அக்கா குருவி விமர்சனம் 3.5/5..; ஒரு ஜோடி ஷூவில் கட்டப்பட்ட பாசமலர்கள்

அக்கா குருவி விமர்சனம் 3.5/5..; ஒரு ஜோடி ஷூவில் கட்டப்பட்ட பாசமலர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

இளையராஜா இசையில் உருவாகியுள்ள படம் ‘அக்கா குருவி’. இந்த படத்தை இயக்குனர் சாமி இயக்கியுள்ளார்.

சிந்து சமவெளி, உயிர், மிருகம் என அடுத்தடுத்து சர்ச்சை படங்களை இயக்கியவர் சாமி. ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதியின் ‘Children of heaven’ என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்தான் இந்த அக்கா குருவி.

கதைக்களம்…

ஒரு நடுத்தர குடும்பம். அதில் கணவன், மனைவி, மற்றும் 10 வயதில் மகன். 8 வயதில் ஒரு மகள். இவர்கள் கொடைக்கானல் பகுதியில் வசிக்கின்றனர்.

தினமும் கூலி வேலை செய்து தன் வாழ்க்கையை ஓட்டி வந்தாலும் தன் பிள்ளைகளை காஸ்ட்லியான கான்வெட்டில் படிக்க வைத்திருக்கிறார்.

ஒருநாள் தன் தங்கையின் கேன்வாஷ் ஷூ அறுந்துவிடவே அதை தைத்துக் கொண்டு வரும் வழியில் தொலைத்து விடுகிறான் அண்ணன். அப்பாவிடம் சொன்னால் அடிப்பார் என்பதாலும் அவரிடம் தற்போது பணமில்லை என்பதாலும் பெற்றோரிடமும் சொல்லமில்லாமல் பள்ளிக்கு செல்கின்றனர்.

அதாவது தங்கைக்கு காலையில் மட்டுமே பள்ளி. அண்ணனுக்கு மதியத்திற்கு மேல்தான் பள்ளி. எனவே தங்கை பள்ளி விட்டு வந்ததும் அண்ணன் அந்த ஷூவை அணிந்து பள்ளிக்கு செல்கிறார்.

இப்படியாக இவர்களின் பள்ளி நாட்கள் செல்ல செல்ல மற்றொரு ஏழை மாணவி அந்த ஷூவை அணிந்திருப்பதை தங்கை பார்க்கிறார்.
பின்னர் என்ன ஆனது.? ஷூ கிடைத்ததா? என்ன செய்தார்கள்? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
சிறுவன் மகீன் (படத்தில் தேவா) சிறுமி டாவியா (படத்தில் ஷாரா) இருவரும் உண்மையான அண்ணன் தங்கை போல சிறப்பாக நடித்துள்ளனர். இவரின் தந்தையாக நடித்தவரும் சிறப்பு.

தன் நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்துவிட்டதால் இவர் படும் அவஸ்தைகளும் ஜாமீன் போடுபவர்களுக்கு சரியான பாடம்.

பணம் வாங்கும்போது இனிக்குது.. திருப்பிக் கொடுக்கும்போது கசக்குதா? என்ற வசனங்கள் கடன் வாங்கி திருப்பி கொடுக்காத ஜென்மங்களுக்கு சவுக்கடி.

இதனிடையில் இளம் ஜோடிகளின் (ஹரிஷ் மீனாட்சி) காதல் கதைகளும் படத்தில் உள்ளன. அவர்களும் அருமையான தேர்வு. அதிலும் அந்த பெண் உதடுகளும் கண்களும் நம்மை ஈசியாக கவர்ந்துவிடும்.

டெக்னீஷியன்கள்..

அக்கா குருவி படத்திற்கு இளையராஜா இசையைமைத்திருக்கிறார். ஆனால் பெரிதாக ஈர்க்கவில்லை. அதே சமயம்… காதோராம் லோலாக்கு… மழை பாடல்கள் என தன் பழைய காதல் பாடல்களை ஆங்காங்கே கொடுத்து பழைய நினைவுகளை சிதறவிட்டுள்ளார். பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.

