‘தெலுங்கில் நஸ்ரியா அறிமுகம்..; 3 மொழிகளில் ரிலீசாகும் நானியின் புதிய படம்

‘தெலுங்கில் நஸ்ரியா அறிமுகம்..; 3 மொழிகளில் ரிலீசாகும் நானியின் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி =முன்னணி இயக்குநர் விவேக் ஆத்ரேயா= பிரபல பட தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய மூவர் கூட்டணியில் உருவான ‘அன்டே சுந்தரனக்கி’ படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

இது தமிழில் ‘அடடே சுந்தரா’ என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, திறமையான இயக்குநர் விவேக் ஆத்ரேயா இணைந்து முதன்முறையாக இணைந்து உருவாக்கியிருக்கும் திரைப்படம் ‘அன்டே சுந்தரனக்கி’.

இந்தப் படத்தின் மூலம் நடிகை நஸ்ரியா நசீம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார்.

இவரை தெலுங்கு திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிமுகப்படுத்துகிறது.

இந்தப் படத்தின் விளம்பரங்களால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள், படத்தின் புதிய தகவலுக்காக ஆவலுடன் காத்திருந்தனர் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நிறைய குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட பிராமண குடும்பத்தில் ஒரேயொரு ஆண் வாரிசாக சுந்தர் என்கிற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடிகர் நானி நடித்திருக்கிறார்.

இதன் காரணமாகவே அவர் மீது அனைவரும் அதீத அக்கறையும், அன்பையும் செலுத்துகிறார்கள். குடும்ப உறுப்பினர்கள் தன் மீது காட்டும் அதீத அரவணைப்பை தவிர்ப்பதற்காக ஜோதிடர்கள் கூறும் ஒவ்வொரு ஆலோசனையும் பின்பற்றவேண்டிய அழுத்தத்திற்கு சுந்தர் ஆளாகிறார். இதனால் அவருக்கு பல நெருக்கடிகள் ஏற்படுகிறது.

இந்த தருணத்தில் சுந்தர், லீலா தாமஸ் என்ற தன்னுடைய ஆத்ம தோழியை காண்கிறார். அவரது பெயரே அவர் ஒரு கிறிஸ்தவர் என்பதை குறிக்கிறது.

இந்த இரண்டு குடும்பங்களும் வெவ்வேறு சாதி, மதம் சார்ந்து இருக்கிறார்கள். ஆனால் படத்தின் முக்கிய முரண்பாடாக இந்த அம்சம் மையப்படுத்தப்படவில்லை.

இயக்குநர் விவேக் ஆத்ரேயாவின் பிரத்யேக முத்திரை அவரது எழுத்திலும், இயக்கத்திலும் தெரிகிறது. ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, இசையமைப்பாளர் விவேக் சார் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு இப்படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியிருக்கிறது.

மைத்திரி மூவி மேக்கர் தயாரிப்பு என்பதால் இந்தப்படத்தின் தரம் முதன்மையானதாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.

‘நேச்சுரல் ஸ்டார்’ நானியின் பிரத்தியேக வசன உச்சரிப்பு, இப்படத்தின் உயிர்நாடியாக அமைந்துள்ளது.

அதே தருணத்தில் நடிகை நஸ்ரியா நசீம் உடனான அவரது கெமிஸ்ட்ரி, ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. நானி மற்றும் நரேஷ் ஆகிய இருவரும் இணைந்து நகைச்சுவை பகுதியை சிறப்பித்திருக்கிறார்கள். ரவிதேஜா கிரிஜாலா இப்படத்தை தொகுத்திருக்கிறார்.

அண்மையில் வெளியான டீஸர் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு வானளாவிய அளவிற்கு உயர்ந்திருக்கிறது.

இந்தப்படம் தமிழில் ‘அடடே சுந்தரா’ என்ற பெயரிலும், மலையாளத்தில் ‘ஆஹா சுந்தரா’ என்ற பெயரிலும் ஜூன் 10ஆம் தேதியன்று ஒரே சமயத்தில் வெளியாகிறது.

நடிகர்கள்
நானி
நஸ்ரியா
பகத் ஃபாசில்
நதியா
ஹர்ஷவர்தன்
ராகுல் ராமகிருஷ்ணன் மற்றும் பலர்.

