புரூஸ் லீ விமர்சனம்

புரூஸ் லீ விமர்சனம்

நடிகர்கள் : ஜிவி பிரகாஷ், கீர்த்தி கர்பந்தா, பாலசரவணன், முனீஷ்காந்த் ராமதாஸ், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான் மற்றும் பலர்.
இயக்கம் : பிரசாந்த் பாண்டிராஜ்
இசை : ஜிவி பிரகாஷ்
ஒளிப்பதிவாளர் : பி.வி. சங்கர்
எடிட்டர்: பிரதீப் இ ராகவ், ஜி. மனோஜ்
பி.ஆர்.ஓ.: ஜான்சன்
தயாரிப்பு : கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார்

bruce lee gvp

கதைக்களம்…

ஜெமினி கணேசன் என்ற ஜிவி. பிரகாஷ்க்கு புரூஸ் லீ என்ற பட்டப்பெயரும் உண்டு. இவரது நண்பர் பால சரவணன்.

இவர்கள் இருவருக்கும் காதலிகள் உண்டு.

ஒரு சூழ்நிலையில் மன்சூர் அலிகானின் தீவிர ரசிகரான ஜிவி, வில்லன் ராமதாஸால் மன்சூர் கொல்லப்படுவதை பார்த்து விடுகிறார்.

போலீசிலிடம் செல்லலாம் என்றால், அவர்களே கொலைக்கு உடந்தையாக இருப்பது தெரிய வருகிறது.

எனவே, அந்த கொலையை எப்படி வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார் இந்த பயாந்தாங்கொள்ளி புரூஸ் லீ என்பதே கதை.

bruce lee team

கதாபாத்திரங்கள்…

வழக்கமான ஜிவி பிரகாஷ் படத்தில் இதுவும் ஒன்று. ரூட்டை மாற்றினால் அவருடைய சினிமா பயணம் சிறக்கும்.

பில்டப் கொடுத்து ஸ்கெட்ச் போடுவதையெல்லாம் ரசிக்க முடியவில்லை. காதலியுடன் ரொமான்ஸ் சுத்தமாக இல்லை.

ஆமா தாடிய எடுக்கிற ஐடியாவே இல்லையா சார்..? என்ன ரகசியமோ..?

பாலசரவணன் கொஞ்சம் ஆறுதல். ஆனால் பெரிதாக சொல்லும்படி இல்லை.

மொட்டை ராஜேந்திரன் இருந்தால், ஜிவி பிரகாஷ் ஹிட்டடித்து விடலாம் என கணக்கு போட்டுவிடுகிறார் போல. அந்த எண்ணமும் புஷ்தான்.

தன் முதல் தமிழ் படம் இப்படியா கீர்த்தி கர்பந்தாவுக்கு அமைய வேண்டும்? என கேட்கத் தோன்றுகிறது.

மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் இருந்தும் படத்தில் வில்லத்தனம் இல்லை.

ராமதாஸ் வில்லன் வேடம் ஏற்றதால் அவரிடமும் காமெடி இல்லை.

bruce lee gvp bala saravanan

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்திற்கு ஜிவி பிரகாஷ்தான் இசை என்றாலும் படத்திற்கு பாடல்கள் கைகொடுக்கவில்லை.

பி.வி. ஷங்கரின் ஒளிப்பதிவில் மட்டும் காட்சிகளை ரசிக்க முடிகிறது.

இதில் குழந்தைகள் பிடித்த விஷயங்கள் இருக்கும் என்று இயக்குனர் ஒருமுறை கூறியிருந்தார். ஆனால் நான்தான் உங்கொப்பன்டா என்ற பாடலுக்கு சிறுவர்கள் வருகிறார்கள் அவ்வளவுதான்.

மற்றபடி இளைஞர்கள் ரசிக்கும்படி கூட காட்சிகள் இல்லை.

அதிலும் வில்லனின் ஆட்களை கடத்த போடும் திட்டம், காதலியை காப்பாற்ற போடும் திட்டம்… இந்த மொக்க காட்சி எல்லாம் தேவையா? என்றே கேட்க தோன்றும்.

ஒவ்வொரு படத்தில் இருந்து ஒவ்வொரு காட்சிகளை சேர்த்துவிட்டால் படம் ஓடி விடும் என தப்புக் கணக்கு போட்டுவிட்டார் டைரக்டர் பிரசாந்த்.

புரூஸ் லீ…  செம்மம அடி… யாருக்கோ…?

Comments are closed.