வேதாளம்-தெறி சாதனைகளை முறியடித்தது விவேகம்

வேதாளம்-தெறி சாதனைகளை முறியடித்தது விவேகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivegamகடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி அஜித் நடிப்பில் விவேகம் வெளியானது.

இது கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்த போதிலும் வசூல் வேட்டை செய்து வருகிறது.

இதற்கு முன் வெளியான வேதாளம் படம் முதல் நாளில் தமிழக அளவில் ரூ. 15.5 கோடியை மட்டுமே வசூல் செய்தது.

விவேகம் படம் முதல்நாளில் மட்டும் ரூ. 17 கோடியும், இரண்டாம் நாளில் 12 கோடியும் பெற்று மொத்தம் இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 29 கோடி வசூலித்துள்ளது.

தெறி படம் முதல்நாளில் தமிழகளவில் ரூ. 14 கோடியை மட்டுமே வசூலித்தது.

இதன் மூலம் வேதாளம் , தெறி சாதனைகளை விவேகம் முறியடித்துள்ளது.

விவேகம் டிக்கெட்டும் ரஜினி-கமலின் அரசியலும்… திருப்பூர் சுப்ரமணியம்

விவேகம் டிக்கெட்டும் ரஜினி-கமலின் அரசியலும்… திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tirupur Subramaniemவிவேகம் படத்தின் டிக்கெட்டுக்கள் அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 10 மடங்கு கூடுதலாக விற்கப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் தியேட்டர் நிர்வாகத்தை குறை கூறி வந்தனர்.

படத்தை அதிக விலைக்கு தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் விற்கும் போது வாங்கும் தியேட்டர்கள் அப்படிதான் டிக்கெட் விலையை விற்க வேண்டியுள்ளது என்று தங்களது நிலைப்பாட்டை தெரிவித்தனர்.

இதுகுறித்து பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தன் கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது…

“பொதுமக்கள் யாருமே இந்த விலை கொடுத்து படம் பார்ப்பதில்லை. ரசிகர்கள் மட்டுமே பார்ப்பார்கள். ’பாகுபலி’ படத்துக்கு மக்கள் கூட்டம் வரக்காரணம் நியாயமான டிக்கெட் விலை மட்டுமே.

இந்த விற்பனைக்கு தயாரிப்பாளர், நடிகர், விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர் என அனைவருமே தான் காரணம்.

தமிழக அரசும் சரியாக டிக்கெட் விலையை நிர்ணயம் செய்து முறையாக அறிவிக்க வேண்டும்.

சிஸ்டம் சரியில்லை, நாட்டைத் திருத்த வேண்டும் என்று பெரிய நடிகர்கள் சொல்லி வருகிறார்கள்.

முதலில் நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும். முன்னணி நடிகர்கள் அனைவரும் என்னுடைய படத்துக்கு 100 ரூபாய் கட்டணத்தைத் தாண்டி டிக்கெட் விற்பனை செய்யக் கூடாது என்று சொல்ல வேண்டியதானே.

அப்படி விற்பனை செய்தால் என்னுடைய ரசிகர்கள் போய் ரகளை செய்வார்கள் என சொல்லலாமே.

எனது திரையரங்கில் 100 ரூபாய் டிக்கெட் + ஜிஎஸ்டி வரி +சிஜிஎஸ்டி சேர்த்து 118 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறேன். 4 திரையரங்கிலும் மொத்தம் 80 காட்சிகள் ‘விவேகம்’ திரையிட்டு இருக்கிறேன்.

அனைத்து காட்சிகளுக்குமே டிக்கெட் விற்பனை பிரமாதமாக இருக்கிறது.

இந்த விஷயம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் மற்றும் விநியோகஸ்தர் சங்கம் பேச வேண்டும்.

திரையரங்குகளுக்கு மக்கள் வர வேண்டுமானால் டிக்கெட் விலை முதலில் நியாயமாக இருக்க வேண்டும். 100 ரூபாய் அல்லது 120 ரூபாய்க்கு டிக்கெட் விற்றால் மட்டுமே மக்கள் வருவார்கள்.

தயாரிப்பாளர் சங்கமும் எந்த நடிகரின் படம் வெளியானாலும், 100 ரூபாய்க்கு மேல் டிக்கெட் விற்கக்கூடாது என்று ஏன் சொல்வதில்லை? 300 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை டிக்கெட் விற்று வருகிறார்களே, இப்போது எங்கே போனது தயாரிப்பாளர் சங்கம்.