தொழில்நுட்ப குழு
எழுத்து & இயக்கம். : விவேக் ஆத்ரேயா
தயாரிப்பாளர்கள் : நவீன் யெர்னேனி & ரவிசங்கர். ஒய்.
தயாரிப்பு நிறுவனம் : மைத்திரி மூவி மேக்கர்ஸ்
தலைமை நிர்வாக அதிகாரி : செர்ரி
இசை : விவேக் சாகர்
ஒளிப்பதிவு : நிகேத் பொம்மி
படத்தொகுப்பு : ரவிதேஜா கிரிஜாலா
தயாரிப்பு வடிவமைப்பு : லதா நாயுடு
விளம்பர வடிவமைப்பு : அணில் & பானு
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Nani, Vivek Athreya, Mythri Movie Makers Adade Sundara Teaser Dropped

மொபைல் போனை விழுங்கியதால் சாக கிடக்கும் நோயாளி பற்றிய சாங்

மொபைல் போனை விழுங்கியதால் சாக கிடக்கும் நோயாளி பற்றிய சாங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு மருத்துவர் (பிராங்க்ஸ்டர் ராகுல்), மொபைல் போனை முழுங்கிவிட்டு சாக கிடக்கும் நோயாளியின் (அனிவீ) சோக கதையை கேட்கும் ஒரு ஃபன் வீடியோ தான் இது.

நீங்கள் வாசித்தது சரி தான்- மொபைல் போனை விழுங்கிவிட்டான், இது பற்றி இயக்குனரிடம் (சன்மார்கன்) கேட்டதற்கு அவர் கருத்து எதுவும் கூறவில்லை.

பாடலின் வரிகள் 2010-ன் பாப் கலாச்சாரத்தை ஒத்து அமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஹீரோ அவனது காதலை வெளிபடுத்த முடியாததை பற்றி கூறுவது போன்று எழுதபட்டுள்ளது.

இந்த வித்தியாசமான கான்செப்ட்க்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக பாடல்வரிகள் அமைக்கபட்டுள்ளது.

பிராங்க்ஸ்டர் ராகுல் ஒரு நடிகனாக அவரது திறனை தாண்டி, இதை புரிந்து கொண்டு இந்த பாடலுக்கு ஏற்ற அசத்தலான நடனத்தை கொடுத்துள்ளார்.

சுரேன்.M பாடலின் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவாளர் அர்விந்த் கைலாசம் பாடலுக்கு ஒரு புது திரை வண்ணத்தை அளித்துள்ளார்.

இசையமைப்பாளர் அனிவீ அவரது முழு திறமையையும் செலுத்தி, ஒரு அற்புதமான பிரேக்கப் பாடலை கொடுத்துள்ளார். பாடல் பற்றி கேட்டதற்கு அனிவீ. ”இது ஒரு சோக பாடல்” என கூறினார்.

அந்தோனி தாசன், அனிவீயுடன் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளார். “மயக்கிறியே” என்ற வெற்றி பாடலுக்கு பிறகு இசையமைப்பாளர் அனிவீ, சரிகம உடன் இணையும் இரண்டாவது பாடல் இது.

Luck illa maamey – a fun video song

கோடிகளில் கொட்டி கொடுத்தாலும் அதை மட்டும் செய்ய மாட்டேன்.; ‘புஷ்பா’ நடிகர் பிடிவாதம்

கோடிகளில் கொட்டி கொடுத்தாலும் அதை மட்டும் செய்ய மாட்டேன்.; ‘புஷ்பா’ நடிகர் பிடிவாதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.

இவர் நடித்து அண்மையில் வெளியான ‘புஷ்பா’ படம் பான் இந்தியா படமாக வசூலில் சக்கைப் போடு போட்டது. இதில் இடம்பெற்ற ஓ.. சாமீ.. சாமீ… & ஊ சொல்றீயா மாமா… ஆகிய பாடல்கள் பட்டைய கிளப்பியது.

