வினோத் இயக்கும் படத்தில் அஜித்தின் மனைவியாக வித்யாபாலன்

வினோத் இயக்கும் படத்தில் அஜித்தின் மனைவியாக வித்யாபாலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith vidya balanவிஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கிறார் அஜித்.

ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார் அஜித்.

இவருடன் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோரும் நடிக்கின்றனர்.

மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில் அஜித்தின் மனைவியாக கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம் வித்யா பாலன்.

நாயகிக்கு முக்கியத்துவம் கேரக்டர்களில் மட்டுமே நடிப்பவர் வித்யா பாலன்.

மேலும் அவர் ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை.

எனக்குப் படங்களை ரீமேக் செய்வது பிடிக்காது. முழுக்க முழுக்க போனி கபூருக்காகவே இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

அஜித்தின் பிறந்த நாளான மே 1-ந்தேதி இப்படத்தை வெளியிடவுள்ளனர்.

விஜய்சேதுபதி பிறந்தநாளில் சிந்துபாத் பர்ஸ்ட் லுக் வெளியானது

விஜய்சேதுபதி பிறந்தநாளில் சிந்துபாத் பர்ஸ்ட் லுக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sindhubadhபண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கியவர் அருண்குமார்.

தற்போது 3வது முறையாக விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டனர்.

`சிந்துபாத்’ என தலைப்பிட்டுள்ளனர்.

இதில் விஜய்சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்க, தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவே இசையமைக்கிறார்.

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

ஜெயம் ரவி மகனை தொடர்ந்து அவரது அண்ணன் மகனும் அறிமுகம்

ஜெயம் ரவி மகனை தொடர்ந்து அவரது அண்ணன் மகனும் அறிமுகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Mohan Raja Son Pranav Mohan Debut Movie Tamilarasanடிக் டிக் டிக் என்ற படத்தில் ஜெயம் ரவியுடன் அவரது மகன் ஆரவ்வும் நடித்திருந்தார்.

தற்போது ஜெயம் ரவியின் அண்ணனும் இயக்குனருமான மோகன் ராஜாவின் மகன் பிரணவ்வும் தமிழரசன் என்ற படத்தில் அறிமுகமாகிறார். அதுபற்றிய விவரம் வருமாறு….

விஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் துவங்கியது.

பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது.

தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குனர் மிலன் தயாரிப்பாளர் கெளசல்யா ராணி, இயக்குனரும் தயாரிப்பாளருமான G.சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விஜய் ஆண்டனியுடன் மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க படமாக்கப்பட்டது.

விஜய் ஆண்டனிக்கு வாழ்த்து தெரிவித்த இளையராஜா, இந்த படம் பிள்ளையார் சுழி போட்டதிலிருந்தே எல்லாமே பாசிடிவாகவே நடந்து கொண்டிருக்கிறது. இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று வாழ்த்தினார்.

மாஸ்டர் பிரணவ் மோகன் முதன் முறையாக காமிரா முன் நின்றாலும் அவரது பின்னணி என்னவோ பலமானது. இவர் எடிட்டர் மோகனின் பேரன். டைரக்டர் மோகன் ராஜாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு துறையில் பிரபலமாக இருக்கும் ஒருவர் உயர்ந்து வந்தவுடன் தான் பட்ட கஷ்டங்களை நினைத்து தன் வாரிசுகளை அந்த துறையில் ஈடுபடுத்த மாட்டார்கள்.

ஆனால் எடிட்டர் மோகன் அவர்கள் தான் பெற்ற வெற்றியை தன் வாரிசுகளான மோகன் ராஜாவை இயக்குனராகவும், ரவியை ஜெயம் ரவியாகவும் வெற்றி பெற செய்திருக்கிறார்.

அவர்களும் தங்கள் வாரிசுகளை திரைத்துறையில் நம்பி களம் இறக்கி இருக்கிறார்கள்.

Director Mohan Raja Son Pranav Mohan Debut Movie Tamilarasan

அடேங்கப்பா விஸ்வாசம் ரூ. 125 கோடியா.? சிவா என்ன சொல்கிறார்.?

அடேங்கப்பா விஸ்வாசம் ரூ. 125 கோடியா.? சிவா என்ன சொல்கிறார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Siva talks about Viswasam box office collectionஒரு படம் ரிலீஸாகிவிட்டால் அதன் வசூல் எவ்வளவு? என்பதை தெரிந்துக் கொள்ள ஆர்வமாக அந்த நடிகரின் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அதுவும் கடந்த ஒரு வாரமாக இந்த வசூல் போட்டி உச்சத்தில் உள்ளது.

