சாய்பல்லவிக்காக கதை எழுதுவார்கள்.; கரு இசை விழாவில் பிரபலங்கள் கருத்து

சாய்பல்லவிக்காக கதை எழுதுவார்கள்.; கரு இசை விழாவில் பிரபலங்கள் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SaiPallavis Karu audio launch news updatesநிவின் பாலியின் பிரேமம் என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் சாய் பல்லவி.

அதையடுத்து பிடா, எம்சிஏ போன்ற தெலுங்கு படங்களில் நடித்தார்.

அந்த 2 படங்களும் வெற்றி பெறவே இப்போது தெலுங்கிலும் கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார்.

இந்நிலையில்தான் விஜய் இயக்கியுள்ள கரு படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.

இதில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் சாய்பல்லவி.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட பலரும் சாய்பல்லவியின் நடிப்பை பாராட்டினார்கள்.

இப்படத்தின் காட்சிகளில் நடித்து முடித்ததும் ஓடிச்சென்று மானிட்டரில் பார்ப்பாராம். அது தனக்கு திருப்தியாக இருந்தால் மட்டுமே அதோடு நிறுத்திக்கொள்வாராம் சாய்பல்லவி.

இல்லையேல் மீண்டும் ரீடேக் எடுக்க சொல்வாராம். தன் காட்சிகள் நன்றாக வரவேண்டும் என்பதால் இப்படி செய்வாராம்.

சாய்பல்லவியின் இந்த செயல்களை பார்த்த அவரது பெற்றோர்களாக நடித்துள்ள நிழல்கள் ரவி, ரேகா ஆகியோர், எதிர்காலத்தில் சாய்பல்லவி மிகப்பெரிய நடிகையாக வருவார். அவரை மனதில் கொண்டு டைரக்டர்கள் கதை எழுதும் நிலை ஏற்படும்” என்று பாராட்னார்கள்.

SaiPallavis Karu audio launch news updates

karu audio launch

மறைந்த பின்னும் திரையில் இணையும் எம்ஜிஆர்-ஜெயலலிதா

மறைந்த பின்னும் திரையில் இணையும் எம்ஜிஆர்-ஜெயலலிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jayalalitha romance with MGR for Kizhakku Africavil Raju movieதமிழகத்தின் முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்ஜிஆர் நடித்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’.

இப்படத்தின் தொடர்ச்சியை ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்ற பெயரில் 2ஆம் பாகமாக எடுக்க அப்போதே நினைத்திருந்தாராம்.

ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆகிவிட்டதால் அவரது கனவு நனவாகாமலேயே போய்விட்டது.

இந்நிலையில் எம்ஜிஆர் உயிருடன் இருக்கும்போது நடிக்கக் ஆசைப்பட்ட இப்படத்தை, எம்ஜிஆருக்கு நெருக்கமானவர்களில் ஒருவரான ஐசரி வேலனின் மகன் ஐசரி கணேஷ் அனிமேஷன் முறையில் உருவாக்கி வருகிறார்.

இப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடிக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், இப்படத்தில் பழம்பெரும் நடிகர்களான நாகேஷ், நம்பியார், தேங்காய் சீனிவாசன் உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர்.

இவர்கள் அனைவரும் இப்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவரும் இதுவரை 28படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில், கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ அவர்களது 29வது படமாகும்.

2019-ம் ஆண்டு ஜனவரியில் எம்ஜிஆர் பிறந்த நாள் அன்று இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

மேலும், இப்படத்தை அருண் மூர்த்தி இயக்க. டி.இமான் இசையமைக்கிறார்.

அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். எம்ஜிஆர் படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் அடுத்த ஆண்டு எம்ஜிஆர் பிறந்தநாளின் போது வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Jayalalitha romance with MGR for Kizhakku Africavil Raju movie

kizhukku apprikavil raju

செஞ்ச வேலைக்கு சம்பளம் தரல; கமல் மீது கௌதமி குற்றச்சாட்டு

செஞ்ச வேலைக்கு சம்பளம் தரல; கமல் மீது கௌதமி குற்றச்சாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal have to give salary for my work says Gautamiஇரண்டு மனைவிகளை பிரிந்த பின் நடிகை கௌதமியை திருமணம் செய்யாமல் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் கமல்ஹாசன்.

இந்த ஜோடி கிட்டதட்ட 12 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், திடீரென கமலை விட்டு பிரிகிறேன். தனது மகளின் எதிர்காலத்திற்காக இந்த முடிவை எடுக்கிறேன் என கவுதமி குறிப்பிட்டு பிரிந்தார்.

