவர்கள் ஒரு அமானுஷ்ய சக்தியால் இணைகின்றனர் என்பதே ஒன்லைன்.

கதைக்களம்…

கதிர் & பிரபு இருவரும் இரட்டை குழந்தைகள். இதில் கதிர் ஒரு முரடன்.

தன் சிறு வயதிலேயே ஒரு பிரச்சனையால் தன் தந்தையை கொன்று விட அவனை விட்டு விட்டு பிரபு உடன் பிரிந்து செல்கிறார் இவர்களின் அம்மா.

பிரபு (தனுஷ்) பெரியவனாகி இந்துஜாவை திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு ஒரு மகள்.

ஒரு கட்டத்தில் அந்த சிறுமிக்குள் ஒரு அமானுஷ்ய சக்தி நுழைகிறது. அதனை கண்டுபிடித்தாரா பிரபு? அந்த அமானுஷ்ய சக்தியின் நோக்கம் என்ன? கதிர் என்ன ஆனார்? பிரிந்த சிறுவர்கள் இணைந்தார்களா? என்பதே மீதிக் கதை.

கேரக்டர்கள்…

இதுவரை ஏற்காத வில்லன் மற்றும் ஹீரோ இரு வேடங்களில் வித்தியாசமான நடிப்பை கொடுத்துள்ளார் தனுஷ். ஒருவர் சாதுவாகவும் ஒருவர் முரடனாகவும் நடிப்பை வேறுபடுத்தி தன் அசுரன் நடிப்பில் கவர்ந்திருக்கிறார் தனுஷ்.

ஒரு சிறுமிக்கு தாயாக இந்துஜா நடித்துள்ளது பாராட்டுக்குரியது.

இவர்களுடன் யோகி பாபு இளைய திலகம் பிரபு நடித்திருக்கின்றனர். இவர்களுக்கு பெரிதாக வேலை இல்லை.

செல்வராகவன் சின்ன வேடத்தில் நடித்துள்ளார். அவர் ஏன் வருகிறார்? அவரின் நோக்கம் என்ன என்பதே புரியவில்லை.

இதில் எல்லி அர்வம் நாயகி அவருக்கும் பெரிதாக வேலை இல்லை.

இவையில்லாமல் அமானுஷ்ய சக்தியை கண்டுபிடிக்க நான்கு ஐந்து கல்லூரி மாணவர்கள் வருகிறார்கள். அது செம காமெடி.

ஆனால் படத்தில் சிறுவர்களாக நடித்திருக்கும் இரட்டையர்கள் நால்வருமே நல்லதொரு நடிப்பை கொடுத்துள்ளனர்.

அதுபோல தனுஷ் இந்துஜாவின் மகளாக வரும் அந்த பெண்ணும் பித்து பிடித்தவள் போல நல்ல நடிப்பை கொடுத்துள்ளார்.

ஆனால் தந்தையே டாடி என்பதற்கு பதிலாக டாடா என்று சொல்வது ஏதோ தேவையில்லாத ஒன்று போல தோன்றுகிறது.

டெக்னீஷியன்கள்..

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு சிறப்பு. படத்தை இரண்டே மணி நேரத்தில் முடித்துள்ளது கூடுதல் தகவல். படத்தில் மொத்தம் 15 பேரை வைத்து முடித்து விட்டார்கள். கச்சிதமாக கேரக்டரை கொடுத்துள்ளார் இயக்குனர் செல்வராகவன்.

படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது யுவன் சங்கர் ராஜாவின் இசை.. தீரா சூரா பாடல் தீப்பொறியாக இருக்கிறது. பின்னணி இசையில் தன் வழக்கம் போல மிரட்டி இருக்கிறார்.

முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை என்று சொல்லலாம். இடைவேளை காட்சியில் கொடுத்த பில்டப் சூப்பர்.

