ரஜினிக்காக 10 பவர்புல் ரமணா; பக்கா ப்ளானில் ஏஆர். முருகதாஸ்…?

Rajinikanth may teams up with AR Murugadoss before his political entryரஜினிகாந்த் தன் அதிரடி அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டாலும், இன்னும் கட்சியை அறிவிக்கவில்லை.

போர் வரும்போது சந்திப்போம் என தேர்தலை குறித்து சொல்லியுள்ளார்.

தற்போது அமெரிக்காவில் இருக்கும் ரஜினிகாந்த் விரைவில் தமிழகம் திரும்பி மே 9ல் நடைபெறும் காலா இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்ளவிருக்கிறார்.

இதனையடுத்து ஜீன் மாதம் முதல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் சூட்டிங் ஜீலை இறுதிக்குள் முடிந்துவிடும். 2019ல் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தன் அரசியல் களத்திற்கு பலமான அடித்தளம் அமைக்கும் வகையில் மற்றொரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

‘பாட்ஷா’ மாதிரியான ஒரு மாஸ் ஆக்‌ஷன் த்ரில்லரை கொடுத்துவிட்டு அரசியலுக்குள் இறங்கினால் அது தன் இமேஜை இன்னும் பல மடங்கு தூக்கி நிறுத்தும் என நினைக்கிறாராம் ரஜினி.

எனவே அப்படத்தை கமர்ஷியல் மற்றும் தரமான ஹிட்டுகளை கொடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினால் நன்றாக இருக்கும் என்பதால் அவரை தேர்ந்தெடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

2002-ம் ஆண்டு விஜயகாந்துக்கு இவர் கொடுத்த ‘ரமணா’ இன்று வரை பேசப்படுகிற படம்!

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் ஊழலுக்கு எதிராக வந்தாலும் மிகவும் யதார்த்தம் கலந்த அதிரடியான படம் ரமணா தான்.

அப்படியொரு ஹிட் படத்தை விஜயகாந்தே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

மேலும் துப்பாக்கி, கத்தி என சமூகம் சார்ந்த கதைகளையும் முருகதாஸ் கொடுத்துள்ளார்.

ரமணா படத்தில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு, துப்பாக்கி படத்தில் ஐ யம் வெய்ட்டிங், தீனா படத்தில் தல ஆகிய பவர்புல்லான பன்ச்கள் ஏ.ஆர்.முருகதாஸின் பெயரை இன்று வரை சொல்லிக் கொண்டிருக்கிறது.

எனவே ரஜினிக்கும் சரியான பன்ச் டயலாக்குகளை முருகதாஸ் நிச்சயம் கொடுப்பார்.

மற்ற ஹீரோக்கள் பேசிய அதே வசனங்களை ரஜினி பேசுகையில் அதன் வீரியம் எப்படி இருக்கும்? என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

இதையெல்லாம் யோசித்துதான் அரசியல் என்ட்ரி அரங்கேறும் நேரத்தில் ஏ.ஆர்.முருகதாஸுடன் கைகோர்த்து ஒரு படம் செய்ய தயார் ஆகியிருக்கிறாராம் ரஜினிகாந்த்.

அமெரிக்கா செல்லும் முன்னே, ஒரு தனிமையான ஒரு இடத்தில் ரஜினியும் ஏ.ஆர்.முருகதாஸும் சந்தித்து பேசிவிட்டார்கள் எனவும் கோலிவுட்டில் கிசுகிசுப்படுகிறது.

தற்போதைய அரசியல் நடப்புகளை மையமாக வைத்து ஒரு கதையை தயார் செய்ய ரஜினி கூறியதாகவும், 10 ரமணா சேர்ந்தது போல பவர்ஃபுல்லான கதையுடன் விரைவில் வருகிறேன்’ என முருகதாஸ் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

‘விஜய் 62’ படத்தை முடித்துவிட்டு முருகதாஸ்ம் கார்த்திக் சுப்புராஜ் படத்தை முடித்துவிட்டு ரஜினியும் இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ரஜினி கட்சி ஆரம்பித்தால் கூட அவர் நாடாளுமன்ற தேர்தலை குறி வைக்கவில்லை. அவரது ஒரே குறிக்கோள் 2021 தமிழக சட்டமன்ற தேர்தல்தான்.

எனவே தேர்தல் வரும்முன் தன் படங்களை முடித்துவிட்டு அரசியல் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றவிருக்கிறாராம்.

Rajinikanth may teams up with AR Murugadoss before his political entry

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

அட்லி இயக்கிவரும் தளபதி 61 படத்தில்…
...Read More

Latest Post