தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ராஜ் வரதனாக முன்னணி கதாபாத்திரத்திலும், புன்னகை பூ கீதா மேதா வரதனாகவும், யாஷிகா ஆனந்த் மாயா பிள்ளை என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட இந்தப் படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் பாடகியும் இந்தப் படத்தின் இசையமைப்பாளருமான தர்ஷனா பேசியதாவது..
, “பல்லேலக்கா பாடல் மூலம் என்னுடைய சினிமா பயணம் ஆரம்பித்தது. அதன் பிறகு, ‘கருப்பு பேரழகா’, ‘ஆட்டக்காரா’ என கடந்த 17 வருடங்களாக பாடகியாக மட்டுமே இருந்துள்ளேன். இசையமைப்பாளராக ஆவேன் என நினைத்துக் கூட பார்த்ததில்லை. அதை ‘சில நொடிகளில்’ படம் நிறைவேற்றியுள்ளது.
அந்த வாய்ப்புக் கொடுத்த வினய்க்கு நன்றி. கணவன், மனைவிக்கு இடையே ஒருவருக்கு மட்டும்தான் காதல் இருக்கிறது. அந்த எமோஷன் வேண்டும் என்று வினய் சொன்னார். இரண்டு பாடல்கள் செய்து கொடுத்தேன். அதில் தொடுவானம் தேர்ந்தெடுத்தார். உங்களுக்கும் அந்தப் பாடல் பிடிக்கும் என நம்புகிறேன்”.
நடிகை யாஷிகா ஆனந்த்…
“படத்திற்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி. நிஜத்தில் நான் எப்படி மாடலிங் செய்கிறேனோ அப்படி தான் இந்தப் படத்திலும் மாடலாக நடித்திருக்கிறேன்.
‘துருவங்கள் பதினாறு’ படத்தில் இருந்துதான் என் பயணம் ஆரம்பித்தது. நான் மிகப்பெரிய த்ரில்லர் ஃபேன். அதனால், இந்தப் படமும் பிடித்து நடித்தேன்.
நான் தல அஜித் சாரின் மிகப்பெரிய ஃபேன். ரிச்சார்ட் சாரிடம் பேசும்போது அஜித் சாருக்கு நான் கொஞ்சம் நெருக்கம் ஆகியுள்ளேன் என்று நினைத்து சந்தோஷப்படுவேன். பாடல்களும் இசையும் எனக்குப் பிடித்துள்ளது. நீங்கள் திரையரங்குகளில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
By Richard i became close to Ajith says Yashika Anand