கமல்ஹாசனை அமைச்சராக்க வேண்டும்..; அரசுக்கு பிரபல இயக்குனர் கோரிக்கை.!

கமல்ஹாசனை அமைச்சராக்க வேண்டும்..; அரசுக்கு பிரபல இயக்குனர் கோரிக்கை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.

இவர் ‘நேரம் – பிரேமம் – கோல்ட்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இதில் பிரித்விராஜ் – நயன்தாரா நடித்த ‘கோல்ட்’ படம் போதுமான வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில் இவரது சமீபத்திய இணைய பதிவில்.. ” தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த கோரிக்கையில்..
“சினிமாவுக்கு என்று திரையுலக நல்வாழ்வுத்துறை என்ற ஒரு துறையை உருவாக்க வேண்டும். அதன் அமைச்சராக நடிகர் கமல்ஹாசனை நியமிக்க வேண்டும். அப்படி ஏற்படுத்தினால் அது சினிமாவின் மேம்பாட்டுக்காக உதவும்.

கமல் ஒருவரே சினிமாவை முழுவதும் அறிந்தவர்.. பாடகர் பாடலாசிரியர் தயாரிப்பாளர் இயக்குனர் நடன இயக்குனர் விநியோகஸ்தர் என பன்முக திறமை கொண்டவர் கமல்.. அவரிடம் இருந்து புதுமையான விஷயங்களை கற்றுக் கொண்டே இருக்கலாம். அவர் மட்டுமே உலகத்தில் தலைசிறந்த கலைஞர்.” என அல்போன்ஸ் புத்திரன் பதிவிட்டுள்ளார்

 அல்போன்ஸ் புத்திரன்

A request to @mkstalin & @Udhaystalin please Start or introduce a minister called cinema welfare minister and appoint @ikamalhaasan as the cinema welfare minister, if you do it cinema will became more flourishing and prosperous – @puthrenalphonse

Kamal should became Minister of Cinema Welfare says Alphonse Puthiran

MGR 35 ஆண்டு நினைவு தினத்தில் நடிகர் சங்கம் நினைவஞ்சலி

MGR 35 ஆண்டு நினைவு தினத்தில் நடிகர் சங்கம் நினைவஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவிலும் தமிழக அரசியலிலும் மக்களின் மகத்தான ஆதரவை பெற்றவர் எம் ஜி ராமச்சந்திரன். இவரது பாடல்களும் படங்களும் மக்களுக்கு வாழ்க்கையின் வழிமுறைகளை காட்டுவதாக காட்சிகள் இருக்கும்.

எனவே அவருக்கு என்றென்றும் மக்கள் மனதில் நிரந்தரம் இடம் உண்டு. இன்று டிசம்பர் 24ஆம் தேதி எம்ஜிஆர் மறைந்து 35 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவரும், மக்கள் திலகமாக போற்றப்பட்டவருமான பொன்மனச் செம்மல் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 35- ஆம் ஆண்டு நினைவு தினமான 24.12.2022 காலை 10.00 மணியளவில் தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் துணைத்தலைவர் S.பூச்சி முருகன், செயற்குழு உறுப்பினர்களான, லதா சேதுபதி, அஜய்ரத்தினம் நந்தா மற்றும் மேலாளர் தாமராஜ் ஆகியோர் அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினர்.

# தென்னிந்திய நடிகர் சங்கம்

Nadigar Sangam Remembering MGR on his 35th death Anniversary

நடிகர் கைகலா சத்யநாராயணாவின் மறைவுக்கு கமல் இரங்கல்

நடிகர் கைகலா சத்யநாராயணாவின் மறைவுக்கு கமல் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழம்பெரும் டோலிவுட் நடிகரும், முன்னாள் எம்பியுமான கைகலா சத்யநாராயணா.

தமிழ், தெலுங்கு என 750-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

கமல்ஹாசனின் ‘பஞ்சதந்திரம்’ படத்தில் ரெட்டியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டவர்.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் இல்லத்தில் நேற்று காலமானார்.

