கிறிஷ்டியன் பேர்ல் – விக்ரம்.; தல தோனி – ரஞ்சித்.; தங்கலானை பாராட்டிய ஜீவி.பிரகாஷ்

கிறிஷ்டியன் பேர்ல் – விக்ரம்.; தல தோனி – ரஞ்சித்.; தங்கலானை பாராட்டிய ஜீவி.பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் பேசியதாவது…

எனக்கு மிக முக்கியமான, வித்தியாசமான படம் தங்கலான். இப்படத்தின் இசையை இண்டியன் டிரைபலையும் இண்டர்னேசனலையும் மிக்ஸ் பண்ணி புதுமையாகச் செய்துள்ளோம், அதை எல்லோரும் கவனித்துப் பாராட்டுகிறார்கள். தங்கலான் ஒரு கோல்டன் டீம், எல்லோரும் அவ்வளவு உழைத்திருக்கிறார்கள்.

எல்லோரும் அவர்களுடைய பெஸ்ட்டை தந்துள்ளார்கள். விக்ரம் சார் இந்தப்படத்தில் மிகப்பெரிய உழைப்பைத் தந்திருக்கிறார், ஒவ்வொரு படத்திலேயும் அவர் பாத்திரத்திற்காக மெனக்கெடுவார் ஆனால் இந்தப்படத்தில் கதையும் அவருக்கு வித்தியாசமாக அமைந்திருக்கிறது.

இந்தியாவின் கிறிஷ்டியன் பேர்ல் போல உழைத்திருக்கிறார். என்ன கஷ்டப்பட்டாலும் அதை வெளிக்காட்டமாட்டார். ஒவ்வொரு படத்திலும் பா ரஞ்சித் வேறு உயரத்தைத் தொடுகிறார், அவர் படத்தை வடிவமைக்கும் விதம் பிரமிப்பாக இருக்கிறது. அவருக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைக்கும் எப்போதும் கேப்டன் கூல் தோனி மாதிரி கூலாக இருக்கிறார்.

கலை இயக்குநர் SS மூர்த்தி இந்தப்படத்தில் அட்டகாசமாக உழைத்திருக்கிறார். எடிட்டர் மிகச்சிறப்பாக எடிட் செய்திருக்கிறார். கிஷோர் விஷுவல்கள் அருமையாக வந்திருக்கிறது. இந்தப்படம் உங்கள் எல்லோரையும் அசரவைக்கும் அனைவருக்கும் நன்றி.

Ranjith is Cool like Cricketer Dhoni says GV Prakash

தங்கலான் மனதில் தங்குவான்.; தமிழ் சினிமா பெயரை உலகம் முழுக்க சொல்லும்.. – ஞானவேல்ராஜா

தங்கலான் மனதில் தங்குவான்.; தமிழ் சினிமா பெயரை உலகம் முழுக்க சொல்லும்.. – ஞானவேல்ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, சென்னையில் படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில் பிரமிக்க வைக்கும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங்க் வீடியோ பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்குத் திரையிடப்பட்டது.

இந்நிகழ்வினில் கலந்துக் கொண்டு….

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா பேசியதாவது…
சீயான் விக்ரம் சாருக்கு ஸ்டூடியோ க்ரீன் பிலிம்ஸ் நிறுவனத்துடன் முதல் படம், மிகவும் அன்பானவர், கடின உழைப்பாளி தன் வேலையை மிக அர்ப்பணிப்புடன் செய்பவர். நானும் பா ரஞ்சித்தும் விக்ரம் சாரை சந்திக்கச் சென்ற போது என்ன தேதிகள் வேண்டும் என்றார்.

அந்த தேதிகள் தள்ளிப் போனபோது கூட அதே கெட்டப்பில் தன்னை மாற்றிக்கொள்ளாமல் இந்தப்படத்துக்காக காத்திருந்து உழைத்தார். அவர் அர்ப்பணிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டோம். அவரது உழைப்பு மிகப்பெரிது. இந்தப்படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. ரஞ்சித் சார் எப்படிப்பட்ட படம் வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் முதல் படத்திலிருந்து இது தான் செய்ய வேண்டும் என முடிவு செய்து மிகச்சரியாகச் செய்து வருகிறார். அதற்கான வெற்றியையும் அவர் பெற்று வருகிறார்.

