பைரவா டீசர் விமர்சனம்

பைரவா டீசர் விமர்சனம்

அழகிய தமிழ் மகன் படத்தை தொடர்ந்து மீண்டும் பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் பைரவா.

இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், சதீஷ், அபர்ணா வினோத், சிஜா ரோஸ், பாப்ரி கோஸ், தம்பி ராமையா, டேனியல் பாலாஜி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி, ஜெகதிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சுகுமார் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தி மிகப்பிரம்மாண்டமாக பிரபல நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் நாளை அக். 28ந் தேதி தொடங்குபோது இப்படத்தின் டீசர் வெளியாகும் எனக் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வெளியாகிவிட்டது. இந்த டீசர் எப்படி என்பது பற்றிய ஒரு பார்வை பார்ப்போமா?

கபாலி பட டீசரில் ரஜினியை காட்டுவதற்கு முன்பு யாருடா அவன்? என கிஷோர் கேட்பாரே அதேபோல இதில் ஜெகபதி பாபு கேட்கிறார்.

அதன் பின்னர்… தெரிஞ்ச எதிரியை விட, தெரியாத எதிரிக்குத்தான் அல்லு… அதிகமாக இருக்கனும் என்ற பன்ச் டயலாக் பேசுகிறார் இளைய தளபதி.

bairavaa teaser vijay

பொதுவாக விஜய் பன்ச் வசனங்களில் பாசிட்டிவ்வான வார்த்தைகளே இருக்கும்.

இன்னைக்கு நிறைய பேருகிட்ட இல்லாத ஒரு கெட்ட பழக்கம் ஒன்னு என்கிட்ட இருக்குது என்கிறார். அது என்ன என்பது படம் வந்தபிறகுதான் தெரியும்.

இதனிடையில்…

யார்ரா யார்ரா இவன் ஊர கேட்ட தெரியும் வாடா
வந்து முன்ன நின்னு பாரு தெரியும்
வர்லாம் வர்லாம் வா வர்லாம் வா பைரவா என்ற பாடல் வரிகளிலும் குரலிலும் அருண்ராஜா காமராஜ் ரசிகர்கள் கவர்கிறார்.

பின்னணி இசையை பேசும்படி கொடுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

மேலும் கீர்த்தி சுரேஷ் அழகான முகபாவனைகளுடன் ஹோம்லியாக வந்து செல்கிறார்.

இடையில் ஒரு காட்சியில் சதீஷை ஆடவிட்டு பார்க்கிறார் விஜய்.

bairavaa keerthy

தன் விரல்களிடையே ஒரு நாணயத்தை சுற்றி உள்ளே விட்டு விட்டு எடுக்கிறார் விஜய். அப்போது அவருக்கு பின்னால் வில்லன் கும்பல் சுற்றி வளைக்கிறது. இது படத்தில் செம பைட் சீனாக இருக்கும் எனத் தெரிகிறது.

மேலும் முழுக்க முழுக்க ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இடையில் மைம் கோபி.. நீ என்ன பெரிய வசூல் மன்னனா? என்று கேட்கிறார்.?

தெரியல. அப்படிதான் பேசிறாங்க என்கிறார் விஜய். இது படத்திற்கா? அல்லது படத்தின் வசூலுக்காக எழுதப்பட்டதா? என்று தெரியவில்லை.

இறுதியாக எப்ப வரும்ன்னு சொல்லனுமா? என்று கேட்பதுடன் இந்த டீசர் முடிவடைகிறது.

ஆக மொத்தம் விஜய்யின் வழக்கமான பார்முலாவில் பைரவா வந்து இருக்கிறது.

Comments are closed.