தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ என்ற நாவலை திரைப்படமாக்க பலர் முன் வந்தனர்.
எம்ஜிஆர், கமல்ஹாசன் தொடங்கி பலரும் முயற்சித்த நிலையில் கிட்டத்தட்ட 50 – 60 வருடங்களுக்கு பிறகு அதை சாத்தியமாக்கி இன்று சரித்திர சாதனை படைத்து வருகிறார் மணிரத்னம்.
‘பொன்னியின் செல்வன்’ என்ற நாவலை திரைப்படமாக்கி இரு பாகங்களாக உருவாக்கினார். முதல் பாகம் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்று 500 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது.
தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என பல மொழிகளில் வெளியானது. தற்போது அதன் இரண்டாம் பாகமும் அதே போல நாளை 2023 ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
முதல் பாகம் வெளியான போதும் இரண்டாம் பாகம் வெளியாகிற போதும் இந்த படம் தொடர்பாக கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு படக் குழுவினர் சென்று ப்ரோமோஷன் செய்து வந்தனர்.
படக்குழுவின் இந்த பிரமோஷன் சுற்றுப்பயணத்திற்கு சோலா டூர் சோழர்களின் பயணம் என்று பெயரிட்டு இருந்தனர்.
நாளை இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில் இன்று ஏப்ரல் 27 ஆரம்பித்த சென்னையிலேயே நிறைவு செய்தனர்.
இன்று விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி, பார்த்திபன், ஐஸ்வர்ய லட்சுமி லைக்கா தமிழ் குமரன் உள்ளிட்ட பலரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
எங்களின் இந்த திரைப் பயணம் கிட்டத்தட்ட இரண்டு மூன்று வருடங்களாகி விட்டது. நாளை இந்த திரைப்படம் உங்கள் பார்வைக்கு வருகிறது.
இத்துடன் எங்கள் சோழர்களின் பயணம் நிறைவு பெறுகிறது என மேடை ஏறிய படக்குழுவினர் கண்கலங்கி பேசினர்.
முக்கியமாக த்ரிஷா ஐஸ்வர்ய லட்சுமி ஷோபித்தா விக்ரம் உள்ளிட்டோர் கண் கலங்கிய படியே பேசினர் என்பது.
கார்த்தி மற்றும் ஜெயம் ரவி கண்கலங்கவில்லை என்றாலும் அவர்கள் இருவரும் உருக்கமாக பேசினர். கார்த்தி என் தம்பியை போன்றவர் என்று பேசிய ஜெயம் ரவி இனி எப்போதுதான் நாங்கள் அடிக்கடி பேசிக் கொள்வோம்.. தொடர்பில் இருப்போம் என்று உறுதிமொழி அளித்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
Vikram Trisha Karthi Jayam Ravi emotional moment