தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், நடிகர் விக்ரம் உள்ளிட்டோர் ஏற்காடு மான்போர்ட் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்தனர்.
இப்பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று முதல் கொண்டாடப்படுகிறது.
இதற்காக இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.
எனவே பழைய மாணவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
இவ்விழாவின் கொண்டாட்டமாக விக்ரம், இன்றைய மாணவர்களுடன் நடனம் ஆட விரும்பினார்.
அதன்படி தனுஷ் நடித்த மாரி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டாராம்.
நிறைவு விழாவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.