உட்பல் வி நாயனாரின் ஒளிப்பதிவு படத்திற்கு உயிரோட்டத்தை கொடுத்துள்ளது. கொடைக்கானல் பகுதியின் மலைசார்ந்த காட்சிகள் அருமை.

பணக்கார பிள்ளைகளுக்கோ நடுத்தர பிள்ளைக்களுக்கோ ஷூ என்பது பெரும் விஷயமல்ல. ஆனால் ஒரு ஏழை குடும்பத்தில் ஷூ என்பது பெரிய விஷயம். அதை குழந்தைகளின பாச உணர்வுடன் அழகாக கொடுத்துள்ளனர்.

இதற்கு முன்பு சர்ச்சை படங்களை இயக்கியிருந்தாலும் தற்போது உணர்வுபூர்வமான ஒரு படத்தை கொடுத்துள்ள சாமிக்கு சபாஷ் சொல்லிடுவோம்.

அண்ணன் தங்கை இருவரும் கதை சொல்வதாக காட்சிகள் நகர்கிறது. அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னர் பேசும் வசனங்கள் சூப்பர். அவர்கள் யார்? என்ன சொன்னார்கள்? என்பதை சொன்னால் ட்விஸ்ட் போய்விடும் என்பதால் அது வேண்டாம்.

நிச்சயம் உங்கள் வீட்டு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு இந்த படத்திற்கு செல்லலாம். அவர்களும் ஏழை குடும்பத்தின் கஷ்டங்களை உணர்வார்கள்.

ஆக.. இந்த அக்கா குருவி.. ஒரு ஜோடி ஷூவில் கட்டப்பட்ட பாசமலர்கள்

Akka Kuruvi movie review rating

கூகுள் குட்டப்பா விமர்சனம் 3.25/5..; நீ GOOD அப்பா…

கூகுள் குட்டப்பா விமர்சனம் 3.25/5..; நீ GOOD அப்பா…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே எஸ் ரவிக்குமார் , தர்ஷன் , லாஸ்லியா , யோகி பாபு நடிப்பில் வெளியான கூகுள் குட்டப்பா விமர்சனம் இதோ

ஒன்லைன்..

மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’. இதன் தமிழ் ரீமேக்தான் கூகுள் குட்டப்பா.

கதைக்களம்…

கோயம்பத்தூர் மாவட்டத்தில் தன் மகன் தர்ஷனுடன் வசிக்கிறார் கேஎஸ் ரவிக்குமார். இவர் ஒரு விவசாயி. மகன் சிறுவயதில் இருக்கும்போதே தன் மனைவியை இழந்தவர்.

மிக்ஸி கிரைண்டர் செல்போன் என எந்த நவீன சாதனங்களையும் பயன்படுத்தாமல் எளிதாக வாழ்பவர்.

அம்மியில் அரைத்த மசாலாக்களையே சமையலுக்கு பயன்படுத்துபவர். இதனால் அவரின் வீட்டு வேலைக்கு கூட யாரும் வருவதில்லை.

ஒரு கட்டத்தில் அப்பாவின் நிபந்தனைகளால் வெறுத்துப் போகும் தர்ஷன் வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறார்.

அப்பாவைப் பார்த்துக் கொள்ள தனது கம்பெனி பரிசோதித்து வரும் ஒரு ரோபோ ஒன்றை உதவிக்கு அனுப்பி வைக்கிறார்.

முதலில் ரோபோவை வெறுக்கும் சுப்ரமணி (கே.எஸ். ரவிக்குமார்) பின்னர் நாளடைவில் அதை தன் குழந்தையாகவே பாவித்து வாழ ஆரம்பிக்கிறார்.

ரோபோ துணையுடன் பேஸ்புக் மூலமாக தன் பழைய காதலியுடனும் உரையாடுகிறார்.

4 மாத பரிசோதனைக்கு பிறகு அந்த ரோபோவை கம்பெனிக்காரன் தர்ஷனிடம் கேட்க அதை தர மறுக்கிறார் கேஎஸ். ரவிக்குமார்.

