கருவை திருடி தியா பெயரில் காசாக்கிய விஜய்?; உதவி இயக்குனர் குமுறல்!

கருவை திருடி தியா பெயரில் காசாக்கிய விஜய்?; உதவி இயக்குனர் குமுறல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Karu movie theft issue Assistant Director complaintகடந்த வெள்ளியன்று விஜய் இயக்கத்தில் உருவான தியா என்ற படம் வெளியானது.

லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தில் சாய்பல்லவி நடித்திருந்தார்.

இந்தப் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் ‘கரு’. ஆனால் வேறு ஒரு தயாரிப்பாளர் இதே பெயரை வைத்திருந்ததால் பிரச்சினை கோர்ட் வரை சென்றது.

அதன் பின்னர் ‘லைகாவின் கரு’ என படத்தலைப்பை மாற்றினார்கள். இதற்கும் கோர்ட் தடை விதிக்கவே, வேறு வழியில்லாமல் ‘தியா’ என்ற பெயரில் படத்தை வெளியிட்டனர்.

கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்று ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தின் கதை, தன் கதை தான் என்று குமுறலுடன் போர்க்கொடி உயர்த்தியுள்ளார் பொன்கே. சந்திரகுமார் என்கிற உதவி இயக்குனர்.

இதுகுறித்து அவர் கூறும்போது…

“எனக்குச் சொந்த ஊர் திருச்சி. நான் இயக்குனர் ராஜகுமாரன் அவர்களிடம் ‘திருமதி தமிழ்’ படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியிருக்கிறேன்.

‘நாட்டாமை’யில் ஈரோடு செளந்தரில் தொடங்கி பல இயக்குனர்களிடம் கதை விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்.

இப்படிப் பத்தாண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் உதவி இயக்குனராக போராடி வருகிறேன்.

நான் எப்படிக் கதை சொல்வேன், எப்படிக் காட்சிகள் சொல்வேன் என்று என்னிடம் பழகிய நண்பர்களுக்குத் தெரியும். எவ்வளவு திறமையும் தகுதியும் இருந்தாலும் சினிமாவில் நல்ல நேரம் என்று ஒன்று வர வேண்டும் அல்லவா? அப்படி எனக்கான நேரத்துக்காகக் காத்திருந்தேன்.

காலம் கனிந்து வந்தது. அன்பழகன் என்கிற ஒரு நண்பர் மூலம் தயாரிப்பாளர் தேடினேன். நண்பர் அன்பழகனிடம் என் படத்தின் கதையைக் கூறினேன். அவரும் இலங்கையிலிருந்து வரும் தயாரிப்பாளருக்குப் படம் பண்ணலாம் என்றார். தயாரிப்பாளரிடம் இந்தக் கதையைச் சொன்னதாகவும் அவர் படம் தயாரிக்கச் சம்மதம் சொல்லி விட்டதாகவும் கூறியிருந்தார்.

படம் பற்றி முறையாகப் பேசி முன்பணம் வாங்க வேண்டியதுதான் பாக்கி. நம் நீண்ட நாள் கனவு நிறைவேறப் போகிறது நாமும் இயக்குனர் ஆகப் போகிறோம் என்கிற எதிர்பார்ப்புடனும் கனவுடனும் தயாரிப்பாளரைச் சந்திக்கும் தருணத்துக்காகத் தவமிருக்கத் தொடங்கிக் காத்திருந்தேன்.

என் படத்திற்கு ‘குறி’ அல்லது ‘கரு’ அல்லது ‘சிசு’ என்று மூன்று தலைப்புகளை வைத்து இருந்தேன். இந்தக் கதை என் நண்பர்கள் வட்டத்தில் அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை நாளிதழை பார்த்துவிட்டு நண்பர்கள் போன் செய்தார்கள். என்னப்பா உன் கதை அப்படியே ‘தியா’ என்கிற படமாக வந்திருக்கிறது. முழுக்கதையும் பேப்பரில் போட்டிருக்கிறது.

