தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘சில நொடிகளில்’.
இந்த படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் வினய் பரத்வாஜ்…
“நான் இந்தியாவை விட்டு சென்று 18 வருடங்கள் ஆகிவிட்டது. சிங்கப்பூரில் செட்டில்ட். நல்ல பேங்க்கிங் வேலை இருந்தது. எனக்குப் பிரியமான ஒருவரை கேன்சரால் இழந்து விட்டேன். அதனால், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த யூடியூப்பில் வீடியோக்கள் போட ஆரம்பித்தேன்.
சென்னையிலும் இது தொடர்பாக பல நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன். நல்ல வரவேற்பு இருந்தது. சிங்கப்பூரில் ஸ்டார் விஜய், கலர்ஸ் தமிழுக்காக நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கினேன். அதன் பிறகு குறும்படம் இயக்குவதற்கான வாய்ப்பும் கிடைத்தது.
எனக்குள் இருந்த இயக்குநரை அப்போதுதான் உணர்ந்தேன். மீடியா குளோபல் ஒன் நிறுவனம் கோவிட் சமயத்தில் எனக்கு கால் செய்து லண்டனில் செய்வது போன்ற ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள் எனக் கேட்டார்கள். வழக்கமான த்ரில்லர் கதைகளைப் போல இல்லாமல் வித்தியாசமான ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.
த்ரில்லர், மிஸ்ட்ரி, காதல் என எல்லாமே இதில் உண்டு. இசை எனக்குப் பிடிக்கும். அதனால்தான் ஐந்து இசையமைப்பாளர்கள் இந்தப் படத்தில் உள்ளனர். தர்ஷாவின் பாடல் இன்று வெளியாகியுள்ளது. அவர் மிகவும் திறமையானவர்.
வித்தியாசமான யாஷிகாவை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள். கீதா மலேசியாவில் பாப்புலரான ஆர்.ஜே. சிறந்த தயாரிப்பாளர் என்றாலும், அவரை நடிகராக எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் படத்தில் ஏற்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்.
படத்தில் வித்தியாசமான கீதாவைப் பார்ப்பீர்கள். படத்தை எடுப்பதை விட அதற்கு நல்ல புரோமோஷன் செய்து டிஸ்டிரிபியூட் செய்வதுதான் பெரிய விஷயம். அது இந்தப் படத்திற்கு சிறப்பாகவே நடந்துள்ளது.
மோகன் ஜி படங்களுக்கு நான் பெரிய ரசிகன். எங்கள் படம் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். செலிபிரிட்டி நிகழ்ச்சியின் ஹோஸ்ட்டாக இதற்கு முன்பு பல பிரபலங்களை சந்தித்து இருக்கிறேன்.
அதில் இருந்து சொல்கிறேன். ரிச்சார்ட் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். சிறந்த மனிதர். அவரை இந்தப் படத்தில் வித்தியாசமான நடிகராகப் பார்ப்பீர்கள். இது என்னுடைய முதல் தமிழ்ப் படம். இந்தப் படம் திரையரங்குகளில் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது. உங்கள் அன்பும், ஆதரவும் வேண்டும்”.
நடிகர் ரிச்சார்ட் ரிஷி பேசியதாவது…
“படத்தில் ஐந்து அற்புதமான பாடல்களைக் கொடுத்த இசையமைப்பாளர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் நிறைய புது விஷயங்களைச் செய்திருக்கிறோம். உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். கண்டிப்பாக தியேட்டரில் இந்தப் படத்தைப் பாருங்கள். சின்னப் படங்கள் எல்லாம் நிறைய ஜெயித்திருக்கிறது. பெரிய படங்கள் எல்லாம் நிறைய தோற்றிருக்கிறது. அதனால், படங்களுக்கு ஆதரவு கொடுங்கள்” என்றார்.
Actor Richard talks about Big movies flop and Small movies hit