கலாபவன் மணி மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கோர்ட் உத்தரவு

High Court Orders CBI Probe into Kalabhavan Mani Death issueமலையாள சினிமாவை சேர்ந்த கலாபவன் பணி 200-க்கும் மேற்பட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் சாலக்குடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 2 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு மார்ச் 6-ம் தேதி உயிரிழந்தார்.

இவரது மரணம் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியது. எனவே கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இது தொடர்பான மருத்துவ அறிக்கையில், அவர் குடித்த மதுவில் குளோரோபைரிபாஸ் என்ற பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருப்பதாக அறிக்கை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து கலாபவன் மணியின் உறவினர்கள் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வலியுறுத்தினர்.

ஆனால் அப்போது இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு இதை ஏற்காமல், மாநில போலீசாரே தொடர்ந்து விசாரணை நடத்துவார்கள் என்று தெரிவி்த்தது.

இந்நிலையில் தற்போது ஆட்சியில் உள்ள, பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் அரசு, கலாபவன் மணியின் உறவினர்களின் கோரிக்கையை ஏற்றது.

இதனையடுத்து, கலாபவன் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு கேரள அரசு பரிந்துரை செய்யவே, சிபிஐ விசாரிக்க கேரள ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

High Court Orders CBI Probe into Kalabhavan Mani Death issue

Overall Rating : Not available

Related News

இயக்குனராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சுந்தர்…
...Read More

Latest Post