கிளைமாக்ஸ் இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம். ஒருவேளை பார்ட் 2 படத்திற்காக அப்படி முடித்து விட்டாரோ என்னவோ?

ஆக நானே வருவேன்… செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை இந்த படம் கொடுத்துள்ளது.

 

ட்ரிகர் விமர்சனம்..; ஆக்சன் அதர்வா

ட்ரிகர் விமர்சனம்..; ஆக்சன் அதர்வா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

போலீஸ் தந்தை (அருண் பாண்டியன்) கண்டுபிடிக்க முடியாமல் விட்டதை மகன் போலீஸ் கண்டுபிடிக்கிறார்.

காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகளை களைய உளவு பார்க்கும் போலீஸ் படை Vs குழந்தைகளை கடத்தும் ஒரு கும்பல்.. இவர்களிடையே நடக்கும் யுத்தமே ‘ட்ரிகர்’.

கதைக்களம்…

போலீஸ் பிரபாகரன் (அதர்வா). ஒரு பிரச்சனையால் இவருக்கு வேலை பறிபோகிறது.

ஆனாலும் யூனிபார்ம் அணியாத அன்டர்கவர் போலீஸ் ஆக பணிபுரிய சொல்கிறார் மேலதிகாரி அழகம் பெருமாள்.

காவல்துறையினர் செய்யும் தவறுகளை கண்காணிக்கும் வேலையை கொடுக்கிறார்கள்.. ஆனால் இப்படி ஒரு வேலை நிஜத்தில் இருக்கிறதா? இதெல்லாம் வொர்க் அவுட் ஆகுமா என தெரியவில்லை. (சட்டமாக வந்தால் நாட்டுக்கே நல்லது)

இன்னொரு புறம்..: அனாதை குழந்தைகளை கடத்தல் செய்கிறார் வில்லன். ஆசிரமத்தில் உள்ள அவர்களை மட்டுமே அவர் குறிவைப்பது ஏன்? என்பதை கண்டறிய முற்படுகிறார் அதர்வா.

அதன் பின்னணியில் யார்? என்ன செய்கிறார்கள்? என்பதே படத்தின் கதை

கேரக்டர்கள்…

கொஞ்சம் ஆக்சன்.. கொஞ்சம் எமோஷன் என அசத்தலாக அதர்வா. நாயகி தான்யாவுக்கு பெரிய வேடம் இல்லை.

அதர்வா, தான்யா ரவிச்சந்திரன், சீதா, வினோதினி, அருண் பாண்டியன், சின்னி ஜெயந்த், அன்புதாசன், முனீஷ்காந்த் என பலரும் உண்டு.

மறதி நோயாளியாக (செலக்டிவ் அம்னீஷியா) அருண் பாண்டியன்.. குழந்தை பெற முடியாத பெண்ணாக வினோதினி… தன் மகனிடம் தன்னைப்பற்றி சொல்லும் சின்னி ஜெயந்த் என இவர்கள் ஒவ்வொருவரும் கவனிக்க வைக்கின்றனர்.

வில்லனாக வரும் மைக்கேல். ஓவர் பில்டப். எல்லாம் திட்டங்களையும் சிறையில் இருந்து செய்கிறார். அது ஏன்? என்பது தெளிவாக சொல்லப்படவில்லை

டெக்னீஷியன்கள்…

கிருஷ்ணன் வெங்கட் ஒளிப்பதிவு செய்துள்ளார். திலீப் சுப்பராயணின் சண்டைக்காட்சிகள் அதிரடி லெவல்.

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் ஈர்க்கவில்லை. ஆனால் பின்னணி இசை சூப்பர். ஹீரோவை விட வில்லனுக்கு தான் ஓவர் பில்டப். ஆனால் வில்லனிடம் அந்த கெத்து இல்லை.

இந்த படத்தை ஆக்ஷன் த்ரில்லராக கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குநர் சாம் ஆண்டன். ஆனால் திரைக்கதையில் அழுத்தம் இல்லை என்பதால் நம்மால் படத்துடன் ஒன்ற முடியவில்லை.

