பம்பர் பட விமர்சனம் 4.25/5.. ஐயப்ப பக்தருக்கு அல்லாஹ்வின் பரிசு

பம்பர் பட விமர்சனம் 4.25/5.. ஐயப்ப பக்தருக்கு அல்லாஹ்வின் பரிசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

களவாணித்தனம் செய்து கொண்டு 3 நண்பர்களுடன் சுற்றித் திரியும் நாயகன் வெற்றி. இதனால் இவரை போலீஸ் துரத்துகிறது. ஒரு கட்டத்தில் போலீசிடம் இருந்து தப்பிக்க ஐயப்பன் கோவிலுக்கு சென்று திடீரென சபரிமலைக்கு மாலை போடுகிறார்.

அதன் பின்னர் கேரளாவில் சபரிமலைக்கு செல்லும் இந்த நால்வரும் ஒரு இடத்தில் உறங்குகின்றனர். அப்போது லாட்டரி சீட்டு விற்கும் ஹரிஷ் பெராடி அவர்கள் வெற்றிக்கு லாட்டரி சீட்டு வாங்க சொல்லி வற்புறுத்துகிறார்.

சரி என நினைத்து அவர் மேல் இரக்கப்பட்டு ரூ. 300 கொடுத்து பம்பர் லாட்டரி சீட்டை வாங்குகிறார். ஆனால் அந்த இடத்திலேயே அதை மறந்து தொலைத்து விட்டு தன் சொந்த ஊர் தூத்துக்குடிக்கு திரும்பி விடுகிறார் வெற்றி.

அதிகாலையில் அந்த லாட்டரி சீட்டு கையில் எடுத்துக்கொண்டு தன் வீட்டிற்கு செல்கிறார் ஹரிஷ் பெராடி.

அப்போதுதான் வெற்றி வாங்கிய சீட்டுக்கு ரூ. 10 கோடி கிடைத்துள்ளது என்பது ஹரிஷ் பெராடிக்கு தெரிய வருகிறது.

எனவே அந்த லாட்டரி சீட்டை வெற்றிக்கு கொடுக்க வேண்டாம் என ஹரிஷ் மகன் மனைவி மகள் மருமகன் என அனைவரும் பிரச்சனை செய்கின்றனர்.

ஆனால் இது அந்த ஐயப்ப பக்தருக்கு அல்லாஹ் கொடுத்த பம்பர் பரிசு அதை நான் தட்டிப் பறிக்க கூடாது என நினைக்கும் அவர் வெற்றியிடம் ஒப்படைக்க தூத்துக்குடி செல்கிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது.? தூத்துக்குடியில் வெற்றி கண்டுபிடித்தாரா.? ஹரிஷ் உறவினர்கள் என்ன செய்தனர்? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

எட்டு தோட்டாக்கள் ஜீவி, ஜீவி 2 என படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளை தனக்காகவே ரெடியானது போல வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வருகிறார் நடிகர் வெற்றி.

பொறுக்கி தனம் செய்யும் வெற்றி அந்த புலிப்பாண்டி கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.. எங்கும் மிகப் படுத்தப்படாத நடிப்பை கொடுத்திருக்கிறார்.

10 கோடி தனக்கு அடித்துள்ளது என தெரிந்த பின் அவரிடம் ஏற்படும் மாற்றங்கள் ஒரு சாமானியனின் பேராசையை அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறது.

அதுபோல வெற்றிக்கு 10 கோடி கிடைத்துள்ளது என்பதை அறிந்த அவர்களது நண்பர்களும் அவரது உறவினர்களும் ஏற்படும் மாற்றங்களை அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் செல்வகுமார்.

வெற்றி நண்பர்களாக வரும் தங்கதுரை திலீப் ஆகியோரும் தங்கள் பங்களிப்பை மிகச் சரியாக செய்துள்ளனர். அதிலும் வெற்றிக்கு கார் ஓட்டுபவராக வரும் திலீப் பணத்தால் திடீர் மனம் மாறுவது அவரது வில்லத்தனத்தை காட்டுகிறது.

சுந்தரபாண்டி ஆக வரும் ஜி பி முத்து இடைவேளைக்கு முன்பு வரை மட்டுமே வந்தாலும் அதை அழகாக செய்து இருக்கிறார்.. தன் சுந்தரபாண்டி கேரக்டரை துப்பாக்கி பாண்டியாகவும் மாற்றி கலகலப்புக்கு கேரண்டி கொடுத்திருக்கிறார்.

