தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அட்லி இயக்கிவரும் தளபதி 61 படத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்து வருகிறார்.
வருகிற ஜீன் 22ஆம் தேதி இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபஸ்ட் லுக்கை வெளியிட உள்ளனர்.
இந்த படம் எந்த மாதிரியான படமாக இருக்கும்? என்ற ஆவல் ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இது ரஜினியின் மூன்று முகம் படத்தின் தழுவலாக இருக்கும் என கூறப்பட்டது.
தற்போது ஏஆர். முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி மற்றும் ரமணா படத்தின் விறுவிறுப்பான திரைக்கதையை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
பெரிய படங்கள் என்றாலே இதுபோன்ற செய்திகள் வந்துக் கொண்டேதான் இருக்கும். எனவே இந்தாண்டு தீபாவளி வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.
Vijay 61 movie screen play updates