தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மலையாள சினிமாவில் நடித்து வந்தாலும் அங்குள்ள நடிகைகளுக்கு தமிழ் சினிமா ஜொலிக்க அதிக ஆர்வம் எப்போதும் உண்டு.
ஆனால் மலையாள நடிகர்கள் அப்படியில்லை. எப்போதாவது நல்ல படங்கள் கிடைத்தால் தமிழில் நடித்துவிட்டு போவார்கள்.
மோகன்லால், மம்முட்டி, கலாபவன் மணி முதல் துல்கர் சல்மான், பிரித்வி ராஜ் வரை அப்படிதான்.
அண்மையில் வெளியான சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் பகத் பாசில்.
இவர் நடிகை நஸ்ரியா நஸீமின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது கணவர் பஹத் பாசில் நடிக்கும் புதுப்படத்தை தயாரித்து வருகிறார் நஸ்ரியா.
இதன் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.