ஆக இந்த ட்ரிகர் TRIGGER – ட்விஸ்ட் பத்தல

பபூன் விமர்சனம்.; கலையா.? போதையா.?

பபூன் விமர்சனம்.; கலையா.? போதையா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

கூத்துக் கலை கலைஞர்கள் வைபவ் மற்றும் ஆத்தங்குடி இளையராஜா.

இந்த தொழிலில் வருமானம் இல்லாத காரணத்தினால் வெளிநாடு செல்ல நினைக்கின்றனர்.

ஆனால் வெளிநாடு செல்லவும் பணம் இல்லாத காரணத்தினால் கிடைத்த டிரைவர் வேலையை செய்கின்றனர்.

அப்பொழுது ஒரு லாரியில் சரக்கு ஏற்றிக் கொண்டு டெலிவரி செய்ய போகும்போது அதில் 20கிலோ போதை பொருள் இருப்பது தெரிய வருகிறது.

இவர்கள் சுதாரிப்பதற்குள் போலீஸ் இவர்களை கைது செய்கிறது. அதன் பின்னர் என்ன ஆனது? வெளிநாடு சென்றார்களா? குற்றத்திலிருந்து தப்பித்தார்களா? என்பதே மீதி கதை.

கேரக்டர்கள்…

வைபவ் படம் என்றால் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இதில் சீரியஸ் கேரக்டர் செய்துள்ளார். இவருக்கு பதிலாக காமெடி சாரல்களை தூவ விட்டுள்ளார் நிஜ நாட்டுப்புறக் கலைஞர் இளையராஜா.

இவருக்கு இனி சினிமாவில் நல்ல நல்ல வாய்ப்புகளை எதிர்ப்பார்க்கலாம்.

படத்தின் நாயகி அனகா. ஆர்ப்பாட்டம் இல்லாத அழகான நடிப்பை கொடுத்துள்ளார்.

படம் முழுவதும் உச்சரிக்கப்படும் கேரக்டர் பெயர் தனபால்.. தனபால் யார்? தனபால் யார்? என கிளைமாக்ஸ் வரை நீண்டு கொண்டே செல்கிறது..

ஆனால் தனபாலாக நடித்துள்ள ஜோஜூ ஜார்ஜ் கேரக்டரில் வலுவில்லை. காட்சிக்கு காட்சி பில்டப் மட்டுமே இருக்கு.

ஆனால் திரையை அழுத்தமாக ஆக்கிரமித்துவிட்டார் ஜோஜு ஜார்ஜ். இவரை வைத்து பபூன் பார்ட் 2 எடுக்கலாம்.

போலீஸ் அதிகாரியாக தமிழ் சிறப்பாக நடித்துள்ளார். கம்பீரமான நடிப்பு. மூணார் ரமேஷ் நடிப்பும் ஓகே.

ஆடுகளம் நரேன் மற்றும் வ.ஐ. ச. ஜெயபாலன் உள்ளிட்டோர் அரசியல்வாதிகளாக அனுபவ நடிப்பை கொடுத்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

சந்தோஷ் நாராயணனின் இசையில் கூத்துப் பாடல் அருமை. ஆனால் வைபவ் அதுக்கு பொருந்தவில்லை. பின்னணி இசை ஓகே ரகம்.

போதை கடத்தல், அரசியல் களம், பாலிடிக்ஸ் ஈகோ, இலங்கை அகதிகள், போலீசில் சிக்கும் அப்பாவி என அனைத்தையும் அலசியிருக்கிறார் இயக்குனர் அசோக் வீரப்பன்.

போலீசால் தேடப்படும் குற்றவாளி வைபவ் கேரளாவில் இருந்து தமிழகம் வருகிறார். அவர் எப்படி வருகிறார்? என்று தெரியவில்லை. ஊருக்குள் எங்கும் ஓடுகிறார். போலீசிடம் சிக்கவில்லை. இதுபோன்ற லாஜிக் குறைகளை தவிர்த்து இருக்கலாம்.