தற்போது மீண்டும் அவர்கள் இணைய வாய்ப்புள்ளதாக வந்த செய்திகளை கவுதமி மறுத்துள்ளார்.

மேலும் தன் ட்விட்டர் பக்கத்தில் தன் வலைதளத்தின் லிங்கை ஷேர் செய்துள்ளார். அதில் ஒரு கடிதத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த காலங்களில் அவரின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த படங்களில் உடை அலங்கார நிபுணராக பணியாற்றினேன்.

விஸ்வரூபம், தசாவதாரம் போன்ற பல படங்களுக்கும் உடை அலங்கார பணிகளை செய்துள்ளேன்.

ஆனால், அதற்கு தர வேண்டிய சம்பளம் முழுமையாக தரப்படவில்லை.

இது தொடர்பாக பல தடவை நினைவுபடுத்தி தகவல் அனுப்பியிருக்கிறேன்.

ஆனாலும், சம்பளம் வழங்கப்படவில்லை.

இதனால் பொருளாதார ரீதியாக எனக்கு பாதிப்பு ஏற்படுகிறது.”

என தன் கஷ்ட சூழ்நிலையை அதில் குறிப்பிட்டுள்ளார் நடிகை கவுதமி.

Kamal have to give pending salary for my work says Gautami

https://gautamitadimalla.wordpress.com/2018/02/24/past-is-past-and-there-are-reasons-for-it/

ஸ்ரீதேவி திடீர் மரணம்; மரணத்திற்கு முன் துபாயில் நடந்தது என்ன.?

ஸ்ரீதேவி திடீர் மரணம்; மரணத்திற்கு முன் துபாயில் நடந்தது என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

What happened in Dubai before Actress Sridevis deathதுபாயில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற பிரபல நடிகை ஸ்ரீதேவி திடீர் மாரடைப்பால் காலமானார்.

அவரது கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களை அங்குள்ள பிரபல பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.

ஸ்ரீதேவி, அவரது கணவர் போனி கபூர், மகள் குஷி கபூருடன், கடந்த வாரம் துபாயில் உள்ள ராஸ் அல் காய்மா பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.

நிகழ்ச்சி முடிந்ததும் போனி கபூர் மட்டும் மும்பை திரும்பி உள்ளார். ஸ்ரீதேவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்த போனி கபூர், ஸ்ரீதேவிக்கு தெரிவிக்காமல் சனிக்கிழமை மீண்டும் துபாய் சென்றார்.

ஸ்ரீதேவியின் அறைக்கு சென்ற போனி கபூர், அவருடன் 15 நிமிடங்கள் வரை பேசிக் கொண்டிருந்தார். பின்னர் இரவு விருந்துக்கு ஸ்ரீதேவியை அழைத்துள்ளார்.

இதையடுத்து தயாராகி வருவதாக கூறி குளியலறை சென்ற ஸ்ரீதேவி நீண்ட நேரமாக வரவில்லை. கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த போனி கபூர், கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அங்கு ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் தன் நண்பருக்கு போனி கபூர் போன் செய்துள்ளார். அதன்பின்னரே டாக்டர்களுக்கும் போலீசாருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

What happened in Dubai before Actress Sridevis death

ஸ்ரீதேவி திடீர் மரணம்; நடிகர் சங்கம்-தயாரிப்பாளர் சங்கம் இரங்கல்

ஸ்ரீதேவி திடீர் மரணம்; நடிகர் சங்கம்-தயாரிப்பாளர் சங்கம் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nadigar Sangam and Producers Council condolence to Sridevi deathபிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று துபாயில் மரணமடைந்தார். அவரது திடீர் மறைவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

” புகழ் பெற்ற நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

பல்வேறு மொழிகளில் 300 -க்கும் அதிகமான படங்களில் கதாநாயகியாக நடித்து பல வருடங்களாக தனது புகழை நிலை நாட்டியவர் ஸ்ரீதேவி. சிறந்த தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்தவர்.

2013-ல் இந்திய அரசு அவருக்கு ‘பத்மஸ்ரீ ‘ பட்டம் அளித்து கௌரவித்தது. தனது இயல்பான நடிப்பு திறனால் ரசிகர்கள் மனதை கவர்ந்த அவரது திடீர் மரணம் , இந்திய திரைப்பட துறைக்கு ஈடு செய்ய இயலாத மாபெரும் இழப்பாகும்.

அவரது பிரிவால் துக்கத்தில் ஆழந்துள்ள அவரது குடும்பம் மற்றும் உறவினர்களுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், அனைத்து உறுப்பினர்களும் துக்கத்தில் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம் ”

என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று துபாயில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது .அதில் கூறியிருப்பதாவது…

” தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது. இந்திய திரைவானில் தனது ஆளுமையை பல வருடங்களாக நிலை நாட்டியவர் ஸ்ரீதேவி.