ஏன் அந்த நடிகரை கண்டால் பயமா? பெரிய நடிகர்களை கண்டால் தயாரிப்பாளர் சங்கம் பயப்படுகிறதா?

பெரிய நடிகர்களுக்கு டிக்கெட் விலையைப் பற்றி கவலையில்லை. ஏனென்றால் அந்த விலைக்கு விற்றால் மட்டுமே இவர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்க முடியும். திரையரங்க உரிமையாளர்களைப் பற்றி வாட்ஸ்-அப்பில் என்னவெல்லாமோ பேசி வரும் தயாரிப்பாளர் சங்கம், இப்பிரச்சினைப் பற்றி ஏன் பேச மறுக்கின்றது.

ஒவ்வொரு திரையரங்க உரிமையாளரிடம் முன்பணம் என்ற பெயரில் 40 லட்ச ரூபாய் வரை கேட்கிறீர்கள். அவ்வளவு முன்பணம் வாங்கினீர்கள் என்றால், இவ்வளவு டிக்கெட் விலை விற்காமல் என்ன செய்வார்கள்? சின்ன படங்களுக்கு திரையரங்குகள் தர மறுக்கிறீர்கள் என்று பேசுபவர்கள், பெரிய படங்கள் வெளியாகும் போது மட்டும் ஏன் எதுவுமே பேச மறுக்கிறார்கள்.

தயாரிப்பாளர் சங்கம் முதலில் பெரிய நடிகர்களை அடக்க வேண்டும். அதை செய்வதை விடுத்து, அந்த நடிகர்கள் 50 கோடி ரூபாய், 70 கோடி ரூபாய்
கேட்டாலும் வரிசையில் நின்று கொடுத்துவிட்டு, நீங்கள் விநியோகஸ்தர்களை காலி செய்து, விநியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்களை காலி செய்கிறார்கள்.

ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் அநியாய விலைக்கு டிக்கெட் விற்கிறார்கள் என்று பேசுகிறார்கள். தற்போது பிரச்சினை எங்கிருந்து தொடங்குகிறது என்று நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

ட்விட்டரில் ஆட்சி சரியில்லை என்று பேசும் நடிகர்கள், இப்பிரச்சினை தொடர்பாக பேசச் சொல்லுங்கள் பார்க்கலாம். இது அக்கிரமக் கொள்ளை என்று போட வேண்டியதானே.

நம்ம பிரச்சினையை எல்லாம் கண்டு கொள்வதை விடுத்து, ஆட்சியாளர்களை குறைச்சொல்ல தொடங்கிவிட்டோம். இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு முன்னணி நடிகராவது குரல் கொடுக்கத் தயாரா?

எந்தவொரு படமாக இருந்தாலும் இவ்வளவு விலை தான் டிக்கெட் என்று திரையரங்க உரிமையாளர்கள் முடிவெடுக்க வேண்டும்.”

என்று ஆதங்கமாக பேசியுள்ளார் திருப்பூர் சுப்ரமணியம்.

கிறிஸ்மஸ் தினத்தில் வெளியாகும் ஜிவி.பிரகாஷின் குப்பத்து ராஜா

கிறிஸ்மஸ் தினத்தில் வெளியாகும் ஜிவி.பிரகாஷின் குப்பத்து ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash in Kuppathu Rajaசூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் படமான குப்பத்து ராஜா படத்தலைப்பில் ஜிவி பிரகாஷ் நடித்து வருகிறார்.

நடன இயக்குனர் பாபா பாஸ்கர் முதன்முறையாக இப்படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார்.

இதில் ஜிவி. பிரகாஷ் உடன் பூனம் பாஜ்வா, பல்லக் லால்வானி, பார்த்திபன், M S பாஸ்கர், யோகி பாபு மற்றும் ‘ஜாங்கிரி’ மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் நாயகன் ஜிவி. பிரகாஷ் இசையமைக்க, மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘S Focuss’ சார்பாக சரவணன், சிராஜ் மற்றும் டி. சரவணன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தை இந்தாண்டு 2017 கிறிஸ்மஸ் தினத்தில் வெளியிட முடிவெடுத்துள்ளனர்

காரைக்காலில் விவேகம் படம் பார்த்த ரசிகர் மரணம்

காரைக்காலில் விவேகம் படம் பார்த்த ரசிகர் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith vivegamநேற்று முன்தினம் அஜித் நடித்த விவேகம் படம் உலகமெங்கும் வெளியானது.

