வலிமை படத்தில் அஜித்துடன் இணையும் நஸ்ரியா & அருண் விஜய்.?

வலிமை படத்தில் அஜித்துடன் இணையும் நஸ்ரியா & அருண் விஜய்.?

Nasriya and Arun Vijay joins with Ajith in Valimaiவலிமை படத்திற்காக மீண்டும் நேர்கொண்ட பார்வை பட கூட்டணி இணைகிறது.

அதாவது அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் இணைந்துள்ளனர்.

அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்க பல ஆக்சன் காட்சிகள் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது.

முக்கிய கேரக்டரில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

வில்லனாக நடிக்க அருண் விஜய்யை பரிசீலிக்கிறார்களாம்.

இந்த நிலையில் ‘வலிமை’ படத்தில் நஸ்ரியா நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது தலைமுடியை பாப் கட்டிங் செய்து ஒரு படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் அதில் வலிமை என்று ஹேஷ்டேக் போட்டுள்ளார்.

எனவே நஸ்ரியா நடிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Nasriya and Arun Vijay joins with Ajith in Valimai

மீண்டும் சூர்யா-ஹரி கூட்டணி; கன்பார்ம் செய்தார் கார்த்தி

மீண்டும் சூர்யா-ஹரி கூட்டணி; கன்பார்ம் செய்தார் கார்த்தி

Karthi confirms Suriyas next is with director Hariசூர்யாவின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படம் சிங்கம். இப்படத்தை இயக்கியவர் ஹரி.

தற்போது பல பார்ட் 2, பார்ட் 3 படங்கள் வந்தாலும் இந்த படம் மட்டுமே பழைய கதையுடன் தொடர்ச்சியுடன் இருந்து வருகிறது. அதே நடிகர்கள் தொடர்ந்து சிங்கம்2, சிங்கம் 3 படங்களில் வருகின்றனர்.

இதுவரை 3 பாகங்கள் வந்துள்ள நிலையில் 4வது பாகம் வெளிவருமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில் கைதி பட பிரஸ்மீட் ஹைதராபாத்தில் கார்த்தி கலந்துக் கொண்ட போது ஹரி இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.

எனவே இது சிங்கம் 4-ம் பாகமாக இருக்குமோ? என்ற யூகங்கள் எழுந்துள்ளன.

தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா.

Karthi confirms Suriyas next is with director Hari

அஜித் & ரஜினியை அடுத்து விஜய்யுடன் இணையும் சிவா

அஜித் & ரஜினியை அடுத்து விஜய்யுடன் இணையும் சிவா

After Ajith and Rajini movies Siva likes to join with Vijay

கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இயக்கியவர் சிவா. எனவே இவரை சிறுத்தை சிவா என்ற அழைத்து வருகின்றனர்.

இதன் பின்னர் இவர் அஜித்தின் ஆஸ்தான இயக்குனராகி ‘வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம்’ ஆகிய படங்களை இயக்கினார்.

இவை சூப்பர் ஹிட்டாகவே தற்போது ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறார்.

தலைவர் 168 என்று அழைக்கப்படும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இமான் இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அண்மையில் ஒரு விழாவில் கலந்துக கொண்ட சிவா… சீக்கிரமே விஜய் கூட படம் பண்ணுவேன் என தெரிவித்துள்ளர்.

இதனால் லோகேஷ் கனகராஜ் படத்தை முடித்துவிட்டு சிவா உடன் விஜய் இணைவார் என எதிர்பார்க்கலாம்.

After Ajith and Rajini movies Siva likes to join with Vijay

விஜய்யும் வித்தியாசமான ரசிகர்களும்…. புரிஞ்சுக்கவே முடியலையே.?

விஜய்யும் வித்தியாசமான ரசிகர்களும்…. புரிஞ்சுக்கவே முடியலையே.?

Vijay fans doing different things for the success of Bigilவிஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வருகிற அக். 25ல் வெளியாகவுள்ளது.

