காலம் கடத்தும் காலா; விரைந்து வரும் விஸ்வரூபம் 2

காலம் கடத்தும் காலா; விரைந்து வரும் விஸ்வரூபம் 2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Viswaroopam 2 may release before Kaala releaseமார்ச் 1 முதல் அதாவது கடந்த 46 நாட்களாக தமிழ் சினிமாவில் எந்த ஒரு புதுப்படமும் ரிலீஸ் ஆகவில்லை.

தமிழ் சினிமாத்துறையில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளை சீராக்க தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் செய்து வருகிறது.

விரைவில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இந்த மாத இறுதிக்குள் வேலை நிறுத்தம் கைவிடப்படும் எனத் தெரிகிறது.
இதனிடையில் சென்சார் செய்யப்படும் தேதியின் அடிப்படையில் புதுப்படங்கள் ரிலீஸுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் பார்த்தால் ரஜினியின் காலா படத்திற்கு முன்பே கமலின் விஸ்வரூபம் 2 படத்திற்கு சென்சார் செய்யப்பட்டு விட்டது.

எனவே காலா ரிலீஸ்க்கு முன்பே விஸ்வரூபம் 2 வெளியாகும் என கூறப்படுகிறது.

ஜீன் மாதம் வரும் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு காலா ரிலீஸ் ஆகும் எனவும் ஒரு பக்கம் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

காலா மற்றும் விஸ்வரூபம் 2 ஆகிய இரண்டு படங்களுக்குமே ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Viswaroopam 2 may release before Kaala release

தமிழர்கள் ரத்தத்தில் ரஜினி ராஜவாழ்க்கை…; பாரதிராஜா கடும் தாக்கு

தமிழர்கள் ரத்தத்தில் ரஜினி ராஜவாழ்க்கை…; பாரதிராஜா கடும் தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Bharathiraja reaction to Rajinis tweet about Police attackகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது.

அப்போது சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என கடந்த 10 ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது.

அப்போது, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் போலீசாரை தாக்குவது போன்ற வீடியோ வெளியானது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஜினி தன் ட்விட்டரில் “வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் இருக்கும் காவலர்கள் தாக்கப்படுவது தான் என பதிவிட்டு இருந்தார்.

இதற்கு சீமான் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

தற்போது பாரதிராஜாவும் தன் கண்டனத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அதில்…

“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி முழு தமிழகமும் ஒரே குரலில் தங்கள் உணர்வுகளை எதிரொலித்த இந்த நேரத்தில், நம் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவையும் அறவழியில் போராடியது.

ஆனால், நம் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டு, நம் மீது கத்தி வைத்துப் பதம்பார்க்க நினைக்கிறது ரஜினியின் சமீபத்திய ட்விட்டர் பேச்சு.

நான் அவரைக் கேட்கிறேன்… எது வன்முறையில் உச்சகட்டம் ரஜினி அவர்களே? அறவழியில் போராடிய எம் தமிழர்கள் உங்களுக்கு வன்முறையாளர்களா? தமிழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியில் பேசும் பேச்சு இது.

தங்களுடைய திரைப்படம் வெளியாகும்போது மட்டும் பூச்சாண்டி காட்டும் ஒரு நடிகனை, தமிழ்த் திரையுலகம் சந்தித்ததே இல்லை. தமிழ்நாட்டிலும் சரி, உலக அளவிலும் சரி… தமிழன் கொட்டிக் கொடுத்த பணத்தில், சேர்த்துவைத்த செல்வத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?

இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்தபோது குரல் கொடுத்தீர்களா? நியூட்ரினோவுக்கு எதிராகக் களத்தில் இறங்கிப் போராடினீர்களா? இல்லை, ஓர் அறிக்கையாவது விட்டீர்களா? மீத்தேன் பற்றி ஏதாவது வாய் திறந்தீர்களா?

எதற்கும் வாய் திறக்காத நீங்கள், இன்று காவிரிக்காக ஒன்றுகூடிய தமிழர்களின் ஒற்றுமை உணர்வை வன்முறைக் கலாச்சாரம், இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்கிறீர்களே.

ஓ… இப்போதுதான் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது, நீங்கள் தமிழன் அல்லாத கர்நாடகக் காவியின் தூதுவன் என்று! உங்கள் வேஷம் மெல்ல மெல்லக் கலைகிறது. ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள்.

காவிரி பிரச்சினை பற்றி எரிந்தபோது வெந்து செத்தது எங்கள் தமிழினம், சேதமடைந்தது எங்கள் தமிழர் சொத்துகள்.

