‘நஸ்ரியா நடிக்க போய்ட்டா நான் வீட்டை பாத்துப்பேன்..’ பஹத்பாசில்

‘நஸ்ரியா நடிக்க போய்ட்டா நான் வீட்டை பாத்துப்பேன்..’ பஹத்பாசில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Fahadh faasil and nazriyaதமிழில் நேரம், ராஜா ராணி, திருமணம் என்னும் நிக்காஹ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நஸ்ரியா.

பிரபலமாகி கொண்டிருக்கும்போதே திடீரென நடிப்பதை நிறுத்திவிட்டு நடிகர் பஹத்பாசிலை 2014ஆம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டார்.

திருமணத்திற்கு பின் நடிக்காமல் இருந்த அவரை, ரசிகர்கள் தினம் தினம் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

இதுகுறித்து பஹத்பாசில் கூறும்போது…

நான் அவரை நடிக்க வேண்டாம் என கட்டாயப்படுத்தவில்லை. நல்ல ரோல் வந்தால் நடிக்க தயாராக இருக்கிறார்.

நாங்கள் இணைந்து நடிக்கும் எண்ணமில்லை. ஒருவேளை அவர் மீண்டும் நடிக்க தொடங்கி, பிஸியாகிவிட்டால் நான் வீட்டை பார்த்துக் கொள்வேன்.”
என்றார்.

தனுஷ்-சௌந்தர்யாவுக்கு ஷாக் கொடுத்த ரஜினிகாந்த்

தனுஷ்-சௌந்தர்யாவுக்கு ஷாக் கொடுத்த ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vip2 shootingவேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ்-அமலா பால் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படம் மாபெரும் வெற்றி பெற்றது.

எனவே இப்படத்தின் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினி இயக்கி வருகிறார்.

இதில் தனுஷ் உடன் அமலாபால், சமுத்திரக்கனி நடித்து வருகின்றனர்.

ஷான் ரோல்டன் இசையைமைக்க, கலைப்புலி தானு உடன் இணைந்து தனுஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டுக்கு ரஜினி திடீர் விசிட் அடித்தாராம்.

தன் இளைய மகள் இயக்கும் படம் எப்படி? வளர்ந்து வருகிறது என்பதை பார்க்க ரஜினி சென்றதாக சொல்லப்படுகிறது.

ரஜினியின் ‘கபாலி’ சாதனையை முறியடித்த மம்மூட்டி

ரஜினியின் ‘கபாலி’ சாதனையை முறியடித்த மம்மூட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Mammootyரஜினிகாந்த் நடித்த கபாலி படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பு இருந்தது.

இப்படத்தின் கேரள உரிமையை பெற்ற மோகன்லால் 306 திரையரங்குளில் இப்படத்தை வெளியிட்டார்.

இப்படம் முதல் நாளில் மட்டும் கிட்டதட்ட 1000 காட்சிகள் திரையிடப்பட்டு கேரளாவில் ரூ. 4.20 கோடி வசூலை ஈட்டியது.

இந்நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன்பு, மம்மூட்டி, ஆர்யா, ஸ்நேகா, ஷாம், மியா ஜார்ஜ் நடிப்பில் உருவான தி கிரேட் பாதர் படம் வெளியானது.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இப்படத்திற்கு வெறும் 210 தியேட்டர்களே ஒதுக்கப்பட்டு முதல்நாளில் 958 காட்சிகளே கிடைத்ததாம்.

இருந்தபோதிலும் இந்த காட்சிகள் மூலம் ரூ. 4.32 கோடி வசூலை பெற்றுள்ளதாம்.

குறைந்த காட்சிகளே கிடைத்தபோதும், கேரளாவில் கபாலியின் முதல் நாள் வசூலை தி கேரட் பாதர் படம் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The Great Father movie beaten Kabali collection in Kerala

ஜிவி பிரகாஷ் படத்தில் பூனம் பஜ்வா-பார்த்திபன்

ஜிவி பிரகாஷ் படத்தில் பூனம் பஜ்வா-பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Parthiban and Poonam bajwa teams up with GV Prakash for Kuppathu Rajaபிரபல ஒளிப்பதிவாளரான பாபா பாஸ்கர் தற்போது ஜி.வி. பிரகாஷ் நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவிருக்கிறர்.

‘குப்பத்து ராஜா’ என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் பார்த்திபன் நடிக்கவிருக்கிறாராம்.

மேலும இப்படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் பூனம்பஜ்வா.

இவர் சுந்தர் சியின் ‘அரண்மனை 2’, ‘முத்தின கத்தரிக்காய்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷே இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

எடிங்கை பிரவீண் செய்ய, கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

Parthiban and Poonam bajwa teams up with GV Prakash for Kuppathu Raja

விஜய்ஆண்டனி-கிருத்திகா உதயநிதி கூட்டணியில் ‘காளி’

விஜய்ஆண்டனி-கிருத்திகா உதயநிதி கூட்டணியில் ‘காளி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay antony and kiruthika udhayanidhiஎமன், சைத்தான் ஆகிய படங்கள் விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியானது.

இதனையடுத்து புதுப்படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இப்படத்தை உதயநிதியின் மனைவியும் வணக்கம் சென்னை படத்தின் இயக்குநருமான கிருத்திகா இயக்கவிருக்கிறார்.

இத்தகவலை இப்படத்தை தயாரிக்கும் பாத்திமா விஜய் ஆண்டனியே உறுதிப்படுத்தியுள்ளார்.

கனவு நிறைவேறியது.. அடிக்கல் நாட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேச்சு

கனவு நிறைவேறியது.. அடிக்கல் நாட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanஇன்று தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று வருகிறது.

இதில் ரஜினி, கமல், சிவகுமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இதில் சற்றுமுன் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது…

நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் வேண்டும் என்ற கனவு இங்கு நிறைவேறி வருகிறது.

இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். இதற்கு பின்னால் நாங்களும் இருக்கிறோம் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி. என்றார் சிவகார்த்திகேயன்.

More Articles
Follows