ஆக இந்த பபூன்… பரவாயில்லை ரகமே..

குழலி விமர்சனம் 3.25/5..; காதலை எரித்த ஜாதீ

குழலி விமர்சனம் 3.25/5..; காதலை எரித்த ஜாதீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

கீழ் ஜாதி மாணவனை காதலிக்கிறார் உயர் ஜாதி மாணவி. இதனால் இருதரப்பிற்கும் ஏற்படும் மோதலே இந்த காதல் கதை

கதைக்களம்…

காக்கா முட்டை (சுபு) விக்னேஷ் நாயகன். ஆரா (குழலி) நாயகி.

ஒன்றாக பள்ளியில் படிக்கும் இவர்கள் காதலிக்கின்றனர். இவர்களது காதல் வீட்டிற்கு தெரியவர மகளின் படிப்பை நிறுத்திவிடுகிறார் செந்தி அம்மா.

பின்னர் வேறு ஒருவருடன் அதே ஜாதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்கிறார்.

அதன் பின்னர் காதலர்கள் என்ன செய்தார்கள்? இறுதியில் என்ன ஆனது என்பது இந்தக் குழலி.

கேரக்டர்கள்…

காக்கா முட்டையில் சிறுவனாக நடித்த விக்னேஷ் தான் இந்த படத்தின் நாயகன். அவருக்கு படத்தில் பெரிதாக வசனங்கள் இல்லை. பயந்த சுபாவம் கொண்டவனாக நடித்திருக்கிறார்.

ஆராவின் கண்கள் ரொம்ப அழகு. கண்களால் பாதி பேசி விடுகிறார். ஆனால் வாயைத் திறந்து பேசினால் தான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரோட சொந்த குரலா? என தெரியவில்லை. ஒரு ஆணின் குரல் போல உள்ளது.

ஆரா மற்றும் அவரின் அம்மா செந்தி இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

ஆனால் படத்தில் ஜாதி வெறி பிடித்தவர்களாக நடித்துள்ள பலர் ஓவர் ஆக்டிங் செய்துள்ளனர். வைத்தியராக வருபவர் எதார்த்த நடிப்பை கொடுத்துள்ளார்

கிளைமாக்சில் , “என்னை படிக்க விடுங்கடா” என்று ஆரா உயிருக்கு போராடுவது பதை பதைக்க வைக்கிறது.

டெக்னீஷியன்கள்…

எம் உதயகுமாரின் இசை. பாடல்கள் இசைஞானி மெட்டுக்களாய் இதம். பாடல் இசையும் பின்னணி இசையும் அருமை.

படத்திற்கு மூன்று நான்கு பாடல்கள் போதுமானது. ஆனால் ஐந்து ஆறு பாடல்கள் போட்டுவிட்டு நம்மை வெறுப்பேற்றி விட்டார் இயக்குனர்.

சமீரின் ஒளிப்பதிபும் சிறப்பு. நம்மை கிராமத்துக்கே அழைத்து சென்றுவிட்டார். அப்படியொரு குளுமையான அழகு.

சாதிப் பிரச்னையில் முழுக்க முழுக்க அரைத்த மாவையே அரைத்து நம்மை கடுப்பேற்றி விட்டனர்.

கே பி. வேலு, எஸ் ஜெயராமன், எம்.எஸ். ராமச்சந்திரன் தயாரித்திருக்கின்றனர்.

சில கிராமத்தில் உலவும் சாதிய கொடுமையை உரக்கச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சேரா கலையரசன். ஆனால் இடைவேளை வரை எந்த ட்விஸ்டும் இல்லை.. காதல்… இசை ஆகியவையே பிரதானமாக காட்டப்படுகிறது.