தனது நான்காம் வயதில் ‘துணைவன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர் ஸ்ரீதேவி.

தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடத்து வந்த ஸ்ரீதேவி தனது பதிமூன்றாவது வயதில் ‘மூன்று முடிச்சு’ படத்தின் மூலமாக கதாநாயகியானார் .

தொடர்ந்து ஜெயசங்கர், சிவகுமார்,ரவிக்குமார், ரஜினி, கமல் மற்றும் மலையாளம், தெலுங்கு,கன்னட முன்னணி நடிகர்களின் கதாநாயகியாகவும் உலா வந்தார்.

1983- ல் ‘ஹிம்மத் வாலா’ ஹிந்தி திரை பிரவேசம் அவரை இந்திய திரைப்பட ரசிகர்களின் மனதில் ‘கனவுக்கன்னி’யாக குடியேற்றி உலகப்புகழ் தேடி தந்து. 1997 -ல் தற்காலிகமாக நடிப்பை நிறுத்தியவர் 2012-ல் ‘இங்கிலீஷ் விங்க்ளீஷ்’ படத்தில் நடித்து மீண்டும் நடிப்பை தொடர்ந்து தனது ஆளுமை செலுத்தினார்.

2013-ல் இந்திய அரசு அவருக்கு ‘பத்மஸ்ரீ ‘ பட்டம் அளித்து கௌரவித்தது. தனி மனித வாழ்கையில் சோதனைகள் தாய் தந்தையரின் இழப்பு என்ற இன்னல்களையும் வேதனைகளயும் தாண்டி மன உறுதியாலும் உழைப்பாலும் உட்ச நட்சத்திர நாயகியாக திகழ்ந்து தனக்கு பின்னால் வந்த நடிகைகளுக்கு மார்கதர்சியனவர் ஸ்ரீதேவி.

மாபெரும் கலைஞரான அவரது மறைவு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், இந்திய திரைப்பட துறைக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும். அவரது பிரிவால் துக்கத்தில் ஆழந்துள்ள அவரது குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்களுடன் துக்கம் பகிர்ந்து கொண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் M.நாசர், துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், பொதுசெயலாளர் விஷால், பொருளாளர் Si.கார்த்தி , அறங்காவலர்கள், செயற்குழு உறுப்பினர்கள் , நியமன செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் கண்ணீர் அஞ்சலியையும் செலுத்துவதோடு அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். ”

இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Nadigar Sangam and Producers Council condolence to Sridevi death

ஜெயலலிதா மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருந்தது இன்றும் நினைவில் உள்ளது; சிவகுமார் இரங்கல்

ஜெயலலிதா மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருந்தது இன்றும் நினைவில் உள்ளது; சிவகுமார் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jaya sridevi

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார்.

திரையுலகின் இந்த பேரிழப்புக்கு நடிகர் சிவக்குமார் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது…

குழந்தை நட்சத்திரங்களாக இருந்து பெரிய ஹீரோ, ஹீரோயினாக தமிழில் நமக்கு தெரிந்த இரண்டு பேர் கமல்ஹாசன், ஸ்ரீ தேவி.

ஆதிபராசக்தி படத்தில் ஜெயலலிதா அம்மையார் மடியில் முருகர் வேடம் இட்டுக் கொண்டு நடிகை ஸ்ரீ தேவி அமர்ந்திருந்தது எனக்கு இன்னும் நன்றாக நினைவிரிக்கிறது.

16வயதினிலே மயிலை தமிழ் ரசிகர்கள் யாரும் மறக்க முடியாது அதன் பிறகு மூன்று முடிச்சு, வறுமையின் நிறம் சிகப்பு என்று பல ஹிட் படங்களில் நடித்தார்கள்.

நானும் ஸ்ரீதேவியும் கவிகுயில், மச்சான பார்த்திங்களா , சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு என்று மூன்று படங்களில் ஒன்றாக நடித்தோம்.

ஹிந்தியில் உச்சம் தொட்ட நடிகை சிவகாசி பக்கம் அவரின் பூர்விகம். இவ்வளவு சீக்கிரம் அவரின் வாழ்கை முடியும் என்று யாரும் கற்பனை கூட பண்ணி இருக்க மாட்டார்கள். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

இவ்வாறு சிவகுமார் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Indian Cinema icon Sridevi dies of heart attack Sivakumar condolences

More Articles
Follows