கோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் இணையும் சாயிஷா

கோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் இணையும் சாயிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijaysethupathi sayyeshaஜெயம்ரவி நடித்த வனமகன் படத்தில் நாயகியாக நடித்தவர் சாயிஷா.

இப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இவர் பிரபல நடிகர் திலீப் குமாரின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த படத்தையடுத்து பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி நடிக்கும் ’கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இந்நிலையில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இயக்குனர் கோகுல் இயக்கவுள்ள படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இப்படத்தின் கதைப்படி இவர் பாரிஸ் நகரில் பிறந்து வளர்ந்த பெண்ணாக வருகிறாராம் சாயிஷா.

இப்படத்திற்கு ஜீங்கா (Junga) எனப் பெயரிட்டுள்ளனர்.

கருப்பன், 96, அநீதி கதைகள், சீதக்காதி, சைரா (தெலுங்கு) ஆகிய படங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதி அப்படங்களை முடித்துவிட்டு இப்படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

Sayyeshaa romance with VijaySethupathi for Gokuls project Junga

வரிசையில் நின்று வாழ்த்திய விஜய்; பெருமிதம் கொள்ளும் நட்ராஜ்

வரிசையில் நின்று வாழ்த்திய விஜய்; பெருமிதம் கொள்ளும் நட்ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay at vishal sisterநடிகர் விஷால் தங்கை ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மாலை திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் நடிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த திருமண வரவேற்பு விழாவில் நடிகர்கள் விஜய், நட்ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

இதுகுறித்து ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது…

N.Nataraja Subramani‏ @natty_nataraj 2m2 minutes ago

மனித நேயம் நிறைந்த தளபதி, வரிசையில் நின்று தான் வாழ்த்துவோம் என்கின்ற அடக்கம்,பெருமிதத்துடன் கர்வம் கொள்கிறேன், அவருக்கு ஒளிப்பதிவு செய்ததில். என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
விஜய்யின் புலி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் நட்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Nataraj talks about Vijay in Vishal sister Marriage reception

vijay at vishal sister reception

விஷால் தங்கை திருமண வரவேற்பு; ரஜினி-சிவகுமார் நேரில் வாழ்த்து

விஷால் தங்கை திருமண வரவேற்பு; ரஜினி-சிவகுமார் நேரில் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal sister reception rajini sivakumarதயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகர் சங்க செயலாளருமான நடிகர் விஷால் தங்கை ஐஸ்வர்யா மற்றும் உம்மிடி க்ரிதிஷ் ஆகியோரின் திருமணம் சென்னையில் இன்று காலை நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர்கள், கதிரேசன், ஞானவேல் ராஜா, சத்யஜோதி தியாகராஜன், ராக்லைன் வெங்கடேஷ், ரவி பிரசாத், நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி, சுந்தர்.சி, குஷ்பூ, ஹன்ஸ்ராஜ் சக்சேனா உட்பட ஏராளமான திரையுலகினர் மற்றும் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதனையடுத்து இன்று மாலை திருமண வரவேற்பு நடைபெற்றது.

இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், நட்ராஜ், சிவக்குமார் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் நேரில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Rajinikanth and Sivakumar wishes for Vishal sister Aishwarya marriage

vishal sister khushboo

ஸ்டண்ட் கலைஞர்களுக்கு உதவ தயார்; எம்ஜிஆர் வழியில் ரஜினி.?

ஸ்டண்ட் கலைஞர்களுக்கு உதவ தயார்; எம்ஜிஆர் வழியில் ரஜினி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

My home door will be always open for Stunt Union says Rajinikanthதென்னிந்திய சினிமா மற்றும் டிவி ஸ்டண்ட் கலைஞர்கள் பொன்விழா (1966 – 2017) நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் ரஜினிகாந்த், சிவகுமார், மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, சூர்யா, கார்த்தி, விஷால், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜீவா, விக்ரம்பிரபு, விவேக்,ஆர்யா உள்ளிட்ட நடிகர்ளும் எஸ்பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், பி.வாசு, ஷங்கர் உள்ளிட்ட இயக்குனர்களும் கலந்துகொண்டனர்.

விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது…

எந்த நாட்டிலும் ஆக்‌ஷன் படங்கள்தான் அதிக வசூலை பெற்றுத் தருகிறது.

பணம் சம்பாதிக்க பல வழிகள் இருக்கிறது. சிலர் பணத்தையே மூலதனமாக வைத்து பணம் சம்பாதிக்கவும் செய்கிறார்கள். அந்த வகையில் உடம்பை மூலதனமாக வைத்து பணம் சம்பாதிக்கக்கூடிய தொழில் ஸ்டண்ட் கலைஞர்கள் தொழில்.

எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த யூனியனின் பொன் விழாவை அவரது நூற்றாண்டின்போது கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

எம்ஜிஆர் சினிமாவை விட்டு விலகியபோது கூட சண்டை கலைஞர்கள் பலருக்கு மாத சம்பளம் கொடுத்து உதவினார். ஸ்டண்ட் கலைஞர்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னைக் கேளுங்கள். உங்களுக்காக என் வீட்டுக் கதவு திறந்தே இருக்கும்.

சினிமாவில் மற்ற கலைஞர்கள் வியர்வை சிந்தி உழைக்கிறார்கள். சண்டைக் கலைஞர்கள் மட்டும்தான் வியர்வையுடன் ரத்தத்தை சிந்தி உழைக்கிறார்கள்.

அவர்களின் உயிரையே பணயம் வைக்கிறார்கள்.

அவர்கள் சண்டைக்காட்சியில் காட்டும் அக்கறையை குழந்தைகளை வளர்ப்பதிலும், படிக்க வைப்பதிலும் காட்ட வேண்டும்.” என்று ரஜினி பேசினார்.

My home door will be always open for Stunt Union says Rajinikanth

தரமணி தயாரிப்பாளரின் ஹவ்ரா ப்ரிட்ஜ் படத்தில் பிரியங்கா

தரமணி தயாரிப்பாளரின் ஹவ்ரா ப்ரிட்ஜ் படத்தில் பிரியங்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

howrah bridgeராம் இயக்கத்தில் வெளியான ‘தரமணி’ படம் அண்மையில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

யுவன் இசையமைத்த இப்படத்தை ஜே. சதீஷ்குமார் தயாரித்திருந்தார்.

இதனையடுத்து இவரின் தயாரிப்பில் புரியாத புதிர் படம் வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து ‘ஹவ்ரா ப்ரிட்ஜ்’ என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை தயாரித்து வருகிறார் ஜே. சதீஷ்குமார்.

லோஹித் இயக்கி வரும் இப்படத்தில் பிரியங்கா உபேந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார் கபிலன் வைரமுத்து. ப்ரியங்கா உபேந்திராவின் மகளாக ஐஸ்வர்யா நடித்து வருகிறார். முழுக்க கொல்கத்தா நகரை மையப்படுத்தி படமாக்கி வருகிறது படக்குழு.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் கூறியிருப்பதாவது:

‘வணிக ரீதியான வெற்றி மட்டுமில்லாமல் எனது தயாரிப்பு நிறுவனத்திற்கும் பெரும் அடையாளத்தை தந்துள்ளது ‘தரமணி’.

உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள திரில்லர் ‘ஹவ்ரா ப்ரிட்ஜ்’ கதை.

செப்டம்பர் 4-ம் தேதி தொடங்கி கொல்கத்தாவில் தொடங்கி ஒரு மாதம் சூட்டிங் நடக்கிறது.” என்றார் ஜே.சதீஷ்குமார்.

தமிழில், ராஜ்ஜியம், ராஜா, காதல் சடுகுடு, ஐஸ், ஜனனம் ஆகிய படங்களில் நடித்தவர் பிரியங்கா திரிவேதி.

கன்னட நடிகர் உபேந்திராவை காதலித்து 2003-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

படங்களில் நடிக்காமல் இருந்த இவர், சமீபத்தில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

லோஹித் இயக்கிய கன்னடத்தில் உருவான ’மம்மி’ என்ற படத்திலும் பிரியங்கா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Taramani producers next movie titled Howrah Bridge starring Priyanka Upendra

howrah bridge first look poster

வேதாளம்-தெறி சாதனைகளை முறியடித்தது விவேகம்

வேதாளம்-தெறி சாதனைகளை முறியடித்தது விவேகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivegamகடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி அஜித் நடிப்பில் விவேகம் வெளியானது.

இது கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்த போதிலும் வசூல் வேட்டை செய்து வருகிறது.

இதற்கு முன் வெளியான வேதாளம் படம் முதல் நாளில் தமிழக அளவில் ரூ. 15.5 கோடியை மட்டுமே வசூல் செய்தது.

விவேகம் படம் முதல்நாளில் மட்டும் ரூ. 17 கோடியும், இரண்டாம் நாளில் 12 கோடியும் பெற்று மொத்தம் இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 29 கோடி வசூலித்துள்ளது.

தெறி படம் முதல்நாளில் தமிழகளவில் ரூ. 14 கோடியை மட்டுமே வசூலித்தது.

இதன் மூலம் வேதாளம் , தெறி சாதனைகளை விவேகம் முறியடித்துள்ளது.

More Articles
Follows