விஜய்சேதுபதி & சூரி கூட்டணிக்கு ஸ்கெட்ச் போட்ட டைரக்டர்

vijay sethupathi and sooriதமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பு மற்றும் பழமையான நிறுவனங்களில் ஒன்று விஜயா புரொடக்சன்ஸ்.

இவர்கள் எம்ஜிஆர் சிவாஜி முதல் ரஜினி கமல் போன்ற முக்கிய நடிகர்களை வைத்து படம் தயாரித்து வெற்றிக் கொடி நாட்டியவர்கள்.

மேலும் அண்மையில் விஜய் மற்றும் அஜித் படங்களையும் தயாரித்துள்ளனர்.

தற்போது தன் அடுத்த படைப்புக்கு தயாராகிவிட்டது.

இந்த படத்தை விக்ரம் நடித்த ஸ்கெட்ச் படத்தை இயக்கிய விஜயசந்தர் இயக்குகிறார்.

விஜயா புரொடக்க்ஷன்ஸ்” தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் தற்போது நடிகர் & காமெடியன் சூரி இணைந்து நடிக்க உள்ளார்.

சுந்தர பாண்டியன், ரம்மி போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து சூரி விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார்..

இசையமைப்பாளர் டி. இமான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

Overall Rating : Not available

Latest Post