டிவி சீரியல் பிக் பாஸ் ஆகியவை மூலம் பிரபலமான ஷிவானி இதில் தூத்துக்குடி பெண்ணாகவே தூக்கலான நடிப்பை கொடுத்துள்ளார். நாம் அன்றாடம் பார்க்கும் பெண்ணாகவும் பொறுக்கித்தனத்தை விரும்பாத மகளாகவும் வருகிறார்.

வெற்றியின் அம்மாவாக நடித்துள்ள கூத்துப்பட்டறை ஆதிராவும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்.

இந்தப் படத்திற்கு அறம் சேர்த்தவர் போல் ஆணிவேராக இருந்துள்ளவர் ஹரிஷ் பெராடி.. நிச்சயம் அவரின் நடிப்புக்கு பல விருதுகள் கிடைக்கும்.

எந்த சூழ்நிலையிலும் அறம் மாறாமல் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு அவர் மேற்கொள்ளும் ஒவ்வொன்றும் அசத்தல்.

டெக்னீசியன்கள்…

பணம் இருந்தால் பந்தம் வந்து சேரும் பகையும் வந்து சேரும் என்பதை நெற்றியில் அடித்தார் போல் சொல்லி இருக்கிறார் இயக்குனர் செல்வகுமார்.

கார்த்தி நேதா எழுதிய பாடல்கள் அனைத்தும் கதையுடன் பயணிப்பதால் அனைத்தும் நம்மை தியேட்டர் சீட்டை விட்டு எழுந்து விடாமல் ரசிக்க வைக்கிறது.

காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்து இருக்கிறார்.. எந்த இடத்திலும் கத்தரி போட வாய்ப்பே இல்லை என்பதை உணர்ந்து அழகாக கொடுத்திருக்கிறார்.

முத்தையாவிடம் உதவியாளராக பணிபுரிந்து இந்த முதல் படத்தை இயக்கி இருக்கிறார் செல்வக்குமார். தூத்துக்குடி கதைகளத்தை கொண்டு வெற்றி – சிவானி – கவிதா பாரதி முதல் அனைவரையும் தூத்துக்குடி பாஷையை பேச வைத்து அந்த ஊருக்கே நம்மை அழைத்துச் சென்று இருக்கிறார்.

ஆக குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

Bumper movie review and rating in tamil

கபடி ப்ரோ (KABADI BRO) விமர்சனம்

கபடி ப்ரோ (KABADI BRO) விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் இருந்து எப்படி காதலைப் பிரிக்க முடியாதோ.? அதுபோல கபடி விளையாட்டையும் பிரிக்க முடியாது. இந்த வரிசையில் காதலும் கபடியும் கலந்த படம்தான் கபடி ப்ரோ.

கதைக்களம்…

வாழ்க்கையை ஜாலியா ஓட்ட நினைக்கும் இளைஞர் வீரபாகு (சுஜன்). இவர் சின்ன சின்ன தில்லு முல்லுகளை செய்து வாழ்க்கையை ஓட்டி வருகிறார். இவர் ஒரு கபடி வீரன்.

அவனுக்கு பக்க பலமாக அவனது நண்பர்கள் அர்ஜெண்ட் முத்துவும் (சிங்கம் புலி ), சக்தியும் (சஞ்சய் வெள்ளங்கி) உள்ளனர்.

இவர்கள் மூவரும் ‘பாயும் புலி’ எனும் கபடி அணி வைத்து அந்த பகுதியின் சாம்பியன்களாக உள்ளனர்.

இந்நிலையில் வீரபாகுவும் அந்த ஊரின் காவல்துறை அதிகாரி இசக்கி பாண்டியனின் (மதுசூதன ராவ் ) மகள் அபிராமியும் (பிரியா லால்) காதலிக்கின்றனர்.

தன்னுடைய மாமா மகளை மணம் முடிப்பான் என்று வீட்டில் எதிர் பார்த்த நிலையில் நண்பனின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து அபிராமியை மணக்க முற்படுகிறான்.

அவனது பித்தலாட்டங்கள் வெளியே தெரிய வர இசக்கி பாண்டியனின் கோபத்துக்கு ஆளாகிறான். எனவே அபிராமியும் அவனை நம்ப மறுக்கிறாள்.

இதனால் தன் காதலை நிரூபிக்க போராடுகிறான் காதல் (கபடி) நாயகன்.

