அஜித்-சிம்பு பட இயக்குனருடன் இணையும் சுந்தர்.சி-யோகிபாபு

அஜித்-சிம்பு பட இயக்குனருடன் இணையும் சுந்தர்.சி-யோகிபாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sundarc yogi babuசுந்தர்.சி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘முத்தின கத்திரிக்கா’ படத்தில் நடித்த பிறகு, இயக்கத்தில் கவனம் செலுத்தி வந்தார்.

தற்போது வி.இசட்.துரையின் இயக்கத்தில் ஒரு திரில்லர் படத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

அஜித்தின் முகவரி, சிம்புவின் தொட்டி ஜெயா ஆகிய படங்களை இயக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது படங்களில் விவேக், வடிவேலு, சந்தானம், காமெடி நடிகர்களுடன் களம் இறங்கும் சுந்தர்.சி இந்தப் படத்தில் யோகிபாபுவை இணைத்துக் கொண்டுள்ளாராம்.

அருள்நிதி படங்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராகும் அரவிந்த் சிங்

அருள்நிதி படங்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராகும் அரவிந்த் சிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arvind singhகரு.பழனியப்பன் இயக்கத்தில் `புகழேந்தி எனும் நான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் அருள்நிதி.

அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் அருள்நிதி ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார்.

இந்த படத்தை முடித்த பிறகு அருள்நிதி அடுத்ததாக பரத் நீலகண்டன் என்ற புதுமுக இயக்குநருடன் இணையவிருப்பதாக நம் தளத்தில் செய்தி பதிவிட்டு இருந்தோம்.

எஸ்.பி.சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்க இருக்கிறார்.

இந்த நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளராக அரவிந்த் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

இவர் டிமான்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் அருள்நிதியுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓவிய கல்லூரி காதலைப் பற்றிய படம் *பார்த்திபன் காதல்*

ஓவிய கல்லூரி காதலைப் பற்றிய படம் *பார்த்திபன் காதல்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

parthiban kadhalஎஸ் சினிமா கம்பெனி என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ பார்த்திபன் காதல் “

இந்த படத்தில் யோகி கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

படம் பற்றி இயக்குனர் வள்ளிமுத்து..

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி புதிய களத்தில் இளமை கொஞ்சும் காதல் கதையாக உருவாக இருக்கிறது. அறிமுக நாயகன் யோகி ஓவிய கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இளம் கதாநாயகி வர்ஷிதா கிராமத்து கல்லூரி மாணவியாக நடிக்கிறார்.

சமீப கலாமாக தமிழ் சினிமாவில் காமெடிப்பேய் படங்களும், ஆக்ஷன் படங்களும் வந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் “ பார்த்திபன் காதல் “ ஒரு முழுமையான காதல் கதையாக உருவாகிறது.

கும்பகோணம், ராஜபாளையம், தென்காசி போன்ற இடங்களில் விரைவில் படபிடிப்பு நடக்க இருக்கிறது என்றார் இயக்குனர் வள்ளிமுத்து.

ஒளிப்பதிவு – தங்கையா மாடசாமி. DF Tech

இசை – பில்லா

பாடல்கள் – யுகபாரதி

எடிட்டிங் – ஸ்ரீகாந்த் NB

கலை – S.M.சரவணன்

ஸ்டன்ட் – மகேஷ்

நடனம் – விஜிசதீஷ்

புகைப்பட கலை – ஜோஷ்வா

தயாரிப்பு மேற்பார்வை – ராஜசேகர்

மக்கள் தொடர்பு – மணவை புவன்

திரைக்கதை, வசனம் – S.குமரேசன் – ஜோ ஜார்ஜ்

கதை, இயக்கம் – வள்ளிமுத்து ( இவர் ட்ரிபிள் வி ரெக்கார்ட்ஸ் தயாரித்த என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய P.ராஜபாண்டியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் )

அச்சமின்றி பட இயக்குனருடன் இணையும் அரவிந்த்சாமி

அச்சமின்றி பட இயக்குனருடன் இணையும் அரவிந்த்சாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arvind swamiஅரவிந்த் சாமி நடிப்பில் `சதுரங்க வேட்டை-2′, `நரகாசூரன்’ மற்றும் `செக்கச் சிவந்த வானம்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ளன.

தற்போது செல்வா இயக்கத்தில் `வணங்காமுடி’ படத்திலும், மாமங்கம் என்ற மலையாள படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இதன்பின்னர் இமயவர்மன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகி இருக்கிறது.

`என்னமோ நடக்குது’, `அச்சமின்றி’ போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அரவிந்த்சாமி.

இவருக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

பரத் நடிக்கும் *காளிதாஸ்* பட டீசர் வெளியீட்டு தேதி

பரத் நடிக்கும் *காளிதாஸ்* பட டீசர் வெளியீட்டு தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bharathலீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’.

பரத் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தில் நடிகர் பரத் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

நாளைய இயக்குநர் சீசன் – 3 இல் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை முன்னேறிய ஸ்ரீசெந்தில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

இதன் இசை உரிமையை டிரெண்ட் மியூசிக் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

வருகிற ஜூலை 6-ஆம் தேதி இப்பட டீசர் வெளியாகவுள்ளது.

சட்டமன்றத்திற்கு சென்ற நடிகர் உதயநிதி.; அடுத்த திட்டம் என்னவோ.?

சட்டமன்றத்திற்கு சென்ற நடிகர் உதயநிதி.; அடுத்த திட்டம் என்னவோ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Udhayanidhi stalin visits legislative assembly todayஅரசியல் குடும்பத்தில் இருந்து வந்தாலும் அதில் ஈடுபடாது திரைத்துறையில் தயாரிப்பாளர் மற்றும், நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின்.

ஆனால் சமீபகாலமாக திமுக மேடைகளில் தலைகாட்டி வருகிறார்.

அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினால் பங்கேற்க முடியாத சில நிகழ்ச்சிகள் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறத் துவங்கியுள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக எம்எல்ஏ-வும், உதயநிதியின் நண்பருமான அன்பில் மகேஷ் இன்று பேசவிருந்தார்.

இதைக் காண்பதற்காக உதயநிதி ஸ்டாலின் சட்டப் பேரவைக்கு வந்தார். பின்னர், அவர் பார்வையாளர்கள் மத்தியில் அவர் அமர்ந்தார்.

இதையடுத்து பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய அன்பில் மகேஷ், எதிர்வரிசையில் அமர்ந்திருக்கும் அமைச்சர்களில் எனக்கு மிகவும் பிடித்தது பாலகிருஷ்ணா ரெட்டியும், பாஸ்கரனும் தான் என்று கூறினார்.

அவர்களில் ஒருவர் சிரித்துக் கொண்டே இருப்பார், ஒருவர் மிக அமைதியாக இருப்பார். இதே நிலையை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனக் கூறினார்.

இதற்கு பதிலளித்த தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் அவர்கள் பாரம்பரிய அரசியல் குடும்பத்திலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராக வந்திருக்கும் மகேஷ் வருவதும் தெரியாமல், போவதும் தெரியாமல் அமைதியாக வந்து செல்கிறார்.

அதுபோல, அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அதிகம் பேசாமல் வந்து செல்ல வேண்டும் எனக் கூறினார்.
இதுபோன்ற நிகழ்வுகளை கண்டு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பின்னர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Actor Udhayanidhi stalin visits legislative assembly today

More Articles
Follows