லைக்கா தயாரிப்பில் இணையும் விஜய்-சாய் பல்லவி

லைக்கா தயாரிப்பில் இணையும் விஜய்-சாய் பல்லவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

??????????????????????????????????விஜய் நடித்த கத்தி படத்தை பிரபல நிறுவனமான லைக்கா தயாரித்தது.

தற்போது ரஜினி நடிக்கும் 2.0, கமல் நடித்து இயக்கும் சபாஷ் நாயுடு ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் புதியதாக ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறதாம்.

வனமகன் படத்தை முடித்துவிட்ட, இயக்குனர் விஜய் இப்படத்தை இயக்கவிருக்கிறார்.

கரு என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரேமம் மலர் டீச்சர் புகழ் சாய்பல்லவி நாயகியாக நடிக்கிறார்.

இவர் நேரிடையான தமிழ் படத்தில் இதுவரை நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை முடித்துவிட்டு, சார்லி படத்தின் ரீமேக்கை விஜய் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Director Vijay and Sai Pallavi teams up with Lyca Productions

கபாலியை வீழ்த்திய பாகுபலி

கபாலியை வீழ்த்திய பாகுபலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

baahubali2சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இருக்கும் ரசிகர் வட்டம் தமிழகம் அறிந்த்தே.

இவரது படங்கள் வெளியாகும் சமயத்தில் டிக்கெட் விலை எகிறும்.

₹ 1000-6,000 வரை கூட டிக்கெட்டுக்கள் விற்கப்படும்.

இந்நிலையில் பெரும் எதிர்ப்பார்பில் பாகுபலி 2 படம் இன்று வெளியாகியுள்ளது.

ஆந்திராவில் இப்படத்தின் டிக்கெட் விலை கபாலி டிக்கெட் விலையை விட அதிக விலைக்கு விற்கப்பட்டதாம்.

பாகுபலி 2 ரிலீஸில் சிக்கல்; ரசிகர்கள் அதிர்ச்சி

பாகுபலி 2 ரிலீஸில் சிக்கல்; ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Baahubali 2 release issueராஜமௌலி இயக்கியுள்ள பாகுபலி 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது.

இப்படம் இந்தியாவில் மட்டும் 6,500 தியேட்டர்களிலும் உலகம் முழுவதும் 9000 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

தமிழில் மட்டும் 650திரையரங்குகளில் வெளியிடதிட்டமிடப்பட்டிருந்தது

ஆனால், தமிழகத்தில் மட்டும் தற்போது வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இப்பட விநியோகஸ்தர் மற்றும் படதயாரிப்பாளர் இடையேயான பிரச்னையால் பஞ்சாயத்து நீடித்து வருகிறது.

இதனால் ஒரு கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறம் இருக்க, இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை சிறப்பு காட்சி மட்டுமே இந்த பிரச்சினையுள்ளதாகவும், பகல் 11 மணி காட்சியில் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Baahubali 2 release issue

பாகுபலி 2 விமர்சனம்; பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன்.?

பாகுபலி 2 விமர்சனம்; பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Baahubali 2 review ratingஇந்திய சினிமாவே எதிர்பார்க்கும் அளவுக்கு உருவாகியுள்ள படம் பாகுபலி 2.

ராஜமௌலி இயக்கிய இப்படத்தின் முதல்பாக க்ளைமாக்ஸில் தாய் மாமன் கட்டப்பாவே பாகுபலியை கொல்வதாக காட்சியை வைத்திருந்தார் இயக்குனர்.

அன்றுமுதல் அவர் கொல்ல காரணம் என்ன? என விடைத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர் பாகுபலி ரசிகர்கள்.

இந்நிலையில் இன்று ஏப்ரல் 28ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.

துபாய் உள்ளிட்ட நாடுகளில் ஏப்ரல் 27ஆம் தேதியே ப்ரீமியர் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க சென்சார் போர்டு உறுப்பினர் என்று தன்னை அடையாளம் காட்டிய உமர் சந்து என்ற நபர் பாகுபலி விமர்சனத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் படத்திற்கு 100க்கு 100 மதிப்பெண் வழங்கி, இதுவரை இதுபோன்ற இந்திய சினிமாவை பார்த்து இல்லை எனவும், ஹாலிவுட் படங்களை மிஞ்சியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Exclusive First Detail Review of #Baahubali2 from UAE Censor Board ! All Time Blockbuster ! ☆☆☆☆☆ 5*/5* ! https://t.co/VsUWPXCZv8
— Umair Sandhu (@sandhumerry)

கிராபிக்ஸ் காட்சிகள், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் மற்றும் ஹாரி பாட்டர் போன்ற ஹாலிவுட்டின் சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு நிகராக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகிய அனைவரின் நடிப்பு பாராட்டத்தக்க வகையில் இருந்த்தாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன்..? என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.

பாகுபலி 2 விமர்சனம்

baahubali 2

 

விணு சக்கரவர்த்தி மறைவுக்கு ரஜினிகாந்த்-விஜயகாந்த் இரங்கல்

விணு சக்கரவர்த்தி மறைவுக்கு ரஜினிகாந்த்-விஜயகாந்த் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini vijayakanthதென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகர் விணு சக்கரவர்த்தி. தமிழில் மட்டுமே 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளவர் இவர்.