வீரபாகுவை தண்டிக்க இசக்கி பாண்டியன் கபடி போட்டியை தேர்ந்தெடுக்கிறார். அதில் நேர்மையை வெல்ல உறுதி கொள்கிறான்.

பின்பு நடந்தது என்ன.? கபடி போட்டியிலும் காதல் போட்டியிலும் வீரபாகு வென்றானா.? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நடிகர்கள் – சுஜன், பிரியா லால், சிங்கம்புலி, சஞ்சய் வெள்ளங்கி, மதுசூதன ராவ், ஹானா, மனோபாலா, சண்முக சுந்தரம், ரஜினி, மீரா கிருஷ்ணன், அஞ்சலி, சிசர் மனோகர் & பலர்.

நாயகன் சுஜன் சஞ்சய் இருவரும் அறிமுக நடிகர்கள் என்றாலும் தங்களால் முடிந்த நடிப்பை கொடுத்துள்ளனர்.்கபடியிலும் காதலிலும் திறமை காட்டியுள்ளனர்.

தமிழில் ‘ஜீனியஸ்’ படத்தில் நடித்த மலையாள நடிகை பிரியா லால் இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ளார். வழக்கமான தமிழ் சினிமா நாயகியாக வலம் வருகிறார்.

இப்படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது சிங்கம் புலியின் காமெடி காட்சிகள்.

ஸ்னீக் பிக்கில் வந்த டபுள் மீனிங் காமெடி படத்தில் இல்லை. எனவே ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

மறைந்த மனோபாலா இதில் கல்யாண புரோக்கராக நடித்திருக்கிறார். இதுல யாரு வாத்தியார் பையன்.? என்று அவர் கேட்டு கேட்டு நொந்து போகும் காட்சிகள் ரசிகர்களுக்கு கல்யாண விருந்து தான்.

இவர்களுடன் சிசர் மனோகர், மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் சிறப்பு சேர்த்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

இயக்கம் – சதீஷ் ஜெயராமன்
ஒளிப்பதிவு – கிருஷ்ணசாமி
இசை – டேனியல்
பாடல் – ஞானகரவேல் & தாமரை
நடனம் – நோபல் ராதிகா
ஆர்ட் – ராகவா குமார்
எடிட்டர் – அஹ்மத்
பிஆர்ஓ – சிவகுமார்
தயாரிப்பு – அஞ்சனா சினிமாஸ் உஷா சதீஷ்

கபடி ப்ரோ என்ற தலைப்பைப் பார்த்ததும் படம் முழுவதும் கபடி நிறைந்திருக்கும் என்று நினைத்து தியேட்டருக்கு சென்றால் நல்ல வேளை படத்தில் ஆரம்பத்திலும் இறுதியிலும் கபடியை காட்டி விளையாடி இருக்கிறார்கள்.

இதனிடையில் காதல் மோதல் நட்பு கலகலப்பு என இந்த கதைக்கு தேவையான மசாலாவை சேர்த்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவு பாடல்களும் ரசிக்க வைக்கிறது.

படத்தின் பல காட்சிகள் கலகலப்பாகவே உள்ளன. அந்த காட்சிகளை பார்க்கும்போது ‘வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை பார்த்த நினைவு வருகிறது.

ஆக.. கபடி ப்ரோ.. விளையாடுங்க ப்ரோ

KABADI BRO movie review and rating in tamil

மாமன்னன் விமர்சனம்.. 3.5/5.; பட்டியலினத்திற்கு பகுத்தறிவின் மகுடம்.

மாமன்னன் விமர்சனம்.. 3.5/5.; பட்டியலினத்திற்கு பகுத்தறிவின் மகுடம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பட்டியல் இனத்தைச் சேர்ந்த எம்எல்ஏ வடிவேலு. இவரது பெயர்தான் மாமன்னன். வெறும் மண்ணாக கருதப்பட்ட இவரை மாமன்னனாக உருவாக்கிய மகன் உதயநிதியின் கதை தான் இது.

கதைக்களம்…

ஏழைக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச கல்வி கொடுக்கிறார் கீர்த்தி சுரேஷ். இவரும் உதயநிதியும் கல்லூரி தோழர்கள்.

கீர்த்தியின் இலவச கல்வியை பிடிக்காத தனியார் கல்வி நிறுவனர் சுனில் கல்வி கூடாரத்தை அடித்து நொறுக்குகிறார்.