இப்படத்தை வரவேற்க வித்தியாசமான விஷயங்களை செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

அண்மையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணமடைந்துவிட்டதால் பேனர்களை தவிர்த்து வருகின்றனர். எனவே நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரம் பெண்கள் பள்ளி உட்பட 4 இடங்களில் 12 சிசிடிவி கேமராக்கள் அமைத்து கொடுத்துள்ளனர்.

இது ஒரு புறம் நல்ல விஷயமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் வித்தியாசமான வேண்டுதல்களை செய்து வருகின்றனர்.

நாகை மாவட்ட விஜய் ரசிகர்கள் மயிலாடுதுறையில் இருக்கும் பிரசன்ன மாரியம்மன் கோவிலில், மண் சோறு சாப்பிட்டனர்.

மற்றொரு பகுதியில் பிகில் வெற்றி பெற வேண்டி கிரேன்களில் பறவை காவடி எடுத்துள்ளனர்.

என்னப்பா.. இந்த விஜய் பேன்ஸ் அப்படியும் பண்றாங்க இப்படியும் பண்றாங்க என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Vijay fans doing different things for the success of Bigil

பிகில் ரிலீசாகுமா?; காப்புரிமை வழக்கு மீண்டும் தொடர ஐகோர்ட் அனுமதி

பிகில் ரிலீசாகுமா?; காப்புரிமை வழக்கு மீண்டும் தொடர ஐகோர்ட் அனுமதி

Madras high court order in Bigil movie release issueஅட்லி இயக்கத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்துள்ள பிகில் திரைப்படம் வருகிற 25ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகிறது.

இந்த பட சூட்டிங் நடைபெறும்போது வேறொரு உதவி இயக்குனர் செல்வா என்பவர் இப்பட கதை தன்னுடையைது என்றும் படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனையடுத்து இப்பட இயக்குநர், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், காப்புரிமை சம்பந்தப்பட்டதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனத் தெரிவித்து வழக்கை நிராகரிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தனர்.

இதன் பின்னர் வழக்கை வாபஸ் பெறவும், மீண்டும் புதிதாக வழக்கு தொடர அனுமதி கோரியும் உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் செல்வா.

இந்த மனுவை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்தது. ஆனால் புதிதாக வழக்கு தொடர அனுமதி மறுத்து விட்டது.

எனவே புதிய வழக்கு தொடர அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து செல்வா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், காப்புரிமை மீறல் தொடர்பாக புதிய வழக்கு தொடர அனுமதி மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, புதிய வழக்கு தொடர அனுமதியளித்து விட்டார்.

எனவே பிகில் ரிலீசில் சிக்கல் உண்டாக வாய்ப்பு இருக்கலாம் என தெரிகிறது.

Madras high court order in Bigil movie release issue

என் தந்தை இல்லாமல் நான் இல்லை : துருவ் விக்ரம்

என் தந்தை இல்லாமல் நான் இல்லை : துருவ் விக்ரம்

Dhruv Vikramதுருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சத்யம் சினிமாஸில் இன்று நடைபெற்றது.

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ஆதித்ய வர்மா. தமிழ் திரையுலகில் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகரான சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகராக கால் பதிக்கிறார். கிரிசாயா இயக்கிய இந்த படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இசை விழாவை சிறப்பித்தனர்.

தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா பேசுகையில், ஆதித்ய வர்மா படப்பிடிப்பு தளத்தில், நடிகர் விக்ரம் ஒருபோதும் உச்ச நட்சத்திரம் போல நடந்து கொள்ளவில்லை.. பாசமிகு தந்தையாகவே திகழ்ந்தார். 2021-ம் ஆண்டில், விக்ரம் மற்றும் துருவ் இருவரும் இணைந்து நடித்து நம்மை மகிழ்விப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளரான ரவி.கே.சந்திரன் பேசுகையில், என் மகன் ஹிந்தி வெர்ஷனில் பணியாற்றினார், நான் தமிழில் பணியாற்றினேன். எங்கள் குடும்பத்திற்குள் இன்பம் நிறைந்த சவாலாக இருந்தது. படக்குழுவை பாராட்டியவர், நாயகன் துருவ்வின் நடிப்பு குறித்தும் பகிர்ந்துள்ளார். சவாலான பாத்திரத்தில் துருவ் நடித்த விதம் பிரமாதம் என்று கூறினார்.

இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் கிரிசாயா பேசுகையில், நான் பல இயக்குனர்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளேன், ஆனால் எனக்கு முதல் அங்கீகாரம் தமிழ் திரை துறையில் தான் கிடைத்துள்ளது. தமிழ் மொழிக்கும், தமிழ் திரையுலகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். இந்த பொன்னான வாய்ப்பளித்த நடிகர் விக்ரம் மற்றும் தயாரிப்பாளர் மேத்தாவுக்கு நன்றியை தெரிவித்தார்.

சில காட்சிகளை படமாக்கும்போது இரண்டு அல்லது மூன்று டேக்குகளுக்கு சென்றதற்காக துருவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். துருவின் முதல் டேக் எப்போதுமே சிறப்பாக இருந்தது. ஐ லவ் யூ துருவ் … என்று கூறினார். நடிகை பிரியா ஆனந்த் மற்றும் கதாநாயகி பனிதா ஆகிய இருவரையும் பாராட்டி கூறினார்.

இசையமைப்பாளர் ரதன் பேசுகையில், என் பெயர் வித்தியாசமாக இருந்ததை வைத்து, என் தாய் மொழி தெலுங்கு என்று பலர் நினைத்தனர், ஆனால் நான் பச்சை தமிழன். இந்த மேடையில் நான் இருப்பதற்கு காரணம் நடிகர் விக்ரம் தான். தொழில்நுட்ப கலைஞர்களை ஊக்குவிப்பதிலும், மரியாதை தருவதிலும் விக்ரமிற்கு நிகர் அவர் மட்டுமே. ஒரு இரவு, நானும் எனது ஒலிப்பதிவாளரும் தாமதமாக வேலை செய்து கொண்டிருந்தோம். திடீரென்று, பின்னால் இருந்து ஒரு மென்மையான குரல், ‘ஒரு கப் காபி வேண்டுமா?’ என்று அவரே கேட்டது மகிழ்ச்சியாக உள்ளது.

நடிகை பிரியா ஆனந்த் பேசுகையில், எஸ்ரா மூலம் மலையாளத்தில் தன்னை அறிமுகப்படுத்தியதற்கு தயாரிப்பாளர் முகேஷ் மேத்தாவிற்கு நன்றி தெரிவித்தார். நான் இங்கிலிஷ் விங்லிஷ் திரைப்படத்தில், நடிகை ஸ்ரீதேவி உடன் பணிபுரிந்தபோது, அவர் ஒரு அம்மாவாக இருப்பதைக் கண்டேன். அதேபோல், ஆதித்ய வர்மாவில் பணிபுரிந்தபோது, விக்ரம் அவர்கள் அக்கறையுள்ள அப்பாவாக இருப்பதைக் உணர்ந்தேன் என்று கூறினார். துருவ் உடன் பணிபுரிவது சிறப்பாக இருந்தது, மேலும் ஆதித்யா வர்மா மிகவும் புதியாக இருக்கும் .

படத்தின் கதாநாயகி பனிதா, உதவி இயக்குநர்கள் குழுவுக்கு நன்றி தெரிவித்து தனது உரையைத் தொடங்கினார். இதுபோன்ற அற்புதமான வேலையைச் செய்ததற்காகவும் தனது இயக்குனர் கிரீசாயாவுக்கு நன்றி தெரிவித்தார். படத்தை தயாரிக்கும் போது நடிகர் விக்ரம் அளித்த மகத்தான ஆதரவுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். “விக்ரம் அவர்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். நானும் துருவும் திரையில் அழகாக இருக்க தினமும் அயராது உழைத்ததற்கு நன்றி” என்றார். தனது சக நடிகரான துருவைப் பற்றி பேசிய பனிதா, உங்களின் திரைப்பயணத்தின் துவக்கத்தில் இருப்பதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

இந்த இசை விழாவின் சிறப்பம்சமே நடிகர் துருவ் விக்ரமின் உரை தான். நான் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உரைகளை வழங்கினேன், ஆனால் இந்த விழா சற்று கூடுதல் சிறப்பு, காரணம் என் குடும்பம் இங்குள்ளது. எனது குடும்பத்தினால்தான் நான் இன்று இங்கே இருக்கிறேன். அவர்களின் ஆதரவு இல்லாவிட்டால் நிச்சயம் இங்கு இருந்திருக்க மாட்டேன்.

