FIRST ON NET கலையாத கனவுகள்… கார்பன் விமர்சனம் 3.75/5

FIRST ON NET கலையாத கனவுகள்… கார்பன் விமர்சனம் 3.75/5

அண்ணாதுரை படத்தை இயக்கிய சீனிவாசன் இந்த கார்பன் படத்தை இயக்கியுள்ளார். ஜோதி முருகன் – பாக்கியலட்சுமி இணைந்து தயாரித்துள்ளனர். இது விதார்த்தின் 25வது படமாகும்.

ஒன்லைன்..

CARBON என்பது நாம் எழுதியவற்றின் நகல் ஆகும். இதில் நாயகன் காண்கின்ற கனவுகள் அப்படியே நிஜமாக நடக்கிறது.

கதைக்களம்..

அம்மாவை இழந்தவர் விதார்த். இவரின் அப்பா மாரிமுத்து. ஒரு பிரச்சினையில் அப்பா மகன் இருவரும் பேசிக் கொள்வதில்லை. ஒரு நாள் இவரின் அப்பா ஒரு காரில் அடிப்படுவதாக கனவு காண்கிறார்.

அந்த விபத்தை தடுக்க நினைப்பதற்குள் அது நடக்கிறது. இதனால் தந்தை நினைவிழந்து போகிறார், இதனால் விபத்திற்கான காரணம் தெரியாமல் தவிக்கிறார் விதார்த். தந்தையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர ரூ. 10 லட்சம் தேவைப்படுகிறது.

அப்படி என்றால் அந்த கனவில் விபத்தை நிகழ்த்தியவர் யார்? என தெரிந்ததா,? அது தற்செயலாக நடந்த விபத்தா.? ப்ளான் செய்யப்பட்ட விபத்தா.? 10 லட்சம் கிடைத்ததா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்யும் விதார்த்தை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். அண்மையில் வெளியான அன்பறிவு படத்தில் இவரது வில்லன் கேரக்டர் பெரிதாக பேசப்பட்டது. அலட்டிக் கொள்ளாத நடிப்பில் நம்மை கவர்கிறார்.

பல படங்களில் நாயகியின் தோழியாக வருவார் தன்யா. ராஜா ராணி படத்தில் நயன்தாராவின் காலேஜ் தோழியாக வருவாரே அவரேதான். கதையின் தேவையை உணர்ந்து தாராள நடிப்பை தந்துள்ளார் தன்யா.

இடைவேளையில் தான் அறிமுகமாகிறார். க்ளைமாக்ஸ் வரை தெறிக்கவிட்டுள்ளார் தன்யா. சுடிதாரிலும் செம.. பனியன் போட்ட மாடர்ன் டிரெஸிலும் செம. எங்கேம்மா இருந்தீங்க தன்யா இவ்வளவு நாளா..? கண்களிலே கனிவையும் மிரட்டலையும் கொடுத்திருப்பது வேற லெவல்.

பல படங்களில் போலீஸ் ஆக மிரட்டியிருப்பார் மாரிமுத்து. இதில் அன்பான நேர்மையான பாசமான அப்பாவாக மிரட்டியிருக்கிறார். தன் மகன் விதார்த் வேலைக்கு செல்லும் முதல்நாள்.. பேச சொல்லி கெஞ்சுவது சூப்பர் சார்.

இரண்டுவில்லன்கள் இருந்தாலும் பெரிதாக வேலையில்லை.

போலீசாக வரும் மூனார் ரமேஷ் அசத்தல். இவர் இடம் மாறும் காட்சிகள் படத்தின் ஹைலைட் ட்விஸ்ட். வார்டு பாய் வினோத் சாகரும் சிறப்பு.

மறைந்த நடிகர் நித்தீஷ் வீரா, வெங்கட் உள்ளிட்டோர் சில காட்சிகளில் வந்துள்ளனர். இவர்களின் மரணம் நம் கண்முன்னே வந்து செல்கிறது.

சின்ன சின்ன கேரக்டர்களில் வருபவர்கள் அசத்தல்.. பிச்சைக்காரன் மூர்த்தி, ஆயா அம்மா, பூக்கார பெண், இளநீர் வியாபாரி, பார்வையற்ற சிறுமி ஆகியோர் பாராட்டும்படியான நடிப்பை கொடுத்துள்ளனர்.

டெக்னிஷியன்கள்…

சாம் சிஎஸ் இசையில் பின்னணி இசை சிறப்பு. டூயல் பாடல் ஓகே ரகம். மற்ற பாடல்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை.

ஒளிப்பதிவில் குறையில்லாமல் படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்தம் சந்தோஷம். எடிட்டர் பிரவீன் கேஎல் தன் பணியில் கச்சிதம்.

ஒரு வித்தியாசமான கதையை விருந்தாக்கியுள்ளார் இயக்குனர். நாயகியை இடைவேளையில் காட்டுகிறார். இதற்கே ஒரு தைரியம் வேண்டும்.

கனவு… திரும்ப திரும்ப வரும் காட்சிகள்.. என ஓரிரு காட்சிகள் மாநாடு படத்தை நினைவுப்படுத்துகிறது.

கலைந்த கனவு ஒன்று மீண்டும் மீண்டும் வருமா? எனத் தெரியவில்லை. அதே சமயம் க்ளைமாக்ஸில் நாயகி ஒரேடியாக மனசு மாறுவது நம்பும்படியாக இல்லை.

அதுபோல் செக்யூரிட்டி, டவுட் செந்தில், இளநீர் வியாபாரி, பார்வையிழந்த சிறுமி செய்யும் க்ளைமாக்ஸ் காட்சிகளை இன்னும் நம்பும்படியாக எடுத்திருக்கலாம். ஆனால் க்ளைமாக்ஸ் சமயத்தில் போலீஸ், சிசிடிவி காட்சிகள், ட்விஸ்ட் அனைத்தையும் எதிர்பாராத ஒன்று. வேற லெவல் திக்கிங் சீனிவாசன்.

ஆக.. இந்த கார்பன் நமக்கு ஒரு பொங்கல் விருந்து..

Carbon movie review and rating in tamil

Related Articles