இதனால் உதயநிதிக்கும் சுனிலுக்கும் மோதல் உருவாகிறது. சுனிலின் தம்பி பகத் பாசில்.

தான் மாவட்ட செயலாளராக இருக்கும் சமூக நீதி மக்கள் கட்சியின் எம்எல்ஏ வடிவேலுவின் மகன் தான் உதயநிதி என்பதால் இருவரையும் சமாதானம் பேச தன்னுடைய வீட்டிற்கு அழைக்கிறார்.

அப்போது பகத் பாசில் முன்னிலையில் தன் அப்பா வடிவேலுவை அமர சொல்கிறார் உதயநிதி. ஆனால் பகத் முன்னிலையில் இதுவரை உட்காராத வடிவேலு அதனை மறுக்கிறார்.

சமூக நீதிப் பேசும் கட்சியில் இப்படி ஒரு பிரிவினை வாதமா.? என்கிற தோணியில் உதயநிதிக்கும் பகத்துக்கும் மோதல் வெடிக்கிறது.

அதன் பின்னர் என்ன ஆனது.? என்பதுதான் இந்த ‘மாமன்னனின் அரசியல் விளையாட்டு.

கேரக்டர்கள்…

டைட்டில் கார்டில் தன்னுடைய பெயரை 4வது போட சொல்ல உதயநிதியின் உயர்ந்த உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்.

எங்கும் மிகைப்படுத்தாத நடிப்பை கொடுத்து அதிவீரன் கேரக்டரை வீரமாகவே செய்திருக்கிறார்.

உதயநிதி கேரக்டர் சீரியஸான ஒன்றுதான். படம் முழுக்க இறுகிய முகத்துடனே காணப்படுகிறார். முக்கியமாக கல்லூரி காதல் காட்சிகளிலும் கொஞ்சமாவது புன்னகை செய்து இருக்கலாம் உதயநிதி.

‘மாமன்னன்’ என்ற கேரக்டருக்கு மகா மகா பெருமை சேர்த்திருக்கிறார் வடிவேலு. பல படங்களில் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர் இதில் கண்கலங்க வைத்திருக்கிறார்.

எந்த இடத்திலும் காமெடி வந்து விடக்கூடாது என்பதில் கவனம் கொடுத்திருக்கிறார் வடிவேலு. நிச்சயம் அவரது நடிப்பில் இது ஒரு மைல்கல்.

ஆனால் வடிவேல் தேர்தலுக்காக ரெக்கார்ட் செய்யும் ஒரு வீடியோவில் இன்னும் அழுத்தமான வசனங்களை கொடுத்திருக்கலாம்.

படத்தில் வில்லன் பகத் பாசில். ஆனால் ஹீரோவுக்கு நிகராக பட்டையை கிளப்பி இருக்கிறார். வெறித்தனமாக நாய்களை அடித்துக் கொல்வதும் அதே வெறியோடு மனிதர்களை கொல்வதும் என ரத்தம் தெறிக்க நடித்துள்ளார்.

கம்யூனிஸ்ட்டாக கீர்த்தி சுரேஷ். கல்லூரியில் நடக்கும் ஒரு பாடலுக்கு மட்டும் தாவணி போட்டு மற்ற காட்சிகளில் பேண்ட் சர்ட் போட்டு நடித்திருக்கிறார். இவரது கேரக்டர் வலுவில்லை என்றாலும் நாயகனோடு படம் முழுக்க வந்து நானும் இருக்கிறேன் என அட்டென்ட்ஸ் கொடுத்துள்ளார் கீர்த்தி.

பகத் மனைவியாக ரவீனா ரவி. இவர் படத்தில் ஊமையா? என்று எண்ணத் தோன்றுகிறது. அதற்கு காரணம் ஒரு டயலாக் கூட அவருக்கு கொடுக்கப்படவில்லை. பிரபல டப்பிங் கலைஞரான இவருக்கு டயலாக் இல்லை என்பது வருத்தம்..

முதலமைச்சராக மலையாள நடிகர் லால். சமூக நீதிக் காக்கும் தலைவனாக தன்னை தன் கேரக்டரை நிமிரச் செய்திருக்கிறார்.

உதயநிதி நண்பனாக ராமகிருஷ்ணன் ஓரிரு காட்சிகளில் தலை காட்டி செல்கிறார்.