அங்குள்ள கலைஞர்கள் எல்லாம் ஒன்றுகூடி எதிர்க்குரல் கொடுத்த போதும், அங்குள்ள காவலர்கள் துரத்தி துரத்தி அடித்தபோதும், தமிழ்நாடு பதிவு எண் கொண்ட அனைத்து வாகனங்களையும் அடித்து நொறுக்கியபோதும், வாகன ஓட்டிகளை நிர்வாணப்படுத்தி அடித்தபோதும் வாய் திறக்காத நீங்கள், இன்று தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு, தமிழனிடம் உறிஞ்சிய ரத்தத்தில் ராஜ வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, எங்களையே வன்முறையாளர்கள் என்று பட்டம் சுமத்துகிறீர்கள்.

சீருடையில் இருந்தவரும் எங்கள் தமிழன் தான். எங்கோ கூட்டத்தில் அடையாளம் இல்லாத ஒருவன் அல்லது இந்த நிகழ்ச்சியைக் கறைபடுத்த நினைத்த ஒருவன் செய்த செயலுக்கு நாங்கள் வருந்துகிறோம்.
நீங்கள், எங்களுக்குள் சிண்டு முடிய வேண்டாம்.

நடந்த போராட்டம் தனி மனிதர்களுக்கானது அல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டுச் சாப்பாட்டிற்கும், உங்கள் வீட்டு குடிதண்ணீருக்கும் சேர்த்துத்தான் எங்கள் வீரத்தமிழ் இளைஞர்கள் பலர், காவல்துறை நடத்திய அடிதடியில் ரத்தம் சிந்தினார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

பேசும்போது, எதைப் பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேசுங்கள். இல்லையென்றால், எம் தமிழ் மக்களால் நீங்கள் ஓரம்கட்டப்படுவீர்கள். அந்த நாளும் வெகுதூரத்தில் இல்லை என்பதையும் நீங்கள் நன்கு உணர்வீர்கள் என்பதையும் உங்களுக்கு சொல்லிக்கொள்ள நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் பாரதிராஜா.

Director Bharathiraja reaction to Rajinis tweet about Police attack

விஜய்யுடன் மோதும் வரலட்சுமி; அடுத்த நீலாம்பரியா..?

விஜய்யுடன் மோதும் வரலட்சுமி; அடுத்த நீலாம்பரியா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thalapathy 62 stillsசன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய் 62 படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தில் விஜய்யின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மற்றொரு முக்கிய கேரக்டரில் வரலட்சுமி நடித்து வருகிறார்.

இவர்களுடன் ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இப்படம் அரசியல் கலந்த விவசாயத்தை சொல்லும் படமாக உருவாகி வருகிறது.

இதில் விஜய்யை எதிர்க்கும் பெண் அரசியல்வாதியாக வரலட்சுமி நடிக்கிறாராம்.

ரஜினி நடித்த படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் மிரட்டியிருந்தார் ரம்யா கிருஷ்ணன். அதுபோல் வரலட்சுமி மிரட்டுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இப்படம் 2018 தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டது.

ஆனால் கடந்த 45 நாட்களாக சினிமா ஸ்டிரைக்கால் (அதாவது 8 வாரங்களாக) எந்த படத்தின் சூட்டிங்கும் நடக்கவில்லை. எனவே இந்த படம் உள்பட நிறைய தமிழ் படங்களின் வெளியீட்டில் தாமதம் ஏற்படலாம் எனத் தெரிகிறது.

கோச்சடையான் வழக்கு; லதா ரஜினியின் மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்

கோச்சடையான் வழக்கு; லதா ரஜினியின் மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

latha rajinikanthரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சௌந்தர்யா முதன்முறையாக இயக்கிய படம் கோச்சச்டையான்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படம் கடந்த 2014-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

இந்த படம் எடுப்பதற்காக ஆட்பீரோ என்ற நிறுவனத்திடம் லதா ரஜினிகாந்த் அவர்கள் ரூ.10 கோடி கடன் வாங்கியிருந்தார்.

ஆனால் இந்த கடனில் ரூ. 1½ கோடி மட்டுமே திருப்பி கொடுத்திருந்தாராம்.

எனவே மீதமுள்ள ரூ. 8.5 கோடி கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பாக அந்த நிறுவனம் லதா ரஜினி மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் நிலுவைத் தொகையை 18 வாரங்களுக்குள் (ஜூலை 3-க்குள்) லதா ரஜினிகாந்த் செலுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

மீடியா ஒன் குளோபல் நிறுவனத்தின் சார்பில் லதா ரஜினிகாந்த் நிலுவைத் தொகையை வழங்கவும் உத்தரவிட்டது.

இந்த பாக்கியில், ரூ 9.2 கோடி வழங்கப்பட்டு விட்டது.*

மீதமுள்ள ரூ 80 லட்சத்தை விரைவில் கொடுத்துவிடுவோம், இந்த பாக்கிக்கும், லதா ரஜினிகாந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை – உச்சநீதிமன்றத்தில் மீடியா ஒன் நிறுவனம் இடைக்கால மனு அளித்திருந்தது.

