விஜய்யுடன் இணையும் நயன்தாராவுக்கு மட்டும் சம்பளம் 5 கோடியாம்.!

விஜய்யுடன் இணையும் நயன்தாராவுக்கு மட்டும் சம்பளம் 5 கோடியாம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress nayantharaவனமகன், தியா (கரு) படங்களைத் தொடர்ந்து ‘லஷ்மி’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் ஏ.எல்.விஜய்.

இப்படத்தையடுத்து, ஜி.வி. பிரகாஷ்குமார் நடிப்பில் அடுத்த படத்தை இயக்கி வருகிறார்.

கடந்த 30 நாட்களாக இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறது. விரைவில் நிறைவடைய உள்ளது.

இப்படத்தை தொடர்ந்து, நயன்தாராவை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.

இதில் நயன்தாராவுக்கு மட்டும் சம்பளமாக ரூ.5 கோடி வரை கொடுக்கப்பட உள்ளதாம்.

தோனி பிறந்தநாளில் *தோனி கபடி குழு* படத்தின் டைட்டில் லுக்

தோனி பிறந்தநாளில் *தோனி கபடி குழு* படத்தின் டைட்டில் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhoni Kabadi Kuzhu stillsதிரைப்படம் மற்றும் விளையாட்டு போட்டிகளை கண்டுகளிக்கும் போது தான் மக்கள் மிகப்பெரிய அளவில் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாகிறார்கள்.பல திரைப்படங்கள் தமிழில் விளையாட்டை மையமாக வைத்து வந்துள்ளது.

அதில் தற்போது “தோனி கபடி குழு” இணைந்துள்ளது. “மைடியர் பூதம்” தொடரில் நடித்த “அபிலாஷ்” இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.இவர் ஏற்கனவே “நாகேஷ் திரையரங்கம்” படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

“தோனி கபடி குழு” என்ற தலைப்பே கதையை உணர்த்துகிறது.நல்ல கதை தான் எப்போதும் கதாநாயகன். அதன்படி இப்படத்தின் கதை கபடி மற்றும் கிரிக்கெட் என்று இரண்டு கதாநாயகர்களின் இடையே நடைபெறுகிறது என்றார் நாயகன் அபிலாஷ்.

என்னை தவிர்த்து படத்தில் 8-கதாபாத்திரங்கள் உள்ளன.இயக்குனர் A.வெங்கடேஷின் துனை இயக்குனரான P.ஐயப்பன் இப்படத்தை இயக்குகிறார்.

படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது;

இக்கதை முழுவதும் கற்பனையானது.அதில் என்னுடைய வாழ்க்கையையும் நான் சேர்த்துள்ளேன்.நான் சிறு வயதிலிருந்து கபடி விளையாடி தான் வளர்ந்தேன்.நான் பள்ளியில் கபடி சாம்பியன்.

அப்போது என்னுடைய நண்பர்கள் கிரிகெட் விளையாடும் போது எனக்கு பிடிக்காது.அதன் பிறகு கிரிக்கெட் என்னை மிகவும் ஈர்த்தது.தோனி கபடி குழுவில் சமூக கருத்தும் உள்ளது என்றார் இயக்குனர்.

நடிகர்களை தாண்டி படத்தில் நிஜ வாழ்கை கபடி விளையாட்டு வீரர்கள் சிலர் நடிக்கிறார்கள். “பட்டம் போலே” படத்தில் துல்கருடன் நடித்த லீமா இப்படத்தில் நடிக்கிறார்.

மேலும் படத்தில் தெனாலி, சரண்யா, செந்தில், புகழ், விஜித், C.N.பிரபாகரன், ரிஷி, நவீன் சங்கர், சுஜின், பீட்டர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

கதை,திரைக்கதை மற்றும் வசனத்தை ஐயப்பன் எழுதியுள்ளார்.

இசை:- ரோஷன் ஜோசப்,பின்னனி இசை மகேந்திரன்,பாடல்கள்:- ராசா, ஒளிப்பதிவு:- வெங்கடேஷ் DF.Tech,படத்தொகுப்பு:- கார்த்திகேயன், கலை A.C சேகர்,உடைகள் K.மனோகரன்.இப்படத்தின் படபிடிப்பு விழுப்புரம்,கல்லகுறுச்சி ஆகிய பகுதிகளில் 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

படம் வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் 2018 அன்று வெளியாகவுள்ளது.

