ரஜினியாக வாழ்வது அப்படியென்ன கஷ்டம்.? ரஜினியிடம் ஆர்.ஜே.பாலாஜி கேள்வி

ரஜினியாக வாழ்வது அப்படியென்ன கஷ்டம்.? ரஜினியிடம் ஆர்.ஜே.பாலாஜி கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2point0 music event hostதுபாய் நாட்டில் 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் லைக்கா தயாரிப்பளர் சுபாஷ்கரன், ரஜினிகாந்த், அக்சய்குமார், எமிஜாக்சன், ஏஆர்.ரஹ்மான், ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவின் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை மூவர் தொகுத்து வழங்கினர்.

தமிழுக்கு ஆர்.ஜே.பாலாஜியும், தெலுங்குக்கு ராணா டக்குபதியும் மற்றும் இந்திக்கு கரண் ஜோஹர் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

அப்போது ஆர்.ஜே.பாலாஜி, ரஜினியை பார்த்து, நான் ஒரு கட்டுரையில் ரஜினியாக வாழ்வது கஷ்டம். அவருக்கு மட்டுமே ரஜினியாக வாழ்வது எவ்வளவு கஷ்டம் என்பது தெரியும் என்கிறார்கள்? அது ஏன்? என்றார்.

அதற்கு பதிலளித்து ரஜினி கூறியதாவது…

ஒருவேளை ஆண்டவன் மேல நம்பிக்கை இல்லையின்னா ரஜினிகாந்தா வாழ்றது கஷ்டமா இருந்திருக்கலாம்.

நம்பிக்கை இருந்தனால வாழ்றது சுலபமாகிடுச்சி.” என்றார்.

Why its difficult to live as Rajini RJ Balaji question to Rajini

rajini with his grand sons

துபாய் நாட்டை அதிர வைத்த 2.0 இசை வெளியீட்டு விழா

துபாய் நாட்டை அதிர வைத்த 2.0 இசை வெளியீட்டு விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2point0 movie music launched at Dubaiரஜினிகாந்த் நடிப்பில் தயாரான 2.0 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் பிரம்மாண்டமான முறையில் நடை பெற்றது.

இந்த விழாவில் ரஜினிகாந்த், ஏ.ஆா்.ரகுமான், சங்கர், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த இசை வெளியீட்டு விழா துபாயில் நள்ளிரவில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்றது.

12 ஆயிரம் பேர் இந்நிகழ்ச்சியைப் பார்க்க இலவச அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

துபாயில் உள்ள பெரிய மால்களில் ரூபாய் 2 கோடி செலவில் பிரம்மாண்ட எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டு இந்நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

நிகழ்ச்சியில் ஏஆர்.ரகுமானும், ஷங்கரும் ரயில் வடிவிலான வாகனத்திலேயே மேடைக்கு வந்தனா்.

ரஜினிகாந்த் அரங்கத்திற்குள் வரும்போது முத்து படத்தில் இடம் பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி பாடலின் தீம் சாங் ஒலிக்கப்பட்டது.

ரஜினி மேடைக்கு ஏறியபோது கரவொலி அடங்க வெகு நேரமானது.

லதா ரஜினி, சௌந்தர்யா ரஜினி மற்றும் தனுஷ் உடன் அவரது மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோரும் குடும்பத்துடன் இந்த விழாவில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 125 சிம்பொனி கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நேரலையாக நடத்தினார்.

மேலும் 2.0 படத்திலிருந்து ஒரு பாடலை இந்நிகழ்ச்சியில் நேரலையாக இசையமைத்தார்.

இதனைத் தொடா்ந்து 2.0 படத்தில உள்ள இரண்டு பாடல்கள் முதல்கட்டமாக வெளியிடப்பட்டது.

பாடல் வெளியான சில மணித்துளிகளிலேயே பாடல்கள் இணையத்தில் வைரலாகத் தொடங்கின.

தற்போது வரை அக். 28ல் வரை ட்ரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

rajini welcome

2.0 இசை வெளியீட்டு விழாவில் இளைஞர்களுக்கு ரஜினி அட்வைஸ்

2.0 இசை வெளியீட்டு விழாவில் இளைஞர்களுக்கு ரஜினி அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini says Support Good movies Dont hurt anybody in Social Mediasஷங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் நடைபெற்றது.

இதில் கலந்துக் கொண்ட ரஜினிகாந்திடம் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு ரஜினிகாந்த் பதிலளித்தாவது…

பணம், பேர், புகழ், ஓர் அளவுக்குத்தான் சந்தோஷத்தை கொடுக்கும். அது இல்லாதப்போ கஷ்டமாவும் இருக்கும். அது வேடிக்கையான விஷயம்.

நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுங்க. சோஷியல் மீடியாவுல யாரையும் காயப்படுத்துற போல பேசாதீங்க.

நம்ம அடையாளம், கலாச்சாரத்த எப்பவும் மறக்காதீங்க” என்றார் ரஜினிகாந்த்.

Rajini says Support Good movies Dont hurt anybody in Social Medias

விஜய் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்… பாஜக.விலிருந்து ஆதரவு குரல்

விஜய் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்… பாஜக.விலிருந்து ஆதரவு குரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay pt selvakumarநடிகர் விஜய்க்கு ஆதரவாக மக்கள் தொடர்பாளரும் புலி படத் யாரிப்பாளருமான பிடி. செல்வகுமார் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது…

நடிகர் விஜய் மதத்திற்கு அப்பாற்பட்டவர். ஹெச்.ராஜா மத ரீதியாக பேசுவது வேதனை தருகிறது.

விஜய் அரசியலுக்கு வந்தால் அரசியல்வாதிகளைவிட நல்லது செய்வார்.

இளைய தலைமுறையினரை மதத்தின் பெயரால் பிரிக்காதீர்கள் என எச். ராஜாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாரதிய ஜனதா அறிவுசார் பிரிவின் இணை அமைப்பாளர் பதவியில் பி.டி.செல்வகுமார் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

If Vijay enter into politics he will do good things to Public says PTSelvakumar

மெர்சல் விவகாரம்: ஐகோர்ட் தீர்ப்புக்கு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

மெர்சல் விவகாரம்: ஐகோர்ட் தீர்ப்புக்கு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamilisai Soundararajan questions to Mersal judgement todayமெர்சல் படத்துக்கான சென்சார் சர்ட்டிபிகேட்டை திரும்பப் பெறக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை வழக்கறிஞர் அஸ்வத்தாமன் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை தள்ளுபடி செய்த கோர்ட் மெர்சல் படத்தில் அப்படி என்ன குறை கண்டீர்கள்? அதை படமாக மட்டுமே பார்க்க வேண்டும்.

அதில் பேசப்பட்ட வசனங்களால் பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது?

கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு என தீர்ப்பளித்தது கோர்ட்.

இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளதாவது…

சினிமா போன்ற பெரு ஊடகத்தில் தவறான கருத்தை பதிவிடுவதால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு என்றார்.

மேலும் ஒரு கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அது சுதந்திரம் இல்லை. கருத்து திணிப்பு என்றும் கூறியுள்ளார்.

Tamilisai Soundararajan questions to Mersal judgement today

வட சென்னைக்கு ஆபத்து; வருமுன் காப்போம்… கமல் தகவல்

வட சென்னைக்கு ஆபத்து; வருமுன் காப்போம்… கமல் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan tweets about VadaChennai peoples issueவட சென்னையில் உள்ள பகுதி எண்ணுர். இந்த எண்ணுர் கழிமுகத்தை உதாசீனப்படுத்தினால் வட சென்னைக்கு ஆபத்து உருவாகும் என கமல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மீனவ மக்களின் வாழ்வதாரமாக விளங்கும் சென்னையிலுள்ள கொசஸ்தலை ஆற்றில் ஏராளமான கழிவுகள் கொட்டப்படுகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பல வருடங்களாக போராடி வருகின்றனர்.

ஆனால் அவர்களின் குரலுக்கு தமிழக அரசு செவிசாய்க்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார் கமல்ஹாசன்.

மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் முனையங்களை நடுஆற்றில் கட்டியுள்ளன.

அவர்களுக்கு கொடுக்கும் முன்னுரிமையை மக்களுக்கு அரசு கொடுப்பத்தில்லை.

ஆபத்து வந்தபின் கூப்பிட்டு கதறாமல் வருமுன் காப்போம் என மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஓரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து.

கோசஸ்தலாயாற்று பிரச்சனை பற்றி நான் எழுதியது முழுவதுமாக வந்து சேரவில்லை என்ற புகார்கள் வந்தன. மன்னிக்க. முழுவதும் இக்கீச்சில் இணைத்துள்ளேன்

காட்டுக்குப்பம், முகத்துவாரக்குப்பம், சிவன்படைவீதி குப்பத்து மீனவ நண்பர்களின் குரலை ஊடகங்கள் தயவாய் உயர்த்த வேண்டும்.

காட்டுக்குப்பத்து பெண்களும் இளைஞர்களும். என் குரலுக்கு நன்றியைப்பதிவு செய்தது நெகிழவைக்கிறது.நான் செய்து உதவியல்ல கடமை.விரைவில் சந்திப்போம்.

Kamalhassan tweets about VadaChennai peoples issue

kamal tweet vada chennai

More Articles
Follows