பஹத்பாசில் உடன் போட்டி போட முடியாது.: சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

பஹத்பாசில் உடன் போட்டி போட முடியாது.: சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and fahadh faasilமோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள படம் வேலைக்காரன்.இப்படத்தில் முக்கிய வேடத்தில் மலையாள நடிகரும் நடிகை நஸ்ரியாவின் கணவருமான பஹத்பாசில் நடித்துள்ளார்.

வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பஹத்பாசில் உடன் நடித்த அனுபவம் பற்றி சிவகார்த்திகயேன் பேசியதாவது…

இன்று ஒரு முக்கியமான வேலை உள்ளதால் பஹத்பாசில் இந்த விழாவுக்கு வரவில்லை.

அவருடன் நடித்ததில் பெரும் மகிழ்ச்சி. அவர் ஒரு ஹாலிவுட் நடிகரை போன்றவர்.

அவருடன் போட்டி போட்டு நடிக்க சொல்லி நான் ஹாலிவுட் நடிகர்களுக்கே சவால் விடுவேன்.

என்னால் நிச்சயம் அவருடன் போட்டி போட்டு நடிக்க முடியாது. எனவே நான் அவரின் நடிப்பை அருகில் நின்று ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்.” என்று பேசினார்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்ய சேரன் வலியுறுத்தல்

தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்ய சேரன் வலியுறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

cheran vishalதயாரிப்பாளர் சங்கத் தலைவர் மற்றும் நடிகர் சங்க பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ளார் நடிகர் விஷால்.

தற்போது திடீரென அரசியல் களத்திலும் குதித்துள்ளார்.

மாற்றம் வரவேண்டும் என கூறி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தான் போட்டியிட போவதாக கூறி, இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.

மனுதாக்கல் செய்வதற்கு முன், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சமாதிகளில் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் விஷாலின் இந்த அரசியல் முடிவுக்கு சேரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் தயாரிப்பாளர் சங்க பதவியில் இருந்து விஷால் விலகும் வரை தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இருந்து உள்ளிருப்பு போராட்டம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

இதுபற்றி பத்திரிகையாளர்களை சந்தித்த சேரன் கூறியதாவது…

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஒரு நடிகராக விஷால் அரசியல் தேர்தலில் போட்டியிடலாம்.

ஆனால் ஒரு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியில் இருந்துக் கொண்டு அவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது.

நடிகர் சங்கம் அரசாங்கத்தை நம்பியில்லை. ஆனால் தயாரிப்பாளர் சங்கம் தமிழக அரசை நம்பியுள்ளது. அதனை சார்ந்தே சங்கத்தை நடத்த வேண்டியுள்ளது.

தற்போது ஜிஎஸ்டி (உள்ளாட்சி) வரியை குறைத்துள்ளார்கள். அவர் அரசியலில் எதிர்த்தால் அவர்கள் மீண்டும் வரியை உயர்த்துவார்கள்.

இதனால் 1230 தயாரிப்பாளர்களின் வாழ்வதாரம் பாதிக்கப்படும்.

8 ஆண்டுகளுக்கு பிறகு சின்ன பட்ஜெட் படங்களுக்கு மானியம் கொடுக்கப்பட்டது.

விஷாலின் அரசியல் முடிவால் அந்த மானியம் நிறுத்தப்படலாம்.

அவர் தலைவர் பதவியை ராஜினாமாசெய்து விட்டு தேர்தலில் நிற்பதேநல்லது இல்லையெனில் நிறைய “அசோக்குமார்களை” (தற்கொலை செய்துக் கொண்டவர்) சங்கம் சந்திக்கும்.

தலைவர் பதவியை ராஜினாமா செய்யட்டும் அல்லது தேர்தலில் போட்டியிடாமல் இருக்கட்டும். அதன்பின்னர் என்னிடமுள்ள 75 கேள்விகளுக்கு பதில்சொல்லட்டும்.” என்று பேசினார் சேரன்.

ட்விட்டர் அரசியல்; கமலுக்கும் விஷாலுக்கும் என்ன வித்தியாசம்..?

ட்விட்டர் அரசியல்; கமலுக்கும் விஷாலுக்கும் என்ன வித்தியாசம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal vishalதற்போதைய அரசியலில் ட்விட்டர் தளமும் பெரும் பங்கு வகிக்கிறது என்றே கூறலாம்.

கமல் அடிக்கடி தன் அரசியல் கருத்துக்களை ட்விட்டரில் கூறிவருவதால் இவரை ட்விட்டர் அரசியல் நாயகன் என்றே பலரும் அழைக்கின்றனர்.

இவரின் கருத்துக்களுக்கு ஆளும் அதிமுக கட்சி எதிர்ப்பு தெரிவிக்க, வெகுண்டெழுந்த கமல் தற்போது அரசியல் களம் கண்டுள்ளார்.