அல்லு அர்ஜுன் விளம்பர படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

அனைத்து துறைகளையும் அறிந்தவர் அல்லு அர்ஜூன்..; அசந்து நின்ற ‘அண்ணாத்த’ சிவா

ரெட் பஸ்… ராபிடோ உள்ளிட்ட விளம்பரங்களில் நடித்து வந்தார் அல்லு அர்ஜுன்.

இந்த நிலையில் பிரபல நிறுவனம் ஒன்று தங்களது புகையிலை விளம்பரப்படத்தில் நடிக்க அணுகி கோடிகளில் சம்பளம் தர தயாராக இருந்தனர்

ஆனால் புகையிலையை விளம்பரப்படுத்தினால் தன் ரசிகர்கள் & மக்கள் அதை பயன்படுத்த கூடும் என்பதால் நடிக்க மறுத்துவிட்டாராம் அல்லு அர்ஜுன்.

Allu Arjun turns down tobacco commercial despite being offered hefty salary

AK61 பட போஸ்டர் FIRE ma… விக்னேஷ் சிவன் பதிவால் அஜித் ரசிகர்கள் ஹாப்பி

AK61 பட போஸ்டர் FIRE ma… விக்னேஷ் சிவன் பதிவால் அஜித் ரசிகர்கள் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வலிமை’ படத்தை முடித்து விட்டு தன் AK 61வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித்.

போனிகபூர் தயாரிப்பில் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கி உள்ளது.

AK 61 படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இதனையடுத்து லைகா சார்பாக சுபாஸ்கரன் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித்.

இப்பட படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கவுள்ளது.

AK61 பட சூட்டிங்கை தொடங்கினார் வினோத்.; அஜித்தின் ஹைதராபாத் ராசி.?

இதில் நாயகியாக நயன்தாரா நடிப்பார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்..

“AK61 படத்தின் ரசிகர் உருவாக்க போஸ்டரை பகிர்ந்து Fire-ma என தெரிவித்துள்ளார்.

இந்த போஸ்ட்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Vignesh shivan appreciates fan’s art work

ரஜினியை ஹிந்தியில் அறிமுகப்படுத்தியவர்.; விஜய் விக்ரம் படங்களை தயாரித்த டி ராமராவ் மரணம்

ரஜினியை ஹிந்தியில் அறிமுகப்படுத்தியவர்.; விஜய் விக்ரம் படங்களை தயாரித்த டி ராமராவ் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு மற்றும் இந்தியில் 70 படங்களை இயக்கியவரும், தமிழில் வெற்றி படங்களைத் தயாரித்தவருமான மூத்த இயக்குநர்-தயாரிப்பாளர் டி ராமாராவ் இன்று (ஏப்ரல் 20) அதிகாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 83.

தி.நகர் பாலாஜி அவென்யூ முதல் தெருவில் வசிக்கும் ராமராவ் வயது மூப்பு காரணமாக அதிகாலை 12.30 மணியளவில் இறந்தார். இன்று மாலை 4 மணிக்கு கண்ணம்மாபேட்டை மயானத்தில் அவரது இறுதி சடங்கு நடைபெறுகிறது. இவருக்கு தாதினேனி ஜெயஸ்ரீ என்ற மனைவியும், சாமுண்டீஸ்வரி, நாக சுசீலா, அஜய் ஆகிய குழந்தைகளும் உள்ளனர்.

ராமராவ் என்டிஆர், ஏஎன்ஆர், ஷோபன் பாபு, கிருஷ்ணா, பாலகிருஷ்ணா, ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, ஜெயசுதா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றியவரான ராமாராவ், தெலுங்கில் நவராத்திரி, ஜீவன தரங்கலு, பிரம்மச்சாரி, ஆலுமகளு, யமகோலா, பிரசிடெண்ட் காரி அப்பாயி, இல்லாலு, பண்டனி ஜீவிதம், பச்சனி காபுரம் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

1979-ல் இந்தித் திரையுலகில் நுழைந்த அவர் அமிதாப் பச்சன், ஜீதேந்திரா, தர்மேந்திரா, சஞ்சய் தத், அனில் கபூர், கோவிந்தா, மிதுன் சக்ரவர்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அந்த கானூன் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.

