தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விக்ரம், தமன்னா நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஸ்கெட்ச்.
இதன் டீசரை வருகிற அக். 18ல் தீபாவளி விருந்தாக வெளியிடுகின்றனர்.
இது மெர்சல் படம் திரையிடப்படும் தியேட்டர்களில் காண்பிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதனையடுத்து படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை நவம்பரில் வெளியிட உள்ளதாக தெரிகிறது.
எனவே கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
கிறிஸ்துமஸ் திங்கட்கிழமை 25ஆம் தேதி வருகிறது. எனவே அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையான 22ஆம் தேதி வெளியிட வாய்ப்புகள் உள்ளதாம்.
இதே நாளில்தான் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படமும் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.