டெக்னீசியன்கள்…

ஏஆர். ரஹ்மானின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம். ஹீரோ ஆவேசமாக எழும்போதும் அழும்போதும் என வித்தியாசம் காட்டி உயிரூட்டி இருக்கிறார்.

ஆனால் படம் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் வேளையில் இரண்டாம் பாதியில் மெலோடி பாடல்கள் வந்து வேகத்தை தடுக்கின்றன.

உதயநிதி – கீர்த்தியின் நெஞ்சே நெஞ்சே பாடல் காதலருக்கு பிடித்தமானதாக அமையும்.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளிக்கிறது.. முக்கியமாக நாய்களும் பன்றிகளும் மோதிக்கொள்ளும் காட்சி மிரட்டல் ரகம். பன்றிக் குட்டியை கூட இவ்வளவு அழகாக காட்ட முடியும் என நிரூபித்திருக்கிறார்.

எடிட்டர் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி காட்சிகளை வெட்டியிருக்கலாம்.. முக்கியமாக கோயில் குளத்தில் பட்டியலின சிறுவர்கள் 4 பேர் குளிக்கும் அந்த காட்சி முடிந்தும் நீண்ட நேரம் செல்வதாக தெரிகிறது.

அதுபோல இடைவேளை சமயத்தில் அதிரடியான காட்டப்படும் சண்டை அசத்தல். ஆனால் அதன் பிறகு வடிவேலு உதயநிதி பைக்கில் பயணிக்கும் காட்சி தேவையில்லாத ஒன்று. அதுபோல கிளைமாக்ஸ் காட்சிகளும் சட்டசபைக்கு பின்னர் காட்டப்படும் காட்சிகளும் தேவையற்றது .

பரியேறும் பெருமாள் கர்ணன் பட வரிசையில் இதுவும் மாரி செல்வராஜின் அக்மார்க் சமூக நீதிப் படமே. பல காட்சிகளை நம்மால் யூகிக்க முடிகிறது.

இனி மாரி செல்வராஜ் படம் எல்லாம் இது போல தான் இருக்குமா? என்ற எண்ணமே நமக்கு மேலோங்குகிறது. அம்பேத்கர் பெரியார் புத்தர் ஆகிய குறியீடுகளை மாரி செல்வராஜ் எத்தனை படத்தில் தான் காட்டிக்கொண்டே இருப்பார் என தெரியவில்லை.

அதுபோல பன்றிகளையும் நாய்களையும் அடிக்கடி காட்டிக் கொண்டே இருப்பது போர் அடிக்கிறது.

2021 சட்டமன்றத் தேர்தலை மையப்படுத்தி பல காட்சிகள் உள்ளன.. மீண்டும் ஆளுங்கட்சி ஆட்சிக்கு வருவது போலவும் காட்டப்படுகிறது. இது எதை குறி வைத்து எடுக்கப்பட்டது என்பது உதயநிதிக்கே வெளிச்சம்.

உன் அப்பாவை உட்கார வைக்காமல் இருப்பது என் அதிகாரம்.. உன்னை உட்கார சொல்வது எனது அரசியல்.. என்ற பகத் பேசும் வசனங்கள் அரசியல்வாதியின் புத்திசாலித்தனம்.

ஆக.. மாமன்னன்… பட்டியலினத்திற்கு பகுத்தறிவு தந்த மகுடம்.

Maamannan movie review and rating in tamil

நாயாட்டி / நாயாடி விமர்சனம் 1.5/5..; வாயாடியை கூட சமாளிச்சிடலாம்.!?!

நாயாட்டி / நாயாடி விமர்சனம் 1.5/5..; வாயாடியை கூட சமாளிச்சிடலாம்.!?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

ஒரு பிரபல யூடியூப் சேனல் குழுவை நாயாடி இனத்தை பற்றிய ஆராய சொல்லி ஒருவர் அனுப்புகிறார். அதற்கான இடத்தை தேர்ந்தெடுத்து அவரும் அவர்களுடன் பயணிக்கிறார்.

ஒரு திரில்லருக்காகவும் பணத்திற்காகவும் ஆசைப்படும் அந்த குழுவினர் ஒரு பங்களாவில் சென்றடைந்து அங்கு அமானுஷ்ய சக்திகளிடம் மாட்டிக் கொண்டு படும் அவஸ்தைகளே இந்த படத்தின் கதை.

