தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
தாய் தந்தையை இழந்தவர்கள் விஜய் சேதுபதி & அவரது தங்கை மஞ்சிமா மோகன்.
அரசியலில் குதித்து பெரிய ஆளாக வர வேண்டும் என துடிக்கிறார் விஜய்சேதுபதி. எனவே பார்த்திபன் கட்சியில் நுழைந்து அவரது ஆதரவைப் பெற்று அவரின் விசுவாசி ஆகிறார்.
இதற்கிடையில் ஒருநாள் விஜய் சேதுபதிக்கு மண்டையில் அடிப்பட்டதால் அவர் இரண்டு ஆள்கள் போல இரண்டு விதமாக நடந்து கொள்கிறார். ஒருவன் நல்லவனாக ஒருவன் கெட்டவனாக.
இதனால் அரசியலில் நிறைய பிரச்சினைகளை சந்திக்கிறார்.
இதன்பிறகு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்..
இரண்டு கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி.
ஆனால் இரண்டுக்கும் வித்தியாசமில்லை. அந்நியன் பாணியில் காட்டியிருக்கலாம்.
பக்ஸ் பகவதி பெருமாள் & கருணாகரனின் நடிப்பு படத்திற்கு பலம்.
ராஷி கண்ணா & மஞ்சிமா என இரண்டு நாயகிகள் உள்ளனர். மஞ்சிமாவுக்கு டயலாக் கூட இல்லை. அய்யோ பாவம்..
தனக்கே உரிய நக்கல் நையாண்டியுடன் அசத்தி இருக்கிறார் பார்த்திபன். பலே சார்.
கிளைமாக்ஸ் வருகிறார் லொள்ளு மன்னன் சத்யராஜ். ஒரே காட்சியில் ரசிகர்களின் கைத்தட்டலை தட்டிச் செல்கிறார்.
டெக்னீஷியன்கள்..
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை. பாடல் காட்சிகளும் கவரவில்லை.
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு சிறப்பு.
இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் ஒரு அரசியல் நையாண்டி தர்பார் நடத்தி இருக்கிறார். அதில் விஜய்சேதுபதிக்கு ஒரு வித்தியாசமான நோயை காட்டியிருக்கிறார்.
ஆனால் அதில் பெரிதாக வலுவில்லை. மஞ்சிமாவை ஏன் சிஸ்டராக வைத்தார் என தெரியல.
மொத்தத்தில் ‘துக்ளக் தர்பார்’… நையாண்டி தர்பார்
Tughlaq Durbar movie review and rating in Tamil