கைகலா சத்யநாராயணா மறைவுக்கு தனது இரங்கலை ட்விட்டர் பகிர்ந்து கொண்ட கமல்ஹாசன் தமிழில் பதிவிட்டுள்ளார்,

‘பஞ்சதந்திரம்’ படத்தில் நீங்கள் பார்த்த கைகல சத்திய நாராயணா அவர்கள், 63 ஆண்டுகளாக சினிமாவைப் பிரியாதவர்.பல விதமான பாத்திரங்களை நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதில் நிலைத்திருப்பவர். காலம் ஆகியிருக்கிறார். “அவருக்கென் மனப்பூர்வ அஞ்சலி” என கூறினார்.

kamal haasan mourns the demise of Kaikala Satyanarayana

விஜய் – விஷ்ணு விஷால் ஆகியோருடன் நடித்த ‘மாயி’ சுந்தர் காலமானார்

விஜய் – விஷ்ணு விஷால் ஆகியோருடன் நடித்த ‘மாயி’ சுந்தர் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்பட புகழ் நடிகர் ‘மாயி’ சுந்தர் இன்று அதிகாலை 2.45′ மணிக்கு உடல்நிலை குறைவால் காலமானார்.

மாயி, துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடிக்குழு, குள்ளநரி கூட்டம், மிளகாய், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி, கட்சிக்காரன் என 50க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

சொந்த ஊரான மன்னார்குடியில் மஞ்ச காமாலை நோய்க்காக, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்! அவருக்கு வயது 50. திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ படத்திலும் மாயி சுந்தர் நடித்துள்ளார். இந்தப் படம் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Actor Maayi Sundar passed away

JUST IN 3 மொழிகளில் டப்பிங் பேசிய விஷால்.; வீடியோவை வெளியிட்ட படக்குழு

JUST IN 3 மொழிகளில் டப்பிங் பேசிய விஷால்.; வீடியோவை வெளியிட்ட படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் சுனைனா மீண்டும் ஜோடியாக நடித்துள்ள படம் ‘லத்தி’.

வினோத்குமார் இயக்கிய இந்த படம் நேற்று டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.

மிகவும் யதார்த்தமாக எந்த ஹீரோயிசமும் இல்லாமல் நடித்துள்ள விஷாலின் நடிப்பை ரசிகர்களும் மக்களும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் வில்லனாக நடித்த ரமணாவின் நடிப்பு படு மிரட்டலாக இருந்தது எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று சற்று முன் விஷால் 3 மொழிகளில் டப்பிங் பேசியுள்ள வீடியோ காட்சிகளை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதில் தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் விஷால் பேசியுள்ளார்.

இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியானது.

இதற்காக விஷால் தமிழகம் ஆந்திரா கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சென்று பிரமோஷன் செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Vishal sensational dubbing in 3 Languages for Laththi

#Laatti
#LaththiCharge

@VishalKOfficial @TheSunainaa @nandaa_actor @RanaProduction0

அரசியல் கட்சியாக விஜய் மக்கள் இயக்கம்.; ‘சர்க்கார்’ அரசியல்வாதியுடன் விஜய் ஆலோசனை

அரசியல் கட்சியாக விஜய் மக்கள் இயக்கம்.; ‘சர்க்கார்’ அரசியல்வாதியுடன் விஜய் ஆலோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் மகன் நடிகர் விஜய்யை எப்படியாவது அரசியலில் நுழைய வைத்து அவரை தமிழ்நாட்டின் முதல்வராக்கி விட வேண்டும் என்ற சிந்தனையிலே பணியாற்றி வந்தார் எஸ்ஏ சந்திரசேகர்.

அதன்படியே 90களிலேயே விஜய் மக்கள் இயக்கத்தை அறிவித்தார்.

மேலும் அடிக்கடி விஜய்யின் அரசியல் பயணம் குறித்து அவ்வப்போது மறைமுகமாக பேசி வருவார்.

மேலும் விஜய் மக்கள் இயக்கமும் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட்டு வருகிறது.

இது தொடர்பாக அடிக்கடி நிர்வாகிகளை விஜய் சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில் விரைவில் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் ரீதியான கட்சியாக தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இது தொடர்பாக பழம்பெரும் அரசியல் பிரமுகர் பழ.கருப்பையாவை விஜய் ஆலோசனை செய்ததுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் நடித்த ‘சர்க்கார்’ படத்தில் அவரை எதிர்க்கும் அரசியல்வாதியாக பழ.கருப்பையா நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Vijay Makkal Iyakkam  as a political party.; Vijay consults with ‘Sarkar’ politician

More Articles
Follows