இதன்பின்னர் என்ன ஆனது? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

தந்தை சுப்ரமணியாக கேஎஸ் ரவிக்குமார். இவர்தான் கதையின் நாயகன். சென்டிமெண்ட் காட்சிகளில் உருக வைத்துள்ளார். கோவை குசும்பு அடிக்கடி எட்டிப் பார்க்கிறது. யோகி பாபு முதல் ரோபோ வரை அனைவரையும்  நக்கல் அடித்து கலகலப்பாக்கியுள்ளார்.

தர்ஷன் மற்றும் அவரது காதலியாக லாஸ்லியா நடித்துள்ளனர். பெரிதாக காட்சிகள் இல்லை என்றாலும் கொடுத்த கேரக்டரில் சிறப்பு.

யோகிபாபு மற்றும் பளாக் பாண்டி காமெடிகளை சில இடங்களில் ரசிக்கலாம்.

டெக்னிசியன்கள்..

ஜிப்ரானின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பாடல்களும் பின்னணி இசையும் ஓகே. அர்வியின் ஒளிப்பதிவு மிகவும் அருமையாக அமைந்துள்ளது.

இது ரோபோ என்றாலும் முழுக்க குழந்தைகளுக்கான படம் இல்லை எனலாம். தந்தையை கவனிக்காத மகன்… முதுமை வாழ்க்கையில் தனிமையில் வாடும் தந்தை ஆகியோரை பற்றிய கதை எனலாம்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் இப்படத்தை இயக்கியுள்ளனர்.

மலையாளத்தில் உள்ளது போலவே முழுமையாக எடுக்காமல் தமிழுக்கு ஏற்றவாறு சில காட்சிகளை மாற்றியுள்ளனர். பைத்தியமாக ராகுல் என்பவர் நடித்துள்ளார். எனவே அவரை வில்லனாக சித்தரித்துள்ளனர் இயக்குனர்கள்.

ஆக.. இந்த கூகுள் குட்டப்பா… நீ GOOD அப்பா…

இந்த கூகுள் குட்டப்பா விமர்சனம் போல் மற்ற பிற படங்களின் விமர்சனங்களை நம் தளத்தில் கீழே காணலாம் .

Koogle Kuttapa movie review

விசித்திரன் விமர்சனம் 3.75/5 ; மெடிக்கல் மாஃபியாக்களுக்கு மரண அடி

விசித்திரன் விமர்சனம் 3.75/5 ; மெடிக்கல் மாஃபியாக்களுக்கு மரண அடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்‌கே சுரேஷ் , பூர்ணா , மது ஷாலினி , பகவதி பெருமாள் நடிப்பில் வெளியான விசித்திரன் விமர்சனம் இதோ . இசை – ஜி‌வி பிரகாஷ் . இயக்கம் – பத்மகுமார்.

ஒன்லைன்…

மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய் என்ற பேரில் நடக்கும் மெடிக்கல் மாஃபியாக்களின் கதை.

இந்த படம் மலையாளத்தில் ஜோசப் என்ற பெயரில் வெளியானது. அந்த படத்தின் ரீமேக் தான் இந்த விசித்திரன்.

கதைக்களம்…

மகள் மனைவியை இழந்து ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி விரக்தியால் இருக்கிறார். அவர் தன் நண்பர்களுடன் இணைந்து கொலை வழக்குகளை எப்படி அசால்ட்டாக கையாள்கிறார் என்பதுடன் படம் தொடங்குகிறது.

மாயன் என்ற கேரக்டரில் ஆர்கே. சுரேஷ். இவரின் காதல், திருமணம், வழக்கு விசாரணை, வாழ்க்கை, என படம் பயணிக்கிறது.

இவரின் முன்னாள் மனைவியின் இன்றைய கணவன் என்ற கிளைக்கதையும் இதில் அடங்கும்.

தன் மகள் மற்றும் மனைவி இருவரையுமே அடுத்தடுத்த விபத்துக்களில் பறிகொடுக்கிறார் ஆர்கே. சுரேஷ். அவர்கள் மூளைச்சாவு அடைந்துவிட்டதால் அவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுகிறது.

ஆனால் அது திட்டமிட்ட படுகொலை என்பதை அறிகிறார் நாயகன்.

