தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஸ்டோரி…
ஒரு கிறிஸ்துமஸ் இரவில் நடக்கும் கதை தான் இந்த மெரி கிறிஸ்மஸ். மும்பை மாநகரம் `பம்பாய்’ என அழைக்கப்பட்ட காலத்தில் இந்த கதை நகர்வதாக காட்டப்படுகிறது.
ஏழு வருட சிறை தண்டனைக்கு பிறகு தனது நன்னடத்தை காரணமாக ஜெயிலில் இருந்து விடுதலை ஆகிறார் விஜய் சேதுபதி. அவரை வரவேற்கிறார் ராஜேஷ். அன்று கிறிஸ்மஸ் திருநாள்.
அன்று எதிர்பாராத விதமாக ஒரு ஹோட்டலில் கத்ரீனாவை அவளின் மகளுடன் சந்திக்கிறார் விஜய்சேதுபதி. பின்னர் தியேட்டருக்கு செல்கின்றனர். அங்கும் அவர்கள் சந்திக்கின்றனர். அதனைத் தொடர்ந்து மெல்ல மெல்ல இருவருக்கும் இடையே நட்பு தொடர்கிறது.
தனது வீட்டில் கணவர் இல்லை என்று சொல்லி வரவழைத்து உபசரிக்கிறார் கத்ரீனா. சில மணி நேரங்களில் மற்றொரு அறையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடக்கிறார். இதனால் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
எனவே விஜய் சேதுபதி உதவியை கேட்கிறார் கத்ரீனா. ஆனால் நான் இப்போதுதான் ஜெயில்யிருந்து விடுதலை ஆகி வந்தேன். மீண்டும் போலீஸிடம் சிக்கினால் பிரச்சனையாகும் என்கிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது? கத்ரினாவுக்கு உதவி செய்தாரா விஜய் சேதுபதி.? கணவரை கொன்றவர்கள் யார்.? அவர்களின் நோக்கம் என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
விஜய் சேதுபதி, காத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன்
கவின் பாபு மற்றும் பலர்.
கதையின் நாயகன் விஜய்சேதுபதி என்றாலும் கத்ரீனா பெயர் தான் டைட்டில் கார்டில் முதலில் இடம் பெறுகிறது. அதற்குப் பாராட்டு தெரிவிக்கலாம். இதற்கு முன்பு ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் தீபிகா படுகோனவின் பெயர் இடம் பெற்றது. அதை ஷாருக்கான் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
படபட பேசாமல் நிறுத்தி நிதானமாக பேசி தன் கேரக்டருக்கு வலு சேர்த்து இருக்கிறார் விஜய்சேதுபதி.. ஆனால் கத்ரீனாவிடம் இருக்கும் பயம் இவர்கள் முகத்தில் கொஞ்சம் கூட இல்லை என்பது ஏன்? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது
தமிழ் வசனங்களுக்கு ஏற்ற உதட்டு அசைவு சிறப்பு. கத்ரீனாவுக்கு டப்பிங் குரல் கொடுத்து இருக்கிறார் தீபா வெங்கட்.. பயம் பதட்டம் ஏக்கம் தவிப்பு தயக்கம் என ஒவ்வொன்றையும் அழகாக உணர்ச்சிப்பூர்வமாக காட்டி நடித்திருக்கிறார் கத்ரீனா.
மகளாக வரும் சிறுமி பரி ஷர்மா. இவருக்கு படத்தின் ஒரு வசனம் கூட கிடையாது. ஆனால் ஒரே ஒரு வசனத்தில் ஒட்டுமொத்த படத்தையும் முடித்துவிட்டு அப்ளாசை அள்ளிச் செல்கிறார் பரி ஷர்மா.
கவின் ஜே.பாபு, ராதிகா, சண்முகராஜன், ராஜேஷ் ஆகியோர் காட்சிக்கும் படத்திற்கும் கூடுதல் பலத்தை கொடுத்துள்ளனர்.
முக்கியமாக போலீஸ் சண்முகராஜன், ராதிகா ஆகியோரின் விசாரணை கண்ணோட்டம் ரசிக்கவும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கிறது.
ஏழு வருடத்திற்கு முந்தைய பிளாஷ்பேக்கில் கௌரவத் தோற்றத்தில் ராதிகா ஆப்தே வருகிறார்.
டெக்னீசியன்ஸ்…
இயக்குநர் – ஸ்ரீராம் ராகவன்
தயாரிப்பு
டிப்ஸ் ஃபிலிம்ஸ் & மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ்
பெரும்பாலும் வசனங்கள் லைவ் முறையில் படம் ஆக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. ஓரிரு வசனங்கள் சிந்திக்க வைக்கிறது
கத்ரினா தன்னுடைய ஃப்ளாஷ்பேக் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் போது.. போட்டோக்களில் நீங்கள் சந்தோஷமாக இருப்பதாகவே தெரிகிறது என்கிறார் விஜய் சேதுபதி.. யாராவது அழுவது போல போட்டோ எடுத்து வைப்பார்களா என்று கேட்கிறார் கேத்ரினா.
இது ஒரு ஹிந்தி படமாக உருவாக்கப்பட்டாலும் தமிழிலும் ரசிக்க முடிகிறது.
விஜய் சேதுபதி, ராதிகா, ராஜேஷ், சண்முகராஜன் ஆகியோரது தமிழ் உச்சரிப்புகள் போல கத்ரீனாவுக்கும் தமிழ் உச்சரிப்புகள் பொருந்துகிறது.
ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன். பூஜா லதா ஸ்ருதி படத்தொகுப்பு. ப்ரீத்தமின் இசையில் யுகபாரதியின் வரிகளில் ‘காணாத காதல்’ பாடல் இதம். டானியல்.பி.ஜார்ஜ் பின்னணி இசையில் ரசிக்க வைக்கிறார்.
பிரதீப் குமார்.எஸ், அப்துல் ஜப்பார், பிரசன்னா பாலா நடராஜன், லதா கார்த்திகேயன் ஆகியோர் வசனம் & திரைக்கதையில் தங்கள் எழுத்து ஆர்வத்தை காட்டி இருக்கிறது.
இது காதல் படமா? திரில்லர் படமா? என்ற குழப்பம் நீடிக்கிறது. ஒரு கிறிஸ்மஸ் இரவில் நடக்கும் கதையை விடிவதற்கு சொல்லி முடித்திருக்கிறார் அந்தாதுன்’ இயக்குநர் ஸ்ரீராம் ராகவன்.
இந்தி மட்டுமல்லாது, தமிழிலும் அனைத்துக் காட்சிகளையும் படமாக்கியிருப்பதால் அதையும் பாராட்டலாம். ஆனால் முன் பாதி நாடகம் பார்ப்பது போன்ற உணர்வை பல காட்சிகள் தருகிறது.
இரண்டாம் பாதியில் வரும் டார்க் ஹுயூமோர் காமெடிகள் ரசிக்க வைக்கிறது.
Merry Christmas movie review and rating in tamil