LIVING TOGETHER LESSON…; பேச்சுலர் விமர்சனம் 3.5/5

LIVING TOGETHER LESSON…; பேச்சுலர் விமர்சனம் 3.5/5

ஒன்லைன் : லிவிங் டுகெதர் கலாச்சார உறவால் ஏற்படும் சிக்கல்கள்..

கதைக்களம்..

கோயம்புத்தூர் வாசி நாயகன் டார்லிங் (ஜிவி பிரகாஷ்). இவர் பெங்களூரில் உள்ள ஐடி கம்பெனியில் பணிபுரிகிறார். அதே நிறுவனத்தில் தான் நாயகி திவ்யபாரதியும் பணிபுரிகிறார்.

எதை பற்றியும் கவலைப்படாமல் ஜாலியாக சுற்றித் திரியும் கேரக்டர் ஜிவி. ஒரு கட்டத்தில் தன் நண்பனின் உதவியால் ஒரு ப்ளாட்டில் நாயகி (சுபு) உடன் தங்கும் சூழ்நிலை உருவாகிறது.

நாட்கள் செல்ல செல்ல இருவரும் நெருக்கமாகி விடுகின்றனர். இவர்களின் நெருக்கத்தால் திவ்யா கர்ப்பமாகிறார்.

இதை சற்றும் எதிர்பாராத ஜிவி. கர்ப்பத்தை கலைக்க சொல்கிறார்.

ஆனால் தன் கருவில் வளரும் இரண்டு உயிர்களை கொல்வது பாவம் என மறுக்கிறார் திவ்யா.

இந்த பிரச்சினை வக்கீலாக இருக்கும் திவ்யாவின் அக்கா கணவர் வரை செல்ல, ஜிவி மேல் வழக்கு போடுகிறார்கள். இதனால் ஜிவியின் குடும்பம் பல பிரச்சினைகளை சந்திக்கிறது.

அதன்பின் கரு கலைக்கப்பட்டதா? திருமணம் செய்தார்களா? இருவரின் குடும்பமும் என்னானது என்பதே படத்தின் மீதிக் கதை.. க்ளைமாக்ஸ் சற்றும் எதிர்பாராத ஒன்று.

கேரக்டர்கள்..

டார்லிங் ஜிவி பிரகாஷ்க்கு இந்த கேரக்டர் செம பொருத்தம். பெண்ணை ரூட் போடுவது.. காதலிக்காமல் அவள் பின்னால் சுற்றுவது… என விளையாடியிருக்கிறார்.

படத்தில் ஹீரோவுக்கு பெரிதாக வசனங்களே இல்லாத நிலையிலும் படத்தை ஒத்துக் கொண்டுள்ளார் என்பதே பெரிய விஷயம்தான். அதில் முடிந்தவரை தன் முகபாவனைகளில் சொல்லிவிட்டார் ஜிவி.

நல்ல உடற்கட்டுடன் நாயகி திவ்யா பாரதி. இவரது இன்ட்ரோ காட்சியிலேயே பின்னழகு பின்னுகிறது. இவரது நடிப்பை பாரத்தால் யாரும் முதல் படம் என சொல்லமாட்டார்கள். க்ளைமாக்ஸ் காட்சியில் லிவிங் டுகெதர் உறவில் வாழும் ஆண்களுக்கு ஆப்பு அடித்துள்ளார் திவ்யபாரதி.

ஜிவி பிரகாஷ் உடன் வரும் நண்பர்கள் செய்யும் சிறுசிறு சேட்டைகள் ரசிக்க வைக்கிறது. பகவதி பெருமாள், முனிஷ்காந்த் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

அதுபோல் திவ்யபாரதி மற்றும் ஜிவி. பிரகாஷின் குடும்பத்தார் அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர். தங்கள் குடும்பத்தில் இப்படி ஒரு கருக்கலைப்பு வழக்கு என்று வந்தால் எந்த மனநிலையில் இருப்பார்களோ? அதை அப்படியே திரையில் கொண்டு வந்துள்ளனர்.

மிஷ்கின் வரவு படத்தில் எதிர்பாராத ட்விஸ்ட். ஓரிரு நிமிடமே என்றாலும் மனிதர் ரசிக்கும்படியான நடிப்பை கொடுத்துள்ளார்.

டெக்னீஷியன்கள்..

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் காட்சிகளை ஜஸ்ட் ஓகே என்று சொல்லிட முடியாது. அப்படியொரு நேர்த்தியாக வண்ணங்களாய் கொடுத்துள்ளார்.

சவுண்ட் டிசைனர்களை (SYNC CINEMA) கண்டிப்பாக பாராட்ட வேண்டும். அதுபோல் ஆடியோகிராபி டைரக்டர் ராஜகிருஷ்ணனை வாழ்த்தவேண்டும். உடைந்த பாட்டில் முதல் பறவைகள் சத்தம் என அனைத்தையும் லைவ்வாக கொடுத்துள்ளனர்.

சித்து குமார் இசையில் பாடல்கள் தாளம்போட வைக்கும். பச்சிகளாம் மற்றும் கவன் பாடல்கள் ரிப்பீட் செய்து கேட்கலாம்.

படத்தின் பெரிய குறையே எடிட்டர்தான். ஷான் லோகேஷ் இன்னும் கத்திரி போட்டிருக்கலாம். கிரிக்கெட் விளையாட்டு தேனீக்கள் காட்சி.. மற்றும் கோர்ட் காட்சிகளை நிறையவே வெட்டியிருந்தால் படம் இன்னும் நிறைவான அனுபவத்தை கொடுத்திருக்கும்.

தன் அறிமுகப்படத்திலேயே சிறப்பான படத்தை கொடுத்துள்ளார் சதீஷ் செல்வகுமார். இதுபோன்ற கதைகளை சில ஹீரோக்களே செய்யத் தயங்குவார்கள். அதை சிறப்பாக கையாண்டு நாயகியை சிறப்பித்துள்ளார்.

ஐடி கலாச்சாரத்தில் மாறியிருக்கும் நவீன சமூகத்தை பேச்சுலர் என்ற பார்வையில் கொஞ்சம் ரிப்பேர் செய்துள்ளார். அதேசமயம் எங்குமே ஆபாசமோ வன்முறையோ இல்லாத அளவிற்கு தரமாக கொடுத்துள்ளார்.

ஆக்ஸ்ஸ் பிலிம்ஸ் சார்பாக டில்லிபாபு தயாரித்துள்ளார். சக்திவேல் பிலிம் பாக்டரி நிறுவனம் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது.

ஆக.. இந்த பேச்சுலர்.. லிவிங் டுகெதர் உறவில் வாழ்பவர்களுக்கு பாடம்.

Bachelor movie review and rating in Tamil

Related Articles