ரொமான்டிக் புல்லட்… எனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம் 3/5

ரொமான்டிக் புல்லட்… எனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம் 3/5

3 வருடத்திற்கு போராட்டத்திற்கு பிறகு இந்த தோட்டா இன்று தியேட்டர்களில் பாய்ந்திருக்கிறது. அதுவும் கிளாசிக் டைரக்டர் பெயர் எடுத்த கௌதம் மேனனுடன் தனுஷ் இணைந்திருப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. சரி படம் அதை பூர்த்தி செய்துள்ளதா என்பதை பார்ப்போம்.

கதைக்களம்…

கௌதம் மேனன் படங்கள் வாய்ஸ் ஓவரில் நகரும். இந்த படமும் அப்படிதான்.

கேங்ஸ்டர் கும்பல் ஒன்று தனுஷை சுட்டு விடுகின்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் தனுஷ் வாய்ஸ் ஓவரில் கதையை கடத்துகிறார்.

காலேஜில் படிக்கிறார் தனுஷ். அந்த காலேஜில் சினிமா சூட்டிங்க்கு வருகிறது ஒரு படக்குழு. அந்த படத்தின் ஹீரோயின்தான் மேகா ஆகாஷ்.

ஆனால் அவருக்கோ அந்த படத்தில் நடிக்க விருப்பமில்லாமல் நடித்து வருகிறார்.

இதனிடையில் காலேஜ் பாய் தனுஷுடன் காதலில் விழுகிறார் மேகா ஆகாஷ். இதனால் டைரக்டர் மேகாவை மிரட்டி அழைத்து செல்கின்றார்.

இதன்பின்னர் நடக்கும் சஸ்பென்ஸ சம்பவங்களே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்….

தனுஷின் முகமும் உடலும் எந்த கேரக்டர் என்றாலும் செட்டாகும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். காலேஜ் பையனாகவும் பின்னர் தாடி வைத்து சேலன்ஞ் செய்யும் காட்சிகளில் தன் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார்.

அதுவும் மேகா ஆகாஷ் உடன் தனுஷின் கெமிஸ்ட்ரி செம. அதில் கௌதம் மேனனின் கிளாசிக் டச்சை நாம் பார்க்கலாம்.

மேகா ஆகாஷ் நடித்த முதல் படம் இதுதான். அப்படியொரு ப்ரெஷ்ஷாக இருக்கிறார். கொள்ளை அழகு. அழும் காட்சிகளில் இன்னும் கூடுதல் எமோசன் தேவை. கௌதம் பட ஹீரோயின்கள் என்றாலே எல்லாரும் அழகுதான்.

சசிகுமார் மற்றும் சுனைனா காட்சிகள் அதிகம் இல்லை என்றாலும் படத்தின் கதையோட்டத்திற்கு நகர்கிறது. இருவரும் தங்கள் நடிப்பில் கச்சிதம். சசிகுமார் கேரக்டர் நன்றாக உள்ளது.

செந்தில் வீரசாமி கேரக்டர் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும். வேல ராமமூர்த்தி கேரக்டர் வலுவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

தனுஷ் மேகா ஆகாஷ் ரொமான்டிக் காட்சிகள் இளைஞர்களுக்கு கலர்புல் ட்ரீட். அதனை கூடுதல் அழகுடன் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் தர்புகா சிவா.

இவரது இசையில் பாடல்கள் அனைத்தும் இதம். முக்கியமாக ஒரு வார்த்தை பேசாதே மற்றும் விசிறி பாடல்கள் சூப்பர்.

அதுபோல் வசனங்களும் சூப்பர். இவ்ளோ அழகை தேடி போனதில்லை, உன் முகத்தை தாண்டி யோசிக்க முடியவில்லை’ என்ற வசனம் காதலர்களை கவரும்.

’ஆம்பள அப்பப்போ மிருகமா நடந்துக்கொள்வான், அப்படி தான் நானும்’ என்ற வசனம் முரட்டு சிங்கிளை கைத்தட்ட வைக்கும்.

காதலர்களுக்கு காட்சிகல் விருந்து படைத்துள்ளார் ஒளிப்பதிவாளர்கள் ஜாமன் டி ஜான் மற்றும் மனோஜ் பரகஹம்சா.

பிரவீன் ஆன்டனி எடிட்டிங்கில் இன்னும் கத்திரி போட்டிருக்கலாம். 2ஆம் பாதியில் வாய்ஸ் ஓவர் ஓவர் என நாம் சொல்ல வேண்டிய அளவுக்கு ஓவராகவே உள்ளது. அதை குறைத்திருக்கலாம். பேசும் வசனங்களை விட வாய்ஸ் ஓவர் ரொம்பவே கடுப்பேத்துகிறது.

காதலுடன் சஸ்பென்சையும் கலந்து தன் ஸ்டைலில் கலந்துக் கொடுத்துள்ளார் டைரகடர் கௌதம் மேனன்.

அவரது வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா என அனைத்து படங்களிலும் நாம் பார்த்த அதே ஸ்டைல்தான். பாதி சஸ்பென்சாகவும் பாதி ரொமான்டிக்காவும் படம் நகர்கிறது. இந்த ரூட்டை கௌதம் எப்போது மாற்றுவாரோ? தெரியல. ரொமான்ஸ் மட்டும் ஓகே.

படம் முதலில் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் பின்னர் தான் டைரக்டர் காட்சிகளை விளக்குகிறார்.

ஆக இதில் தனுஷ் உடன் இணைந்து தோட்டாவை பாய வைத்துள்ளார்.

எனை நோக்கி பாயும் தோட்டா… ரொமான்டிக் புல்லட்

Enai Noki Paayum Thota review rating

Comments are closed.

Related News

கோலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் தனுஷ் ஹிந்தியில்…
...Read More
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா…
...Read More
கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும்…
...Read More

எனை நோக்கி பாயும் தோட்டா Gallery