நானும் பேப்பரைப் படித்தேன். அது அப்படியே என் கதை. பதற்றம் தாங்கவில்லை எனக்கு. அப்படியே திரையரங்கம் போய் ‘தியா’ படத்தைப் பார்த்தேன்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்படியே என் கதை. சிலவற்றை மட்டும் மாற்றியிருந்தார்கள். நான் வீரியமாக வசனங்கள் வைத்திருப்பேன். இதில் அந்த 5 வயதுக் குழந்தை அதிகம் பேசாமல் மாற்றியிருந்தார்கள்.

மற்றபடி தன்னைக் கருவிலேயே கொன்ற உறவினர் முதல் டாக்டர் கம்பவுண்டர் வரை கொல்வது என்கிற அடிப்படைக் கதை படத்தின் உயிரோட்டமான சாராம்சம் என்னுடையது.

படத்தில் வரும் பல காட்சிகள் நான் அமைத்த கதையில் வரும் காட்சிகளாகவே இருந்தன. இந்தக் கதை என் இயக்குனர் ராஜகுமாரன் உள்பட பல நண்பர்களுக்குத் தெரியும்.

இந்த நிலையில் நான் செய்வது? நான் சில ஆண்டுகளாகப் பலரிடம் கூறி வந்தது, பலருக்கும் தெரிந்தது இப்போது அது படமாக வந்திருக்கிறது. இந்தக் கதையைப் பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பே நண்பர்களிடம் பேசியது, அந்த நண்பர் அன்பழகனிடம் செல்போனில் பேசியவை எல்லாம் பதிவு செய்யப்பட்டு என்னிடம் உள்ளன.

என்னிடம் தயாரான முழுத் திரைக்கதையும் உள்ளது. இந்தக் கதை என்னுடையது தான் என்று நிரூபிக்க எனக்குச் சாட்சியாக இயக்குனர் ராஜகுமாரன் உள்பட பல நண்பர்கள் உள்ளனர்.

எப்போது எங்கே அழைத்தாலும் வருவார்கள். எனக்கு ஒன்றும் வேண்டாம் ‘தியா’ ஒரு திருட்டுக்கதை என்று உலகத்துக்குத் தெரிந்தால் போதும்” என்றார்.

Vijays Karu movie theft issue Assistant Director complaint

karu complaint asst director

சந்தோஷ் நாராயணன் இசையில் காலா பாடலை பாடிய 10 லட்சம் பேர்

சந்தோஷ் நாராயணன் இசையில் காலா பாடலை பாடிய 10 லட்சம் பேர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1 Million peoples sung a single song in Rajinis Kaala movieதிரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் பாடல்கள் மே 9ஆம் தேதியும் படம் ஜீன் 7ஆம் தேதியும் வெளியாகவுள்ளது.

தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தை ரஞ்சித் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் பற்றிய ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.

“ஒரே பாடலில் ஒரு மில்லியன் பேரை (10 லட்சம் பேர்) பாட வைக்க வேண்டும் என நினைத்தேன்.

அது காலா படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுபற்றிய முழு தகவலை விரைவில் அறிவிப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

1 Million peoples sung a single song in Rajinis Kaala movie

Santhosh Narayanan‏Verified account @Music_Santhosh
I have always had this dream of recording a million voices in a song & have the perfect opportunity in a song from #kaala. It would be a great honour recording people from all walks of life. We are so excited and will update details very shortly.Peace! #kaala1million

Breaking: மே 1ல் செம வெய்ட்டு காட்ட வரும் காலா ரஜினிகாந்த்

Breaking: மே 1ல் செம வெய்ட்டு காட்ட வரும் காலா ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis Kaala single Semma Weightu from 1st May 2018ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்து வருகிறது.

கபாலி படத்தை தொடர்ந்து இப்படத்தையும் ரஞ்சித் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டீசர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

ஜீன் 7ல் படத்தை ரிலீஸ் செய்வோம் என இப்பட தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இதன் பாடல்களை மே 9ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் அதிரடி அறிவிப்பாக இப்படத்தில் இடம் பெற்றுள்ள செம வெய்ட்டு என்ற சிங்கிள் சாங்கை மட்டும் நாளை மே 1ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Rajinis Kaala single Semma Weightu from 1st May 2018

Wunderbar Films‏Verified account @wunderbarfilms 5m5 minutes ago
Weight-ah Oru Single! #SemmaWeightu 1st Single from #Kaala Releasing Tomorrow at 7pm. Stay Tuned

kaala sema weight

 

விஜய் 62 படத்தின் பைக் சீன் லீக்கானது; படக்குழுவினர் அதிர்ச்சி

விஜய் 62 படத்தின் பைக் சீன் லீக்கானது; படக்குழுவினர் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays bike riding video from Thalapathy 62 goes viralசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ கருப்பையா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோலிவுட் வேலை நிறுத்தத்திற்கு பிறகு சென்னையில் நடைபெற்று வருகிறது.