ஆனால் மீடியா ஒன் நிறுவனத்தின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.

ஜூலை 3-ம் தேதிக்குள் லதா ரஜினிகாந்தோ, அவரை சார்ந்த நிறுவனமோ பாக்கியை செலுத்த வேண்டும் என்ற தங்களது முந்தைய உத்தரவு தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஜினிக்கு ட்விட்டர் எதற்கு? ஸ்வெட்டர் போதுமே… சீமான் கிண்டல்

ரஜினிக்கு ட்விட்டர் எதற்கு? ஸ்வெட்டர் போதுமே… சீமான் கிண்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and seemanகாவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை தமிழகத்தில் ஐபிஎஸ் போட்டியை நடத்தக் கூடாது என பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின.

அப்போது நடைபெற்ற போராட்டத்தின் போது, காவலர்களை சில போராட்டக்காரர்கள் தாக்கினர்.

இதை ரஜினி கடுமையாக விமர்ச்சித்திருந்தார். காவலர்கள் தாக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதாவது…

“காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், கர்நாடகாவில் கலவரம் வரும் என்றுதான் மத்திய அரசு கூறியது. தமிழ்நாட்டில் கலவரம் வரும் என்று கூறவில்லை.

ஏனென்றால் தமிழர்கள் அறவழியில்தான் போராடுவார்கள் என்று மத்திய அரசுக்கு தெரியும்.

கர்நாடகாவில் கேபிஎன் பேருந்துகள் எரிக்கப்பட்ட போது கூட தமிழர்கள் அறவழியை தான் மேற்கொண்டார்கள்.

கர்நாடகாவில் காவிரி விவகாரம் என்பது அரசியல், ஆனால் தமிழ்நாட்டை பொருத்தவரை அது உயிர் ஆதாரம். இரண்டையும் ஒப்பிட கூடாது.

நான் பல இடங்களுக்கு செல்கிறேன். பலருடன் போட்டோ எடுத்து கொள்கிறேன். என்னுடன் போட்டோ எடுப்பவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அன்று காவலர் தாக்கியது யார்? என்பது எனக்கு தெரியாது.

அன்று காவலருக்கு ஆதரவாக ரஜினி ட்வீட் போட்டார். ஆனால் சிறுமி ஆசிபா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தொடர்பாக ஏன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் எழுதவில்லை…?

பொழுது போகவில்லை என்றால் இமயமலை போய் ‘ஸ்வெட்டர்’ போடட்டும் இங்கு சென்னையில் உட்கார்ந்து ஏன் ட்விட்டர் போடுகிறார்.

காவிரிப் பிரச்னையை திசை திருப்பவே காவல்துறைக்கு ஆதரவாக ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்” என்று சீமான் பேசினார்.

தனி வெப்சைட் தொடங்கினார் ஸ்மைல் ப்யூட்டி கீர்த்தி சுரேஷ்

தனி வெப்சைட் தொடங்கினார் ஸ்மைல் ப்யூட்டி கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Keerthy Suresh launched new website for her latest updatesமுன்னாள் நடிகை மேனகாவின் 2வது மகள் கீர்த்தி சுரேஷ்.

மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் ஹீரோயின் ஆனவர்.

தமிழில் விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

தன்னுடைய அழகான சிரிப்பால் இளைஞர்களை குறுகிய காலத்தில் கவர்ந்திழுத்து முன்னணி நடிகையாக முன்னேறி வருகிறார்.

இதனையடுத்து தமிழில் உள்ள டாப் ஹீரோஸ் எல்லாருடனும் டூயட் பாடி வருகிறார்.

விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்து விட்டு தற்போது விக்ரம் ஜோடியாக ‘சாமி ஸ்கொயர்’ படத்திலும், விஷால் ஜோடியாக ‘சண்டக்கோழி 2’ படத்திலும் நடித்து வருகிறார்.

மீண்டும் விஜய்யுடன் இணைந்து தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார்.

இவையில்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கலக்கி வருகிறார்.

இந்நிலையில், தன் ரசிகர்களுக்காக தன்னைப் பற்றிய தகவல்கள் அடங்கிய https://www.keerthysuresh4us.com என்ற ஒரு வெப்சைட்டைத் தொடங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

அதில் அவரின் புகைப்படங்கள், பாடல் காட்சிகள், படத்தின் போஸ்டர்கள், வாங்கி விருதுகள், இன்டர்வியூஸ் ஆகியவை உள்ளன.

Keerthy Suresh launched new website for her latest updates

More Articles
Follows