அந்த கொலைகள் யாரால் செய்யப்படுகிறது. ஏன்? அவர்களின் நோக்கம் என்ன? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

120 கிலோ… 90 கிலோ… 80 கிலோ என தன் உடல் எடையை அதிகரித்து அதற்கேற்ப தன் உடல்மொழியை மாற்றியுள்ளார் ஆர்கே. சுரேஷ். வயிற்றில் தொப்பையை அதிகரித்து காட்ட ஒவ்வொரு காட்சிக்கும் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடித்திருக்கிறாராம். அதுபோல் இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதால் அந்த நபர் போல தினமும் 50 பீடிகளை குடித்தாராம் ஆர்கே. சுரேஷ். இந்த அர்ப்பணிப்புக்காகவே பாராட்டலாம்.

ஐங்கரன் விமர்சனம். 3/5..; இந்தியாவில் (வீக்) விஞ்ஞானி

பூர்ணா மற்றும் மதுஷாலினி என இரு நாயகிகள். இருவரும் சிறப்பு. பூர்ணா ஒரு படிமேலே சென்று தன் நடிப்பால் கவர்கிறார்.

இவர்களுடன் இளவரசு, மாரிமுத்து, பக்ஸ் உள்ளிட்டோரும் உண்டு.

டெக்னீஷியன்கள்…

ஜிவி. பிரகாஷ் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார். இந்த கோடைக்காலத்தில் நம் கண்களுக்கு விருந்தாக கொடைக்கானலின் முழு அழகை கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர்.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு கோடிகளில் கொட்டி கொடுக்கின்றனர் சிலர். ஆனால் அவை சீனியர்ட்டி அடிப்படையில் செயல்படுவது போல தோன்றினாலும் அந்த உறுப்புகள் ஒருவருக்கு சரியாக பொருத்தப்பட்டுள்ளதா? என்பதை நாம் சரியாக கவனிப்பதில்லை.

அதிகமாக பணம் கொடுக்கும் மற்றொரு நபருக்கு அது பொருத்தப்படுகிறது. இதை தன் பாணியில் கண்டுபிடித்து தன் உயிரை பணயம் வைத்துள்ளார் நாயகன்.

ஒரு மலையாள படத்தை அதே சாயலுடன் தமிழில் கொடுத்துள்ளார் இயக்குனர் பத்மகுமார். வாழ்த்துக்கள்..

ஆக.. இந்த விசித்திரன்.. வித்தியாசமானவன் தான்.

விசித்திரன் விமர்சனம் போல் மேலும் சில பட விமர்சனங்களை நம் தளத்தில் கீழே காணுங்கள் .

Visithiran movie review

ஐங்கரன் விமர்சனம். 3/5..; இந்தியாவில் (வீக்) விஞ்ஞானி

ஐங்கரன் விமர்சனம். 3/5..; இந்தியாவில் (வீக்) விஞ்ஞானி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜி‌வி பிரகாஷ் , மஹிமா நம்பியார் நடிக்கும் ஐங்கரன் விமர்சனம் இதோ. இசை – ஜி‌வி பிரகாஷ் . இயக்கம் – ரவி அரசு

ஒன்லைன்…

விஞ்ஞானிகளை ஊக்குவிக்காத இந்தியாவை சாடும் இளைஞரின் கதை.

கதைக்களம்…

ஜிவி பிரகாஷின் தந்தை ஆடுகளம் நரேன். மிகவும் நேர்மையான கான்ஸ்டபிள். எப்படியாவது ரிட்டையர் ஆவதற்குள் இன்ஸ்பெக்டர் ஆக வேண்டும் என லட்சியத்துடன் இருக்கிறார்.

இவரின் மகன் ஜிவி. பிரகாஷ் இன்ஜினியரிங் மாணவர். படத்தின் நாயகி மகிமா நர்ஸ் ஆக பணிபுரிகிறார்.

இளம் விஞ்ஞானியான ஜி.வி. பிரகாஷ் தான் கண்டுபிடித்த படைப்புகளை அரசு அங்கீகாரத்திற்கு அனுப்பி வைப்பார். நேரில் கொடுப்பார். ஆனால் அதை கொஞ்சம் கூட என்னவென்று பாராமல் நிராகரித்து விடுவார்கள்.