இந்தப்படம் அவருக்கு இன்னும் பெரிய இடத்தைப் பெற்றுத்தரும். ஜீவி பிரகாஷ் எங்கள் வீட்டுப் பிள்ளைப் போல இந்தப்படத்திற்காகச் சிறந்த இசையைத் தந்துள்ளார். கிஷோர் ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார், எல்லோரும் விஷுவல் பார்த்து அவரைப்பற்றிக் கேட்டார்கள். அவர் மட்டுமில்லாமல் கலை இயக்கம், ஸ்டண்ட் என எல்லாத் துறையும் இந்தப்படத்தில் பேசப்படும்.

இந்த மாதிரியான ஒரு படத்தில் நானும் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி. இது உலக அளவில் அனைவரும் ரசிக்கும்படியான படமாக இருக்கும். நம் தமிழ் சினிமாவின் பெயரை உலகம் முழுக்க இந்தப்படம் சொல்லும். ஸ்டூடியோ க்ரீன் பிலிம்ஸ் ஆரம்பித்த போது பாலா சாரை வைத்து படம் எடுப்பதாக இருந்தது, அப்போது ஹீரோவாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற போது, சீயான் சாரை சொன்னார்.

விக்ரம் சாருக்கு அது தெரியாது. அவரை வைத்து முதல் படம் தயாரிக்க இந்த நிறுவனத்திற்கு சூர்யா சார் வைத்த பெயர் தான் ஸ்டூடியோ க்ரீன். சூர்யா சார் விக்ரம் சாருக்காக வைத்த பெயர் தான் இது. அப்போது அது நடக்கவில்லை, இப்போது நடப்பது மகிழ்ச்சி.

எடிட்டர் RK செல்வா பேசியதாவது..

என் கரியரில் இது மிக முக்கியமான படம். இது விஷுவலாக பேசும் படம் அதனால் டீசரில் அதைக்காட்டலாம் என நினைத்துத் தான் டயலாக் இல்லாமல் எடிட் செய்தோம். எனக்கு நீண்ட காலமாக வரலாற்றுப் படத்தில் வேலை பார்க்க ஆசை இருந்தது.

அது இந்தப்படத்தில் அமைந்தது மகிழ்ச்சி. பா ரஞ்சித் அண்ணா, ஒவ்வொரு படத்திலும் அவருடன் எங்களையும் வேறு உயரத்திற்கு அழைத்துச் செல்கிறார். விக்ரம் சாரை விஷுவல்களில் பார்த்து நிறைய முறை பிரமித்திருக்கிறேன். எப்படி இந்த மனுசன் இவ்வளவு உழைக்கிறார் எனத் தோணும்.

இந்தப்படத்தில் எல்லோருமே கடினமாக உழைத்துள்ளார்கள். படம் நன்றாக வந்துள்ளது உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி

கலை இயக்குநர் SS மூர்த்தி பேசியதாவது…

கல்லூரி காலத்திலிருந்தே பா ரஞ்சித் சார் எனக்குப் பழக்கம். அவருடன் பணிபுரிவது மகிழ்ச்சி. எனக்கு முழு சுதந்திரம் தந்தார். ஒரு வேலையைச் சொல்லிவிட்டால் முழுதாக என்னிடம் விட்டுவிடுவார். அதைப்பற்றிக்கேட்க மாட்டார். விக்ரம் சாருடன் பணிபுரிந்தது மிகச் சந்தோஷமாக இருந்தது. என்னுடன் இணைந்து உழைத்த இந்தப்படத்தின் கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

பாடலாசிரியர் உமாதேவி பேசியதாவது…

இலக்கியப் பரப்பிலிருந்து எனது கவிதைகளைத் திரை உலகிற்குக் கொண்டு சேர்க்க எனக்கு உறுதுணையாக இருக்கும் தாயுமானவன் ரஞ்சித் சாருக்கு நன்றி. ஸ்டூடியோ க்ரீனில் என் முதல் பாடல் அமைந்தாலும், இந்த தங்கலான் மிக முக்கியமான படமாக உள்ளது. பா ரஞ்சித் மிக உறுதுணையாக இருந்தார். தங்கலான் இரண்டு பாடல்களும் அட்டகாசமாக வந்துள்ளது எல்லோருக்கும் நன்றி.

உடை வடிவமைப்பாளர் ஏகாம்பரம் பேசியதாவது….