இந்த படத்தில் இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வந்த குழுவிற்கு நன்றியை தெரிவித்தார். தனக்கு ஆதரவளித்த தனது தயாரிப்பாளர் முகேஷ் மேத்தாவுக்கும் அவரது இசையமைப்பாளர் ரதனுக்கும் ஒர் பாடல் பாடியதற்காக நன்றி தெரிவித்தார்.

இயக்குனர் கிரீசாயா மற்றும் இணை இயக்குனர் பற்றி பேசிய துருவ், ஆரம்பத்திலிருந்தே இப்படம் திறன் வாய்ந்தோர் உள்ளங்கைகளில் இருப்பதை நினைத்து பெருமிதம் கொண்டார் .

பின் தனது தந்தை, நடிகர் விக்ரம் பற்றி பேசுகையில், அப்பாவுக்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த படத்திற்கான அவரது அர்ப்பணிப்பு 100 சதவீதம். என் அப்பா ஒரு நல்ல நடிகர் என்பதை விட அக்கறையும் அன்பும் அதிகம் உள்ள தந்தை என்பது எனக்குத் தெரியும்.

மேடையில் தனது மகனுடன் சேர்ந்து பேசுகையில் , நடிகர் விக்ரம் சிரித்தபடி, “துருவைப் போல பேச எனக்குத் தெரியாது” என்றார். தனது 12-ம் வகுப்பு முடிவுகளுக்காக காத்திருக்கும்போதோ அல்லது சேது திரைப்படம் வெளியீட்டிற்காக காத்திருக்கும்போதோ தான் ஒருபோதும் பதற்றத்தை உணரவில்லை என்று ஒப்புக்கொண்டார். இன்று மட்டுமல்ல, இப்போது சில காலமாக நான் பதற்றமாக இருக்கிறேன் என்று கூறி விக்ரம் தனது மகனை எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கான அறிகுறியைக் கொடுத்தார்.

துருவ் நடிக்கலாம் என்று எண்ணினோம், ஆனால் ஒரு முக்கியமான கதை தேவை என்று விக்ரம் கூறினார். மற்றும் தயாரிப்பாளரான முகேஷ் மேத்தாவுக்கு துருவைத் தேர்ந்தெடுத்ததற்கும் அவர் மீது நம்பிக்கை வைத்ததற்கும் நன்றி தெரிவித்தார். துருவின் டப்ஸ்மாஷைக் கண்டார், இந்த பாத்திரத்தில் நடிக்க துருவைப் பெற என்னை அணுகினார்.

இயக்குனர் கிரீசாயா மற்றும் இணை இயக்குனர் ஷரியா இல்லாமல், இந்த படம் சாத்தியமில்லை.

ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனுக்கும் நன்றி தெரிவித்ததோடு, அவர்கள் ஒரு கட்டத்தில் ஒரு அறையைப் பகிர்ந்துகொண்டதையும் நினைவு கூர்ந்தார். இன்று, அவர் இந்தியாவின் சிறந்த டி.ஓ.பிகளில் ஒருவர். எங்கள் கனவின் காரணமாக நாங்கள் இங்கு வந்துள்ளோம். அதைத்தான் நான் துருவிடம் சொன்னேன். உங்கள் கனவுகளைப் பின்பற்றுங்கள்.

கதாநாயகிகள் பனிதா மற்றும் பிரியாவுக்கும் நடிகர் நன்றி தெரிவித்தார்.அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த நடிகர் விக்ரம், “நான் என் மகனுக்கு கொடுக்கும் ஒரே மரபு என் ரசிகர்கள் தான். அந்த காதல் தானாகவே வருகிறது.”

தனது படத்திலிருந்து எந்த உரையாடலையும் துருவ்வால் நினைவு கூர்ந்து வழங்க முடியும் என்று கூறினார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ரசிகர்களின் மகிழ்ச்சியைப் பெற்றது.

More Articles
Follows