விஜய்க்கு கதை சொல்ல மறுக்கும் முத்தின கத்திரிக்கா நடிகர்..!

விஜய்க்கு கதை சொல்ல மறுக்கும் முத்தின கத்திரிக்கா நடிகர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

What will be the biggest challenge in directing Vijayகாமெடின்னா… அதுக்கு நான் கியராண்டி என சொல்லாமல், தன் படங்கள் மூலம் சொல்ல வைத்தவர் இயக்குனர் சுந்தர் சி.

இவர் நடித்துள்ள முத்தின கத்திரிக்கா படம் இன்று வெளியாகியுள்ளது.

சுந்தர் சியின் இயக்கத்தில் உருவான படங்களில் கவுண்டமணி, விவேக், வடிவேலு, சந்தானம் ஆகியோர் காமெடியின் உச்சத்தை தொட்டனர்.

மேலும், ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இவரது படங்களில் நடித்துள்ளனர்.

ஆனால் இதுவரை விஜய் இவருடன் பணியாற்றவில்லை.

இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது என்னவென்றால், எந்த இயக்குனர் என்றாலும் விஜய் கதை கேட்காமல் நடிக்க மாட்டாராம்.

ஆனால் சுந்தர்.சியோ கதை சொல்வதை விட அதை காட்சியாக கொண்டுவருவதில்தான் கில்லாடியாம்.

எனவேதான் இவர்கள் இணைவதில் தாமதம் ஆகிவருகிறதாம்.

ரோபா சங்கரின் மொபைல் சார்ஜை காலி செய்த ‘கபாலி’..!

ரோபா சங்கரின் மொபைல் சார்ஜை காலி செய்த ‘கபாலி’..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Robo Shankar Tweets About Nerupuda Song Teaserநேற்று (ஜீன் 16) இரவு மிகச்சரியாக 8 மணிக்கு ரஜினியின் கபாலி நெருப்புடா பாடல் டீசர் வெளியானது.

ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்களையும் இது வெகுவாக கவர்ந்துள்ளது.

எனவே வெளியாகி 3 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை இது பெற்றது.

இந்நிலையில் இந்த டீசர் குறித்து பிரபல காமெடி நடிகரான ரோபா சங்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது…

“நெருப்புடா டீசரை நான் பார்க்க ஆரம்பிக்கும் போது, 70% சார்ஜ் என் மொபைல் போனில் இருந்தது.

ஆனால் தற்போது சார்ஜ் முடியும் தருவாயில் உள்ளது. அத்தனை முறை பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

இந்த டீசருக்கு அடிமையாகி விட்டேன். தலைவா” என்று தெரிவித்துள்ளார்.

கபாலி நெருப்புடா பாடல் டீசர்… விமர்சனம்.!

கபாலி நெருப்புடா பாடல் டீசர்… விமர்சனம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali NeruppuDa Song Teaser Reviewரஜினிகாந்தின் கபாலி படத்தின் டீசர் வெளியாகி உலகளவில் பெரும் சாதனை படைத்துள்ளது.

இது வெளியாகி 45 நாட்களை கடந்த நிலையில், இப்படத்தின் மற்றொரு பாடல் டீசர் நேற்று இரவு வெளியானது.

இந்த டீசர் 35 நொடிகளை கொண்டுள்ளது.

முதல் டீசரில் ரஜினி மட்டுமே பிரதானமாக இருந்தார். இடையில் கிஷோர் மற்றும் ராதிகா ஆப்தே தென்பட்டனர்.

ஆனால் இந்த டீசரில் படத்தின் மெயின் வில்லனான தைவான் நடிகர் வின்ஸ்டன் சவோ இம்பெற்றுள்ளார்.

இவருடன் தினேஷ், கலையரசன், தன்ஷிகா, கிஷோர், ராதிகா ஆப்தே, ஜான்விஜய் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

ஆனால் இதுவரை ரித்விகா இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நெருப்புடா டீசர் நிஜமான நெருப்பு போலவே பரவி வருகிறது.

இது வெளியாகி 3 மணி நேரத்தில் இந்த டீசரை மட்டும் 1 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

இதில் மூன்று விதமான கெட்டப்புகளில் தோன்றியிருக்கிறார் ரஜினி.

முழுக்க நரைத்த தாடி மற்றும் தலை முடியுடன் ஒரு கெட்டப்.

தாடி இல்லாமல் க்ளீன் செய்த முகத்துடன் கொஞ்சம் நரைத்த மீசை மற்றும் தலைமுடியுடன் ஒரு கெட்டப்.

மற்றும் இளமைகால ரஜினி என படு அசத்தலாக உள்ளார்.