இதில் புதுச்சேரியை சேர்ந்த காரைக்கால் பகுதியில் உள்ள இரண்டு தியேட்டர்களான பிஎஸ்ஆர் மற்றும் முருகராம் தியேட்டர்களிலும் இப்படம் வெளியானது.

அப்போது சர்புதீன் என்ற இளைஞர் காரைக்காலில் உள்ள முருகராம் தியேட்டரில் விவேகம் படத்தை தன் நண்பர்களுடன் பார்த்துள்ளார்.

இவர் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார்.

இவரது நண்பர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்லவே, அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்ட நண்பர்கள் கதறி அழுதுள்ளனர்.

சபுருதீனின் மனைவி இந்த திடீர் மரணம் குறித்து புகார் அளிக்கவே, தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Ajith fan died while watching vivegam movie in Karaikal Theatre

விவேகத்தை கிழித்த நீலசட்டை விமர்சகர்; விளாசிய விஜய்மில்டன்

விவேகத்தை கிழித்த நீலசட்டை விமர்சகர்; விளாசிய விஜய்மில்டன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay miltonநேற்று முன்தினம் அஜித் நடித்த விவேகம் படம் வெளியானது.

இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துக் கொண்டிருக்கிறது.

இப்படத்தை தனது யூடியுப் பக்கத்தில் கடுமையாக கலாய்த்து விமர்ச்சித்திருந்தார் புளூசட்டை புகழ் தமிழ் டாக்கீஸ் மாறன்.

எனவே அவருக்கு பதிலடிக்கும் கொடுக்கும் விதமாக இயக்குனர் ஒளிப்பதிவாளருமான விஜய்மில்டன் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

ஒரு படம் ரிலீஸ் என்பது ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளும் வலியை போன்றது.

குழந்தை பிறக்கும் முன்பு நல்ல ஆரோக்கியமான உணவுகளையே தாய் சாப்பிடுகிறாள்.

ஒருவேளை குழந்தை ஊனமாக பிறந்தால் யாரும் குழந்தையை உதாசீனப்படுத்துவதில்லை.

அது அவரவர் மனநிலையை பொறுத்தது என கடுமையாக சாடியுள்ளார்.

Director Vijay Milton reaction to negative review for Vivegam

இதோ அந்த வீடியோ பதிவு இங்கே…

விஜயகாந்த் மகனின் மதுரவீரன் ட்ரைலரை பார்த்ததும் வாங்கிய விநியோகஸ்தர்

விஜயகாந்த் மகனின் மதுரவீரன் ட்ரைலரை பார்த்ததும் வாங்கிய விநியோகஸ்தர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

madhura veeranபிரபல ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா இயக்கத்தில் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படம் “மதுரவீரன்” .

வி -ஸ்டுடியோஸ் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை அண்மையில் தான் விஜயகாந்த் வெளியிட்டார்,

இப்படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து வியந்து போய் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ஸ்ரீ சரவணபவா பிலிம்ஸ் ஏ.சீனிவாச குரு வாங்கியுள்ளார்.

இதன் நிர்வாக தயாரிப்பை ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி.பாலா கவனிக்கிறார்.

படப்பிடிப்பு முடியும் முன்பே படம் வியாபாரமாகியுள்ளது படம் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நாயகனாக நடித்து வரும் புதிய படம் தான் இந்த,’மதுரவீரன்’.

ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து இதன் கதை அமைக்கப் பட்டுள்ளது.

இப் படத்தில்,சண்முக பாண்டியனின் ஜோடியாக புதுமுகம் நாயகி மீனாட்சி நடிக்கிறார்.

இவர்களுடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் சமுத்திரகனி மற்றும் ‘வேல’ராமமூர்த்தி, மைம்கோபி, P.L.தேனப்பன், மாரிமுத்து, ’நான் கடவுள்’ராஜேந்திரன், பாலசரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதுடன் இயக்கும் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார், P.G.முத்தையா.

சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார், பாடல்கள் யுகபாரதி, எடிட்டிங் கே.எல்.பிரவீன், கலை விதேஷ், சண்டைப் பயிற்சி ‘ஸ்டன்னர்’ சாம்.

நடனம் சுரேஷ். நிர்வாக தயாரிப்பு கிருபாகரன் ராமசாமி. விஜி சுப்ரமணியன் தயாரிக்கிறார்.

Srinivasa Guru bagged the theatrical rights of Shanmuga Pandiyans MadhuraVeeran

More Articles
Follows