அதற்கு காரணம் ரஜினி என்ற மலையுடன் அஜித் மோதியது தான்.

பேட்ட பட வசூல் ரூ. 100 கோடியை விட கூடுதலாக ரூ 25 கோடியை சேர்த்து ரூ. 125 கோடியை விஸ்வாசம் வசூலித்துள்ளதாக அப்படத்தை வெளிட்ட கேஜேஆர் நிறுவனம் செய்தியை வெளியிட்டது.

இதுகுறித்து விஸ்வாசம் பட டைரக்டர் சிவா அளித்துள்ள அண்மையில் பேட்டியில் கூறியதாவது…

நான் ஒரு டெக்னீசியன். எனவே ஒரு கதையை படமாக்க கடினமாக உழைப்பேன். படம் ரிலீஸாகிவிட்டால அடுத்த கதையில் கவனம் செலுத்துவேன்.

வியாபாரத்திற்குள் போய் விட்டால் என்னுடைய கிரியேட்டிவிட்டி போய் விடும்.

அதேபோல் ரசிகர்கள் வியாபாரத்திற்குள் சென்றால் அவர்களின் ரசனையும் போய் விடும்.

வியாபாரத்தைப்பற்றி தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும்தான் யோசிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Director Siva talks about Viswasam box office collection

மரணமடைந்த ரசிகரின் அம்மாவின் மாதச்செலவை ஏற்ற சந்தீப் கிஷன்

மரணமடைந்த ரசிகரின் அம்மாவின் மாதச்செலவை ஏற்ற சந்தீப் கிஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Sundeep Kishan decided to take care of his fans motherதெலுங்கில் பிரபல நடிகரான சந்தீப் கிஷன் தமிழில் யாருடா மகேஷ், மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு ஆந்திராவில் நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

இவரது ஆந்திர மாநில ரசிகர் மன்றத் தலைவராக இருந்தவர் கடப்பா ஸ்ரீனு. இவர் நேற்று மாரடைப்பால் காலமாகி விட்டார்.

எனவே கடப்பா ஸ்ரீனுவின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார் சந்தீப் கிஷன்.

இதனையடுத்து சந்தீப் கிஷன் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில்…

கடப்பா ஸ்ரீனு ஒரு விசுவாசமுள்ள ரசிகர். நான் ஒரு சகோதரனை இழந்திருக்கிறேன். எனது வளர்ச்சிக்காக நிறைய உழைத்திருக்கிறார். அதனால் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

ஸ்ரீனுவின் சகோதரிக்கு திருமணமாகி விட்டது. அதனால் தற்போது ஆதரவின்றி இருக்கும் அவரது அம்மாவுக்கு மாதந்தோறும் ரூ. 10 ஆயிரம் தான் வழங்க உள்ளேன்” என சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.

Actor Sundeep Kishan decided to take care of his fans mother

இனிமே நான் கயல் *சந்திரன்* இல்லீங்க..; இப்படிக்கு சந்திரமௌலி

இனிமே நான் கயல் *சந்திரன்* இல்லீங்க..; இப்படிக்கு சந்திரமௌலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kayal chandranகயல் சந்திரன் என்று அன்புடன் அழைக்கப்பட்ட நடிகர் தன் பெயரை மாற்றியுள்ளதாக ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…

எனது அறிமுக படமான ‘கயல்’ முதல் பேராதரவு நல்கி வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம்.

எனதுள்ளம் நன்றிப்பெருக்கில் நிறைந்திருக்கும் இவ்வேளையில், உங்கள் நல் ஆதரவோடு மேலும் ஊக்கமுடன் உழைத்து நல்ல படங்களில் நடித்து உங்களை மகிழ்விக்க மனம் விழைகிறது.

இதுநாள் வரை சந்திரன் என புனை பெயரில் அறியப்பட்ட நான் இனி என் உண்மை பெயரான “சந்திரமௌலி” என அறியப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

எனவே, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் “சந்திரன்” என்ற என் பெயரை இனி “சந்திரமௌலி” என்று அழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

எனது இயக்குநர்கள் , தயாரிப்பாளர்கள், நண்பர்கள் , பத்திரிகை/ஊடக நண்பர்கள் மற்றும் எனது பேரன்புமிக்க ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

அன்புடன்

சந்திரமௌலி

More Articles
Follows