வரலாற்றில் முதன்முறையாக போட்டோ சூட் நடத்தி விவாகரத்தை கொண்டாடிய நடிகை ஷாலினி

வரலாற்றில் முதன்முறையாக போட்டோ சூட் நடத்தி விவாகரத்தை கொண்டாடிய நடிகை ஷாலினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘முள்ளும் மலரும்’. முனீஷ்ராஜ், தர்ஷா குப்தா நடித்த இந்த சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஷாலினி.

இவர் சிறந்த டான்ஸ்ரும் கூட. மேலும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டுள்ளார்.

சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியில் தன் மகள் ரியாவுடன் பங்கேற்றார்.

நடிகை ஷாலினிக்கு ஏற்கனவே ஒரு திருமணம் முடிந்திருக்கிறது. ஆனால் அந்த இல்லற வாழ்க்கை சில மாதங்கள் கூட நீடிக்க வில்லையாம்.

அதன்பின்னர் ஒரு ரசிகராக அறிமுகமான ரியாஸ் என்பவருடன் நடிகை ஷாலினிக்கு பழக்கம் ஏற்பட்டது. ரியாஸ் ஏற்கெனவே விவாகரத்து ஆனவராம்.

ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க தொடங்கி திருமணமும் செய்து கொண்டனர். ஆனாலும் சில மாதங்களிலேயே இவர்களுக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டுள்ளது.

மேலும் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அவருக்கு மற்ற பெண்களுடன் உறவு இருப்பதாகவும் ஷாலினி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இவர் விவகாரத்து முடிவுக்கு வந்துவிட்டார்.

இது போன்ற விவகாரத்து சம்பவங்களை சப்தமில்லாமல் தான் பலரும் செய்வார்கள்.

ஆனால் முதன்முறையாக ஷாலினி வித்தியாசமாக தன் விவகாரத்தை பகிரங்கமாக போட்டோ ஷூட் நடத்தி அறிவித்துள்ளார்.

தன்னுடைய கணவர் படத்தை கிழித்து போடுவது போலவும் கையில் சரக்கு பாட்டில் வைத்திருப்பது போலவும் பல புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையதளத்தை ஆக்கிரமித்துள்ளன. இவர் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து குறித்து ஷாலினி கூறியதாவது…

“தவறான திருமணத்தை விட்டு விலகுவதும் நல்லது தான். உங்களது மகிழ்ச்சி தான் முக்கியம். உங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்துக்கு தேவையான மாற்றத்தை செய்யுங்கள்.

விவாகரத்து ஒரு தோல்வி அல்ல. இது உங்களுக்கு ஒரு திருப்புமுனை. உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களுக்கு வழி வகுத்தது. திருமணத்தை விட்டு விலகி தனிமையில் நிற்பதற்கு அதிக தைரியம் தேவை.

அதனால் வெளியில் இருக்கும் துணிச்சலான பெண்கள் அனைவருக்கும் இதை அர்ப்பணிக்கிறேன்” என்று பதிவிட்டு இருக்கிறார் நடிகை ஷாலினி.

வைரலாகும் ‘விவாகரத்து’ போட்டோ ஷுட்! | நடிகை Shalini செய்த காரியம் | serial actress shalini
https://www.youtube.com/shorts/oMmNvTqnNPU

Actress Shalini celebrated the divorce by holding a photo shoot

பர்ஸ்ட் பைக் டூர்.. நெக்ஸ்ட் சூட்டிங்.; அஜித்தின் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் அப்டேட்

பர்ஸ்ட் பைக் டூர்.. நெக்ஸ்ட் சூட்டிங்.; அஜித்தின் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தில் நடிகர் அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது.

லைக்கா தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘விடாமுயற்சி’ என்று பெயரிட்டு டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தனர்.

மகிழ்திருமேனி இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

தற்போது நடிகர் அஜித் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

தற்போது நேபாளம் மற்றும் பூடான் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணங்களை முடித்துவிட்டு அவர் மே மாதம் இறுதி வாரத்தில் சென்னை திரும்ப உள்ளதாகவும் அதன் பின்னர் தான் படப்பிடிப்பு துவங்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை பான் இந்தியா படமாக உருவாக்க லைக்கா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மேலும் முக்கியமான காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த 2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Ajith’s ‘vidaamuyarchi’ next shooting Update

‘ஜெய்பீம்’ இயக்குனரின் அடுத்த படத்தில் சூர்யாவுக்கு நோ சொல்லிட்டாரா ரஜினி.?!

‘ஜெய்பீம்’ இயக்குனரின் அடுத்த படத்தில் சூர்யாவுக்கு நோ சொல்லிட்டாரா ரஜினி.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். நெல்சன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதே நேரத்தில் தனது மகள் ஐஸ்வர்யாவுக்காக ‘லால் சலாம்’ என்ற படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனமே அவரின் அடுத்த படத்தையும் தயாரிக்கிறது.

அந்த படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 170’ படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. இந்தப் படத்தை ‘ஜெய் பீம்’ பட புகழ் ஞானவேல் இயக்க உள்ளார்.

இந்த படத்தில் ரஜினியுடன் ஒரு முக்கியமான கெஸ்ட் ரோலில் சூர்யா நடிப்பார் என சில தகவல்கள் வந்தன.

ஆனால் அந்த கெஸ்ட் ரோலில் சூர்யா வேண்டாம் என ரஜினி மறுத்து விட்டதாக தற்போது புதிய தகவல்கள் வந்துள்ளன.