கடந்த 2 நாட்களாக சென்னை பச்சையப்பன் கல்லூரியில், இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அந்த காட்சியில் கல்லூரி மாணவர்களுடன், பைக்கில் விஜய் ஊர்வலமாக போவது போல் ஒரு காட்சி உள்ளதாம். அதை முருகதாஸ் இரவு நேரத்தில் படமாக்கியுள்ளார்.

அதை வீடியோ எடுத்த ஒருவர் இணையத்தில் பகிர அது வைரலாக பரவி வருகிறது.

அதைப்பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

Vijays bike riding video from Thalapathy 62 goes viral

vijay 62 shoot bike shoot

மனிதனுக்கும் ஒட்டகத்துக்கும் உள்ள பாசத்தை சொல்ல வரும் சிகை இயக்குனர்

மனிதனுக்கும் ஒட்டகத்துக்கும் உள்ள பாசத்தை சொல்ல வரும் சிகை இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sigai fame director next project deals with Camel and Man”M10 PRODUCTIONS” சார்பாக M.S. முருகராஜ் தயாரிப்பில் வெளியான படம் “யா யா”.

இப்படத்தில் “மிர்ச்சி” சிவா, சந்தானம், சாய் தன்ஷிகா, சந்தியா ஆகியோர் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் தந்து உருவான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது.

இந்நிலையில், தனது நிறுவனத்தின் அடுத்த படைப்பை தயாரிக்க இருக்கிறார் தயாரிப்பாளர் M.S.முருகராஜ்.

M.S. முருகராஜ் தயாரிக்கவிருக்கும் அடுத்த படம் முழுக்க முழுக்க எமோஷனலுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஜனரஞ்சகமான படமாக உருவாகவிருக்கிறது.

மனிதர்களுக்கும் ஒட்டகத்துக்குமான பாசப்பிணைப்பை நெகிழ்ச்சியுடன் சொல்லும் படமான இதனை ’சிகை’ பட இயக்குநர் ஜெகதீசன் சுபு இயக்கவிருக்கிறார்.

படத்தின் திரைக்கதை அமைப்பு வேலைகள் நடைபெற்றுவருகிறது. படத்தின் பூஜை விரைவில் நடைபெறவிருக்கிறது. படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரங்கள் அறிவிக்கப்படும்.

Sigai fame director next project deals with Camel and Man

ya ya next project

கொடிய மிருகங்களை படம் பிடிக்க காட்டுக்கு செல்லும் ஆண்ட்ரியா

கொடிய மிருகங்களை படம் பிடிக்க காட்டுக்கு செல்லும் ஆண்ட்ரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Andrea Jeremiah as Wild Life Photographer for Kaa movieஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது “பொட்டு“ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள்.

பரத், நமீதா நடித்துள்ள இந்த பொட்டு படம் மே மாதம் வெளியாக உள்ளது.

அதை தொடர்ந்து ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “கா“ என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர்.

இப்படம் உலக மக்களுக்கானது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது.

கா என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளதால் “ கா “ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைஃப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் இளவரசு மற்றும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சலீம் கவுஸ் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒளிப்பதிவு – அறிவழகன்
இசை – அம்ரிஷ்
எடிட்டிங் – கோபிகிருஷ்ணா
கலை – லால்குடி இளையராஜா
ஸ்டன்ட் – விக்கி
நிர்வாக தயாரிப்பு – சங்கர்
தயாரிப்பு – ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்
இணை தயாரிப்பு – ரவிகாந்த்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நாஞ்சில்

முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது.

கிரைம் திரில்லர் படமாக உருவாக உள்ளது “கா“.

படப்பிடிப்பு விரைவில் துவங்கி அந்தமான், மூணார், மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.

Andrea Jeremiah as Wild Life Photographer for Kaa movie

More Articles
Follows