First on Net காலா விமர்சனம்

First on Net காலா விமர்சனம்

நடிகர்கள் : ரஜினிகாந்த், நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா மற்றும் பலர்.

தொழில் நுட்பக்குழு:

இயக்குனர் – பா. ரஞ்சித்
இசை – சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு – முரளி . ஜி
கலை இயக்கம் – டி.ராமலிங்கம்
படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்
சவுண்ட் டிசைன்ஸ் – ஆண்டனி பி ஜெயரூபன்
கிரியேட்டிவ் டிசைனர் – வின்சி ராஜ்
சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன்
நடனம் – சாண்டி
ஆடை வடிவமைப்பு – அனு வர்தன், சுபிகா
காஸ்ட்யூம்ஸ் – செல்வம்
ஒப்பனை – பானு பாஷ்யம், ராஜா
ஸ்டில்ஸ் – ஆர்.எஸ்.ராஜா
தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.பி. சொக்கலிங்கம், ஆர். ராகேஷ்
நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.வினோத்குமார்
தயாரிப்பு – வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மது

kaala rajini muslim

கதைக்களம்…

முதலில் அனிமேசனில் ஒன் லைன் கதை சொல்லப்படுகிறது. அதில் நிலத்தின் பெருமைகள் சொல்லப்படுகிறது.

அதன்பின்னர் இன்றைய காலகட்டத்திற்கு கதையை கொண்டு வருகிறார் இயக்குனர்.

திருநெல்வேலியில் இருந்து மும்பை தாராவி பகுதிக்கு சென்று வாழ்கிறார் காலா என்ற கரிகாலன்.

அது சார்ந்த பகுதிகளின் முன்னேற்றத்திற்கு இவர்களே கடுமையாக உழைக்கிறார்கள்.

ஒரு பக்கம் மனைவி மற்றும் மகன்கள் பேரக்குழந்தைகள் சந்தோஷமாக வாழ்கிறார் காலா.

ஒரு சூழ்நிலையில் தன்னை நம்பி வாழும் மக்களையும் அவர்கள் வாழும் நிலத்தையும் ரியல் எஸ்டேட் மாஃபியா புரோக்கர்களிடமிருந்தும் அரசியல்வாதிகளிடம் இருந்து மீட்க போராடுகிறார்.

அதாவது இந்த பகுதி மக்களை காலி செய்துவிட்டு சேரி தாராவியை டிஜிட்டல் தாராவியை ஆக்க முயற்சிக்கிறார்கள்.

அதிகார வர்க்கத்தை மக்கள் சக்தியுடன் எப்படி முறியடிக்கிறார்? என்பதே இந்த காலாவின் முழு ரவுடித்தனம்.
rajini kaala gang

கேரக்டர்கள்…

ரஜினியின் அறிமுகம் கேஷ்வலாக இருந்தாலும் நிச்சயம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

ரஜினிக்கு மாஸ், ஆக்சன், ஸ்டைல், ரொமான்ஸ் எல்லாம் சொல்லித்தரனுமா? புகுந்து விளையாடி இருக்கிறார்.

இதில் குடும்ப சென்டிமெண்ட்டிலும், சேரி மக்களின் போராட்டக் களத்திலும் காலாவாக ஜொலிக்கிறார்.

சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன் என ஒரு ஸ்டார் பட்டாளமே ரஜினியுடன் நடித்தாலும் இந்த சூப்பர் ஸ்டார்தான் அதிகம் ஜொலிக்கிறார்.

ரஜினிக்கும் செரினாவுக்கும் (ஹீமா குரேஷிக்கும்) கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. இளமை அதே சமயத்தில் ஒரு அன்பான முதிர்ச்சியான லவ் ட்ராக்கை காணலாம்.

காலா-ஷரினா ஆகியோரின் லவ் போர்ஷன் நிச்சயம் ரசிகர்களுக்கு ட்ரீட்தான்.

ரஜினியின் மனைவியாக நடித்துள்ளவர் செல்வி (ஈஸ்வரி ராவ்). இவரின் திருநெல்வேலி பாஷை கச்சிதம். தேவைக்கேற்ற நடிப்பு

ரஜினியின் மகன்களில் ஒருவரின் காதலியாக வருகிறார் அஞ்சலி பாட்டீல். அந்த கேரக்டர்களை இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் கொடுத்துள்ளார்.

மும்பையை ஸ்தம்பிக்க வைக்க ரஜினிகாந்த் செய்யும் அந்த யுக்தி மாஸ். நம் உடம்புதான் நம் ஆயுதம் போராடுவோம் என்கிறார்.

மும்பை நகரம் இயங்க காரணமான துப்புரவு தொழிலாளர்கள், முனிசிபாலிடி மற்றும் டாக்சி ஓட்டுனர்களை வைத்து ஸ்ட்ரைக் செய்கிறார்.

இதனால் ஹரி தாதாவாக நடித்துள்ள நானா படேகருக்கும் ரஜினிக்கும் வரும் மோதல் சூடு பிடிக்கிறது.

நம் இதிகாசத்தில் ராமனை நல்லவனாகவும் ராவணனை கெட்டவனாகவும் காட்டியிருப்பார்கள். ஆனால் காலாவில் ராமனை கெட்டவனாகவும் ராவணனை நல்லவனாக காட்டி மிரட்டியிருக்கிறார் ரஞ்சித்.

ரஜினி சொன்னது போல் வில்லன் நானா படேகர் காட்சிகள் படத்தின் ஹைலைட்.

வில்லன் நானா படேகருக்கு வெயிட் ஏற்றி காலா ரஜினிக்கு செம வெயிட்டு கொடுத்திருக்கிறார் டைரக்டர் ரஞ்சித்.

தொழில்நுட்ப கேரக்டர்கள்…

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஒளிப்பதிவாளர் முரளி படத்தின் மிகப்பெரிய பலம். அந்த சேரி பகுதிகளை போராட்டக்களத்தையும் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார்.

நிக்கல் அந்துப்போச்சி, என் தங்க சிலை பாடல்கள் ரிப்பீட் மோட்.

பின்னணி இசையும் ரஜினியின் மாஸ் சீன்சும் ரசிகர்களுக்கு வெயிட்டுத்தான்.

ரஜினியின் ஒவ்வொரு மேனரிசத்தையும் கதைக்கு தேவைக்கேற்றப்படி ரசித்து வைத்திருக்கிறார் ரஞ்சித்.

இண்டர்வெல் காட்சியும் அந்த சண்டை காட்சிக்கும் நிச்சயம் அப்ளாஸ் கொடுக்கலாம். இதில் நாம் பவர்புல் பாட்ஷா ரஜினியை திரையில் பார்க்கலாம்.

ரஜினிக்கான வசனங்களை பட்டைத் தீட்டி கொடுத்திருக்கிறார் ரஞ்சித்.

எதிர்பாராத க்ளைமாக்ஸில் சமூக கருத்தை ரஜினியை வைத்து சொல்லிவிட்டார் ரஞ்சித்.

காலா.. கரிகாலனின் முழு ரவுடித்தனம்

Kaala Review in Video

Comments are closed.