பைரவா விமர்சனம்

பைரவா விமர்சனம்

நடிகர்கள் : விஜய், கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், ஷீஜாரோஸ், சதீஷ், டேனியல் பாலாஜி, ஹரீஷ் உத்தமன், ஜெகபதிபாபு. பாப்ரி கோஷ், ஒய்.ஜி. மகேந்திரன், ஸ்ரீமன், ஆடுகளம் நரேன், தம்பி ராமையா, ராஜேந்திரன் மற்றும் பலர்.
இயக்கம் : பரதன்
இசை : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவாளர் : எம். சுகுமார்
எடிட்டிங்: பிரவீன் கே.எல்.
பி.ஆர்.ஓ.: ரியாஸ் கே. அஹ்மது
தயாரிப்பாளர் : விஜயா புரொடக்ஷன்ஸ்

கதைக்களம்…

வங்கியில் (பேங்க்) லோன் வாங்கியவர்களிடம் பணம் கலெக்ட் செய்யும் வேலை பார்க்கிறார். இவரது நண்பர்தான் சதீஷ்.

லோன் கடனை கொடுக்காமல் ஏமாற்றும் ரவுடிகளை இடையில் வரலாம் வரலாம் வா பைரவா பின்னணி இசையுடன் பந்தாடுகிறார்.

இதனிடையில் கீர்த்தி சுரேஷை கண்டு காதலில் விழுகிறார். ஆனால் கீர்த்தி சுரேஷ் ஒரு பெரிய பிரச்சினையில் இருக்கிறார்.

அதனைத் தெரிந்துக் கொண்டு அவருக்காக ஒரு முறையற்ற கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து போராடி பந்தாடுவதே இந்த பைரவா.

Vijay-and-Keerthy-Suresh-in-Bairavaa-17

கதாபாத்திரங்கள்…

விஜய்க்கு மாஸ் இன்ட்ரோ இருக்கும் என்றால், இதில் அமைதியான என்ட்ரி கொடுத்து நம்மை கவருகிறார்.

அவரது வழக்கமான காதல், காமெடி என துள்ளலுடன் இளமையாக காட்சியளிக்கிறார்.

இதில் புதிய ஹேர் ஸ்டைல் என்பதால் சிலருக்கு பிடிக்காமல் போகலாம்.

பெரும்பாலான காட்சிகள் கீர்த்திக்காக நகர்கிறது. ப்ளாஷ்பேக் காட்சிகளில் விஜய் இடம் பெறவில்லை என்பதால் ரசிகர்களுக்கு சற்று வருத்தம் வரலாம்.

கீர்த்தி சுரேஷ் ஹோம்லியாக ஜொலிக்கிறார். மாஸ் ஹீரோ படத்தில் இவருடைய கேரக்டர் முக்கியத்துவம் பெற்றிருப்பது இவருக்கு பலமே.

முதல்பாதியில் விஜய்-சதீஷின் காமெடி கைத்தட்டலை பெறும். சில காமெடி ரிப்பீட் பிலிங்.

ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி இருவரில் டேனியல் பாலாஜி மிரட்டுகிறார்.

ஆனால் அண்ணி மாளவிகா, சிஜா ரோஸ், அபர்ணா வினோத், தம்பி ராமைய்யா, மொட்டை ராஜேந்திரன், ஹரிஷ் உத்தமன், சரத் லோகித்வா ஆகியோரை இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை.

bairavaa dance

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாடல்களை விட பின்னணி இசையில் அதிகம் ஸ்கோர் செய்கிறார் சந்தோஷ் நாராயணன்.

நில்லாயோ பாடல் மனதில் நிற்கும். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த வர்லாம் வர்லாம் வா தீம் பாடல் பொங்கல் விருந்துதான். எந்த பாடல் காட்சிகளும் மனதில் ஒட்டவில்லை.

ஒளிப்பதிவாளர் தன் பங்கில் குறைவைக்கவில்லை. ஆனால் எடிட்டர் பொறுமையை சோதித்துவிட்டார்.

vijay bairavaa

படத்தின் ப்ளஸ் மற்றும் மைனஸ்….

  • கிரிக்கெட் மற்றும் பஸ் பைட் நிச்சயம் ஆக்ஷன் ரசிகர்களின் ஸ்வீட் அல்வா.
  • நம்நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூரங்களின் அலசல்.
  • மாணவருக்கும் ஆசிரியருக்கும் தகுதி வேண்டும் என்பது போல, கல்வி நிறுவனங்களை நடத்துபவருக்கு தகுதி வேண்டும் என்ற க்ளைமாக்ஸ் பன்ச் சூப்பர்.
  • விஜய்யின் பன்ச் ரசிகர்களை கவரும்.
  • முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங்.
  • பாப்பா பாப்பா பாடல் இடை சொருகலாக தெரிகிறது.

துப்பாக்கி, கத்தி என அதிரடியாய் தெறிக்க விட்ட விஜய்யை மீண்டும் கமர்ஷியல் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார் பரதன்.

கல்வியாளர்கள் என்ற பெயரில் சில ரவுடிகள் செய்யும் அராஜகத்தை சுட்டி காட்டியிருப்பது சிறப்பு.  ஆனால் இன்னும் வலுவாக நெத்தியடியாக சொல்லியிருந்தால் மிகச்சிறப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில்… விஜய் ரசிகர்களுக்கான பைரவா பொங்கல் இது.

Comments are closed.