இதனிடையில் சில மாதங்களுக்கு முன், ட்விட்டரில் இருந்து விலகியிருந்தார் விஷால்.

இந்நிலையில் நேற்று ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

தற்போது ட்விட்டர் அக்கௌண்டை மீண்டும் ஆக்ட்டிவேட் செய்துள்ளார்.

ட்விட்டரில் வந்த பிறகு கமல் அரசியலுக்கு வந்தார். விஷால் அரசியலுக்கு வந்தபின் மீண்டும் ட்விட்டருக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இனி விஷாலும் அடிக்கடி அதிரடியான ட்விட்டுக்களை பதிவிடுவார் என எதிர்பார்க்கலாம்னு சொல்லுங்க..

Twiiter to Politics Kamal and Vishal news updates

விஜய்யின் நண்பராக சதீஷ்-சத்யன் இடத்தில் பிரபல காமெடியன்

விஜய்யின் நண்பராக சதீஷ்-சத்யன் இடத்தில் பிரபல காமெடியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yogibabu‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணி 3வது முறையாக இணையவுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இதன் சூட்டிங் ஜனவரியில் தொடங்கவுள்ளது.

ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரனும், எடிட்டராக ஸ்ரீகர்பிரசாத் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
படத்தின் நாயகி யார்? என்பது இன்னும் முடிவாகவில்லையாம்.

இந்நிலையில் விஜய்யின் நண்பராக யோகிபாபு நடிக்கவுள்ளாராம்.

முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்தில் சத்யனும், கத்தி படத்தில் சதீஷ்ம் விஜய்யின் நண்பராக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comedian Yogibabu teamsup with AR Murugadoss for Vijay 62

சூர்யா-கார்த்தி இணையும் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பு.?

சூர்யா-கார்த்தி இணையும் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya and Karthi teams up for new movie may be titled Vivasayeeவினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.

இப்படத்தை கார்த்தியின் அண்ணனும் நடிகருமான சூர்யா தன் 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரித்து வருகிறார்.

இப்படம் முழுவதும் கிராமத்து பாணியில் எடுக்கப்பட்டு வருகிறது.

பருத்தி வீரன் மற்றும் கொம்பன் ஆகிய படங்களுக்கு பிறகு கிராமத்து இளைஞராக கார்த்தி நடிக்கிறார்.

இப்படத்தின் சூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதில் கார்த்தி ஓட்டுக் பைக்கில் நம்பர் ப்ளேட் இடத்தில் விவசாயி என்று எழுதப்பட்டுள்ளது.

எனவே இப்படத்திற்கு விவசாயி என பெயரிடவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

1967ல் வெளியான எம்ஜிஆர் நடித்த படத்திற்கு விவசாயி என தலைப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Suriya and Karthi teams up for new movie may be titled Vivasayee

karthi bike

கமலின் காதல் பாடலை படத்தலைப்பாக்கிய வெங்கட்ரமணன்

கமலின் காதல் பாடலை படத்தலைப்பாக்கிய வெங்கட்ரமணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal song titleகமல் நடித்த குணா படத்தில் கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதம் என்ற பாடல் மிகபிரபலமானது.

அந்த பாடலில் மனிதர் புரிந்துக் கொள்ள இது மனித காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது என்ற வரிகள் வரும்.

தற்போது அந்த பாடல் வரிகள் ஒரு படத்தின் தலைப்பாகியுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு…

தனது முதல் படமான ‘அப்பா வேணாம்ப்பா’ என்கிற படத்தில் குடி குடியை கெடுக்கும் என்கிற சமூக விழிப்புணர்வு கருத்தை வலியுறுத்தி பாராட்டுக்களை பெற்றவர் நடிகரும் இயக்குனருமான வெங்கட்ரமணன்.

தற்போது தனது அடுத்த படமான ‘அதையும் தாண்டி புனிதமானது’ என்கிற படத்திற்கு பூஜை போட்டுள்ளார் வெங்கட்ரமணன்.

கணவனுக்கும் மனைவிக்குமான புரிதல் எப்படி இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப்படத்தை இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கவுள்ள இந்தப்படம் முழுக்க கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறது.

இயக்குனர் வெங்கட் ரமணன்.. இசையமைப்பாளர் வி.கே.கண்ணன், ஒளிப்பதிவாளர் செல்வம், படத்தொகுப்பாளர் ராஜேஷ் கண்ணன் என முதல் பட கூட்டணியே இதிலும் தொடர்கின்றனர். இந்தப்படத்தில் என்ன சிறப்பம்சம் என்றால் சினிமாவை சாராத, அதேசமயம் சமூகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் பத்து பேர் வெங்கட்ரமணனுடன் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கின்றனர்.

படப்பிடிப்பை வரும் ஜனவரி மாதம் துவங்கி மே மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

Kamal song became title for Tamil movie Athaiyum Thaandi Punithamaanathu

Athaiyum Thaandi Punithamaanathu

More Articles
Follows