விஜய் – அஜித்தின் வெற்றிக்காக காத்திருக்கும் ரஜினி.; நிலைமை தலைகீழ் ஆச்சே.. இனிமே இப்படித்தானா.?

ஜூடாய், ஜீவன் தாரா, ஏக் ஹி புக், அந்தா கானூன், இன்குலாப், இன்சாப் கி புகார், வதன் கே ரக்வாலே, தோஸ்தி துஷ்மணி, நாச்சே மயூரி, ஜான் ஜானி ஜனார்தன், ராவன் ராஜ், முகாப்லா, ஹத்காடி, ஜங் போன்ற சூப்பர் ஹிட் இந்தியில் திரைப்படங்களை இவர் தயாரித்தார்.

என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவின் கூற்றுப்படி, சென்னையை சேர்ந்தவர்கள் இந்தி படங்களை தயாரிக்கும் முறையான “மதராஸ் மூவி”-க்கு வழிவகுத்து அகில இந்திய சந்தைக்கு காரணமாக இருந்தவர் ராமாராவ் ஆவார்.

இந்தியத் திரைப்படத் துறையில் அவரது சிறந்த பங்களிப்பிற்காக பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் ராமாராவ் பெற்றார்.

ஸ்ரீ லக்ஷ்மி புரொடக்ஷன்ஸ் பேனரில் தமிழ் படங்களை தயாரித்த இவர், விக்ரம், விஜய், ஜெயம் ரவி, விஷால் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படங்களை தயாரித்தார்.

தில், யூத், அருள், சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், மலைக்கோட்டை போன்ற சூப்பர் ஹிட் படங்கள் இவர் தயாரித்தவையே.

இந்தியாவில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஃப்ளெக்சிபிள் குழாய்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமான மெட்ராஸ் ஹைட்ராலிக் ஹோஸ் பிரைவேட் லிமிடெட் தலைவராகவும் இவர் இருந்தார்.

Veteran director T Rama Rao passed away at 83 in Chennai

பிரியா இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட 80 நடிகர்கள் இணைந்த ‘அனந்தம்’

பிரியா இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட 80 நடிகர்கள் இணைந்த ‘அனந்தம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் இணைய ஓடிடி உலகில் ஜீ5 தளம், தொடர்ந்து பல சிறந்த படைப்புகளை ரசிகர்களுக்கு அளித்து வருகிறது.

அந்த வகையில் இத்தளத்தின் அடுத்த படைப்பாக ஜீ5 ஒரிஜினல் “அனந்தம்” ZEE5 ஒரிஜினல் சீரீஸ், 2022 ஏப்ரல் 22 ஜீ5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.

“கண்ட நாள் முதல்” “கண்ணாமூச்சி ஏனடா” வெற்றி படங்களை இயக்கிய பிரியா V இயக்கத்தில், நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பில், எட்டு அத்தியாயங்கள் கொண்ட ZEE5 ஒரிஜினல் சீரீஸாக உருவாகியுள்ளது “அனந்தம்.”

இந்த தொடரில் பிரகாஷ்ராஜ் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் அரவிந்த் சுந்தர், சம்பத், விவேக் பிரசன்னா, வினோத் கிஷன், மற்றும் ஜான் விஜய், விவேக் ராஜ்கோபால், இந்திரஜா, சம்யுக்தா, அஞ்சலி ராவ் மற்றும் மிர்னா மேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

அனந்தம் ZEE5 ஒரிஜினல் சீரீஸ் பத்திரிகையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இயக்குநர் பிரியா V பேசியதாவது….

நம்மை சீட்டில் கட்டிப்போடும் கை-விலங்கு….; விலங்கு விமர்சனம் 4/5

வனவாசம் முடித்து மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். முரளி சார், கௌசிக் இருவருக்கும் நன்றி. கண்ட நாள் முதல் படத்தில் இருந்தது போல் ஒரு சிறு நம்பிக்கையில் தான் இதை தொடங்கினேன். எல்லோரும் இதில் அதே நம்பிக்கையோடு உழைத்துள்ளார்கள். பிரகாஷ் ராஜ் சாருக்கு என் வாழ்க்கையில் முக்கிய இடமுண்டு; எனக்கு வாய்ப்பு கொடுத்தவர்.