ஏற்கனவே ‘ஜெயிலர்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என கூறப்பட்டு பின்னர் அந்த தகவல் முற்றிலும் பொய்யானது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார் என தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் நடித்து வருவதும்.. ‘லால் சலாம்’ படத்தில் விஷ்ணு விஷால் உடன் ரஜினியே ஒரு கெஸ்ட் ரோலியில் தான் நடித்து வருகிறார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

எனவே ‘தலைவர் 170’ படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் வரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Rajini refused to want Suriya in a guest role for ‘Thalaivar 170’

ஆந்திராவில் ரஜினிக்கு ஆதரவும் எதிர்ப்பும்.; ரோஜா பேச்சுக்கு சந்திரபாபு நாயுடு கண்டனம்

ஆந்திராவில் ரஜினிக்கு ஆதரவும் எதிர்ப்பும்.; ரோஜா பேச்சுக்கு சந்திரபாபு நாயுடு கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னாள் முதல்வரும் நடிகருமான என்டி ராமராவ் அவர்களின் நூறாண்டு விழா ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரஜினிகாந்த் தெலுங்கில் பேசினார்.

அவர் பேசும்போது என்டி ராமராவ் & அவரது மகன் நடிகர் பாலையா ஆகியோரை வாழ்த்து பேசினார்.

அதன் பின்னர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை குறிப்பிட்டு பேசும்போது.. “அவரின் தொலைநோக்கு பார்வையால் தான் இன்று ஹைதராபாத் ஹைடெக் சிட்டியாக மாறியுள்ளது என்றும் நியூயார்க் நகரம் போல வளர்ச்சி அடைந்துள்ளது” எனவும் குறிப்பிட்டு பேசியிருந்தார்.

இந்த பேச்சுக்கு அமைச்சரும் நடிகையுமான ரோஜா கண்டனம் தெரிவித்து இருந்தார்.

“ஒரு நடிகராக ரஜினிகாந்த் மீது பெரும் மரியாதை உள்ளது. ஆனால் அவருக்கு ஆந்திர அரசியல் குறித்து எதுவும் தெரியவில்லை.” என்றார்.

மேலும் சந்திரபாபு நாயுடு தேர்தல் தோல்வி குறித்தும் கிண்டல் அடித்திருந்தார் ரோஜா.

ஒரு பக்கம் ரஜினிக்கு ஆதரவாகவும் மறுபக்கம் எதிர்ப்பும் ஆந்திராவில் கிளம்பியது. கடந்த ஓரிரு நாட்களாகவே ஆந்திர மக்கள் ரஜினி பக்கம் என்றும் ஆந்திரா மக்களிடம் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் எனும் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங் ஆனது.

இந்த நிலையில் ரோஜாவின் கருத்துக்கு சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்..

“புகழ்பெற்ற நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு எதிராக இழிவான கருத்துக்களைத் தெரிவித்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

நேர்மை, ஒழுக்கம், மனிதநேயத்தின் உருவமாக திகழ்பவர் ரஜினிகாந்த். நல்லுள்ளம் படைத்த அவர் நாடு கடந்து உலக அளவில் எல்லோராலும் நேசிக்கப்படுகிறார்.

அவர் மீது கட்டவிழ்க்கப்பட்ட வக்கிரமான ஒய்எஸ்ஆர் கும்பலின் இந்த திட்டமிட்ட தாக்குதல், அவர்கள் மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்து வருவதைக் காட்டுகிறது. மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என சந்திரபாபு நாயுடு பதிவிட்டுள்ளார்.

மேலும் ஆந்திரா மக்கள் ரஜினியுடன் என்ற வார்த்தையை அவர் குறிப்பிட்டுள்ளார்.

Support and opposition to Rajini in AP Chandrababu Naidu condemns Roja speech

ட்விட்டரில் இருந்து சிவகார்த்திகேயன் விலக இதுதான் காரணமா.?

ட்விட்டரில் இருந்து சிவகார்த்திகேயன் விலக இதுதான் காரணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தன் திறமையால் உயர்ந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். தன்னுடைய பட தொடர்பாகவும் மற்றும் பண்டிகை காலங்களில் வாழ்த்துக்களையும் பதிவிடுவார்.

சிவகார்த்திகேயனுக்கு ட்விட்டரில் ஏழு மில்லியன் பாலோயர்கள் இருப்பதால் நிறைய பட இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவரிடம் தங்கள் பட ட்ரைய்லர் போஸ்டர்களை வெளியிட சொல்லி வற்புறுத்தி வந்தனர்.

அவரும் மற்ற நடிகர்களின் படங்களின் டிரைலர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்டவைகளையும் பதிவிட்டு மற்ற படங்களுக்கு விளம்பரம் தேடி தருவார்.

இந்த அன்புத் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி வந்துள்ளது.

மேலும் ஒருவருக்கு பதிவிட்டு ஒருவருக்கு மறுக்கும்போது ஏற்படும் தர்ம சங்கடங்களை தவிர்க்கவே திடீரென சிவகார்த்திகேயன் ட்விட்டரில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

Reason behind Sivakarthikeyan quits Twitter

கிரிக்கெட்டர் வீராட் கோலி – நடிகை அனுஷ்கா ஷர்மா வீட்ல விசேஷங்க..

கிரிக்கெட்டர் வீராட் கோலி – நடிகை அனுஷ்கா ஷர்மா வீட்ல விசேஷங்க..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா சர்மா.

கடந்த 2017 ஆம் ஆண்டு விராட் கோலி – அனுஷ்கா சர்மா திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதிக்கு வாமிகா என்ற மகள் கடந்த 2021 ஆம் ஆண்டு பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அனுஷ்கா சர்மா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

அந்த வகையில், அனுஷ்கா சர்மாவின் கணவரும் கிரிக்கெட் வீரருமான விராட் கோலி தனது மனைவியின் க்யூட்டான புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், அனுஷ்கா ஷர்மாவுக்கு, பாலிவுட் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

virat kohli wishes his wife anushka sharma birthday celebration

More Articles
Follows