வனப்பகுதி பழங்குடி இனத்தவர் நாயாடிகள். இவர்கள் உயர் சமூகத்தினராலும், விலங்குகளாலும் தொல்லைக்கு உள்ளாகின்றனர்.

எனவே தங்களை காக்க பில்லி சூனியம், மந்திர தந்திரங்களை கற்று சக்தி பெறுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் நாயடி பெண் மீது காதல் கொள்ளும் ஒரு அரசர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் எங்கள் இடத்தில் தான் நீங்கள் வசிக்க வேண்டும் என பெண் நிபந்தனை விதிக்கிறார்.

அதனை ஏற்றுக்கொண்டு அங்கு வாழும் அவர்கள் சில நரபலிகளை கொடுக்கின்றனர். மன்னர் செய்த காரியம் பிடிக்காமல் மக்கள் அவர்களை கொல்ல திட்டமிடுகின்றனர்.

அதன் பின்னர் என்ன ஆனது.? என்பதுதான் நாயாடி படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நாயகன் ஆதர்ஷ், நாயகி காதம்பரி ஆகியோர் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர்.

பபின், நிவாஸ், அரவிந்தசாமி, ரவிச்சந்திரன், கீதா லட்சுமி ஆகியோரும் படத்தில் உண்டு்.

டெக்னீஷியன்கள்…

அருணின் பின்னணி இசை சோதனை.. பேய் படம் என்றால் பேய் இசை கொடுக்க வேண்டும் என நினைத்தாரோ.? காதை கிழித்து விட்டார்.. ஒரு இசையும் உருப்படியாக இல்லை..

மோசஸ் டேனியலின் கேமரா ஓரளவு விளையாடியுள்ளது.

இயக்குனர் ஆதர்ஷ் மதிகாந்தம்… ஒரு பேய் படத்தை கொடுக்க வேண்டும் என வழக்கமான கதையை இவர் தொட்டிருந்தாலும் நாயாடி என்ற கேரள பழங்குடியின மக்களை மையப்படுத்தி இருக்கிறார்.

இதில் ஆரம்பத்தில் காட்டப்படும் ஸ்டோரி போட் அனிமேஷன் காட்சிகள் சிறப்பாக உள்ளன. இறுதிவரை அப்படியே கொடுத்திருக்கலாம் போல.

படம் ஆரம்பிக்கும் போது ஏற்படும் தலைவலி படம் முடியும் வரை நீடிக்கிறது.

ஆக நாயாடி.. வாயாடியை கூட சமாளிச்சிடலாம்.!?!

Naayaadi movie review and rating in tamil

அழகிய கண்ணே விமர்சனம் 2/5.; பெயருக்கு மட்டுமே…

அழகிய கண்ணே விமர்சனம் 2/5.; பெயருக்கு மட்டுமே…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

இந்தப் படத்தின் ஆரம்பத்திலேயே நாயகன் மீது பெட்ரோல் ஊத்தி தீ வைக்கின்றனர் வில்லன் கும்பல். எனவே இது ஒரு ஆக்சன் படம் என்ற முடிவுக்கு நாம் வந்து சீட்டில் அமருகிறோம்.

அதன் பின்னர் படம் தொடங்குகிறது.. சமூக சிந்தனையுடன் கிராமத்தில் நாடகங்களை போடுகிறார் நாயகன்… இது ஒரு சமூக சிந்தனை உள்ள படம் என நாம் நினைக்கிறோம்.

பின்னர் ஐயர் வீட்டு பெண் சஞ்சிதாவுக்கு நாடகம் வசனங்களை எழுதி கொடுத்து கவருகிறார் நாயகன்.

இது ஒரு காதல் படம் என்று நாம் நினைக்கையில் உதவி இயக்குனராக வேண்டும் என வாய்ப்பு கேட்டு பிரபு சாலமனுக்கு கடிதம் எழுதுகிறார் நாயகன். உடனே சென்னைக்கு வர சொல்கிறார் பிரபு சாலமன்.

அங்கு சில படங்கள் பணிபுரிந்த பின் நாயகனாக வேண்டும் என்ற ஆசையில் விஜய் சேதுபதிக்கு கதை சொல்கிறார். எனவே இது உதவி இயக்குனர்களின் சிரமங்களை சொல்லும் படம் என நாம் நினைக்கிறோம்.

