ஆச்சரியங்கள் நிறைந்தவன்.; அகவன் விமர்சனம்

ஆச்சரியங்கள் நிறைந்தவன்.; அகவன் விமர்சனம்

நடிகர்கள்: கிஷோர் ரவிச்சந்திரன், சைரா ஸ்ரீ, நித்யா ஷெட்டி, தம்பி ராமையா, சரண்ராஜ், நரேன், பிரியங்கா, ஹலோ கந்தசாமி, ஆர்என்ஆர் மனோகர் மற்றும் பலர்.
ஒளிப்பதிவு – பாலா பழனியப்பன்
எடிட்டர் – தாஸ் அண்ட் நிர்மல்
இசை – சி. சத்யா
இயக்கம் – ஏபிஜி ஏழுமலை
தயாரிப்பு – ரவிச்சந்திரன்
பிஆர்ஓ – நிகில் முருகன்

கதைக்களம்..

நாயகன் கிஷோர் கோயிலில் தங்கி கோயில் தொடர்பான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். தன் அண்ணணை இழந்த அண்ணி மற்றும் 2 குழந்தைகளை நன்றாக வளர்க்க கஷ்டப்படுகிறார்.

இவருக்கு பக்கபலமாக தம்பி ராமையாகவும் வேலை பார்க்கிறார்.

கோயில் அருகே 2 நாயகிகள் (அக்கா தங்கை) பூக்கடை வைத்து வியபாரம் செய்கின்றனர். இருவருக்குமே ஹீரோ மீது காதல்.

கோயிலில் தினம் தினம் இரவு வேளையில் சில மர்மமான விஷயங்கள் நடைபெறுகிறது.

அந்த மர்மமான சம்பவங்களுக்கு பேய் தான் காரணம் என சொல்லப்படுகிறது.

ஆனால் கோயிலில் பேய் எப்படி வரும் என்ற சந்தேகமும் நிலவி வருகிறது.

ஒரு சூழ்நிலையில் நாயகியே இந்த சர்ச்சையில் சிக்கி கொள்கிறார். அதை தெரிந்துக் கொள்ள நாயகன் முற்படுகிறார்.

இதனிடையில் ஒரு கும்பல் நாயகனை கடத்தி விடுகிறது. அப்போதுதான் அந்த கும்பலுக்கு நாயகனுக்கும் உள்ள தொடர்பான பல பிரச்சினைகளை முடிவுக்கு வருகிறது. அது என்ன..? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

தயாரிப்பாளரின் மகன் தான் பட நாயகன் கிஷோர். நல்ல உயரம், கலர் என ஸ்மார்ட்டாக இருக்கிறார். ஆனால் மனதில் எப்போதும் ஒரு திட்டத்தை வைத்துக் கொண்டு செயல்படுவதால் இறுக்கமாகவே வருகிறார்.

எனவே டபுள் ஹீரோயின்ஸ் இருந்தும் ரொமான்ஸ்க்கு இடமில்லை.

அக்கா தங்கை (சைரா ஸ்ரீ, நித்யா ஷெட்டி) என நடித்திருக்கும் இரண்டு பேருமே நடிப்பில் போட்டி போட்டு நடித்துள்ளனர்.

பேய்க்கும் கோயில் நிர்வாகிக்கும் பயப்படுவராக தம்பி ராமையா. ஒன்லைன் காமெடியில் கலக்கியிருக்கிறார்.

உயர் போலீஸ் அதிகாரியாக சரண்ராஜ் நடித்துள்ளார். இவருடன் ஆர்என்ஆர் மனோகர் மற்றும் அந்த வெள்ளை தாடி பெரியவரும் நல்ல தேர்வு. மிரட்டியுள்ளனர்.

கணவன் மனைவியாக வரும் நரேன் (கீர்த்திவாசன்) காவ்யா (பிரியங்கா) இருவரும் நல்ல தேர்வு. சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒரு நாத்திகவாதியான யுகபாரதி அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். அதிலும் ஆன்மிக பாடல்களையும் ஆராய்ந்து எழுதியுள்ளது சிறப்பு.

கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள அழகை கண்களுக்கு விருந்து படைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் பால பழனியப்பன். நிறைய காட்சிகளை இருட்டிலேயே படமாக்கியுள்ளார். அதையும் நன்றாகவே செய்துள்ளார்.

சத்யாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது. எல்லா பாடல்களுமே அ என்ற எழுத்தில் தொடங்குவது சிறப்பு.

இயக்கம் பற்றிய அலசல்…

ஒரு கோயில் கோபுரத்தை வடிவமைக்கின்றனர் என்பது முதல் மூலவர் அமைவது வரையிலான அனைத்தையும் ஆதார அடிப்படைகளை ஆராய்ந்து அதை வைத்து கதையை அமைத்துள்ளார் இயக்குநர் ஏழுமலை.

குறுந்தொகையில் “அகவன் மகள் பாடுக பாட்டே” என்கிற வரிகள் வரும். அதுபோல் இங்கு அகவன் என்றால் தெய்வம் என பொருள் படும் வகையில் அமைத்துள்ளார்.

இப்பட தயாரிப்பாளர் நிஜத்தில் கட்டியுள்ள ஒரு கோயிலை மையமாக வைத்து அதை சுற்றி கதையை வடிவமைத்துள்ள இயக்குனரை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.

ராஜராஜ சோழன் முதல் பல அரசர்கள் வடிவமைத்துள்ள சிற்ப கோயில்களையும் அதனை சார்ந்துள்ள ஆச்சயரியங்களை அடுக்கியுள்ளார்.

பூமியில் அடியில் புதைக்கப்பட்ட ஆச்சரியங்களையும் தமிழனின் பெருமையை போற்று வகையில் ஓர் அருமையான திரைக்கதையை கொடுத்துள்ளார் ஏழுமலை.

அதில் கமர்சியல் கலந்துக் கொடுத்தால் மட்டுமே ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதையும் உணர்ந்து செயல்பட்டு இருக்கிறார்.

ஆனால் படத்தின் நீளத்தை கருதி சில காட்சிகளை வெட்டி எறிந்தால் இந்த அகவனை இன்னும் ரசிப்பார்கள்.

படத்தில் 2 இடங்களில் நடிகர் அஜித் பற்றிய டயலாக் வருகிறது. அது தேவையில்லாமல் திணிக்கப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது.

அகவன்.. ஆச்சரியங்கள் நிறைந்தவன்

Aghavan review rating

Comments are closed.