அவரை தவிர இந்த ரோலை யாரும் செய்ய முடியாது. ஜான் விஜய், சம்பத் என அனைவரும் அட்டகாசமாக நடித்துள்ளார்கள். இதில் எட்டு அத்தியாயத்திலும் தனித்தனி கதை இருக்கும், அதே நேரத்தில் பின்னணியில் ஒரு ஹைப்பர்லிங்க் தொடர்பு இருக்கும். இது ஒரு அற்புதமான அனுபவம். இளையராஜா சாருக்கு நன்றி அவருக்கு அவரது இசைக்கு ஒரு தொடரை அர்ப்பணித்துள்ளோம். இந்த ஒரிஜினல் சீரீஸ் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.

ஜீ5 சார்பாக கௌசிக் நரசிம்மன் பேசியதாவது…

மீடியா நண்பர்களுக்கு வணக்கம், வழக்கமாக மாதாமாதம் புது புது தொடர்களுடன் உங்களைச் சந்தித்து வருகிறோம். இது உண்மையிலேயே புதுமையான ZEE5 ஒரிஜினல் சீரீஸ்.

நிஜமாகவே தொடரை பார்க்கும் போது அதை உணர்வீர்கள். ஒரு வீடு பல ஞாபகங்களை புதைத்து வைத்திருக்கும், அந்த வீட்டின் மேல் பயணமாகும் கதை. கேட்கும் போதே மிக சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு வருடமாக உழைத்து உருவாக்கியுள்ளோம். உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். நன்றி.

ஜீ5 சார்பில் சிஜு பிரபாகரன் பேசியதாவது…

முதலில் இதை ஆரம்பிக்கும் போது ஆந்தாலஜி செய்ய வேண்டாமென முடிவெடுத்திருந்தோம், ஆனால் இது ஒரு ஆந்தாலஜி, ஒரு வீட்டின் மீது நிகழும் கதை. பிரியா சொன்ன கதை மிக உணர்வுப்பூர்வமாக இருந்தது.

இத்தொடரில் நடித்த அனைவருமே அட்டகாச நடிப்பை தந்துள்ளார்கள். இந்த ஒரிஜினல் சீரீஸ் எட்டு அத்தியாயங்கள் கொண்டது. தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்குமென நம்புகிறோம். நன்றி.

ஹேப்பி யூனிகார்ன் சார்பில் V. முரளி ராமன் பேசியதாவது…

எப்போதும் டீம் ஒர்க் வெற்றி பெறும் என்பார்கள், அது இந்த தொடரில் நிரூபணமாகியுள்ளது.

இது மேலும் வெற்றி பெறுவது உங்கள் கைகளில் தான் உள்ளது. பிரியா முதன் முதலில் சொன்னபோதே எங்களுக்கு கதை பிடித்திருந்தது. சொன்னவுடனே கௌசிக்கும் ஆரம்பிக்க சொல்லிவிட்டார். ஜீ5 இத்தொடரில் மிகப்பெரிய ஒத்துழைப்பை தந்தார்கள்.

1964 – 2015 ஒரு வீட்டில் நடக்கும் கதை. ஒரு வீட்டில் நடப்பதால் பல இடங்களுக்கு அலைந்தோம், கடைசியில் ஆச்சி ஹவுஸில் சிறு சிறு வேலைகளை செய்து இத்தொடரை எடுத்தோம்.

இத்தொடரில் ஆர்ட் டைரக்டரின் பங்கு மிக முக்கியம். சூர்யா மிகச் சிறப்பாக செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் பகத் மிகப்பெரிய பலமாக இருந்தார். மொத்த குழுவும் மிகப்பெரிய அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார்கள். எட்டு அத்தியாயங்களில் நீங்கள் ஏற்கனவே கேட்ட பாரதியார் பாடல்களை புதுமையான இசையில் தந்துள்ளோம்.

நடிகர் பிரகாஷ் ராஜ், இயக்குனர் பிரியா மீது நம்பிக்கை வைத்து உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். 80 நடிகர்களுக்கு மேல் நடித்துள்ளார்கள். அவர்களின் உழைப்புக்கு நன்றி. இந்த ஒரிஜினல் சீரீஸ் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். நன்றி.

