தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘ராஜா சின்ன ரோஜா’ படத்தில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷாலினி.
விஜய்யுடன் ‘காதலுக்கு மரியாதை’, மாதவனுடன் ‘அலைபாயுதே’, பிரசாந்துடன் ‘பிரியாத வரம் வேண்டும்’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தார்.
சரண் இயக்கிய ‘அமர்க்களம்’ படத்தில் அஜித் & ஷாலினி இணைந்து நடித்தனர்.
அப்போதே ஷாலினியிடம் தன் காதலை வெளிப்படுத்தினார் அஜித்.
இதன் பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் காதலித்து 2000 ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு ஷாலினி திரைப்படங்களில் நடிக்கவில்லை.
தற்போது இவர்களுக்கு ஒரு மகள் (அனோஷ்கா) ஒரு மகன் (ஆத்விக்) உள்ளனர்.
ஷாலினியின் தங்கை ஷாம்லியும் நடிகை ஆவார். இவர் ‘அஞ்சலி’ படத்தில் குழந்தையாக நடித்தவர்
இந்த நிலையில் அஜித் & ஷாலினி இருக்கும் ரொமான்டிக்கான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் ஷாம்லி.
இது இவர்களின் குடும்ப நிகழ்ச்சியில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. அஜித் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
Ajith and Shalini’s latest romantic photo goes viral