தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய்சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை கோகுல் இயக்கியிருந்தார்.
இப்படம் வெற்றி பெற்றதையடுத்து, கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்டோர் நடித்த ‘காஷ்மோரா’ படத்தை இயக்கினார்.
இந்தாண்டு (2016) தீபாவளிக்கு வெளியான் இப்படமும் கோகுலுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணையவிருக்கிறாராம் கோகுல்.
ஆனால் இது ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இரண்டாம் பாகம் அல்லாது வேறு ஒரு களமாக இருக்கும் எனத் தெரிவத்துள்ளார் கோகுல்.
2017ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு இப்பட பணிகள் துவங்கும் எனத் தெரிகிறது.