நான் படித்த படிப்பிற்குக் கிடைத்த முழுமையான வேலையாக தங்கலானைப் பார்க்கிறேன். 10 வருடங்களாக நேச்சுரல் டை பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன். இந்தப்படத்தில் அதைப்பயன்படுத்த முடிந்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் ஸ்பாட்டிலேயே நேச்சுரல் டை தயாரித்து, அங்கு உடைகள் தயாரித்து ஆர்டிஸ்டுக்கு தந்தேன், பா ரஞ்சித் அண்ணா என்னிடம் இந்த வேலையைக் கொடுத்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் இயற்கையோடு இணைந்து உடைகளை உருவாக்கியுள்ளோம். பா ரஞ்சித் இயற்கையை நேசிப்பவர் அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றிகள்.

எழுத்தாளர் தமிழ்பிரபா பேசியதாவது…

என் முதல் சினிமா மேடை இது தான். பா ரஞ்சித் அவர்களுடன் இணைந்து எழுதும் இரண்டாவது படம் இது என்றாலும், அது ஓடிடி போய்விட்டது இது தான் என் கன்னிப்பேச்சு. பொதுவாக எழுத்தாளர்களைத் தமிழ் சினிமாவில் மதிப்பதில்லை, மலையாளத்தில் மரியாதை தருகிறார்கள் என்ற கருத்து இருக்கிறது.

ஆனால் அதை ரஞ்சித் உடைத்துத் தொடர்ந்து முழு மரியாதை தந்து வருகிறார் அதற்காக எழுத்தாளர்கள் சார்பில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். ஒரு திரைக்கதையாக இந்தப்படம் தனித்துவமாக எப்படி இருக்கப்போகிறது என்பதில் ரஞ்சித் அவர்களுடன் இணைந்து எழுதியது மிக உற்சாகமாக இருந்தது, சவாலாக இருந்தது. இந்தப்படம் உங்களை பல்வேறு வகையான சிந்தனைக்குள் கொண்டு செல்லும் எல்லோருக்கும் நன்றி.

நடிகர் முத்துக்குமார் பேசியதாவது…

இயக்குநர் ரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சர்பட்டாவிற்கு பிறகு மிக முக்கியமான ஒரு ரோல் தந்துள்ளார், அவர் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன் என நினைக்கிறேன். டீசர் பார்த்து விட்டு மிரண்டுவிட்டேன். விக்ரம் சாருக்கு நன்றி, மகானுக்குப் பிறகு அவர் உழைப்பைப் பார்த்துப் பிரமிப்பாக இருக்கிறது. இங்குள்ள அனைவருக்கும் என் நன்றிகள்

ஒளிப்பதிவாளர் கிஷோர்குமார் பேசியதாவது…

என்னைத் தொடர்ந்து மேடை ஏற்றும் ஒரே கலைஞர் ரஞ்சித் அண்ணா. சினிமாவை
நேசிப்பவர் நிறையப் படங்கள் பற்றி அவருடன் பேசுவேன். இடங்களை அப்படியே அதன் பிரமிப்பைத் திரையில், அதே ஒளியில் கொண்டு வர ஆசைப்படுவார்.

என்னைப்பார்த்து என் வேலையைப் பார்த்து உடனுக்குடன் பாரட்டுவார். முடிந்தளவு இயற்கை ஒளியோடு திரைக்கு இந்தக்கதையைக் கொண்டு வந்துள்ளோம். நான் முதன் முதலில் கல்லூரியில் பார்த்து ரசித்த ஹீரோ விக்ரம் சார் அவரை நான் படம்பிடிப்பேன் என நினைக்கவில்லை. அப்போதிருந்த அதே எனர்ஜியோடு இப்போதும் மிரட்டுகிறார். டீசரில் நீங்கள் என்ன பார்த்தீர்களோ, அதை விடப் பிரமிப்பான விசயங்கள் படத்தில் இருக்கும் அனைவருக்கும் நன்றி.

ஸ்டன்னர் சாம் பேசியதாவது..
இந்தப்படம் மிக வித்தியாசமான படம். ஸ்டண்ட் காட்சிகள் மிகக் கடினமான பணியாக இருந்தது, மற்ற படங்கள் போல கேமராவை நினைத்த மாதிரி வளைக்க முடியாது. எல்லாமே ஒரே ஷாட்டாக இருக்கும் ஆனால் எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்து, விக்ரம் சார் கலக்கியிருக்கிறார். அவருக்கு இந்தப்படத்தில் அடிபட்டது ஆனால் அதையும் தாண்டி வந்து ஆக்சன் காட்சிகளில் நடித்தார் அவரிடம் சாரி கேட்டுக்கொண்டே இருப்பேன் அந்த அளவுக்கு அடிபட்டிருக்கிறார். இந்தப்படம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும், தங்கலான் உங்கள் மனதில் தங்குவான். நன்றி.