இதனிடையில் நாயகியும் சென்னையில் வேலைக்கு செல்கிறார். நாம் ஏன் தனியாக வாடகை கொடுக்க வேண்டும். இருவரும் திருமணம் செய்து ஒரு அப்பார்ட்மெண்ட்டை வாங்கி லோன் கட்டலாம் என்கிறார்.

ஆனால் குழந்தை பிறந்ததால் வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார். இப்படியாக பல குழப்பங்களை ஏற்படுத்தி அவருக்கும் என்ன செய்வது என்று புரியாமல் இயக்கியிருக்கிறார் இயக்குனர் விஜயகுமார்.

கேரக்டர்கள்…

பிரபல பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவகுமார் இந்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். ஆக்சன் காட்சிகளில் ஓகே ரகம்.. முகபாவனைகளில் கூடுதல் கவனம் தேவை.

ஐயர் வீட்டு பெண்ணாக சஞ்சிதா. எந்த விதத்திலும் மாமி வீட்டு அம்சம் அவருக்கு ஒட்டவில்லை.. நாயகனின் கிராமத்து நண்பனாக அமுதவாணன் நடித்திருக்கிறார். சிட்டி நண்பராக வி ஜே ஆண்ட்ரூஸ் வருகிறார்.. யாருக்கும் பெரிதாக காட்சிகள் இல்லை.

இயக்குனர் பிரபு சாலமன் இயக்குனராகவே வருகிறார்.. அவரது காட்சிகள் செயற்கைத் தனமாக உள்ளது.

சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி வருகிறார். எப்படி கதை கேட்டார்? அவருக்கு பிடித்திருக்கு என்கிறார்.. நமக்கு தான் ஒன்றுமே புரியவில்லை..

டெக்னீசியன்கள்…

சீனு ராமசாமியின் உடன் பிறந்த தம்பி விஜயகுமார் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். கிராமத்தில் காட்டப்படும் ஆலமரம் மிக அழகு. அதுபோல சென்னை காட்சிகளும் அழகாய் இருக்கின்றன. ஈனால் காட்சிகளில் உயிரோட்டம் இல்லை. எந்த காட்சியிலும் நம்மால் பெரிதாக ஒன்ற முடியவில்லை.

சீனு ராமசாமி தன் தம்பிக்கு திரைக்கதை தீனி போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக ஜெயித்திருப்பார்.

கிராமத்துக் குத்தாட்டம் ஆட்டம் போட வைக்கிறது. அதில் சமூக சிந்தனை வரிகள் மனதில் இடம் பிடிக்கின்றன.

ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது கிளைமாக்ஸ் காட்சி தான் படத்திற்கு பெரிய குறை.. என்ன நடக்கிறது என்பது புரியாமலே நாம் தியேட்டர் விட்டு வெளியே வருகிறோம்.

ஒருவேளை நாம தூங்கி விட்டோமா என பக்கத்தில் இருந்தவரை கேட்டேன்.. இல்லை காட்சியே அப்படித்தான் இருக்கிறது என்றார்.

ஆக இந்த அழகிய கண்ணே.. பெயருக்கு மட்டுமே

Azhagiya Kanne movie review and rating in tamil

பாயும் ஒளி நீ எனக்கு விமர்சனம் 2.75/5.; பவர் இல்லாத ஒளி

பாயும் ஒளி நீ எனக்கு விமர்சனம் 2.75/5.; பவர் இல்லாத ஒளி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாயும் ஒளி நீ எனக்கு என்ற மகாகவி பாரதியாரின் கவிதைகளை படத்தின் தலைப்பாக வைத்து அதற்கு அர்த்தம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் அத்வைத்.

பார்வை குறைபாடு உள்ள விக்ரம் பிரபுவுக்கு ஒளியாக இருப்பவர் நாயகி வாணி போஜன் என்கிறாரோ.?

கதைக்களம்…

சிறுவயதில் ஏற்பட்ட ஒரு விபத்தில் தன் தாய் தந்தையை இழக்கிறார் விக்ரம் பிரபு. அந்த விபத்தில் இவருக்கு பார்வை குறைபாடு வருகிறது. அதிக வெளிச்சம் இருந்தால் மட்டுமே காட்சிகளை காண முடியும் என்பது தான் அது.

அதன் பின்னர் தன் சித்தப்பா வளர்ப்பில் வளர்கிறார் விக்ரம் பிரபு. இவருக்கு வேண்டிய அனைத்து ஒளி அமைப்புகளையும் வீட்டில் ஏற்படுத்திக் கொடுக்கிறார் சித்தப்பா.