இறுதியாக சாதி வெறியர்களின் மீது காரி உமிழ்வதன் மூலம் செருப்படி கொடுத்துள்ளார்.

ஆக இந்த குழலி… காதலை எரித்த ஜாதீ

Kuzhali movie review and rating

ரெண்டகம் விமர்சனம் 3.75/5.; கேங்ஸ்டர் ட்விஸ்ட்

ரெண்டகம் விமர்சனம் 3.75/5.; கேங்ஸ்டர் ட்விஸ்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரவிந்த்சாமி & பிரபல மலையாள ஹீரோ குஞ்சாக்கோ போபன் இணைந்துள்ள படம் இது. ‘ரெண்டகம்’ என்ற பெயரில் இன்று தமிழில் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் OTTU ‘ஒட்டு’ என்ற பெயரில் ஓணம் ஸ்பெஷலாக செப்டம்பர் 8ல் வெளியானது. பெல்லினி இயக்கியுள்ளார்.

ஒன்லைன்…

பாம்பே கேங்ஸ்டர் கதைதான் என்றாலும் சூப்பரான ட்விஸ்ட் நிறைந்த படம் இது. தற்போது வெளியானது பார்ட் 2. ஆனால் பார்ட் 1 இதுவரை வெளியாகவில்லை.

மொத்தம் மூன்று பாகங்களாக படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

கதைக்களம்…

மும்பையில் இரண்டு நண்பர்கள் தாதாவாக உள்ளனர். அரவிந்த்சாமி & மற்றொருவர்.

ஒரு விபத்தில் மற்றொருவர் இறக்க அரவிந்த்சாமி மட்டுமே உயிரோடு இருக்கிறார். ஆனால் விபத்தில் தன் நினைவுகளை இழக்கிறார்.

இதனால் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பற்றி எவருக்கும் தெரியவில்லை. இந்த ரகசியத்தை தெரிந்துக் கொள்ள ஒரு கும்பல் குஞ்சாக்கோ போபனை அரவிந்த்சாமியிடம் பழக அனுப்புகிறது. அவருக்கு ஒரு தொகையும் பேசப்படுகிறது.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் நடக்கிறது. அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்….

அரவிந்ந்த்சாமி குஞ்சாக்கோ போபன் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். கொஞ்சம் ஜாலியான பேர்வழி இவர். குடித்துவிட்டு உளறும் போது ரசிக்க வைக்கிறார்.

முதல் பாதியில் சாந்தமாக அமைதியாக வருகிறார் அரவிந்த். இரண்டாம் பாதியில் இவர் காட்டும் அதிரடி செம. அதில் அவர் அணிந்து வரும் காஸ்டியூம் கூட கலக்கல்.

இவர்களுடன் ஆடுகளம் நரேன், அமல்டா லிஸ் நடித்துள்ளனர். குஞ்சாக்கோவின் காதலியாக ஈஷா ரெப்பா ஓகே.

சிறப்புத் தோற்றத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் படு யதார்த்த நடிப்பில் கவர்கிறார் ஜாக்கி ஷெராப்.

டெக்னீஷியன்கள்…

காஷிப் இசையில் கவுதம் ஷங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இருவரும் படத்திற்கு முக்கிய தூண்கள். பின்னணி இசையும் மிரட்டியுள்ளனர். ஒளிப்பதிவு கண்களுக்கு மாபெரும் விருந்து.

மங்களூர், மும்பை, கோவா என இவர்கள் செல்லும் வழி தடங்கள் அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.

படத்தின் தமிழ் வசனங்களை சசிகுமார் எழுதியுள்ளார் தமிழுக்கு ஏற்றவாறு அழகாக உச்சரிக்கப்பட்டுள்ளது.

பெல்லினி என்பவர் இயக்கி உள்ளார். முக்கியமாக படத்தை ஸ்டைலிஷ் ஆக மேக்கிங் செய்துள்ளனர். டைட்டில் கார்டு காட்சிகளும் சிறப்பு.