மற்றொரு புறம் வட இந்திய கும்பல் ஒன்று லலிதா ஜீவல்லரி உள்ளிட்ட பல நகை கடைகளில் வைரங்களை கொள்ளையடித்து செல்கின்றனர்.

ஒருநாள் எதிர்பாராவிதமாக இவர் கொள்ளையடித்து வைத்திருந்த வைர மூட்டை ஒரு ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிடுகிறது.

சற்றுநேரத்தில் ஒரு 3 வயது குழந்தையும் அதே குழியில் விழுகிறது.

இனிக்குதா? கசக்குதா.? காத்துவாக்குல ரெண்டு காதல் விமர்சனம்

இதனால் அந்த கும்பல் திகைத்து நிற்கிறது. குழந்தையை மீட்க அரசாங்கமே திரள்கிறது. அப்ப்போது தனது புதிய கண்டுபிடிப்புடன் வருகிறார் ஜிவி. பிரகாஷ்.

அதன்பின்னர் என்ன நடந்தது? என்பதே கதை.

கேரக்டர்கள்…

நாயகன் ஜி வி பிரகாஷ் அலட்டிக் கொள்ளாத நடிப்பு. விஞ்ஞானிகள் என்றாலே தாடி வைத்து கண்ணாடி அணியதானே வேண்டும். எனவே நாயகனுக்கு கண்ணாடி மாட்டிவிட்டுள்ளார் டைரக்டர் ரவிஅரசு.

வசனங்கள் நன்றாக உள்ளன… உதாரணத்திற்கு..”விழுந்துடுவ ஓடாதன்னு சொல்றதுக்கு பல பேர் இருக்காங்க.. ஆனால் விழுந்திடாம ஓடு என்று சொல்லத்தான் யாருமே இல்லை உள்ளிட்ட வசனங்கள் சூப்பர்.

வழக்கம்போல இந்த படத்தில் நாயகிக்கு பெரிதாக வேலையில்லை. நாயகனுக்கு உதவ வேண்டும் என்பதற்காக நாயகியும் நாயகிக்கு உதவ வேண்டும் என்பதற்காக சில காட்சிகளை வைத்துள்ளனர். (கடிகாரம் உடையும் காட்சி வரை) அதிலும் கொஞ்சம் விஞ்ஞானி கண்டுபிடிப்பு இருக்கு.

ஆடுகளம் நரேன், ஹரிஷ் பெராடி, இரண்டு வில்லன்கள் என படத்திற்கு பக்கபலமாக இருந்துள்ளனர். அனைவரும் நடிப்பில் சிறப்பு.

டெக்னீசியன்கள்..

ஈட்டி படத்தில் சண்டைக் காட்சிகள் எப்படி பேசப்பட்டதோ அதுபோல சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளனர். ஆனால் அது ஜிவி. பிரகாஷ்க்குதான் செட் ஆகல.

நகை கடையில் கொள்ளையடிக்கும் காட்சிகளை அருமையாக படம்பிடித்துள்ளனர். அதுபோல் பைஃட் காட்சிகளும் சிறப்பாக உள்ளன.

படத்தின் ஒளிப்பதிவு பெரும் பலம். காட்சிகளின் வண்ணங்கள் கச்சிதம். அதுபோல் பின்னணி இசையும் பாராட்டும்படி உள்ளது. படத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்துள்ளது எனலாம். பாடல் பெரிதாக இல்லை.

விஞ்ஞானிக்கு ஒரு விறுவிறுப்பான அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்பதற்காக குழியில் குழந்தை விழும் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எந்த ஒரு வில்லனாக இருந்தாலும் வைர மூட்டைய எடுக்க ஒரு குழந்தையை உள்ளே தள்ளி விடுவார்களா? குழந்தை மீட்கப்பட்டால் உடனே அந்த குழியை மூடிவிட மாட்டார்களா? ஒருவேளை எல் வடிவில் மற்றொரு குழி தோண்டினால் முதலில் வைர மூட்டைதானே கையில் சிக்கும்… என்ன லாஜிக்கில் அந்த காட்சியை வைத்தாரோ?

முதல் பாதியில் காட்சிகளில் இருந்த உணர்வு இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங்.