இந்த சூழ்நிலையில் ஒரு நாள் நண்பருடன் இரவில் வெளியே செல்லும்போது இரு ரவுடிகள் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வதை அறிந்து அவர்களை அடித்து விரட்டுகிறார் விக்ரம்.

இது ஒரு புறம் இருக்க.. மற்றொரு புறம்.. ஒரு நேர்மையான அரசியல்வாதியான வேலராமமூர்த்தி இடத்திற்கு வர துடிக்கிறார் அவரது உதவியாளர் தனஞ்ஜெயா.

இந்த இரு கதைகளும் ஒரு கட்டத்தில் இணைய விக்ரம் பிரபுவுக்கு எதிரியாகிறார் தனஞ்செயா.

அதன் பிறகு என்ன நடந்தது.? பார்வை குறைபாடு உள்ள விக்ரம் பிரபு வில்லனை எப்படி ஜெயித்தார்.? விக்ரம் பிரபுவை தனஞ்செயா என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

பொதுவாக ஹீரோவுக்கு பெரிதாக சேலஞ்சிங் கேரக்டர்கள் அமைவதில்லை. ஆனால் பார்வை குறைபாடு என்ற சேலஞ்சிங்கான கேரக்டரை எடுத்து அதில் வெளுத்து கட்டி இருக்கிறார் விக்ரம் பிரபு. காதல் காட்சிகள் பெரிதாக இல்லை என்றாலும் ஆக்ஷன் காட்சிகளில் அடித்து நொறுக்கியிருக்கிறார்.

வில்லனாக தனஞ்ஜெயா மிரட்டி இருக்கிறார். இடைவேளை வரை இவருக்கு பெரிதாக காட்சிகள் இல்லை என்றாலும் அதன் பிறகு ஸ்கோர் செய்துள்ளார்.

பிளாஷ்பேக்கில் வரும் வேல ராமமூர்த்தி அசத்தியிருக்கிறார்.

காதலியாக வாணி போஜன்.. நாயகனுடன் கூடவே வருவதால் இவரை அதிகம் காண முடிகிறது.

அனிச்ச பூவே.. பாடலில் வாணி காஸ்ட்யூம்கள் கவரவில்லை. என்ன பிரச்சினையோ.?

விவேக் பிரசன்னா நண்பன் கேரக்டரை நிறைவாக செய்ய முயற்சித்துள்ளார்.

சித்தப்பாவாக நடிகர் ஆனந்த் நடித்துள்ளார். தன் கேரக்டரில் முத்திரை பதிக்கிறார்.

டெக்னீஷியன்கள்…

இயக்குநர் – கார்த்திக் அத்வைத்
பின்னணி இசை – சன்னி – சாகேத்
தயாரிப்பு – கார்த்திக் மூவி அவுஸ்
ஒளிப்பதிவு – ஸ்ரீதர்

படத்திற்கு பின்னணி இசை அதிக பலத்தை கொடுத்துள்ளது.. பாடல் காட்சிகள் ரசிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது…

ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் தன் பணியை நிறைவாக செய்திருக்கிறார்.. அதற்கு முக்கிய காரணம்.. ஒரே காட்சியை ரசிகர்களுக்கு வெளிச்சமாகவும் நாயகன் பார்வையில் மங்கலாகவும் காட்ட வேண்டும். அதற்காக இரண்டு விதமான ஒளியை அவர் பயன்படுத்தியுள்ளது அவரது சிரமத்தை புரிய வைக்கிறது.

வழக்கமான பழிவாங்கல் கதையாக இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து ஹீரோவுக்கு சேலஞ்சிங்கான கேரக்டரை கொடுத்து திரை அமைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் அத்வைத்.

ஆனால் அதை சொன்ன விதத்தில் அவரது தடுமாற்றம் தெரிகிறது. முக்கியமாக ஒரு படத்திற்கு கிளைமாக்ஸ் காட்சி பெரிதாக பேசப்பட வேண்டும். ஆனால் ஹீரோ பார்வையில் அந்த செட்அப் காட்சிகள் சரியாக இருந்தாலும் வில்லன் இப்படியா வந்து மாட்டிக் கொள்வார்.?!

ஆக பாயும் ஒளி நீ எனக்கு… பவர் இல்லாத ஒளி

paayum oli nee yenakku movie review and rating in tamil

More Articles
Follows