ஒளிப்பதிவாளர் பகத் பேசியதாவது….

இது எனது முதல் ஒரிஜினல் சீரீஸ். முரளி சார் பிரியா மேடம் இருவருக்கும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. ஒரு கதைக்குள் நிறைய பயணிக்க ஒரிஜினல் சீரீஸ் மிக வசதியாக இருக்கிறது, ஒரு பெரிய முழு நீள திரைப்படத்தை போல் பிரியா மேடம் அழகாக செய்துள்ளார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிக சிறப்பாக பணியாற்றியுள்ளார்கள். தமிழில் மிகப்பெரிய இடத்தை அடைந்துள்ள ஜீ5 இந்த தொடரை வெளியிடுவது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் A.S. ராம் பேசியதாவது…

முரளி ராமன் சார் பிரியா மேடம் இருவரால் தான் இங்கு இருக்கிறேன், இருவருக்கும் நன்றி. ஜீ5 லிருந்து தந்த ஊக்குவிப்பு மிக பெரிய உற்சாகத்தை தந்தது. இந்த தொடரில் பணியாற்றியது கரும்பு தின்ன கூலி கொடுத்தது போல தான். என் டீமிற்கு நன்றி. தொடரைப் பார்த்து உங்கள் பார்வையை சொல்லுங்கள் நன்றி.

நடிகர் விவேக் பிரசன்னா பேசியதாவது..

இருள் என்பது குறைந்த ஒளி என்றான் பாரதி. அனந்தம் இருந்தால் அங்கு ஒரு நம்பிக்கையும் இருக்கும். அதை தான் இந்த அனந்தம் வீடும் சொல்கிறது. அனந்தம் உங்கள் எல்லோருக்கும் பிடித்தமான பயணமாக இருக்கும். நன்றி.

ஹேப்பி யூனிகார்ன் சார்பில் V. முரளி ராமன் தயாரிக்க, அனந்தம் ஒரிஜினல் சீரீஸில் இயக்குனர் பிரியா V பல பணிகளை செய்துள்ளார்.

திரைக்கதை, எழுத்து மற்றும் வசனங்களுடன், எட்டு எபிசோடுகள் முழுவதும் ஒரு தடையற்ற கதையைச் சொல்லி அசத்தியுள்ளார் இயக்குநர் பிரியா V.

திரைக்கதை – பிரியா V, ராகவ் மிர்தாத், ப்ரீத்தா ஜெயராமன் & ரீமா ரவிச்சந்தர் | எழுத்தாளர் – பிரியா V | வசனங்கள் – ப்ரியா V & ராகவ் மிர்தாத் | ஒளிப்பதிவு – பகத் | தயாரிப்பு வடிவமைப்பாளர் – சூர்யா ராஜீவன் | இசை – A.S. ராம் | எடிட்டர் – சதீஷ் சூர்யா

ஒரிஜினல் தொடர்கள் எனும்போது, ஓடிடி பார்வையாளர்களின் முக்கிய தேர்வாக ஜீ5 விளங்குகிறது.

‘விலங்கு’ முதல் ‘முதல் நீ முடிவும் நீ’ வரை இதில் வெளியான கதைகள் உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அஜித்தின் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ஜீ5 இல் வெளியான ஒரு வாரத்திற்குள் 500 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை எட்டி உலகளாவிய பிளாக்பஸ்டர் சாதனை படைத்துள்ளது.

இப்படம் தமிழ் / தெலுங்கு / கன்னடம் / இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. 12 மொழிகளில் 3,500 திரைப்படங்கள், 500+ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், 4,000+ இசை வீடியோக்கள், 35+ தியேட்டர் நாடகங்கள் மற்றும் 90+ லைவ் டிவி சேனல்கள், என ஜீ5 ஆனது உலகம் முழுவதும் உள்ள அதன் பார்வையாளர்களுக்கு நிகரற்ற உள்ளடக்கத்தை வழங்குகிறது.

இப்போது, ஜீ5 ஆண்டு சந்தா  சிறப்பு விலையில் கிடைக்கிறது. ரூ 599/- மட்டுமே!

Prakash Raj plays important role in Anandham

More Articles
Follows