ஆனால் நெத்தியடியாக க்ளைமாக்ஸ் காட்சியை வைத்துவிட்டார் ரவி அரசு. இந்தியாவில் பிறந்த இளம் விஞ்ஞானிகளுக்கு என்றுமே அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பதை ஆணித்தரமாக சொல்லியுள்ளார்.

ஐங்கரன் விமர்சனம் ..; இந்தியாவில் (வீக்) விஞ்ஞானி 3/5

Ayngaran movie review

கவனிக்க வேண்டியவன்..; கதிர் விமர்சனம்

கவனிக்க வேண்டியவன்..; கதிர் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

தினேஷ் பழனிவேல் இயக்கத்தில் வெங்கடேஷ், சந்தோஷ் பிரதாப், ரஜினி சாண்டி, பாவ்யா ட்ரிகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘கதிர்’.

கதைக்களம்..

ஊரில் நண்பர்களுடன் ஊதாரித்தனமாக சுற்றித் திரிகிறார் நாயகன் கதிர். ஒரு கட்டத்தில் குடும்பத்தில் கோபித்துக் கொண்டு சென்னையில் உள்ள நண்பன் ரூம்க்கு செல்கிறார்.

அங்கு ஹவுஸ் ஓனர் வயதான பெண்மணியான ரஜினி சாண்டியுடன் குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்கிறார் கதிர். ஒரு கட்டத்தில் பாட்டியின் பாசம் புரிந்து இருவரும் பாசமாக உள்ளனர்.

ஒரு கட்டத்தில் ஒரு இன்டர்வியூ தளத்தில் தன் பழைய காதலியை சந்திக்கிறார். இதனால் போராடி கிடைத்த வேலைக்கும் செல்லாமல் தவிக்கிறார்.

இதனையடுத்து பாட்டி இவனை நல்வழிப்படுத்துகிறார். அவரின் வாழ்க்கையில் நடந்த சில ப்ளாஷ்பேக்கை சொல்கிறார்.

அப்படி என்ன சொன்னார்? என்ன நடந்தது.? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கதையின் நாயகனாக வெங்கடேஷ். அலட்டிக் கொள்ளாத நடிப்பு. இன்னும் நடிப்பில் கவனம் செலுத்தினால் நன்றாக திரையுலகில் வளர்வார்.

நாயகி பாவ்யா ட்ரிகா அழகில் நம் மனதை கொள்ளையடிக்கிறார். இவருக்கு இன்னும் காட்சிகள் கொடுத்திருக்கலாமே என இயக்குனரை திட்டத் தோன்றும்.

வீட்டு ஓனர் பாட்டி ரஜினி சாண்டி.. நம்மை நிச்சயம் கவர்ந்துவிடுவார். அட இப்படி ஒரு பாட்டி (வீட்டு ஓனர்) நமக்கு கிடைக்கவில்லையே என நினைக்க வைத்துவிடுவார். இவரின் இளமைக் காலத்தில் அந்த நாயகியும் நடிப்பில் கலக்கல்.

ப்ளாஷ் பேக் காட்சியில் புரட்சிக்கார கம்யூனிஸ்ட் இளைஞராக சந்தோஷ் பிரதாப். அட இவரும் சூப்பர்ல என ரசிக்க வைக்கிறார். அந்தக் காலத்தில் பண்ணையார்களை எதிர்த்து செய்யும் புரட்சியும் இவரது காதலும் ரசிக்க வைக்கிறது.

கதிரின் நண்பர்களாக வருபவர்களும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர்.

டெக்னியீஷியன்கள்…

பிரசாந்த் பிள்ளை இசையில் பாடல்கள் சிறப்பு. ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை.

கல்லூரி வாழ்க்கை.. ஊதாரித்தனம்.. காதல் வாழ்க்கை.. நண்பர்களுடன் கலாட்டா, காதல் தோல்வி.. ப்ளாஷ்பேக்.. பண்ணையார் காலத்து புரட்சி, நன்செய் ஆப்.. காய்கறிகள் வீட்டில் டெலிவரி என பல விஷயங்களை சொல்லியிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் படம் எதை நோக்கி பயணிக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது.

ஆனால் தன் முதல் படத்திலேயே ஆபாசம் வன்முறை இல்லாமல் நல்லதொரு படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் தினேஷ் பழனிவேல்.

