செயல் மிகக்குறைவு… செய் விமர்சனம்

செயல் மிகக்குறைவு… செய் விமர்சனம்

நடிகர்கள்: நகுல், நாசர், பிரகாஷ்ராஜ், தலைவாசல் விஜய், ஞ்சால் முஞ்சால் மற்றும் பலர்.
இயக்கம் – ராஜ்பாபு
இசை – நிக்ஸ் லோபஸ்
ஒளிப்பதிவு – விஜய் உலகநாதன்
தயாரிப்பு – ட்ரிப்பி டர்ட்டில்
பிஆர்ஓ. – யுவராஜ்

கதைக்களம்…

படத்தின் ஆரம்பத்தில் ஒரு மனநல காப்பகம் தீப்பற்றி எரிகிறது. இந்த தீ விபத்துக்கு அமைச்சர் தலைவாசல் விஜய் தான் காரணம் என அனைவரும் குற்றம் சாட்டுகின்றனர். இதனையடுத்து அவர் பதவி விலக வலியுறுத்துகின்றனர்.

அமைச்சரின் உதவியாளரும் பத்திரிகையாளருமான அஸ்கர் அலியிடம் இது தொடர்பாக ஒரு வீடியோ ஆதாரம் இருக்கிறது.

வீடியோ ஆதாரத்தை கைப்பற்றும் முயற்சியில் இருவரையும் வில்லன் கும்பல் கொலை செய்துவிடுகிறது.

இது ஒரு புறம் இருக்க. மற்றொரு சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்டு அலைகிறார் நகுல். விளம்பரங்கள் செய்து தன்னை அந்த ஏரியாவில் பில்டப் ஆசாமியாக காட்டிக் கொள்கிறார்.

இவரின் குறும்பு தனத்தால் இவரை நாயகி ஆஞ்சல் முஞ்சால் காதலிக்க ஆரம்பிக்கிறார். இதனால் ஒழுங்கா வேலை போக சொல்கிறார்.

ஒரு கட்டத்தில் மனநல காப்பக தீ விபத்துக்கும் நகுலுக்கும் ஒரு கனெக்சன் ஏற்படுகிறது. அது என்ன?

அந்த வீடியோ ஆதாரத்தை நகுல் என்ன செய்தார்? அவர் செஞ்சி முடிச்சாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

வழக்கமாக தன்னை துறுதுறு காட்டிக் கொள்ளும் நகுல் இதிலும் அதையே செய்துள்ளார். ஆனால் இதில் கொஞ்சம் ஓவராகவே காட்டிக் கொண்டுள்ளார்.

ஆம்புலன்சில் ஒரு பிணம் இருக்கும்போது அவர் செய்யும் ஓவர் ஆக்டிங் எல்லாம் சகித்துக் கொள்ள முடியவில்லை. எந்தவொரு மனிதனாக இருந்தாலும் அந்த நேரத்தில் அப்படி எல்லாம் நடந்துக் கொள்ள மாட்டார்கள்.

நாசர் படத்தில் என்ன வேலை என்றே தெரியவில்லை. லாரியில் அடிப்பட்டு சாகிறார். அவரின் கேரக்டரை நாசம் செய்து விட்டார் டைரக்டர்.

பிரகாஷ்ராஜ் படத்தில் சின்ன வேடத்தில் வந்துவிட்டார். அவரின் கேரக்டரிலும் வலுவில்லை. பயங்கர பில்டப் இன்ட்ரோ வேற அவருக்கு.

நாயகி ஆஞ்சல் முஞ்சால் நம்மை கவரை முயற்சித்துள்ளார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் ஆரம்பத்தில் பரபரப்பை ஏற்றி, பின்னர் வேகம் குறைத்து, இண்டர்வெல்லில் வேகம் ஏற்றி, பின்னர் வேகம் குறைத்து நம்மை சோதித்து விட்டார் இயக்குனர் ராஜ் பாபு.

உடல் உறுப்பு தானத்தையும் அதன் பின்னணியில் நடைபெறும் கடத்தலையும் அருமையாக சொல்ல முயற்சித்துள்ளார். அதற்காக மனநல காப்பகத்தையும் அவர் பயன்படுத்தியுள்ள விதம் அருமை. ஆனால் அதை திரைக்கதையில் சுவாரஸ்யம் கூட்டி சொல்லிருந்தால் இன்னும் செமயாய் செஞ்சி முடிச்சிருக்கலாம்.

நிக்ஸ் லோபஸின் பின்னணி இசை பேசப்படும் வகையில் உள்ளது. தேவையில்லாத பாடல்கள் நிச்சயம் ரசிகர்களை சோதிக்கும்.

விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு காட்சிகள் ரசிக்கும் ரகமே.

செய்.. செயல் மிகக்குறைவு

Comments are closed.

Related News

தீபாவளி தினத்தில் சர்கார் திரைப்படத்துடன் விஜய்…
...Read More
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வழிக்காட்டலின்…
...Read More