ஜுங்கா விமர்சனம்

ஜுங்கா விமர்சனம்

நடிகர்கள்: விஜய்சேதுபதி, சாயிஷா, யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன், மடோனா, சுரேஷ் மேனன் மற்றும் பலர்.

இயக்கம் – கோகுல்
ஒளிப்பதிவு – டட்லி
இசை – சித்தார்த் விபின்.
தயாரிப்பு : விஜய்சேதுபதி

கதைக்களம்…

படத்தின் ஒன்லைன் சொல்ல வேண்டுமென்றால் மாணிக்கம் இதில் பாட்ஷாவாக மாறுகிறார்.

ஜுங்கா விஜய்சேதுபதியின் தன் குடும்ப வரலாறு தெரியாமல் வளர்கிறார். அவரை அப்படி வளர்க்கிறார்கள் அம்மா சரண்யா, ஜுங்கா பாட்டி.

தான் ஒரு டான் பேமிலி வம்சத்தில் இருந்து வந்தவர் என்பதால் தானும் டானாக மாற ஆசைப்படுகிறார்.

அதற்காக தன் சொத்தை அபகரித்த வில்லன் சுரேஷ் மேனனின் மகள் சாயிஷாவை கடத்த நினைக்கிறார்.

அதன்பின்னர் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

DjFJdARUcAAgaACaa

கேரக்டர்கள்…

விஜய்சேதுபதி தன் வழக்கமான பேச்சால் ரசிகர்களை ஈர்க்கிறார். ஆனால் அதுவே வினையாகிவிடுகிறது.

யோகிபாபு இல்லையென்றால் படம் மோசமான நிலையை எட்டியிருக்கும். ஜுங்காவிற்கு பலமே அவர்தான். இவருடன் டான் அம்மா மற்றும் டான் பாட்டி கவர்கிறார்கள்.

ப்ரிட்ஜில் வைத்த திராட்சையாக சாயிஷா ரசிக்க வைக்கிறார்.

படத்தின் ப்ளஸ்…

யோகிபாபு

டான் அம்மா

டான் பாட்டி

படத்தின் மைனஸ்…

விஜய்சேதுபதியின் ஓவர் பேச்சு

தேவையில்லாத பாடல்கள்

மடோனா கேரக்டர்

ராதா ரவி, சுரேஷ் மேனன் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மொட்டை ராஜேந்திரனும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இல்லை. ஆனால் பின்னணி இசை ஓகே.

டுட்லியின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகு.

சண்டைக் காட்சிகளில் கேமரா விளையாடியிருக்கிறது.

ஜுங்கா… நீ டான் அழவே கூடாது

Comments are closed.

Related News

கோகுல் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து பணியாற்றிய…
...Read More
விஜய்சேதுபதியும், அருண்பாண்டியனும் இணைந்து தயாரித்துள்ள படம்…
...Read More
விஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள படம் ஜுங்கா.…
...Read More