எனவே இந்த கதிர்.. கவனிக்கப்பட வேண்டியவன்தான்.

Kathir movie review and rating in Tamil

நெட்டிசன்களுக்கு எச்சரிக்கை..; பயணிகள் கவனிக்கவும் விமர்சனம்

நெட்டிசன்களுக்கு எச்சரிக்கை..; பயணிகள் கவனிக்கவும் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

மலையாளத்தில் 2019ல் வெளியான ‘விக்ருதி’ படத்தின் தமிழ் ரீமேக்.

தனக்கு லைக்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக உண்மைத்தன்மை அறியாமல் சில செய்திகளை இணையத்தில் பதிவிடும் ஆசாமிகளுக்கு எச்சரிக்கை தரும் சைஃபர் க்ரைம் படம்.

கதைக்களம்..

விதார்த், லட்சுமிப்பிரியா இருவரும் மாற்றுத் திறனாளி தம்பதிகள். இருவரும் வாய்பேசமுடியாதவர்கள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்.

இவர்களின் மகள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் சரியான உறக்கமில்லாமல் இருக்கும் விதார்த்த ஒரு நாள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது சீட்டிலேயே படுத்து உறங்கி விடுகிறார்.

அவரை குடிகாரன் என நினைத்து அவ்வாறாக சித்தரித்து, சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார் பாரீன் ரிட்டர்ன் கருணாகரன். இன்னும் சில நாட்களில் கருணாகரனுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது.

அந்த மீம்ஸ்களால் விதார்த் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படுகிறது. அவருக்கு வேலை போய்விடுகிறது.

எனவே மன உளைச்சலால் அவதிப்படும் விதார்த் ஒரு கட்டத்தில் போலீசில் புகார் அளிக்கிறார்.

கருணாகரனை போலீஸ் தேடுகிறது. பிறகு என்ன ஆனது? சைஃபர் க்ரைம் போலீசார் என்ன செய்தனர்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

வாய் பேச முடியாத, காது கேட்காத கணவராக விதார்த். பல காட்சிகளில் கண் கலங்க வைத்துவிட்டார். முக்கியமாக க்ளைமாக்ஸ் காட்சியில். தன் கேரக்டரின் தன்மை உணர்ந்து தன் நடிப்பால் வியக்க வைத்துள்ளார் விதார்த்.

விதார்த்தின் மனைவியாக லட்சுமிப்ரியா. வலுவான காட்சிகள் இல்லை.

சோஷியல் மீடியாவில் தனக்கு லைக்ஸ் குவியவேண்டும் என ஆசைப்படும் கருணாகரன் தன் நடிப்பில் கச்சிதம். சாப்பாடு முதல் வெளியே செல்லும் வரை என எதைக் கண்டாலும் உடனே போட்டோ போடும் ஆர்வக் கோளாறு இளைஞர் இவர்.

கருணாகரனுக்கு லேட் மேரேஜ் ஓகேதான். ஆனால் இவருக்கு கொஞ்சம் கூட மேட்ச் இல்லாத நாயகியாக மசூம் ஷங்கர். ஆனால் அப்பாவியான நடிப்பில் நம்மை கவர்கிறார்.

ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. ஒரு யதார்த்த சினிமாவிற்கு தேவையான பின்னணி இசையை கொடுத்துள்ளார் ஷாம்நாத் நாக்.

ஆனால் முதல்பாதி பொறுமையாக செல்வதால் தமிழ் ரசிகர்கள் சோர்வு அடைந்துவிடுவார்கள். மலையாள ரசிகர்களுக்கு இந்த படத்தொகுப்பு ஓகே.

நமக்கு வாட்ஸ் அப்பில் கிடைக்கும் மீம்ஸ்கள், தகவல்கள் என எதுவானாலும் சரியா? தவறா? என சரிபார்க்க வேண்டும். அதை விடுத்து அப்படியே பார்வேர்டு செய்யும் பார்ட்டிகளுக்கு இந்தப் படம் ஓர் எச்சரிக்கையை தருகிறது.

ஆல் இன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர். இந்த படத்தை சக்திவேல் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Payanigal Kavanikkavum movie review and rating in tamil

More Articles
Follows