Highlights of Thangalaan Teaser Launch event

இறைவன் முற்றுப்புள்ளி வைப்பான்..; சிவகார்த்திகேயன் துரோகம் குறித்து இமான் கருத்து

இறைவன் முற்றுப்புள்ளி வைப்பான்..; சிவகார்த்திகேயன் துரோகம் குறித்து இமான் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’, ‘நம்ம வீட்டு பிள்ளை’ என வெற்றி படங்களில் சிவகார்த்திகேயன் – இமான் இணைந்து பணிப்புரிந்தனர்.

ஆனால் சமீப காலமாக சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசை அமைப்பதை தவிர்த்து வந்தார் இமான். இதனையடுத்து “சிவகார்த்திகேயன் தனக்கு செய்தது மிகப்பெரிய துரோகம்.. இனிமேல் இந்த ஜென்மத்தில் இணைந்து பணிபுரிய மாட்டேன்..” என பேசியது கோலிவுட்டை பரபரப்பாக்கியது.

சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக இமானின் முன்னாள் மனைவி மோனிகா கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஒரு படப்பூஜையில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் இமான். அப்போது இந்த சர்ச்சைகளுக்கு பதில் அளித்து இருந்தார்..

அப்போது அவர் பேசும்போது..

இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒன்றும் இல்லை. மனிதர்களைத் தாண்டி சரி தவறு எல்லாம் இறைவனுக்கு தெரியும் என்பதை நம்புவன் நான். எனவே எல்லாவற்றிற்கும் இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார் என நம்புகிறேன்” என்றார் இமான்.

Imman open talk about Sivakarthikeyan betrayal

ரசிகர்கள்தான் பிளடி ஸ்வீட்..; விஜய் சொன்ன காக்கா – கழுகு – யானை கதை இதான்

ரசிகர்கள்தான் பிளடி ஸ்வீட்..; விஜய் சொன்ன காக்கா – கழுகு – யானை கதை இதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த ‘லியோ’ வெளியாகி 12 நாட்களைக் கடந்துள்ள நிலையில் வெற்றி விழா மிகப்பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் பேசியதாவது

“என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா.. நண்பிகள்.. உண்மைய சொல்லணும்னா நீங்க தான் என்னை உங்க நெஞ்சுல குடி வச்சிருக்கீங்க.. நான் குடியிருக்கும் கோயில்..

இது கொஞ்சம் சினிமா டயலாக் மாறி தெரியலாம்… நீங்க காட்டுற அன்புக்கு, என் உடம்ப செருப்பா தச்சு உங்களுக்கு போட்டாக் கூட பத்தாது.. நீங்க எல்லாம் பிளடி ஸ்வீட்” என பேச ஆரம்பித்தார் விஜய்.

பின்னர் வழக்கம்போல குட்டி கதை சொன்னார்.

ஒரு காட்டுக்கு 2 பேர் வில், அம்பு வச்சிக்கிட்டு வேட்டைக்குச் போனாங்க… அந்தக் காட்டில் சிங்கம், புலி போன்ற மிருகங்களுடன் காக்கா, கழுகு போன்றவை இருந்தன.

ஒரு வேடன் தனது வில்லால் முயல் ஒன்றை அம்பெய்தி கொன்றான். மற்றொரு வேடனோ யானைக்கு குறி வைத்தான். ஆனாலும் அவனால் யானையை வீழ்த்த முடியவில்லை.

இப்போது சொல்லுங்கள் இதில் யார் ஜெயித்தவர்.? என்னை பொருத்தவரை யானையைக் கூறி வைத்தவனே வெற்றி பெற்றவன். அவனது நோக்கம் பெரியதாக உள்ளது இப்போது வெற்றி இல்லை என்றாலும் பின்னர் வெற்றி வரும்.

Small aim is crime என அப்துல் கலாம் சொல்லியிருக்கிறார். பாரதியார், பெரிதினும் பெரிது கேள் என சொல்லியுள்ளார். ஆகவே, பெரிய விஷயத்தையே குறிக்கோளாக கொள்ள வேண்டும்” என்று விஜய் குட்டிக்கதை கூறினார்.

