தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று சரியாக நான்கு வருடங்களுக்கு முன்பு,கோகுல் இயக்கத்தில்,விஜய்சேதுபதி நடித்து வெளிவந்தபடம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்பாலகுமாரா’.
இப்படத்தில் இடம்பெற்ற வித்தியாசமான காமெடிக் காட்சிகள் மூலம் ‘சுமார்மூஞ்சி குமார்’ ஆகபட்டிதொட்டியெங்கும் பரவலாகப் பேசப்பட்டார் நடிகர் விஜய்சேதுபதி.
இப்போது மீண்டும் இதே தேதியில் (அக்டோபர் 2) தங்களது அடுத்தபடமான ‘ஜுங்கா’ படப்பிடிப்பிற்காக பாரிஸ் நகரத்தில் கைகோர்த்துள்ளது நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர் கோகுல், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் கூட்டணி.
இப்படத்திற்கான 30 நாட்கள் கொண்ட முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு இன்று (அக்டோபர் 2) பாரிஸ் நகரத்தில் துவங்கியுள்ளது.
‘வனமகன்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக அறிமுகமான சாயிஷா சாய்கல்‘ஜுங்கா’ படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை விஜய் சேதுபதி நடித்துள்ள படங்களிலேயே மிகப்பிரம்மாண்டமான படமாக உருவாகவுள்ளது ‘ஜுங்கா’திரைப்படம்.
இப்படத்தை விஜய் சேதுபதியே தன்னுடைய சொந்த பேனரில் தயாரிப்பதால், படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து, படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே இப்படம் சம்பந்தப்பட்ட வியாபாரம் முடிந்துவிட்டது.
படத்தின் பூஜை சமயத்திலேயே அப்படத்தின் வியாபாரங்கள் தொடங்குவது இதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களுக்கு மட்டுமே நிகழ்ந்துள்ள அதிசயம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ அன்ட் பி குரூப்ஸ் இப்படத்தின் உரிமையை மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளது. தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யோகி பாபு உட்பட பல நட்சத்திரங்கள் ‘ஜுங்கா’ படத்தில் நடிக்கிறார்கள். இவர்களின் கூட்டணியோடு விஜய் சேதுபதியின் ‘கலகல’ காமெடி எபிசோடுகளைப் பார்க்க இப்போது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Vijay Sethupathis Junga movie started on Gandhi Jayanthi