தற்போது இரண்டாம் பாகம் மட்டும் வந்துள்ளதால் முதல் பாகம் எப்படி இருக்கும்? மூன்றாம் பாகம் எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிச்சயம் நிறைந்திருக்கும்.

ஆக இந்த ரெண்டகம்.. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்பவர்களை பற்றிய கதை.

அது யார் என்பதுதான் சஸ்பென்ஸ்..

Rendagam alias Ottu movie review rating

ட்ராமா விமர்சனம்..; சிங்கிள் ஷாட் சினிமா

ட்ராமா விமர்சனம்..; சிங்கிள் ஷாட் சினிமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிஷோர் குமார், சார்லி, ஜெய் பாலா, வின்சென்ட் நகுல், வினோத் முன்னா, காவ்யா பெல்லு, மரியா பிரின்ஸ், ப்ரீத்தி ஷா பிரேம்குமார், விஜயலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் “ட்ராமா

ஒன்லைன்…

ஒரு காவல் நிலையத்தில் ஒரு இரவில் நடக்கும் கதை. அந்த கொலையை செய்தவர் யார்? என்பது பற்றிய விசாரணையே இந்த படம்

இந்த படமானது ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. மலையாள இயக்குனர் அஜு குளுமலா என்பவர் இயக்கியிருக்கிறார்.

கதைக்களம்…

காவல்நிலையத்தில், ஜெய்பாலா புதிதாக எஸ் ஐ ஆக பொறுப்பேற்கிறார். அங்கு ஸ்டேஷனில் ஏட்டாக சார்லி.

ஜெய்பாலாவின் காதலியாக காவ்யா பாலு.

ஒரு நாள் காவல் நிலையத்தில் காதல் ஜோடி ஒன்று தஞ்சம் கொள்ள வருகிறது.

அப்போது சார்லி கொலை செய்யப்பட்டு ஸ்டேஷனில் கிடக்கிறார்.

அங்கு இருக்கும் யாரோ ஒருவரால் தான் சார்லி கொலை செய்யப்பட்டிருக்கிறார், யார் அவர்.? என்பதை விசாரிக்க வருகிறார் கிஷோர்.

குற்றவாளி யார்? கிஷோர் கண்டுபிடித்தாரா.? எதற்காக சார்லி கொலை செய்யப்பட்டார் என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள் & டெக்னீஷியன்கள்…

கிஷோர் குமார், சார்லி, ஜெய் பாலா, வின்சென்ட் நகுல், காவ்யா பெல்லு ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம்.

ஆனால் கிஷோரின் விசாரணையை இன்னும் தெளிவுபடுத்தி இருக்கலாம். அந்த அறைக்குள் என்ன நடக்கிறது? என்பது ரசிகர்களுக்கு புரியாத புதிராகவே அமைந்துவிட்டது.

ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட இப்படம் சற்று மாறுபட்டு நிற்கிறது.

இதனால் ஒளிப்பதிவில் போதுமான தரம் இல்லை. ஆனால் நிறைய ரிகர்சல் செய்துள்ளதால் நடிகர்களின் நடிப்பை நிச்சயம் பாராட்டலாம்.

காமெடி என்ற பெயரில் சில காட்சிகளில் காம நெடி அதிகமாக இருக்கு. , அதை தவிர்த்திருக்கலாம்.

ஓர் இரவு.. ஒரு கொலை ஒரு ஸ்டேஷன் என வித்தியாசமான பாணியில் இந்த படத்தை கொண்டு செல்கிறார் இயக்குனர். அதுவும் சிங்கிள் சாட்டில் அதை செய்திருப்பது பாராட்டுக்குரியது

பின்னணி இசை படத்திற்கு பலம்.

ஆக ட்ராமா.. சிங்கிள் ஷாட் சினிமா

More Articles
Follows