சோஷியல் மீடியாவில் சமீப காலமாக ரசிகர்கள் கோபப்படுவதை கண்டித்தார் விஜய்.

“நமக்கு நிறைய பெரிய வேலைகள் இருக்கு, தேவையில்லாமல் சோஷியல் மீடியாவில் கோபப்பட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என பேசினார்.

Actor Vijay kutty story at Leo success event

நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்.; திரையுலகினர் – ரசிகர்கள் இரங்கல்

நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்.; திரையுலகினர் – ரசிகர்கள் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி நடிகர் நடிகர்களில் ஒருவர் டி எஸ் பாலையா. இவர் மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இவரது மகன் ரகு பாலையாவும் சினிமாவில் நடித்து வருகிறார்.

தனது இயற்பெயரை ஜூனியர் பாலையா என்று மாற்றிக்கொண்டு பல படங்களின் நடித்து வந்தார்.

1975-ல் ‘மேல்நாட்டு மருமகள்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வந்தார். முக்கியமாக பாக்யராஜ் படங்களில் இவரது காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.

மேலும் சுந்தரகாண்டம், கோபுர வாசலிலே, வின்னர், கும்கி ஆகிய படங்களிலும் இவரது நடிப்பு பேசப்பட்டது.

‘சாட்டை’ படத்தில் பள்ளி தலைமை ஆசிரியராக நடித்திருந்தார்.்இந்த கேரக்டரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

சினிமா மட்டுமல்லாமல் ‘சித்தி’ மற்றும் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்து வந்தார்.

இறுதியாக ‘என்னங்க சார் உங்க சட்டம்?’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு நடிப்புக்கு ஓய்வு கொடுத்து வந்திருந்த நிலையில் இன்று நவம்பர் 2ஆம் தேதி காலமானார் ஜூனியர் பாலையா. சென்னை வளசரவாக்கத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

ஜூனியர் பாலையாவின் மறைவு திரையுலகினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகினர் ஜூனியர் பாலையா மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Comedy Actor Junior Balaiya passes away

ரஜினியின் அடுத்த குட்டி ஸ்டோரி.; காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஐஸ்வர்யா-வின் மெகா ட்ரீட்

ரஜினியின் அடுத்த குட்டி ஸ்டோரி.; காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஐஸ்வர்யா-வின் மெகா ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமலுக்கு ரஜினி போட்டி… அஜித்துக்கு விஜய் போட்டி என்ற நிலை மாறி தற்போது ரஜினிக்கு போட்டி விஜய் என்ற அளவில் சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் ரஜினிக்கு எதிராக கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

விஜய்யே இதை பற்றி கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில் ரஜினி பேசும் மேடைப் பேச்சும் விஜய் பேசும் மேடைப் பேச்சையும் ஒன்றோடு ஒன்றாக ஒப்பீடு செய்து சமூக வலைத்தளங்களில் மோதிக் கொள்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ‘ஜெயிலர்’ பட இசை வெளியீட்டு விழாவில் கழுகு – காக்கா கதை குறித்து பேசி இருந்தார் ரஜினிகாந்த். இது விஜய்யை குறிப்பிடுவதாக ரசிகர்கள் சர்ச்சையான கமெண்ட்டுகளை பதிவிட்டு வந்தனர்.

நேற்று நடந்த ‘லியோ’ படத்தின் வெற்றி விழாவில் யானை கதையை பேசியிருந்தார் விஜய்.

இந்த நிலையில் ரஜினியின் அடுத்த மேடைப்பேச்சு என்னவாக இருக்கும்? என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘லால் சலாம்’ படம் அடுத்த 2024 பொங்கல் தினத்தில் வெளியாகிறது. ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர்.

மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார் ரஜினி. மேலும் முக்கிய வேடத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் நடித்துள்ளார்.

ரகுமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இந்த நிலையில் ‘லால் சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 2 அல்லது 3ம் வாரத்தில் சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் என தகவல்கள் வந்துள்ளன.

நிச்சயம் இதில் தன் மகள் ஐஸ்வர்யாவுக்காக ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு மேடையேறி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஞானவேல் இயக்கும் ‘தலைவர் 170’ படத்தில் ரஜினிகாந்த் தற்போது பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinis next stage speech at Lal Salaam Audio launch

More Articles
Follows