கவர்ச்சி புயல் நடிகை சில்க் ஸ்மிதாவை சினிமாவுக்கு அறிமுகம் செய்தவர் இவர்.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 2015ஆம் ஆண்டில் நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்டோர் இவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்நிலையில் இன்று இரவு விணு சக்கரவர்த்தி காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜய்காந்த் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்துடன் அதிசய பிறவி, குரு சிஷ்யன், அண்ணாமலை உள்ளிட்ட பல படங்களில நடித்துள்ளார்.

விணு சக்கரவர்த்தி பற்றிய சில குறிப்புகள்…

மதுரை மாவட்டம் உசிலபட்டி மேலப்புதுர்ஆதிமூலத்தேவர், மஞ்சுவாணி தமபதியினருக்கு 1945ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினைந்தாம் தேதி மூத்தமகனாக பிறந்தவர் விணு சக்கரவர்த்தி.இவருடன் பிரேமகாந்தன் என்கிற தம்பியும், குண்டலகேசி என்கிற தங்கையும் பிறந்தனர்.

சென்னை இராயப்பேட்டையில் உள்ள வெஸ்லிபள்ளியில் படிக்கத் தொடங்கியவர், மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி, மற்றும் சென்னை பல்கலைக்கழக்கத்திலும் பட்டப் படிப்பு படித்தவர்.

ஆரம்பத்தில் ஆறு மாதம் காவல்துரை அதிகாரியாக ஐஸ்ஹவுஸ் பகுதியில் பதவி வகித்தவர். தென்னகரயில்வேயில் நான்கு வருடங்கள் பணிபுரிந்த போது நாடகம் இலக்கியம் என்று நாட்டம் வரவே, அதில் ஈடுபட ஆரம்பித்தார்.

டான்ஸ் மாஸ்டர், வியட்நாம் வீடு, தங்கப்பதக்கம், யாரோ இவர் யாரோ போன்ற நாடகங்களில்தொடர்ந்து நடித்து வந்தார். மறைந்த கன்னட இயக்குனரும் எழுத்தாளருமான புட்டன்ன கனகலிடம் உதவியாளராக சேர்ந்த இவர், சினிமா பற்றி அவரிடம் தெரிந்து கொள்ளஆரம்பித்தார்.

1977-ல் திருப்பூர் மணி தயாரிப்பில் சிவக்குமார் நடித்த நூறாவது படமான ரோசாப்புரவிக்கைக்காரி படத்திற்கு திரைக்கதை எழுதி, அதில் ஒரு வேடத்திலும் நடித்து நடிகராகஅறிமுகமானார்.

மணிவண்ணன் இயக்கிய கோபுரங்கள் சாய்வதில்லை, பாரதிராஜா இயக்கிய மண்வாசனை ஆகிய இரு படங்களும் இவரது சினிமா வாழ்க்கையில் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகள் பேசதெரிந்த இவர், தமிழில் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

மலையாளத்தில் முப்பது,தெலுங்கில் ஐந்து, படுக மொழியில் ஒரு படம் என நான்கு மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது.

வண்டிச்சக்கரம், கோயில் புறா, இமைகள், பொண்ணூக்கேத்த புருஷன் போன்ற படங்களில்கதை, திரைக்கதை, வசனம் எழுதி இனை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். நடிகைசில்க் ஸ்மிதாவை பெயர் வைத்து சினிமாவுக்கு அறிமுகப் படுத்தியவர் இவர்.

இவருக்கு கர்ணபூ என்கிற மனைவியும், சண்முகப் பிரியா என்கிற மகளும், சரவன ப்ரியன் என்கிற மகனும் உள்ளனர். சாலிகிராமத்தில் வசித்து வந்த இவர் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிகிறது.

Rajinikanth and Vijayakanth Condolences to actor Vinu Chakravarthy death

rajini prabu vinu chakravarthy

அஜித்தை சூப்பர் ஸ்டாராக்கிய ‘விவேகம்’ பட புதிய வில்லன்

அஜித்தை சூப்பர் ஸ்டாராக்கிய ‘விவேகம்’ பட புதிய வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivegam ajith villainசிவா இயக்கும் விவேகம் படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்சராஹாசன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் மற்றொரு வில்லனாக ஆரவ் சௌத்ரி நடித்து வருகிறார்.

இவர் பிரபல ‘மகாபாரதம்’ டிவி தொடரில் பீஷ்மர்’ கேரக்டரில் நடித்தவராம்.

இவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தான் நடித்த காட்சிகளின் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் தற்போது செர்பியாவில் ‘விவேகம்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதாகவும், சூப்பர் ஸ்டார் அஜித்துடன் நடித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Filming for Tamil film Vivegham with Super Star Mr Ajith Kumar in Serbia . pic.twitter.com/wsDNVJyEeQ
— Arav Chowdharry (@Aravchowdharry) April 26, 2017

Vivegam movie villain Arav Chowdharry says Ajith is Super Star

More Articles
Follows