பயமா…? என கேட்டபடியே ரஜினியின் காந்த சிரிப்புடன் இந்த டீசர் ஆரம்பம் ஆகிறது.

அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக இந்த டீசர் செல்கிறது.

ரஜினியை சுற்றி பாதுகாவலர்கள் போல் ஜான்விஜய், தினேஷ், கலையரசன் வருகின்றனர்.

தன்ஷிகா வித்தியாசமான டாம்பாய் கெட்டப்பில் தோன்றி அசத்தியிருக்கிறார்.

மலேசியாவில் நடக்கும் ஊர்வல போராட்டக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

கபாலி என்ற மிகப்பெரிய டானிடம் மண்டியிட்டு ஒருவர் கதறி அழுவதும் உள்ளது.

ஒரு ஆக்சிடெண்ட் மற்றும் ஒரு அதிரடி டான்ஸ் காட்சியும் உள்ளது.

இடையில் வரும் “நான் வந்துட்டேன்னு சொல்லு… திரும்ப வந்துடேன்னு…” என்ற பன்ச் டயலாக் படு அசத்தல்.

இறுதியாக கால்மேல் கால் போட்டு அமரும் ரஜினிக்கு நிகராக இன்று வரை எவரும் இல்லை எனலாம். அப்படி ஒரு எனர்ஜி தற்போதும் அவரிடம் உள்ளது.

ஆக மொத்தம், இந்த டீசரில், ஆக்ஷன், பாட்டு, ஃபயர் என எதற்கும் பஞ்சமில்லை.

யுவன் தயாரிக்கும் படத்தில் மீண்டும் தனி ஒருவன் ஜோடி..!

யுவன் தயாரிக்கும் படத்தில் மீண்டும் தனி ஒருவன் ஜோடி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jayam Ravi Nayanthara to Get their Cheques from Yuvanபிரபல இசையமைப்பாளரும் பாடகருமான யுவன் சங்கர் ராஜா, முதன்முறையாக படத் தயாரிப்பில் ஈடுபடவிருக்கிறார்.

இவர் தயாரிக்கவுள்ள புதுப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார்.

இவர்கள் இருவரும் இதற்குமுன் இணைந்த தனி ஒருவன் படம் பெரியளவில் பேசப்பட்டது.

எனவே இந்த ஜோடி மீண்டும் இணைவதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

வரலாற்று சம்பவங்களை பின்னணியாக கொண்டு உருவாகவுள்ள இப்படத்தை நெல்சன் இயக்குகிறார்.

மற்ற கலைஞர்கள் ஒப்பந்தம் ஆனவுடன் இப்படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியை கைப்பற்றிய மாகாபா ஆனந்த்..!

சிவகார்த்திகேயன் ஜோடியை கைப்பற்றிய மாகாபா ஆனந்த்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suza Kumar is now joins with Ma Ka Pa Anandh!விஜய் டிவியின் தொகுப்பாளர்களில் பிரபலமான மாகாபா ஆனந்த், தற்போது சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

எனவே தற்போது தனது வழியை ரஜினி வழியாக மாற்றிக் கொண்டு ‘மாணிக்’ என்று பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார்.

இதில் முழுக்க முழுக்க பாட்ஷா பட ஸ்டைல் ரஜினியாக மாறியிருக்கிறார்.

இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இதில் நாயகியாக சிவகார்த்திகேயனின் ‘எதிர்நீச்சல்’ படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்த சூசாகுமார் நடிக்கிறார்.

அறிமுக இயக்குநர் மார்ட்டின் இயக்கவுள்ள இப்படத்திற்கு பழனிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

தரண்குமார் இசையமைக்க இப்படத்தை மோஹிதா ஃபிலிம்ஸ் சார்பில் எம்.சுப்பிரமணியம், வினோத் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்ற விஜய் ரசிகைகள்..!

பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்ற விஜய் ரசிகைகள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kerala Vijay Female Fans Celebrate his Birthdayவருகிற ஜீன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாள் வருகிறது.

அன்றைய தினம் விஜய் சென்னையில் இல்லாவிட்டாலும் அவரது ரசிகர்கள் தற்போதே கொண்டாட்டங்களை ஆரம்பித்து விட்டனர்.

தற்போது தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவிலும் இந்த கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கிவிட்டன.

இதில் ஒரு படி மேலே சென்ற விஜய்யின் தீவிர ரசிகைகள் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இதற்காக அனைத்து வகை ரத்த பிரிவுகளையும் சேகரித்து இருக்கிறார்களாம்.

ஒரு நடிகரின் பிறந்தநாள் விழாவை பொழுதுபோக்காக எண்ணாமல், மனிதாபிமான எண்ணத்துடன் கொண்டாட உள்ள இந்த ரசிகைகளை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

More Articles
Follows