நந்தகுமார் இப்படத்தை தயாரிக்கிறார். வருகிற 7ம் தேதி இந்தியன் கிரிக்கெட் கேப்டன் தோனியின் பிறந்த நாளன்று இதன் டைட்டில் லோகோ வெளியீடுகிறார்கள்.

தென்னிந்திய சினிமாவில் தடம் பதிக்க வரும் வித்யாபாலன்

தென்னிந்திய சினிமாவில் தடம் பதிக்க வரும் வித்யாபாலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vidya balanஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரும் இன்றளவும் பல நடிகர்களுக்கு முன்னோடியாகவும் திகழ்பவர் என்.டி.ராமராவ்.

தற்போது பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக என்.டி.ராமராவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்படுகிறது.

“என்.டி.ஆர் பயோபிக்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்கின்றார்.

இந்த படத்தில் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கின்றார்.

வித்யாபாலன் மிகவும் முக்கியதுவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்பதால் ஏற்கனவே இருந்த இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் கூடியுள்ளது.

கிருஷ் இயக்கும் இப்படத்தை நந்தமுரி பாலகிருஷ்ணா தயாரிக்க உடன் சாய் கோரப்பட்டி, விஷ்ணு வர்தன் இந்தூரி இணைந்து தயாரிக்கின்றனர்.

காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தவருக்கு திருமணம்

காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தவருக்கு திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala fame Singapore Suganya marriage news updatesகாலா படத்தில் ரஜினியின் மருமகள்களாக நடித்தவர்களில் ஒருவர் சிங்கப்பூர் சுகன்யா.

சரவணன் மீனாட்சி’ உள்ளிட்ட பல டிவி சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.

காலா பட வாய்ப்பால் சினிமாவிலும் தற்போது பிரபலமாகி விட்டார்.

இந்நிலையில் இவருக்கு திருமணம் முடிவாகி உள்ளது. தன்னுடன் படித்த விக்ரம் என்ற நண்பரை திருமணம் செய்ய உள்ளார்.

சென்னையை சேர்ந்த விக்ரம், பில்டிங் காண்ட்ராக்காக உள்ளார்.

இவர்களது திருமணம், ஜூலை 14-ம் தேதி சிங்கப்பூரில் நடக்கிறது.

இதன் வரவேற்பு நிகழ்ச்சி தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறுகிறது.

சுகன்யாவின் பூர்வீகம் திண்டுக்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினராகும் முடிவில் இருக்கிறாராம் சுகன்யா என்பது கூடுதல் தகவல்.

Kaala fame Singapore Suganya marriage news updates

விக்ரம் மகன் துருவ்வுடன் இணையும் பிக்பாஸ் ரைசா

விக்ரம் மகன் துருவ்வுடன் இணையும் பிக்பாஸ் ரைசா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigg Boss fame Raiza will be acting in Bala Dhruvs Varma movieவிக்ரம் மகன் துருவ் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வர்மா’.

இதில் துருவ் ஜோடியாக வங்காளத்தை சேர்ந்த நடிகை மேகா சவுத்ரி ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட பிக்பாஸ் புகழ் நடிகை ரைசா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

தற்போது ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக ’பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்து வருகிறார் ரைசா.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்து வரும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Bigg Boss fame Raiza will be acting in Bala Dhruvs Varma movie

சிவாஜி பிறந்தநாள் இனி திரையுலகின் விடுமுறை நாள்; விஷால் முடிவு

சிவாஜி பிறந்தநாள் இனி திரையுலகின் விடுமுறை நாள்; விஷால் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivaji Ganesan Birthday will be holiday for Tamil Cinema says Vishalதென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க பொதுச்செயலாளராக பதவி வகிக்கும் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவரானது முதல் பல அதிரடியான செயல்களை செய்து வருகிறார்.

இரும்புத்திரை படத்தை தொடர்ந்து தற்போது லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 படத்தில் நடித்து வருகிறார்.

இதன் சூட்டிங் தற்போது திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே நடைபெற்று வருகிறது.

அப்போது அங்கு அளித்துள்ள பேட்டியில்…

செவாலியர் சிவாஜிகணேசன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சி.

அதுபோல செவாலியர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை நாங்கள் தமிழ்த்திரையுலகின் விடுமுறை நாளாக அறிவிக்க உள்ளோம்.

மேலும் தமிழ் திரையுலகினருக்கு ஒவ்வொரு மாதமும் 2-ம் சனிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவிக்கவுள்ளோம்.

Sivaji Ganesan Birthday will be holiday for Tamil Cinema says Vishal

More Articles
Follows