விவசாய ஜனங்களின் நண்பன் ஜனநாதன்.. : லாபம் விமர்சனம்

விவசாய ஜனங்களின் நண்பன் ஜனநாதன்.. : லாபம் விமர்சனம்

கதைக்களம்

பெருவயல் என்றொரு கிராமம். அந்த கிராமத்திற்கு வருகிறார் பக்கிரி என்ற விஜய்சேதுபதி. அவரின் நண்பர்களும் ஊர் மக்களும் கொண்டாடுகின்றனர்.

அந்த கிராமத்தில் விவசாய நிலங்களை அபகரித்து, விவசாயிகளை விவசாய சங்கத் தலைவர் என்ற பெயரில் அடிமையாக்கி வைத்திருக்கிறார் வில்லன் ஜெகபதி பாபு.

எனவே அவரை எதிர்க்கவும் விவசாயத்தின் பலன்களை மக்களுக்கு சொல்லவும் முற்படுகிறார் விஜய் சேதுபதி. அதன்படி ஜெகபதி பாவுவுவை எதிர்த்து விவசாய சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவர் ஆகிறார்.

இதனால் கோபமடையும் ஜெகபதி பாபு, விஜய் சேதுபதியை அழிக்க நினைக்கிறார்.

அந்த பகுதியில் உள்ள பல கிராமங்களை இணைத்து எல்லோருக்கும் வேலை வாய்ப்பளிக்கும் வகையில் கூட்டு பண்ணை திட்டத்தை செயல்படுத்துகிறார்.

மேலும் தன் விளைச்சலுக்கு தானே விலையை நிர்ணயம் செய்கிறார் விஜய் சேதுபதி. இதனால் பல பிரச்சினைகளை உருவாக்குகிறார் வில்லன். கூட்டு பண்ணை திட்டம் நிறைவேறியதா? மக்கள் என்ன செய்தார்கள்? விவசாயம் வளம் பெற்றதா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

மக்களின் செல்வன் இந்த படத்தில் விவசாயிகளின் நண்பனாக வாழ்ந்திருக்கிறார். படத்தின் விவசாயம் பற்றிய பாடங்கள் அதிகமாகவே இருந்தாலும் விவசாயத்தில் இவ்வளவு இருக்கிறதா? என வியக்க வைக்கிறது.

ஒரு விவசாய சங்கத்திற்கு அரசிடம் இருந்து எவ்வளவு பணம் வருகிறது. அதில் எவ்வளவு கையாடல் நடக்கிறது என்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் ஜனநாதன்.

விஜய்சேதுபதி உடலை குறைத்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும்.

இவருடன் கலையரசன், ராம்திலக் என பல நண்பர்கள் உள்ளனர். நாம் மறந்து போன தந்தி முறையை சொல்லியிருப்பது சிறப்பு.

ஸ்ருதிஹாசன் மற்றும் தன்ஷிகா என 2 நாயகிகள் இருந்தாலும் இவருக்கும் பெரிதாக காட்சிகள் இல்லை. தன்ஷிகா நிலைமை மோசம்.

விலை நிலங்கள், விவசாயிகளின் நிலைமை, விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம் எப்படி சுரண்டப்படுகிறது என்பதை உணர்வுபூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். ஆனால் கொஞ்சம் கமர்சியல் மசாலா சேர்த்து இருக்கலாம். நிறைய காட்சிகள் பொறுமையை சோதிக்கிறது.

விஜய்சேதுபதி ஊரை விட்டு செல்வதும் பின்னர் வருவதும் சரியான காரணம் சொல்லப்படவில்லை.

இமான் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை சில இடங்களில் ரசிக்க வைக்கிறது.

ராம்ஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். எடிட்டர் இன்னும் சில காட்சிகளை வெட்டியிருந்தால் ரசிகர்களுக்கு லாபம் தான்.

ஆக மறைந்த இயக்குனர் ஜனநாதன் இதில் விவசாய நண்பனாக தன்னை காட்டியிருக்கிறார்.

SP Jhananathan’s laabam movie review and rating

Related Articles